கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 21வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

சா. ரு. மணிவில்லன்
 

தமிழ் ஸ்டியோ.காம்-ன் 21-வது குறும்பட வட்டம் சென்னை - இக்சா மையத்தில் 12.06.2010 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார், கவிஞர் லீனா மணிமேகலை, நடிகர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் நிகழ்வு - குறும்பட பயிற்சி பட்டறை

இம்மாத குறும்பட பயிற்சி பட்டறையில் ஒளிப்பதிவாளர் சி.ஜெ. ராஜ்குமார் ஒளிப்பதிவுப் பற்றி வகுப்பெடுத்தார். இவர் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சானிடம் சுமார் 15 படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். ஆயிஷா, என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் ஆகிய குறும்படங்கள், கனவு மெய்பட வேண்டும் திரைப்படம் ஆகியவற்றிற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஷாட்டின் வகைகள் பற்றியும் அவற்றை எந்த மாதிரி சூழலில் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் படம் வரைந்து காட்டி விரிவாக விளக்கிக் கூறினார். சினிமாவின் பலம் குளோஸ் அப் ஷாட்-தான் என்றும், பாயின்ட் ஆப் வியு ஷாட்டில் உயரம் முக்கியமானது என்றும், லாங் ஷாட்டில் சவுண்டு முக்கியமானது என்றும் கூறினார்.

இரண்டாவது நிகழ்வு - குறும்பட வழிக்காட்டல்

குறும்பட வழிக்காட்டல் பகுதியில் மாத்தம்மா, தேவதைகள் போன்ற ஆவணப்படங்களை இயக்கிய கவிஞர் லீனா மணிமேகலை குறும்படம் சார்ந்த தன் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

கவிஞர் லீனா மணிமேகலை

சினிமாவை கற்பிக்க முடியாது. நான் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை. திரைப்பட விழாக்களில் படங்கள் பார்த்து பார்த்துதான் நான் சினிமா கற்றுக்கொண்டேன். என்னுடைய முதல் குறும்படம் மாத்தம்மா 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது. குறும்படம், ஆவணப்படம், திரைப்படம் என பல பெயர்கள் கூறினாலும் எல்லாமே படங்கள்தான். எல்லாம் கால அளவுகளில் தான் வேறுபடுகிறது.

சுதந்திர சினிமாவுக்கு தணிக்கை துறைதான் எதிரி. நான் இதுவரை சுமார் 10 படங்களை எடுத்துள்ளேன். இரண்டு படங்கள் மட்டும்தான் தணிக்கை செய்துள்ளேன்.

தரமான சினிமாவுக்கு இந்தியாவுக்கு வெளியே நல்ல மதிப்பு உள்ளது. என் கருத்தியலுக்கு ஒத்துப்போகும் திரைப்பட விழாக்களுக்கு மட்டுமே என்னுடைய படங்களை அனுப்புகிறேன். விருதுகளுக்காக நான் படம் எடுப்பதில்லை.

இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கேரளா திரைப்பட விழாவும், மும்பை (எம்ஐஎப்எப்) திரைப்பட விழாவும் முக்கியமானவையாக கருதுகிறேன்.

என் படங்களை மக்களுக்கு திரையிடல் செய்து அவர்களோடு விவாதித்ததில் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் சரியென நினைத்த பல விசயங்கள் மாறிபோயிள்ளது.

பொதுபுத்திக்கு எதிராக செயல்படுவதுதான் கலை என நம்புகிறேன். நாம் எதற்காக படம் எடுக்க விரும்புகிறோம் என்ற தெளிவு வேண்டும். நாம் விரும்பும் படத்தை எடுக்க பல துயரங்களை சந்தித்துதான் ஆக வேண்டும்.

மூன்றாவது பகுதி - குறும்பட திரையிடல்

இம்மாத குறும்பட திரையிடல் பகுதியில்.. பி.ரமேஷ் இயக்கிய கௌடில்யன், சர்வோத்தமன் இயக்கிய ராவ் சாஹிப், தமிழ்சாமி அய்யன் இயக்கிய எழுத்தாளளின் சமையல் குறிப்பு ஆகிய மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டன.

நடிகர் ராமகிருஷ்ணன் மூன்று படங்களையும் திறனாய்வு செய்தார். சக மனிதனை நேசி என்பதை முதல் குறும்படம் சிறப்பாக பதிவு செய்துள்ளது. இரண்டாவது குறும்படம் ஒரு எழுத்தாளனின் அந்நிய கால தனிமையை பதிவு செய்துள்ளது. மூன்றாவது படம் தமிழ் எழுத்தாளனின் பொருளாதார சிக்கல்களையும், வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் உள்ளது. மூன்று குறும்பட இயக்குனர்களையும் சிறப்பாக பாராட்டி பேசினார். தமிழ் ஸ்டியோவின் செயல்பாடுகளையும் பாராட்டினார். எதிர் வரும் காலங்களில் தன்னால் இயன்ற அளவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் கூறினார்.

விருதுடன் ப. ரமேஷ்
 
விருதுடன் சர்வோத்தமன்
 
விருதுடன் தமிழ் சாமி அய்யன்
 

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/211206201002#
-------------------------------------------------------------------------------------
நாள்: சனிக்கிழமை (12-06-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 மணி) - களம்

இந்த பகுதியின் இரண்டாவது மாத முயற்சியாக கேமரா பயிற்சி அளிக்கப்படுகிறது. கேமரா சார்ந்த அனைத்து நுட்பங்களும் செயல்வழிப் பயிற்சி மூலம் கற்றுக்கொடுக்கப்படும். ஆர்வலர்களை கேமராவை இயக்கவைத்து உடனுக்குடன் அவர்களின் குறைகளும் நிவர்த்தி செய்யப்படும

இந்த மாதம் கேமரா பயிற்சி கொடுக்கவிருப்பவர், ஒளிப்பதிவாளர் திரு. சி.ஜெ. ராஜ்குமார். 

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட இயக்குனர், லீனா மணிமேகலை அவர்கள் பங்குபெறுகிறார்.

லீனா மணிமேகலை தேவதை என்கிற அவரது குறும்படத்திற்காக மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறும்படங்களை விருதுகளுக்கு அனுப்புவது தொடர்பான வழிகாட்டல் நடைபெறும்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு
கௌடில்யன்  ரமேஷ்  15 நிமிடங்கள்
ராவ்  சாஹிப்   சர்வோத்தமன்  12 நிமிடங்கள்
எழுத்தாளனின் சமையல் குறிப்புகள்  தமிழ் சாமி அய்யா  13 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட நடிகர் திரு. இராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

இராமகிருஷ்ணன் அவர்கள், குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், கோரிப்பாளையம் போன்ற திரைப்படங்களின் கதாநாயகன்ஆவார்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</