கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 20வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

சா.ரு. மணிவில்லன், பத்மநாபன்  

தமிழ் ஸ்டியோ.காம்-ன் 20வது குறும்பட வட்டம் வழக்கம் போல் இக்சா மையத்தில் 08.05.2010 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக நாடகக்காரர் ஜெயராவ், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

தமிழ் ஸ்டியோ அருண் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினர்களை அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார். தமிழ் ஸ்டியோவின் செயல்பாடுகளை புதிய ஆர்வலர்களுக்கு விளக்கிக் கூறினார்.

முதல் நிகழ்வு : (நடிப்பு பயிற்சிப்பட்டறை)

நாடகக்காரர் ஜெயராவ் நடிப்பு என்பது என்ன ? நடிகன் என்பவன் யார்? எப்படி இயங்க வேண்டும் என்ற கேள்விகளை எழுப்பி ஆர்வலர்களுக்கு நடிப்பு பற்றி சொல்லிக் கொடுத்தார்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கலைத் திறமை ஒளிந்து கொண்டுள்ளது. அதை கண்டுபிடித்து வெளிக் கொண்டு வர வேண்டியது நம் கடமை. எது யதார்த்தமான நடிப்பு ? எது அபத்தமானது என்பதை இனம் காணவும் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் யதார்த்த நடிப்பு நோக்கி பயணிப்பவர்கள். தரமானதை கண்டடைய நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

குறும்பட ஆர்வலர்கள் அனைவரையும் பங்கேற்க வைத்து நடிப்பு பற்றி சொல்லி கொடுத்தது அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.

இரண்டாம் நிகழ்வு : (குறும்பட வழிகாட்டல்)

இம்மாத குறும்பட வழிகாட்டல் பகுதியில் திருடா திருடி, பொறி, யோகி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சுப்பிரமணியம் சிவா கலந்துகொண்டார்.

சுப்பிரமணியம் சிவா :

இன்று இயக்குனர் கதை எழுதினால் மட்டும் போதாது. தயாரிப்பாளரையும் தேடி கண்டுபிடிக்க வேண்டும். அறிமுக இயக்குனர்கள் சிறிய கதையாக எடுத்துக் கொண்டு அதை எளிமையாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் சொன்னால் வெற்றி நிச்சயம். தொழிற்நுட்பத்திற்காக கதை யோசிக்காமல் கதைக்காகத்தான் தொழில்நுட்பம் என்பதை புரிந்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

பெரிய நடிகர்கள், அறிமுக நடிகர்கள் இருவரையும் ஒன்றிணைத்து நடிக்க வைப்பது சிரமமான காரியம். அதை இயக்குனர் லாவகமாக கையாள வேண்டும். நடிகர்களுக்கு ஞாபகசக்தி மிக அவசியம். ஒரு வசனத்தை எப்படி வேண்டுமானாலும் உச்சரிக்க நடிகன் தயாராக இருக்க வேண்டும். நான் இப்படித்தான் வசனம் பேசுவேன் என்று சொன்னால் நாம் எதிர்பார்க்கும் தரத்தை எட்ட முடியாது.

ஒரு இயக்குனர் எனக்கு இதுதான் வேண்டும் என பிடிவாதமாக இருக்கலாமா இல்லை இருப்பதை வைத்துக் கொண்டு சிறப்பானதை எடுக்கலாமா என்று கேட்டால் இரண்டாவதை தான் தேர்ந்தெடுக்க வேண்டும். சில நேரங்களில் நாம் வெற்றி பெறுவதற்காக சில சமரங்களை செய்துக் கொள்வதில் தவறில்லை.

நாம் உழைப்பது எல்லாம் பணம் சம்பாதிக்கத்தான் சேவை செய்வதற்கு அல்ல. சேவை செய்வது கடவுளின் வேலை.

இன்று படம் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் 15 வயது முதல் 25 வரையிலான இளைஞர்கள்தான். அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதைத்தான் படமாக எடுக்க முடியும். இன்று பெண்கள் பற்றி படம் வராததற்கு காரணம் குடும்பமாக படம் பார்க்க வருபவர்கள் குறைந்து விட்டதுதான். இதனால்தான் குறும் படங்கள் கூட இப்போது வெளிவருவதில்லை.

யோகி படத்தை 175 நாட்கள் படம் பிடித்தோம். Shot by shot  ஆக order shot -ல் படப்பிடிப்பு செய்தோம். ஒரு படம் மிக சிறந்த படமாக வர வேண்டுமானால் order shot -ல்தான் படப்பிடிப்பு செய்ய வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய கண்டம் முழுவதும் தருமம் வெல்லும் என்று நம்பிக் கொண்டிருந்த காலத்தில் சாணக்கியர் தன்னுடைய அர்த்தசாஸ்திரம் நூலில் சட்டம்தான் வெல்லும் என எழுதினார். இன்று ஒருவன் கொலை செய்தால்கூட அதை சட்டப்பபடி நிரூபிக்காவிட்டால் அவன் நிரபராதி என்றுதான் சட்டம் சொல்லுகிறது.

நான் ஒரு வெளிநாட்டு படத்தை பார்க்கிறேன். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதை நான் தமிழுக்கு கொண்டு வர வேண்டும் என விரும்புகிறேன். ஏன் அதை முறையான அனுமதி பெற்று எடுக்கக் கூடாதா? என நீங்கள் கேட்கலாம். அனுமதி பெறுவதற்கு சுமார் ஒரு லட்சம் டாலர் செலவாகும். அது நம் பட்ஜெட்டுக்குள் கொண்டு வந்தால் நமக்கு கட்டுபடியாகாது. சரி இந்த படம் அந்த படத்தை தழுவியது என வெளிப்படையாக ஒத்துக் கொள்ள முடியுமா எனக் கேட்டால் அதுவும் சாத்தியமில்லை. ஏனெனில், இது விஞ்ஞான யுகம். தகவல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்றடைந்து விடும். அப்படி ஏதாவது தகவல் கிடைத்து பிரச்சினையானால் நாம் எடுக்கும் படம் வெளிவராது. சில நேரங்களில் சில விசயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. ஒருவன் தான் உயிர் வாழ எது வேண்டுமானாலும் செய்யலாம். அதில் தப்பு - சரி எல்லாம் கிடையாது. இதை அர்த்த சாஸ்திரமே கூறுகிறது. மனைவி, குழந்தை, நண்பன், சகோதரன் என அனைவரிடமும் சில ரகசியங்களை சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. சொன்னால் உறவுகள் சிதறி விடும்.

எனக்கு தத்துவம் பிடிக்கும். தத்துவங்கள் தான் உலகை மாற்றியமைத்துள்ளன. அதையெல்லாம் நான் எடுக்கும் படங்களில் சொல்லிவிட முடியாது. அப்படி சொன்னாலும் அது அபத்தமாக இருக்கும். ஆனால் தத்துவங்களை மையமாகக் கொண்ட படங்களை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு ஆகும்.

ஒரு இயக்குனருடைய எல்லா படங்களும் சிறந்த படங்களாக இருக்க வாய்ப்பில்லை. ஒன்று, இரண்டு படங்கள்தான் மிக சிறந்த படமாக இருக்கும்.

மூன்றாம் நிகழ்வு : (குறும்படத் திரையிடல்)

இம்மாதம் குறும்பட திரையிடல் பகுதியில் நீர் மேலாண்மை பற்றி இயக்குனர் பால கைலாசம் இயக்கிய 'நீருண்டு நிலமுண்டு' என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. சுமார் ஒன்றரை மணிநேரம் கால அளவுள்ள ஆவணப்படம் அது.

ஆவணப்படம் திரையிடலுக்கு பிறகு அப்பட இயக்குனர் பாலா கைலாசம் இப்படம் சார்ந்த தன் அனுபவங்களை குறும்பட ஆர்வலர்களோடு பகிர்ந்துக் கொண்டார்.

பால கைலாசம் :-

குறும்பட வட்டம் பெயருக்கு ஏற்றார்போல் அனைவரும் வட்டமாக அமர்ந்து கலந்துரையாடினால் சிறப்பாக இருக்கும்.

உலகம் முழுவதும் தனியார்மயம் மிக வேகமாக நடந்து வருகின்றது. உலகில் ஒரு நாட்டில் கூட, அரசுத்துறையை எடுத்து தனியார் கைகளில் கொடுத்ததனால் அங்குள்ள மக்கள் பயனடைந்துள்ளார்கள் என ஒரு திட்டத்தைக் கூட கைகாட்ட முடியாது.

கல்லூரி படிப்பை முடித்து வெளியே வரும்போது எல்லா மாணவர்களும் சேவை மனப்பான்மையுடன்தான் இருக்கின்றனர். ஆனால் வேலைக்கு சேர்ந்த பிறகு அங்குள்ள நிர்வாக சீர்கேடு இவர்களை தவறு செய்பவர்களாக மாற்றிவிடுகிறது.

விவசாய பொறியாளர்களுக்கு விவசாயிகளின் பிரச்சினை என்ன? எப்படி தீர்க்க முடியும்? என்று நன்றாகவே தெரிந்து இருக்கிறது. ஆனால் அவர்கள் வேலை செய்ய வேண்டும் என்று மனது வைத்தால்தான் உண்டு. அவர்களை மேலிருந்து அதிகாரத்தை காட்டி கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைக்க முடியாது. அவர்களுக்குள் தன்னார்வ சேவை உணர்வைத் தூண்ட வேண்டும். அதுதான் இப்போதைய தேவையாக உள்ளது.

நீர் ஆதாரங்களை சேமிக்க நமது மரபிலேயே பல விஷயங்கள் உள்ளன. அவற்றை பராமரிக்க வேண்டும். நீர் விரையத்தை தவிர்க்க கற்றுக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து தொழில்நுட்பம் மூலம் மட்டும் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கக் கூடாது. கடைசி நிலையில்தான் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.

மும்பை நகரத்தில் ஒரு மனிதன் கார் கழுவதற்கு 100 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தும் போது, இங்கு நாம் கிராமத்தில் வாழும் ஒரு மனிதனுக்கு தேவையான தண்ணீரில் அளவு 40 லிட்டர் என சொல்லிக் கொண்டுள்ளோம்.

போபால் விஷவாயு தாக்கியதனால் சுமார் 40 ஆயிரம் மக்கள் இறந்தனர். மீதம் உள்ள மக்களுக்கு முழுமையான நிவாரணம் இன்னும் கிடைக்க வில்லை. நிவாரணம் கிடைத்தவர்களுக்கு கூட அது அவர்களுடைய மாதாந்திர மருத்துவ செலவுக்குக் கூட போதுமானதாக இல்லை. இந்நிலையில் அதிக ஆபத்தான அணு உலைகள் அமைகக ஒப்பந்தம் போடுகிறார்கள்.

உலகம் முழுவதுமுள்ள நீர் வளங்களை கோக், பெப்சி, நெஸ்லே ஆகிய மூன்று நிறுவனங்களும் அதிக அளவில் நீரை உறிஞ்சி எடுத்து பல்வேறு பெயர்களில் குளிர்பானங்களாக தயாரித்து விற்பனை செய்கின்றனர். இவர்களுக்கு எதிரான செய்திகளை ஊடகங்கள் பதிவு செய்வதில்லை. ஏனெனில் அவர்களின் விளம்பரம் ஊடகங்களுக்கு தேவையாக உள்ளது.

ஆப்பிரிக்காவில் ஒரு கிராமத்தில் எல்லோருக்கும் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. என்ன காரணம் என்று பார்த்தால் அங்குள்ள நீர் வளங்களை தனியாருக்கு கொடுத்து விட்டார்கள். அந்த நிறுவனம் றிக்ஷீமீஜீணீவீபீ சிணீக்ஷீபீ பயன்படுத்தினால்தான் தண்ணீர் பெற முடியும் என்ற நிலை ஏற்படுத்தி விடுகிறது. வறுமையில் வாடும் மக்கள் சுகாதாரமற்ற தண்ணீரை பருகியதுதான் மஞ்சள் காமாலைக்கு காரணமாகும்.

பொலிவியாவில் பாரம்பரியமாக வீட்டில் தொட்டி அமைத்து மழைநீரை சேகரித்து பயன்படுத்தி வந்தனர். அங்கு நீர்வளம் தனியார்மயம் ஆனதும் அந்த நிறுவனம் தொட்டிகளை இடிக்க முயற்சி மேற்கொண்டது. அப்போது அதை எதிர்த்து போராடிய தலைவர்தான் இப்போது அதிபராக உள்ளார். இப்படி உலகம் முழுவதும் நீரினால் பிரச்சினைகள் உள்ளன.

மூன்றாவது உலகப் போர் மூண்டால் அதற்கு காரணம் தண்ணீராகத்தான் இருக்கும் என்பதை மறுக்க முடியாத நிலைதான் உள்ளது.

இந்தியாவிலுள்ள எல்லா அரசியல்வாதிகளுமே அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்பதினால் தனியார்மயத்தை ஆதரிக்கின்றனர்.

இந்த ஆவணப் படத்திற்காக சுமார் 120 மணிநேரம் படம் பிடித்துள்ளேன். எல்லா மனிதர்களின் இயல்பான உணர்வுகளை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணமே இவ்வளவு மணிநேரம் படம் பிடிக்க காரணம். திரைப்படம் பார்க்க தயாராக இருப்பவர்களுக்கு 2 மணிநேர ஆவணப் படத்தை பார்க்க சிரமம் இருக்காது என்றே கருதுகிறேன்.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/20?authkey=
Gv1sRgCOXN19LKw7613AE#


-------------------------------------------------------------------------------------நாள்: சனிக்கிழமை (08-05-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 மணி) - களம்

இந்த மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருத் துறை சார்ந்த பயிற்சிக் களம் ஆர்வலர்களுக்காக அமைத்துக் கொடுக்கப்படவிருக்கிறது. நடிப்பு, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்கம், திரைக்கதை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இதில் அடங்கும். குறும்பட கலைஞர்கள் மற்றும், ஆர்வலர்களுக்கு இதுப் போன்ற தொடர் பயிற்சிகளை கொடுப்பதன் மூலம் அந்தந்தத் துறைகளில் அவர்களைப் பலப்படுத்த முடியும் என்கிற எண்ணத்தின் வெளிப்பாடே இந்தப் பயிற்சிக் களம். இதில் ஒரு மாதத்தில். ஒரு மணி நேரத்தில், அந்தத் துறை சார்ந்த முழுப் பயிற்சியும் முடித்துவிட முடியாது. பயிற்சிகள் ஒவ்வொரு மாதமும் தொடரும். இதில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். பயிற்சி முழுக்க முழுக்க இலவசம்.

இதில் முதல் மாதம் நடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நடிப்பு சார்ந்த அனைத்து நுட்பங்களும் செயல்வழிப் பயிற்சி மூலம் கற்றுக்கொடுக்கப்படும். ஆர்வலர்களை நடிக்க வைத்து உடனுக்குடன் அவர்களின் குறைகளும் நிவர்த்தி செய்யப்படும். முதல் மாதம் நடிப்பு பயிற்சி கொடுக்கவிருப்பவர், திரு. ஜெய ராவ். இவர் தியேட்டர் லேப் எனும் அமைப்பின் மூலம் பல நடிகர்களை உருவாக்கி வருகிறார்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைபப்ட இயக்குனர், திரு. சுப்பிரமணியம் சிவா அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் குறித்தான விரிவான வழிகாட்டல் நடைபெறும்.

இவர், திருடா திருடி, பொறி, யோகி போன்ற திரைப்படங்களின் இயக்குனர் ஆவார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் படம்:

இந்த மாதம் மூன்றாவது பகுதியில், ஆவணப்பட இயக்குனர் திரு. கைலாசம் பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய "நீருண்டு நிலமுண்டு" ஆவணப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்படம் கிராமங்களில் நீர் சேகரிப்பின் தேவையை, அதன் சாத்தியங்களை மிக விரிவாக பேசும் ஆவணப்படம். 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</