கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 19 வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

சா.ரு. மணிவில்லன், பத்மநாபன்  

தமிழ் ஸ்டுடியோ.காம் 19வது குறும்பட வட்டம் 10.04.2010 அன்று வழக்கம்போல் இக்சா மையத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் அகத்தியன், ஒளிப்பதிவாளர் துவாரகநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் ஸ்டுடியோ அருண் அனைவரையும் வரவேற்று பேசினார். மேலும் புதிய உறுப்பினர்களுக்கு குறும்பட வட்ட நிகழ்வுகளை விளக்கியதோடு சிறப்பு விருந்தினர்களை அவைக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

குறும்பட வழிகாட்டல் பகுதியில் இயக்குனர் அகத்தியன் தன் திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். திருச்சி தேசிய கல்லூரியில் எம்.ஏ. தமிழ் இலக்கியம் முடித்துவிட்டு சினிமா ஆர்வம் காரணமாக 1978ல் சென்னை வந்ததாகவும், முதலில் சினிமா அலுவலகத்தில் ஆபிஸ் பையனாக வேலை பார்த்ததாகவும் கூறினார்.

சினிமா ரெப்ரஸெண்டேட்டீவ் ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு முறை இலக்கியம் சார்ந்து நண்பரோடு விவாதித்துக் கொண்டிருந்ததை கேட்ட மற்றொரு நபர் என்னை தனியாக அழைத்து விசாரித்தார். நான் அந்த அலுவலகத்தில் வேலைக்கு சேரும்போது 10வது மட்டுமே படித்ததாக கூறியிருந்தேன். என்னை விசாரித்த நபர் அன்று பிரபலமாக இருந்த இயக்குனர் எம்.ஏ. காஜா அவர்களிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்டார். அவரிடம் இரண்டு படங்களில் மட்டும் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன் என்றார்.

இன்று போல் ஆரோக்கியமான இளைஞர்கள் அன்று இல்லை. எல்லோரும் பொறாமையுடன் ஒருவரை ஒருவர் ஏளனமாக பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் நான் மற்றவர்களை நம்பாமல் என்னை மட்டும் நம்பும் மனிதனாகவே இருந்தேன். இதனால் நல்ல சினிமாவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்காமலே இருந்தது.

இயக்குனராக வாய்ப்பு கிடைத்த காலத்தில் எனக்கு முதலில் தோல்வி படங்களே அமைந்தது. என் முதல் படம் சுமார் 10,000 அடி நீளம் எடுத்த பிறகு முடங்கிப் போனது. இரண்டாவது படம் 4, 000 படம் நீளம் எடுத்த பிறகு முடங்கிப் போனது. மூன்றாவது படம் ரிலீசானது. ஆனால் படம் தோல்வி அடைந்தது எனவும் கூறினார்.

பொண்டாட்டி ராஜ்ஜியம் முதல் வெற்றிப் படமாகவும் தொடர்ந்து மதுமதியும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படங்களின் வெற்றி என்னை குழப்பமடையச் செய்தது. நான் விரும்பும் சினிமாவிற்கும், எடுக்கும் சினிமாவிற்குமான இடைவெளி எனக்கே தெரிந்தது. நான் விருப்பமில்லாமல் அல்லது ஈடுபாடு இல்லாமல் எடுத்த படங்கள் பெரும் வெற்றி பெற்றது. இது எனக்கு வேதனையாக இருந்தது என்றார்.

கோப்பெரும் சோழன், பிசிராந்தையார் நட்பைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்த போதுதான் என்னுள் காதல் கோட்டை கதை உருவானது. அதை பல தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். யாரும் புது முயற்சியை வரவேற்கத் தயாராக இல்லை. இந்த நிலையில் சிவசக்தி பாண்டியன் படம் தயாரிக்க வந்தபோது அவரிடமும் இந்த கதை சொன்னேன். அவர் தெளிவாக சொன்னார். புதுமுயற்சி எதுவும் வேண்டாம், மதுமதி போன்று ஒரு படம் தாருங்கள் என்றார். மதுமதி கதையே வேறொரு களத்திற்கு மாற்றி வான்மதியாக படம் எடுத்தேன். அதுவும் மிகப்பெரிய வெற்றி. அந்த வெற்றியை தொடர்ந்து சிவசக்தி பாண்டியன் காதல் கோட்டையை தயாரிக்க முன் வந்தார். அந்த படம் மிக சரியான காலகட்டத்தின் இறுதியில் வெளிவந்தது. அப்படம் 1996 மட்டும் வெளியாகாமல் இருந்திருந்தால் பிறகு உபயோகமற்றதாக போயிருக்கும். ஏனெனில் 1996 பிறகு செல்பேசி தொழிற்நுட்பம் வளர்ச்சி பெற்று விட்டது. அந்த கதைக்கு கடிதம் எஸ்டிடி போன்றவைதான் ஜீவன் என்று சொன்னார்.

பிறகு கோகுலத்தில் சீதை, சோதனை முயற்சியாக விடுகதை, இரண்டு இந்தி படங்கள், தெலுங்கு படம் எல்லாம் செய்தேன். தற்கால தமிழ் சினிமாவில் வன்முறை அதிகாக உள்ளது. சமுதாயத்தில் வன்முறை, கலை இலக்கியத்தில் என எல்லா இடங்களிலும் வன்முறை பெருகிவிட்டது. என்னுடைய தார்மீக பொறுப்பு யாரையும் காயப்படுத்த கூடாது என்பதுதான் என்றார்.

ரிஷி (கோகுலத்தில் சீதை) கதாபாத்திரம் எப்படி உருவானது என்ற கேள்விக்கு ஜெயகாந்தனின் ரிஷிமூலம் நாவலை சுருங்க கூறி அதன் பாதிப்பில் உருவானது தான் ரிஷி என்றார்.

எல்லா மதங்களும் ஆசியாவில் தோன்றியவைதான். புத்தன் இயேசு மறைந்த பிறகு அவர்களுக்கு பின் வந்தவர்கள்தான் அதனை மதமாக மாற்றினர். ஆனால் முகமது மட்டுமே மக்களை நல்வழிபடுத்த மதத்தை தோற்றுவித்தார். எல்லோரும் அன்பைத்தான் போதித்தார்கள் எனவும் கூறினார்.

பாபர் மசூதி இடிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்தியாவில் இவ்வளவு வன்முறை நடந்திருக்காது என்றார். சமூக நோக்கோடு படம் எடுத்து சுமார் ஒண்ணே முக்கால் கோடி ரூபாய் இழந்ததாகவும் கூறினார்.

சாதிய வேறுபாடுகள், மத வேறுபாடுகளை கடக்க வேண்டும். கேரளம் போல் இலக்கிய வாசிப்பு நிகழ்த்த வேண்டும் என்றார். அடையாறு திரைப்பட கல்லூரியில் சேர்ந்து மூன்றாவது மாதமே வெளியேறி விட்டதாகவும் கூறினார். திரைப்பட கல்லூரியில் தொழிற்நுட்பம் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும். சுயசிந்தனையை அவர் அவர்தான் வளர்த்துக் கொள்ளமுடியும் எனவும் கூறினார்.

இந்தியாவிற்குள் சினிமா வந்தது எப்படி, யாரால் அது வளர்க்கப்பட்டது என்பதனை தெரிந்துக் கொள்ள வேண்டும். தாதா சாகிப் பால்கேயின் வரலாற்றை வாசிக்க வேண்டும். அறந்தை நாராயணனின் தமிழ் சினிமாவின் தோற்றமும் வளர்ச்சி, எம்ஜிஆரின் நான் ஏன் பிறந்தேன், நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு என பலவற்றை வாசித்தால் சினிமாவில் வெற்றி தோல்விகளை புரிந்து கொள்ள முடியும் என்றார்.

சினிமாவில் சாதிக்க விரும்புகிறவர்கள் நிறைய வாசிக்க வேண்டும். குறிப்பாக நாவல்கள் வாசிக்கவேண்டும். அடுத்து சமகலை வாழ்க்கைபோல் நேரடித்தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும். நான் சொந்தமாகவே சிந்திப்பேன் என்பதனை ஒரு விதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

காதல் இல்லாத படங்களையும், சமூக நோக்கம் சார்ந்த குறும்படங்களையும் இயக்க வேண்டும் என்பதனை எதிர்கால திட்டமாக வைத்துள்ளேன் எனக்கூறி இயக்குனர் அகத்தியன் தன் சிறப்பு உரையை நிறைவு செய்தார்.

குறும்பட திரையிடல் பகுதியில் படம் எடுக்கலாம் வாங்க என்ற திட்டத்தின் மூலம் கே. செந்தில்குமார் இயக்கிய 'இப்ப வருந்தி என்ன பயன்' என்ற குறும்படம் திரையிடப்பட்டது. பிறகு வழக்கம் போல் மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டன.

1. செந்தில் ராஜா இயக்கிய வாழ்வின் நடனம்
2. ஆரோக்கியராஜ் இயக்கிய யோசி
3. ஜெய்கணபதி இயக்கிய வாழ்க சனநாயகம்


ஒளிப்பதிவாளர் துவாரகநாத் மூன்று குறும்படங்களையும் திறனாய்வு செய்தார்.

ஒளிப்பதிவாளர் துவாரகநாத்

முதல் படம் திருமணம் தள்ளிபோகும் பெண்ணின் மன உணர்வுகளை சிறப்பாக பதிவு செய்திருந்தது. ஒளிப்பதிவு நன்றாக இருந்தது. சில விசயங்கள் திரும்ப திரும்ப வருவதை தவிர்த்து இருக்கலாம் படத்தின் நீளத்தையும் குறைந்திருக்கலாம்.

இரண்டாவது படத்தின் கதை கரு நல்ல விசயம். குறும்படங்களை எவ்வளவு சுருக்கமாக எடுக்க முடியுமோ அவ்வளவு சுருக்கமாக எடுக்க வேண்டும் என்பது என் எண்ணம். கதை சொல்லியின் குரல் தேர்வில் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம். குரல் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. விபத்து நடக்கும் பகுதியை இன்னும் நம்பகத்தன்மையோடு காட்டியிருக்கலாம்.

மூன்றாவது குறும்படத்தின் சிறப்பே அதன் வசனங்கள்தான். ஒரு செல்போனை சுற்றியே எல்லா கட்சிக் காரர்களும் வாக்குறுதிகளை உருவாக்கும் சூழல் அருமை. நடிகர்களின் நடிப்பு நன்றாக இருந்தது. எல்லா அரசியல் வாதிகளுமே ஒரு முகமூடியோடுதான் அலைகிறார்கள் என்பதுபோல் எல்லா கதாபாத்திரங்களும் கருப்பு முகமூடி அணிந்து இருந்தது சிறப்பு. காட்சி அமைப்புகளின் கவனம் செலுத்தி இருக்கலாம்.

போட்டியில் இல்லாவிட்டாலும் இப்ப வருந்தி என்ன பயன் குறும்படமும் நன்றாக இருந்தது. எல்லோரும் வெள்ளித்திரையில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இறுதியாக குறும்பட இயக்குனர்கள் ஏற்புரை வழங்கினர். போட்டி குறும்படங்களில் வாழ்க சனநாயகம் பெற்றி படமாக பார்வையாளர்கள் தேர்ந்தெடுந்திருந்தனர். பரிசும் வழங்கப்பட்டது.

தமிழ் ஸ்டியோ அருண் அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியினை நிறைவு செய்தார்.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/1911042010#

-------------------------------------------------------------------------------------
நாள்: சனிக்கிழமை (10-04-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 மணி) - குறும்பட கலந்தாய்வு

சென்ற மாதம் புதிதாக தொடங்கிய குறும்பட கலந்தாய்வு பகுதியில் "படமெடுக்கலாம் வாங்க" திட்டத்தின் கீழ் கேமரா மற்றும் படத்தொகுப்பு உதவி பெற்ற ஆர்வலர் செந்தில் அவர்கள் இயக்கிய குறும்படம் திரையிடப்பட்டு அது பற்றிய விரிவான கலந்துரையாடல் நடைபெறும். இக்குறும்படம் மூலம் அவர் பெற்ற அனுபவங்கள் குறித்தும், குறும்படம் எடுக்கப்பட்டிருக்கும் விதம் போன்றவை குறித்து அனைத்து ஆர்வலர்களும், தங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொள்வார்கள்.

மேலும், இந்த மாதம் ஆர்வமுள்ள ஒரு உறுப்பினருக்கு கேமரா மற்றும் படத்தொகுப்பு வழங்குவது குறித்தான அறிவிப்பும் வெளியாகும்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைபப்ட இயக்குனர், திரு. அகத்தியன் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் குறித்தான விரிவான வழிகாட்டல் நடைபெறும்.

திரு. அகத்தியன், வான்மதி, காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை, ராமகிருஷ்ணா போன்ற திரைப்படங்களின் இயக்குனர் ஆவார். தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன் முதலில் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை தன்னுடைய காதல் கோட்டை திரைப்படத்திற்காக பெற்றவர்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு
வாழ்வின் நடனம் செந்தில்  13 நிமிடங்கள்
யோசி ஆரோக்கியராஜ் 15 நிமிடங்கள்
வாழ்க ஜனநாயகம் கணபதி 20 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. துவாரகநாத் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

துவாரகநாத் அவர்கள், ஆடோக்ராப், மாயக்கண்ணாடி, காவலர் குடியிருப்பு போன்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</