கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 16 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)

சா.ரு. மணிவில்லன், பத்மநாபன்  

தமிழ் ஸ்டியோ.காம் நடத்தும் குறும்பட வட்டத்தின் 16வது நிகழ்வு 9.1.2010 அன்று சென்னை இக்சா மையத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற்றது. இம்மாத சிறப்பு விருந்தினர்களாக 5வது தூண் விஜய் ஆனந்த், இயக்குனர் ப்ரியா, ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் நிகழ்வாக அருண் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் இம்மாத நிகழ்வில் இலக்கிய பகுதிக்கு பதிலாக சமுக விழிப்புணர்வுக்காக தகவல் அறிவும் உரிமை சட்டம் பற்றியும் அந்த சட்டத்தை பயன்படுத்துவது பற்றியும் 5வது தூண் அமைப்பாளர் விஜய் ஆனந்த் பேசினார். மேலும் அவர் பேசுகையில்...

அரசு மக்களுக்கு அளிக்கும் உரிமைகளை பெற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள். அவர்கள் செய்யும் பணிக்காக சட்டத்துக்கு புறம்பாக வெகுமதியை எதிர்பார்க்கிறார்கள். லஞ்சம் அவர்களின் நோய். அதை களைய அவர்களை தண்டிக்க முடியும். நாம் ஒவ்வொருவரும் லஞ்சம் கொடுக்கமாட்டேன் என உறுதி கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டால் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே லஞ்சத்தை ஒழிக்க முடியும்.

குடும்ப அட்டைப் பெற, கல்விக் கடன் பற்றி விவரத்தை தெரிந்து கொள்ள, தேர்தல் செலவுகளை தெரிந்து கொள்ள என பல விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற முடியும். சில ஆயிரம் லஞ்சமாக கொடுத்து முடிக்க வேண்டிய காரியத்தை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சில கேள்விகளை எழுப்புவதன் மூலம் சாதிக்க முடியும். இந்த இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பல காரியத்தை சாதித்துள்ளனர்.

தகவல் அறியும் சட்டத்ததை பயன்படுத்துவது எப்படி என்பதை இலவசமாகவே சொல்லி தருகிறோம் என கூறினார்.

குறும்பட வழிகாட்டல் பகுதியில் இயக்குனர் ப்ரியா இளம் படைப்பாளிகளுக்கு திரையுலகம் பற்றிய தன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். திரைத்துறையில் தன் குடும்பத்தார் யாருமில்லை என்றும் திரைப்பட கல்லூரியில் படித்து முடித்துவிட்டு இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றினேன் என்றும் கூறினார். பெரிய திரை படைப்பாளியாக மாறிவிட்டால் நாம் நினைக்கும்படி படம் எடுக்க முடியாது. பல சமரசத்தை செய்து கொள்ள வேண்டும். ஆனால் இப்படி குறும்படம் எடுக்கும்போது முழுமையான சுதந்திரத்தோடு இயக்க முடியும் என்றார். பெரும்பாலும் படைப்பாளிகள் பாராட்டுதல்களை விரும்புவார்கள். ஊக்குவிக்கவும். பாராட்டவும் தமிழ் ஸ்டியோ.காம்-ன் குறும்பட வட்டம் இருக்கிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் சினிமாவில் கற்றுக்கொண்ட காலத்தில் இதுபோல் ஊக்கப்படுத்த ஆளில்லை. இதுபோன்ற காரியத்தை என்னை விட வயதில் சிறியவர்கள் செய்கிறார்கள் என்பதை அறியும்போது பெருமையாக இருக்கிறது. அதேவேளை எனக்கு பொறாமையாகவும் இருக்கிறது என்று நகைச்சுவையாக கூறினார்.

குடும்ப உறவுகளை அல்லது சமூக பிரச்சினைகளை தேர்வு செய்து படம் எடுக்கலாம். எனக்கு என்ன மாதிரியான படம் பிடிக்குமோ அதுமாதிரியான படத்தை இயக்குவதில்தான் எனக்கு விருப்பமாக இருக்கிறது. சினிமாவில் கருத்து சொல்வதினால் மக்கள் திருந்தி விடுவார்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் சினிமாவில் கள்ள காதல் வெற்றி பெறுவதாக காட்டமாட்டார்கள். வன்முறையாளன் வன்முறைக்கே பலியாவான். ஆனால் நடைமுறை வாழ்க்கை அப்படி இல்லை. புகை பிடிக்க கூடாது என்று காட்டினால் பாராட்டுவார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேர் இனி புகை பிடிப்பதில்லை என்ற முடிவுக்கு வருவார்கள் என கேள்வி எழுப்பினார்.

காதல், பருத்தி வீரன் ஆகிய படத்தை தமிழில் தனக்கு பிடித்த படம் என்று சொன்னார். ஒருவர் கதை எழுதி மற்றொருவர் இயக்குவது ஆரோக்கியமானதுதான். ஆனால் என்னுடைய கதையை மற்றொருவர் இயக்கும்போது எப்படி எடுப்பார்களோ என்ற பதற்றம் எனக்குள் ஏற்படுகிறது. அதனால் எல்லாவற்றையும் கதை, திரைகதை, வசனம், இயக்கம் நானே செய்கிறேன் என்றும் கூறினார்.

சினிமா உலகம் பற்றிய பல விசயத்தை வெளிப்படையாக பேசினார். கலந்துரையாடலிலும் ஆர்வமாக கலந்து கொண்டு கடுமையான விமர்சனம், மற்றும் கேள்விகளுக்கும் சிரித்துக்கொண்டே தன் நிலைப்பாட்டை தெளிவாகவும், ஆழமாகவும் பதிவு செய்தார். இளம் படைப்பாளிகள் இன்னும் சிறப்பான கேள்விகளை எழுப்பியிருக்கலாம்.

குறும்படம் திரையிடல் பகுதியில் தேவன் இயக்கிய வணக்குகிறேன் தாயே. சக்தி பாரதி இயக்கிகய நிழல்களின் நீட்சியாய், சுப்பு இயக்கிய வாக்குமூலம் ஆகிய மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டன.

3 குறும்படங்கள் பற்றிய திறனாய்வு ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் அளித்தார். முதல் குறும்படம் நன்றாக இருந்ததாகவும், ஒரு சில இடத்தில் நாடகத் தன்மை இருந்தது என்ற விமர்சனத்தையும், 2வது குறும்படத்தில் கடைசி பகுதி மட்டும் சொல்ல வந்த விசயத்தை தெளிவாக சொல்வதற்கு முன்பே படம் முடிந்து விடுகிறது மற்றபடி படம் பாராட்டுதலுக்குரியது என்றும் 3வது குறும்படத்தில் தொழில்நுட்பம் நன்றாக பயன்படுத்தபட்டிருந்தது. ஆனால் படத்தின் கரு, ஒரு ஆவணப்படத்திற்கு உரியது.

இதை குறும்படமாக எடுப்பதற்கு பதிலாக ஆவணபடமாக எடுத்திருக்கலாம் என்ற விமர்சனத்தையும் கூறினார்.

இக்குறும்படம் எடுத்திருப்பவர்கள் அனைவரும் அனுபவம் இல்லாமல் ஆர்வத்தினால் எடுத்திருக்கிறார்கள். அவர்களின் ஆர்வத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் ரெட் ஒன் கேமிரா பற்றியும் பொக்கிஷம் படம் அனுபவம் பற்றியும் பல அனுபவத்ததை பகிர்ந்து கொண்டார்.

குறும்பட இயக்குனர்கள் ஏற்புரையில் இயக்குனர் தேவன் அனைவருக்கும் தன் நன்றியறிதலையும். இயக்குனர் சக்தி பாரதி தம் குழுவினர் அனைவரும் சினிமா முன் அனுபவம் இல்லாதவர்கள் என்றும் இயக்குனர் சுப்பு அந்நிய நாடுகளின் சூழ்ச்சிகளை வெளிபடுத்த வேண்டும் என்பதே தம்முடைய நோக்கம் என்றும் கூறினார்.

இறுதியாக தமிழ் ஸ்டியோ குணா அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். இந்த முறை வழக்கத்தை விட கூடுதலான ஆர்வலர்கள் வந்திருந்தனர் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/16#
------------------------------------------------------------------------------------------------------தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 16 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)

நாள்: சனிக்கிழமை (09-01-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 PM-4 PM) - விழிப்புணர்வு -

இந்த மாதம் இலக்கியம் பகுதிக்கு பதிலாக, ஐந்தாவது தூண் அமைப்பினரின் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெறும்.

அடுத்த மாதம் இலக்கியம் பகுதி நடைபெறும்.. இலக்கிய ஆர்வலர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட இயக்குனர், திருமிகு பிரியா அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட தனது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். இயக்கம் குறித்தான நுணுக்கங்களையும் வாசகர்களுக்கு பயிற்றுவிப்பார். வாசகர்களும் இயக்கம் மற்றும் இதத் தொழில்நுட்பத் துறை சார்ந்த தங்கள் ஐயங்களை அவரிடம் கேட்டு விடைப் பெற்றுக் கொள்ளலாம்.

பிரியா அவர்கள் "கண்ட நாள் முதல்", "கண்ணாமூச்சி ஏனடா" போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு
வணங்குகிறேன் தாயே தேவன் 15 நிமிடங்கள்
நிழல்களின் நீட்ச்சியாய் சக்தி பாரதி 15நிமிடங்கள்
வாக்குமூலம் சுப்பு 30 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இந்தப் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. ராஜேஷ் யாதவ் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

ராஜேஷ் யாதவ் அவர்கள் "ராமன் தேடிய சீதை", "பொக்கிஷம்" ஆகியத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஆவார்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</