கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 15 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)

சா.ரு. மணிவில்லன், பத்மநாபன்  

தமிழ் ஸ்டியோ.காம் - ன் 15வது குறும்பட வட்டம் 12-12-09 அன்று இக்சா மையத்தில் நடைபெற்றது, சிறப்பு விருந்தினர்களாக பத்திரிகையாளர் ஞாநி சரித்திர நாவலாசிரியர் கௌதம நீலாம்பரன், வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் ஸ்டியோ அருண் அனைவரையும் வரவேற்று பேசினார். மேலும் அவையோருக்கும் சிறப்பு விருந்தினர்கள் பற்றியும் சிறப்பு விருந்தினர்களுக்கு குறும்பட வட்டத்தின் நிகழ்வுகள் குறித்தது அறிமுகம் செய்து வைத்து நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.

முதலாவாதாக பத்திரிகையாளர் ஞாநி தன் எண்ணத்தை பகிர்ந்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளில் குறும்படம் பார்ப்பது விவாதிப்பது அதிகரித்துள்ளது, குறும்படத்தின் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எடுக்கப்படும் குறும்படம் அனைத்தும் மக்களிடம் சென்று சேர்வதாக கருத முடியாது. தமிழ்நாட்டில் சுமார் 40 கல்லூரிகளில் ஊடகம் கல்வி பாடமாக உள்ளது. அவர்கள் பயிற்சிக்காக படம் எடுக்கிறார்கள். மாணவர்கள் எடுக்கும் குறும்படம் சரியான விநியோக வழிமுறை இல்லாததினால் அப்படியே தேக்கமடைந்துள்ளன.

மாணவர்களை அடுத்து வணிக சினிமாவுக்கு செல்ல விரும்பும் பலர் குறும்படம் எடுக்கிறார்கள். பலர் தன் சொந்த காசில் கவிதை நூலை வெளியிட்டு தனக்கு தெரிந்த பலருக்கும் கொடுப்பது போல பலர் குறும்படம் எடுக்கிறார்கள். பெரும்பாலான குறும்படம் பார்முலா படமாகவே உள்ளது. வரதட்சணை கொடுமை, போதை, குழந்தை தொழிலாளர் பிரச்சனை, புகை, எய்ட்ஸ், குடி போன்ற சமுக பிரச்சனைகளை மையமாகக்கொண்டு குறும்படம் எடுக்கின்றனர்.
அதை கொண்டு போய் சமுக அக்கறையற்று காசுக்காகவே திரைப்படம் எடுப்பவரிடம் கொடுத்து தமக்கு வாய்ப்பு கேட்கிறார்கள். என்னவொரு சுயமுரண்பாடு.

35 வருடம் பத்திரிகையாளனாகவும் 21 குறும்படத்தை இயக்கியுள்ளவன் 40, 50 ஆவண படத்தை எடுத்துள்ளவன் என்ற முறையில் குறும்படம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வல்லமை இரண்டு பேரிடம் உள்ளதாக கருதுகிறேன். ஒன்று தொலைக்காட்சி மற்றொன்று வணிக சினிமா. ஆனால் இன்று இந்த இரண்டுமே பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சோதனை முயற்சியாக பிரமிட் சாய்மிராவுடன் இணைந்து "ஒரு ரீல்" சினிமா இயக்கத்தை ஆரம்பித்து முதல்படமாக மூத்த எழுத்தாளர் திலீப் குமாரின் சிறுகதையை அடிப்படையாக கொண்டு மிசஸ் ஜேம்ஸ் இப்போ என்ன செய்ய வேண்டும்? என்ற ஒரு ரீல் படத்தை உருவாக்கினோம். தமிழ்நாட்டில் நாற்பது தியேட்டரில் நாற்பது எழுத்தாளர்கள் ஆரம்பித்து வைக்க அஜித் நடித்த 'பில்லா' படத்துக்கு முன்பாக திரையிடப்பட்டது. மக்களின் வரவேற்பையும் பெற்றது. இரண்டாவதாக படம் எடுத்து தணிக்கை செய்து அப்படியே உள்ளது வெளியிட முடியாத நிலை. பிரமிட் சாய்மிரா-வின் பொருளாதார பிரச்சினை ஒரு புறம். மற்றொன்று பிரமிட் சாய்மீரா நிறுவனத்திற்குள்ளேயே எதிர்ப்புக்குரல். வணிக சினிமாவுக்கு எதிரான முயற்சிகளை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற மனநிலை. இதை நாம் நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

எதற்காக குறும்படம், யாருக்காக குறும்படம். எடுக்கப்படுகின்றன. அவற்றை பார்வையாளர்களுக்கு அப்படியே கொண்டு செல்ல போகிறோமா. இதுபற்றி நாம் எல்லோரும் யோசிக்க வேண்டும். எனக்குள் தோன்றும் யோசனை, கல்லூரிகளில் குறும்பட விழாக்களை நடத்தினால் பல பார்வையாளர்களை போய் சேர முடியும் என நம்புகிறேன்.

சுமார் 100, 150 பேர் அமரக்கூடிய சிறிய இடத்தை உருவாக்கி குறும்படத்தை திரையிடலாம். இதுபோன்ற முயற்சியை சுமார் 20 வருடத்திற்கு முன்பே ஏக்நாத் முயற்சித்தார். அந்த முயற்சியை முதலில் ஆதரிப்பதாக சொன்ன அரசு பின்பு வணிக சினிமாக்காரர்களின் வற்புறுத்தலுக்கு இணைந்து மறுத்துவிட்டது. ஊழல் அரிசயல்வாதிகளும் வணிக சினிமாகாரர்களும் கைகோர்த்து செயல்படுகிறார்கள். மாற்று சினிமா வளர்ச்சி ஏற்படாமல் தடுக்கிறார்கள், முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை கொண்ட அரசு அமைவது வரை நாம் போராடித்தான் தீர வேண்டும். தமிழ் ஸ்டியோ காம்-ன் முயற்சிகள் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன் எனக் கூறி ஞாநி தன் உரையை நிறைவு செய்தார்.

சரித்திர நாவலாசிரியர் கௌதம நீலாம்பரன் பேசும்போது நாம் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவே இந்த கூட்டம் நடைபெறுவதாக உணர்கிறேன். நான் 1965 ஆண்டு வாக்கில் சென்னைக்கு வந்தேன். பல வேலைகள் பல அவமானத்திற்கு பிறகு ஒரு தனியார் நூலகத்தில் வேலை பார்த்தேன். அதில்தான் பல படைப்புகளை படிக்க ஆரம்பித்தேன். அவை என்னை பல விசயத்தில் யோசிக்க வைத்தது. படைப்பு என்பதே யோசிக்க வைப்பதுதானே. யாசித்தவைகளை படைப்புகளாக எழுதினேன்.

இன்று வரை சுமார் 60 நூல்களை எழுதி உள்ளேன். இளமை காலத்தில் சோதிடர் என் சாதகப்படி நான் மக்கு, எனக்கு எதுவும் மண்டையில் ஏறாது என்று கூறினார். ஆனால் இன்று என்னுடைய நூல் லண்டன் நூல்நிலையத்தில் இருக்கிறது. பல நாடுகளில் வாழும் மக்கள் என் வாசகர்களாக உள்ளனர்.

தமிழ் சினிமா மூடநம்பிக்கையின் சின்னமாக உள்ளது. கதையின் நாயகன் புவிஈர்ப்பு விசைக்கு எதிர் திசையில் பறந்து பறந்து சண்டை போடுகிறான். இந்த பலசாலிகள் சிலோன் தீவில் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது என்ன செய்தார்கள். ராசராசன் காலத்தில் ஈழம் தமிழகத்தின் ஒரு பகுதி. ஈழத்தின் பூர்வீக குடிகள் தமிழர்களே. இதை உணர வரலாறு படிக்க வேண்டாமா? என்னுடைய கதையை யாரும் படமாக எடுக்க வேண்டாம் என்றே விரும்புகிறேன்.

ஏழாம் நூற்றாண்டை கல்கி, "சிவகாமி சபதத்தில்" கொண்டு வந்தவுடன்தானே மாமல்லபுரம் பிரபலமானது. அப்படி உருவாவதற்கு வரலாறு பற்றிய புரிதல்தானே காரணம். இன்று மாமல்லபுரத்தை மகாபலிபுரம் என அரசே எழுதி சிறுமைபடுத்துகிறது. இவர்களது தமிழ் பற்றை என்னவென்று சொல்வது. நாம் நம் வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டாமா? புலித்தேவன் வெற்றியை, மனித மாண்பை, மருதநாயகத்தின் வீரத்தை, விவேகத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? என்னுடைய நாவல்கள் அந்த வகையில் உருவானவைகள்தான்.

ஒருவன் பிறக்கும்போது எந்த மதத்தை சார்ந்தும் எந்த சாதியை சார்ந்தும் இருக்கலாம். நாம் சிந்திக்கும்போது எல்லாவற்றையும் கடந்த ஒரு புதிய பிறவி எடுக்க வேண்டும். ஒவ்வொரு படைப்பாளிக்கும் இது நிகழும். நிகழ வேண்டும். இப்போ பார்த்த குறும்படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றத்தை அவ்வாறுதான் உணர்கிறேன். குறும்பட வட்டம் மேலும் சிறக்க வாழ்த்தி விடை பெறுகிறேன் என்றார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் பேசும்போது இப்போது திரையிடப்பட்ட குறும்படம் துளி, விளையாட்டு, ரௌலட் எல்லாமே மிக சிறப்பாக இருந்தது என்றார். ஒரு கல்லூரியில் நடைபெற்ற குறும்பட போட்டியில் நடுவராக கலந்து கொண்டேன். நல்ல குறும்படத்தை, சிறந்த படத்தை தேர்ந்தெடுக்க வேண்டியது என் பணியாக இருக்குமென நினைத்தேன். ஆனால் திரையிடப்பட்ட படத்தை பார்க்கும்போது ஏமாற்றம்தான் மிச்சம்.

சாதித்த அல்லது சாதிக்கிற பெரும்பாலான இயக்குனர்கள் திரைப்பட கல்லூரிக்கு வெளியேதான் உருவாகிறார்கள். சில விதிவிலக்கானவர்கள் இருக்கலாம். நேரிடையாக பணிபுரிந்து அனுபசாலிகளா வருகிறவர்கள் சாதிக்கிறார்கள். இந்த 3 பேரும் அந்த வகை சார்ந்தவர்கள்தான்.

சரித்திர நாவலாசிரியர் கௌதம நீலாம்பரன் பேசும்போது நாம் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவே இந்த கூட்டம் நடைபெறுவதாக உணர்கிறேன். நான் 1965 ஆண்டு வாக்கில் சென்னைக்கு வந்தேன். பல வேலைகள் பல அவமானத்திற்கு பிறகு ஒரு தனியார் நூலகத்தில் வேலை பார்த்தேன். அதில்தான் பல படைப்புகளை படிக்க ஆரம்பித்தேன். அவை என்னை பல விசயத்தில் யோசிக்க வைத்தது. படைப்பு என்பதே யோசிக்க வைப்பதுதானே. யாசித்தவைகளை படைப்புகளாக எழுதினேன்.

ஒரு காலத்தில் எல்லாவற்றையும் மறைத்து வைத்திருந்தனர். ஆனால் அறிவியல் தொழிற்நுட்பம் அனைத்தையும் அம்பலமாக்கிவிடுகிறது. வர்த்தக பின்புல குடும்பத்திலிருந்து எழுத்து துறைக்கு வந்தவன். எல்லாவற்றையும் செய்து பார்த்து, செய்து பார்த்து பாடம் கற்றுக் கொண்டு வளர்ந்து வருகிறவன். படைப்புகளை உருவாக்கி அனுப்பிய காலத்தில் பத்திரிகை துறை பற்றி ஏதும் தெரியாது. பின்னர் மாலன் ஆசிரியராக இருந்த சாவியில் உதவி ஆசிரியராக பத்திரிகைக்கும், அதன் பின்னர் பத்திரிகையிலிருந்து திரைத்துறைக்கும் பயணம் செய்தவன்.

ஒரு கட்டத்தில் நானும் சுபா (சுரேஷ் - பாலா) ம் சேர்ந்து ஜுனியர் உல்லாசம் போன்ற மாத இதழ்களை நடத்தினோம். அப்போது பல திறமையாளர்களை இனம் கண்டேன். திறமைகளை கொட்டிக் கிடைக்கின்றன, வழிகாட்டுதல்தான் தேவை. அந்த காலக்கட்டத்தில் சில திறமையாளர்களை வருடத்திற்கு ஒரு இதழ் தயாரிக்க ஊக்குவித்தோம். இன்று தமிழ் ஸ்டியோ.காம் குறும்பட இயக்குனர்களை ஊக்குவிக்கிறதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. நாமும் வந்தோம் ரசித்தோம் என்றில்லாமல் ஒரு ஆதரவாளனாக திறமைகளை ஊக்குவிப்பவனாக மாற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இன்று பூமி வெப்பமடைவதை தடுக்க செமினார்கள் நடைபெற்று வருகிறது. வளர்ந்த நாடுக்ள அதிக கழிவுகளை வெளியிட்டுக் கொண்டு வளரும் நாடுகளை கழிவுகளை கட்டுப்படுத்துமாறு கட்டாயப்படுத்துகின்றன. உலக மக்கள் தொகையில் இந்தியா 17 சதவீதம் கழிவுகள் வெளியிடுவதில் உலக அளவில் 4 சதவீதம் மட்டுமே ஆனால் உலக மக்கள் தொகையில் இந்தியா 17 சதவீதம் கழிவுகள் வெளியிடுவதில் உலக அளவில் 4 சதவீதம் மட்டுமே, ஆனால் உலக மக்கள் தொகையில் 4 சதவீதமே உள்ள அமெரிக்கா வெளியிடும் கழிவுகளின் சதவீதம் 24 ஆக உள்ளது, உலகம் முழுவதிலும் அறவழி சிந்தனை இல்லை.

விமான நிலைய விரிவாக்கத்தை வளர்ச்சிக்காக கருதமுடியாது. இந்தியாவில் வறுமை 30 சதவீதத்திலிருந்து 37 சதீவதமாக உயர்ந்துள்ளது. பெருமை கொள்ளக் கூடிய செய்தியல்ல. இந்த சூழ்நிலையில் மிக குறைவான மக்கள் பயன்படுத்தத அதிகமான வரிபணத்தை செலவழித்து விமான நிலைய விரிவாக்கம் என்பதை வளர்ச்சியாக கொள்ள முடியாது.

இதில் காட்டப்பட்ட துளி குறும்படம் இவ்வளவு விசயத்தை யோசிக்க தூண்டுகிறது. துளி இயற்கை அழிக்கப்படுவதை காட்டுவதோடு சீர்படுத்த வேண்டிய வழிமுறையையும் சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. இயற்கையே பாராட்டி மழையாக பெய்துக் கொண்டிருக்கிறது.

படிப்பாளிகள் எல்லோரும் பார்வையாளராக மாறிவிட்டார்கள். நாம் எதையும் சுருக்கமாக சிறப்பாக செய்ய முயற்சிக்க வேண்டும். பிண்ணனி இசை தேவைக்கும் அதிகமாக உள்ளது. அமைதியும் ஒரு இசைதான்.

விளையாட்டு குறும்படம் மிக சிறப்பாக இன்றைய அரசியல் சூழல்களை. தேர்தல் முறைகேடுகளை வன்முறை வாழ்க்கையை காவலர்களின் கவனிக்காத தன்மையை என எல்லாவற்றையும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் பதிவு செய்துள்ளார்கள். இந்த நிலைகள் மாறிவிடும் என்பதனை காட்சியாக சொல்லியிருக்கலாம் என கருதுகிறேன்.

ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளில் 10 நிமிடம் முட்டாளாகிறான். இது பழைய திரைப்படமொன்றில் வரும் வசனம். அதுபோல்தான் உள்ளது 3வதாக திரையிடப்பட்ட ரௌலட் திரைப்படம். இதுபோன்ற தருணம் நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கும் இந்த 4 நி குறும்படம் எனக்குள் பல நினைவுகள் தூண்டுகிறது. எது சரி. எது தவறு என்பதை தீர்மானிக்க முடியாத சூழலை மையமாகக் கொண்டு நானொரு சிறுகதை எழுதியுள்ளேன். அதேபோன்ற மனநிலைக்கு சுஜாதா – ம் ஒரு சிறுகதை எழுதியுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த லஞ்ச் பிரேக் என்ற குறும்படமும் என் நினைவுக்கு வருகிறது.

இன்று 20, 30 நொடிகளில் ஒரு உணர்வை விளம்பர படத்தில் ஏற்படுத்தி விடுகிறார்கள். நீண்ட ஷாட் வைத்துதான் உணர்வின் ஆழத்தை காட்ட வேண்டும் என்பதில்லை. இன்று பார்வையாளன் எவ்வளவோ மாறிவிட்டார்கள். நாமும் அதற்கேற்றாற்போல் மாறவேண்டும்.

ஆஸ்கார் விருது குழு சினிமாவில் ஐந்து விசயத்தை முக்கியமானதாக கருதுகிறார்கள். தயாரிப்பாளர். நடிகர். இயக்குனர். எழுத்தாளர். மற்றவை

குறும்படத்தை பொறுத்தவரை எழுத்தும் இயக்கமுமே முதன்மையானது. தொழில்நுட்பம் இரண்டாம்பட்சம்தான்.

3 குறும்பட இயக்குனர்களும் மிக சுருக்கமாக ஏற்புரை நிகழ்த்தினார்கள். இறுதியாக தமிழ் ஸ்டியோ.காம்-ன் குணா அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/15#

------------------------------------------------------------------------------------------------------ தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 15 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)

தொடக்க விழா: சனிக்கிழமை (12-12-2009)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

இந்த மாதம் முதல் ஆர்வலர்களின் ஆர்வன்மின்மைக் காரணமாக உலகப் படம் திரையிடல் நிறுத்தப்பட்டு, குறும்பட வட்டம் மாலை மூன்று மணியளவில் தொடங்கப்படுகிறது.

3 PM - 7 PM - குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியம் -

இந்த மாதம் இலக்கியப் பகுதியில் எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்கள் கலந்துக் கொள்கிறார்.

கௌதம நீலாம்பரன் அவர்கள் எழுதிய நூல்கள்.

சரித்திர நாவல்கள்
தமிழக ஹாரிபாட்டர் கதைகள்
யாழ்ப்பாணத்தின் வீரத்தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலி
தத்வமஸி
நலம் தரும் நற்சிந்தனை
அன்பின் அலைவரிசை
ராஜபொக்கிஷம்

சிறந்த வலைப்பதிவர் விருது:

வலைப்பதிவர்களின் பேராதரவு காரணமாக இந்த மாதம் முதல் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் நிகழ்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. !!!

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் திரு. ஞாநி பங்குபெறுகிறார். குறும்படங்களில் நடிப்பு, இயக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட தனது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். நடிப்பு நுணுக்கங்களையும் வாசகர்களுக்கு பயிற்றுவிப்பார். வாசகர்களும் நடிப்பு சார்ந்த தங்கள் ஐயங்களை அவரிடம் கேட்டு விடைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஞாநி அவர்கள் பத்திரிக்கை, நாடகம், சின்னத்திரை, பெரிய திரை, பயிலரங்கங்கள் என்று பல்வேறு தளங்களில் செயல் பட்டு வருபவர். பரிக்ஷா நாடகக் குழுவை நடத்தி வந்தவர். இதன் மூலம் பரவலான கவனத்தை பெற்றவர். தற்போது குமுதம் வார இதழில் "ஓ பக்கங்கள்" எழுதி வருகிறார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு
துளி கோவை சந்திரசேகர் 20 நிமிடங்கள்
விளையாட்டு நீலகண்டன் 27 நிமிடங்கள்
Roulette ஸ்ரீகாந்த் 07 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இந்தப் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட வசனகர்த்தா திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் சபரி, கண்டேன் காதலை போன்ற பல படங்களுக்கு வசனம் எழுதியவர்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</