கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய குறும்பட வட்டம் திரைப்பட இயக்கம் தொடக்க விழா, மற்றும் 13 வது குறும்பட வட்டம

ஆதவன்  

கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை தோறும் நடைபெற்று வரும் தமிழ் ஸ்டுடியோ.காமின் குறும்பட வட்டத்தின் இம்மாத நிகழ்வு 11.10.09 அன்று இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவாக நடைபெற்றது.

குறும்பட வட்டம் குறும்பட இயக்கமாக பதிவு செய்யப்பட்டு (பதிவு எண்: 475/2009) இந்த மாதம் முதல், முறையான அமைப்பாக செயல்பட தொடங்குகிறது. இலக்கியம் / குறும்பட ஆவணப்படங்களுக்கான திரைப்பட இயக்கமான இதன் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருமிகு. சிவகாமி I.A.S., இயக்குனர் திரு. அறிவழகன், இயக்குனர் திருமிகு. நந்தினி ஆகியோர் கலந்துக் கொண்டனர். முதல் நிகழ்வாக கடந்த ஒரு வருடமாக திரையிடப்பட்ட 36 குரும்படங்களுக்குள் சிறந்த மூன்று குறும்படங்களாக தேர்வு செய்யப்பட்ட
கழுவேற்றம் (திரு. ராஜா), கோத்தி (திரு. சி.ஜெ. முத்துக்குமார்) செடி (திரு. சுப்புராஜ்), சிறப்பு திரைப்படமான சீயர்ஸ் (திரு. மணிகண்டன்) ஆகியன திரையிடப்பட்டன.

இரண்டாவது நிகழ்வாக திரைப்பட இயக்க தொடக்க விழா நடைபெற்றது. தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகி திரு. குணா அவர்கள் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றி திரைப்பட இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

பின்னர், கடந்த ஓராண்டாக குறும்பட வட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த திரு. ரவிராஜ், கவிஞர். வைகை செல்வி, படத்தொகுப்பாளர் பழனிவேல், இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம், பத்திரிக்கையாளர் நீலகண்டன் ஆகியோரின் கருத்துகள் தொகுப்பாக திரையிடப்பட்டன.

பின்னர், கடந்த ஒரு வருடமாக திரையிடப்பட்ட படங்களில் இருந்து இயக்கம், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, நடிப்பு, நகைச்சுவை, சிறந்த ஆவணப்படம் ஆகிய துறைகளில் சிறந்தப் படங்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்பட்டன. பின்னர் சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகிகள் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

பின்னர், தமிழ் ஸ்டுடியோ.காம் நிறுவனர் திரு. அருண் அவர்கள் குறும்பட வட்டத்தின், தொடக்கமும், நோக்கங்களும் குறித்து பேசினார்.கடந்த அக்டோபர் 2008 அன்று கடற்கரையில் சுமார் முப்பது ஆர்வலர்களுடன் தொடங்கிய குறும்பட வட்டம் இதுவரை சிறப்பாக நடைபெற்று தற்போது நானூற்றி ஐம்பது உறுப்பினர்களுடன் தொடர்ந்து இயங்கிக் கொண்டே வருகிறது. முதலில் குறும்படங்கள் திரையிடப்பட்டு விவாதிக்கப்பட்டன. பின்னர் இலக்கிய பக்தி சேர்க்கப்பட்டது. பின்னர் குறும்பட வழிகாட்டல் பகுதி சேர்க்கப்பட்டு ஆர்வலர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது, என குறும்பட வட்டத்தின் வளர்ச்சியை பதிவு செய்தார்.

மேலும், குறும்பட வட்டம் சிறப்பாக, தொடர்ந்து நடைப்பெற உங்கள் அனைவரின் ஆதரவும், பங்களிப்பும் தேவை என்பதை மறுபடியும் சுட்டிகாட்ட விரும்புகிறேன். பல படைப்பாளிகள் தங்கள் குறும்படம் திரையிடப்படும்போது மட்டுமே வருகினறனர். இது தவிர்க்கப்பட வேண்டும். நீங்கள் மற்றவர்களின் பாராட்டுகளை எதிர்பார்க்கும்போது, மற்றவர்களும் உங்கள் பாராட்டை எதிர்பார்ப்பது நியாம் தானே. எனவே அனைவரும் தவறாமல் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும் என் கேட்டுக் கொண்டார்.

மேலும் இங்கு திரையிடப்படும் குருமடங்களில் சில தரமான குறும்படங்கள் அல்ல என பலரும் என்னிடம் தெரிவிக்கின்றனர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. வெறும் தரமான குறும்படங்களை மட்டுமே பார்ப்பதற்கு வேறு பல அமைப்புகள் இருக்கின்ற. இங்கே தரமான குறும்படங்கள் திரையிடப்படுவதை விட தரமான குறும்படங்கள் உருவாக்க வேண்டும் என்றே நாங்கள் பாடுபடுகின்றோம். தரமற்றப் படங்களாக நினைக்கும் குறும்படங்களில் இருந்து நீங்கள் சரி எது, தவறு எது கற்றுக்கொள்ளலாம். அதை விடுத்து அவைகளை தவிர்த்து விடுதல் நியாமல்ல என்றார்.

மேலும், உறுப்பினர்கள் சந்தா தொகையை சரிவர கட்டுவதில்லை. என்பதுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் ஒவ்வொரு மாதமும் வந்தாலும் அதில் பத்து முதல் பதினைந்து ஆர்வலர்கள் மட்டுமே சந்தாக் கட்டுகின்றனர். மிகுந்த பொருட்செலவில், நட்டத்தில் இந்த குறும்பட வட்டத்தை தொடர்ந்து நடத்த நேரிடுகிறது. எனவே ஆர்வலர்கள் தங்கள் சிரமத்தை புரிந்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டு தன் உரையை நிறைவு செய்தார்.

அடுத்து எழுத்தாளர் திருமிகு. சிவகாமி தன் வாழ்த்துரையில் தமிழ் நாட்டில் திரைப்பட கல்லூரிகளுக்கு வெளியே எடுக்கப்பட்ட முதல் குறும்படமாக எடிட்டர் லெனின் அவர்களின் "நாக் அவுட்" கருதப்படுகிறது. அதனை தொடர்ந்து இரண்டாவது குறும்படத்தை நான் இயக்கினேன். ஓவியர் சந்துரு "பூத பானை" என்கிற சிறுகதையை அடிப்படையாக கொண்டு ஊடாக என்ற குறும்படத்தை நானே இயக்கி தயாரித்தேன். மலை வாழ் மக்களின் பிரச்சனைகளை அதில் பதிவு செய்துள்ளேன்.

எப்படி வனங்கள் அழிக்கப்பட்டு ரியல் எஸ்டேட்கள் உருவாகி மலை வாழ் மக்களின் வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளானது, சீர்கேடான வாழ்க்கை எப்படி அவர்கள் மீது திணிக்கப்பட்டது என்பதை மையமாக கொண்ட கதையாகும்.

இந்தப் படத்திற்கு தங்கபச்சான் ஒளிப்பதிவு செய்தார். நாசர், பாலாசிங் ஆகியோர் நடித்தனர். 1995 ஆம் ஆண்டு இந்தியன் பநோரமாவால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த குறும்படத்தை தயாரிக்க அப்போது பத்து லட்சம் ரூபாய் செலவானது. ஆனால் இன்று ஒரு லட்ச ரூபாய்க்கே நல்ல குறும்படத்தை எடுக்க முடியும். தொழில்நுட்ப வளர்ச்சியால் இது சாத்தியமாயிற்று. அன்று குறும்படம் எடுத்தவர்களே பல இடங்களுக்கு சென்று திரையிட வேண்டும். இன்று அப்படி இல்லை. அதற்கு சிறந்த உதாரணம் தமிழ் ஸ்டுடியோ.காம் குறும்பட வட்டம்.

இந்த களத்தினை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, மாற்று சிந்தனைகளுக்கான படைப்புகளை உருவாக்க, படைப்பாளிகள் முன்வர வேண்டும். படைப்பு வெளிக்கான பல இடங்களை நாம் இன்னும் தொடவே இல்லை. உதாரணமாக பெண்கள் பல இடங்களில் பொம்மைகள் போல் ஆடுகிறார்கள். அவர்களின் நுண் உணர்வுகளை நாம் இதுவரை சரியாக பதிவு செய்திருக்கிறோமா? இல்லை. அடுத்ததாக சாதிய வேறுபாடுகள்.

இதைப் பற்றி பலரும் பேசுவதில்லை. ஆனால் நாம் இதைப் பற்றி பேச வேண்டும். உங்கள் பார்வைகள் அந்த பக்கம் சென்றால் பல சாதனைப் படைப்புகள் உருவாகும். நீங்கள் அனரிவரும் அதனை செய்ய வேண்டும் என்றுக் கூறி தன் வாழ்த்துரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக இயக்குனர் நந்தினி பேசினார். நான் திரைப்பட துறையில் செயல்படுவது என தீர்மானித்துத்தான் திரைப்படக் கல்லூரிக்கு படிக்க சென்றேன். அங்குதான் முதன்முதலாக உலக சினிமாக்களை பார்த்து வியந்துப் போனேன். இந்திய, தமிழ் சினிமாக்கள் காதல், பாடல், சண்டை, காமெடி என எல்லாம் கலந்த கலவையாக ஒரு பிரியாணி போல உள்ளது. திரைப்படங்களை எடுக்கும்போது பல சமரசங்களை செய்துக் கொள்ள நேரிடும். அது வியாபாரத்தை முதன்மையாக கொண்டது.

குறும்படம் அப்படி அல்ல. நீங்களே அதன் தயாரிப்பாளர், இயக்குனர். பணத்தை எதிர்பார்த்து செயல்படுவதும் இல்லை. அதனால் உங்களால் சுதந்திரமாக செயல்பட முடியும். அதனை நீங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். இங்கு திரையிடப்பட்ட குறும்படங்களை பார்த்தேன். பெரும்பாலும் முடிவுகள் கேள்விக்குறியாகவே உள்ளன. தீர்வுகளையும் சுட்டிக்காட்டினால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். இதனை ஒரு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

அடுத்ததாக இயக்குனர் அறிவழகன் தன்னுடைய வாழ்த்துரையில் "நானும் திரைப்படக் கல்லூரி மாணவன்தான். பிறகு சங்கர் சாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இப்போது அவருடைய நிறுவனத்திலேயே "ஈரம்" திரைப்படத்தை இயக்கியுள்ளேன். நான் அவருடைய உதவி இயக்குனர் என்பதற்காக மட்டும் வாய்ப்பு கொடுக்க வில்லை. என்னுடைய கதையிலிருந்து இரண்டு காட்சிகளை எனது சொந்த செலவில் படமாக பதிவு செய்துக் காட்டினேன்.

அந்தக் காட்சிகள் அவருக்குப் பிடித்திருந்ததால், அடுத்து அவருடைய செலவில் இரண்டுக் காட்சிகளை படம் பிடித்துக் காட்ட சொன்னார். அதுவும் அவருக்கு பிடித்து போகவேதான் எனக்கு வாய்ப்பளித்தார்.

இப்போது நீங்கள் இயக்கும் குறும்படங்கள் நாளை உங்களுக்கு உதவியாக இருக்கும். குறும்பட உலகமே மிகப் பெரியது. அதிலேயே கூட மாற்று படைப்புகளை உருவாக்கலாம். தமிழ் ஸ்டுடியோ.காம் செயல்பாடுகள் வரவேற்கத்தக்கது. மேலும் வளர வாழ்த்துகிறேன் எனக் கூறி விடைபெற்றார்.

மேலும் ஆர்வலர்களுடனான கலந்துரையாடலின்போது குறைந்த பட்ஜெட் படங்களுக்கும், பிரம்மாண்டமாய் உருவாகும் படங்களுக்கும், வியாபாரமே முக்கிய அம்சம் எனக் கூறினார். மேலும் இலக்கியம் படிப்பது அவசியமா? என்கிறக் கேள்விக்கு நம் கற்பனை திறன் வளர இலக்கியங்களை வாசிப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டார். உலக சினிமா படங்களை பார்ப்பதும் அவசியம் எனக் குறிப்பிட்டார்.

கலந்துரையாடலில் இயக்குனர் நந்தினியிடம் புத்தக வாசிப்பு பற்றி கேட்டபோது, புத்தகம் வாசிப்பது மிக சிறந்த பழக்கம். "அழகான பெண் நடந்து வந்தால் என்பதை படிக்கும்போது அவரவர் கற்பனை சார்ந்து பல உருவங்கள் உருவாகும். ஒருவருக்கும் அழகு என்பது கிராமத்து பெண், நகரத்துப் பெண் நவீன உடை உடுத்திய பெண் இப்படி நீண்டுக் கொண்டே செல்லும். புத்தகம் படிப்பதினால் கற்பனை திறன் வளரும் என்றார். ரெட் ஒன் கேமரா பயன்படுத்துவது பற்றி கேட்டபோது எந்த கேமராவை பயன்படுத்த வேண்டும் என்பது இயக்குனரின் விருப்பம் சார்ந்தது. புதிய கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது தவிர்க்க முடியாது. கருப்பு வெள்ளை படம் காலாவதியாகிவிட்டாலும், படைப்பின் தேவை கருதி இன்றும் கையாளப்படுகிறது எனவும் கூறினார்.

பின்னர் தமிழ் ஸ்டுடியோ.காம் நிறுவனர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். நிகழ்ச்சியினை கவிஞர். திரு. இளையபாரதி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

அடுத்த மாதம் குறும்பட வட்டம் நிகழ்ச்சி நடைபெறாது. தமிழ் ஸ்டுடியோ.காம் நிறுவனத்திலிருந்து புதிதாக வெளிவரும் "கூடு" இணையப் பத்திரிகை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதால் குறும்பட வட்டம் டிசம்பர் மாதம் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறும்.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/200913#
------------------------------------------------------------------------------------------------------

தமிழ் ஸ்டுடியோ குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009) - தொடக்க விழா...

தொடக்க விழா: சனிக்கிழமை (10-10-2009)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

அன்பார்ந்த வாசகர்களே...

தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து நடத்தி வரும் குறும்பட வட்டம் எனும் மாதந்திர நிகழ்வு தொடர்ந்து பன்னிரண்டு மாதங்கள் நடைபெற்றுள்ளது. சென்ற அக்டோபர் மாதம் கடற்கரையில் முப்பது ஆர்வலர்களுடன் தொடங்கிய இந்த இந்த வட்டம் இன்று சற்றே விரிவடைந்து நானூற்றி ஐம்பது உறுப்பினர்கள், முப்பது சிறப்பு அழைப்பாளர்கள், முப்பத்தி மூன்று குறும்படங்கள் திரையிடல், நான்கு குறும்படங்கள் தயாரிக்க உதவி, என தன் கிளை விரித்து பரவியுள்ளது. இந்த வெற்றிக்கு வாசகர்களாகிய உங்கள் ஆதரவே முதன்மையான காரணம்.

முன்னரே நாம் சொன்னது போன்று பன்னிரண்டு குறும்பட வட்டங்கள் சோதனை அடிப்படையில் நடைபெற்று வந்தது. இனி குறும்பட வட்டம் புதுப் பொலிவுடன் நடைபெற உள்ளது. தமிழ் நாடு அரசின் திரைப்பட இயக்க சட்டத்தின் கீழ், திரைப்பட இயக்கமாக பதிவு பெற்ற ஓர் அமைப்பாக தொடர்ந்து இயங்க உள்ளது.

எதிர் வரும் சனிக்கிழமை (10/10/09) தமிழ் ஸ்டுடியோ - குறும்பட வட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த தொடக்க விழாவிற்கு, திரைப்பட இயக்குனர் திரு. அறிவழகன் (ஈரம் திரைப்பட இயக்குனர்) தலைமை தாங்க, திரைப்பட இயக்குனர் திருமிகு. நந்தினி (திரு திரு துறு துறு திரைப்பட இயக்குனர்) அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

திருமிகு. சிவகாமி ஐ. ஏ.எஸ். மற்றும் பத்திரிக்கையாளர் திரு. மாலன் அவர்கள் சிறப்புரை ஆற்ற, திரைப்பட பாடலாசிரியர் திரு. நா. முத்துக்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்குவார்.

மேலும் இந்த தொடக்க விழாவில் இதுவரை குறும்பட வட்டத்தில் திரையிடப்பட்ட குறும்படங்களின் சிறந்த மூன்று மற்றும் ஒரு சிறப்பு குறும்படம் திரையிடப்பட்டு அதற்கான சான்றிதலும் வழங்கப்படும்.

இந்த விழாவிற்கான அழைப்பிதழ் இணைக்கப்பட்டிருக்கிறது. விழாவிற்கு உங்கள் அனைவரையும் இனிதே வரவேற்கிறோம்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</