கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 12வது குறும்பட வட்டம்.

ஆதவன்  

கடந்த சனிக்கிழமை (12-09-2009) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 12வது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது. விழா வழக்கம் போல் காலை பத்து மணிக்கே தொடங்கியது. காலை நிகழ்வில் இந்த மாதம் இரண்டு உலகப் படங்கள் திரையிடப்பட்டன. முதலாவது படம் "ரன் லோலா ரன்". இரண்டாவதாக திரையிடப்பட்ட உலகப்படம் "அயம் சாம்".

பின்னர் மாலை மூன்று மணியளவில் குறும்பட வட்டம் தொடங்கியது.

முதல் பகுதி:

இந்த மாதம் இலக்கியப் பகுதியில் எழுத்தாளர், திரு. அ. மார்க்ஸ் அவர்கள் கலந்துக் கொண்டு "போரும் அமைதியும்" குறித்து மிக விரிவாக பேசினார். மக்களின் பாதுகாப்பு குறித்தும், அரசியல் மக்கள் நலன் காக்க மட்டுமே ஏற்படுத்தப்பட்டது என்றும் தன் பேச்சில் வெளிப்படுத்திய மார்க்ஸ் அவர்கள், சட்ட விரோத கூலிப்படைகளை அரசாங்கமே மறைமுக
வேலைகளுக்காக பயன்படுத்துகிறது என்ற தகவலையும் பதிவு செய்தார். முதல் உலகப் போரில் 13 சதவீத மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். இரண்டாம் உலகப் போரில் 53 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது போர் நடந்தால் அதில் குறைந்தபட்சம் 90 விழுக்காடு மக்கள் பாதிப்படைவதாக கூறினார்.

சிறந்த வலைப்பதிவர்:

இந்த மாதம் சிறந்த வலைப்பதிவர் விருது உமாசக்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது. கவிதைகள், கட்டுரைகள், அனுபவம் என்று விரியும் இவரது வலைப்பூ அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. இவரது வலைப்பூ: www.umashakthi.blogspot.com

இரண்டாம் பகுதி:

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் படத்தொகுப்பாளர் திரு. லெனின் அவர்கள் பங்குபெற்றார். மசாலாப் படங்களை சாடிய அவர் குறும்படங்களின் தேவை குறித்து மிக விரிவாக பேசினார். தனி மனித தாக்கங்களே குறும்படங்களாக உருவாகின்றன என்றும், எனவே குறும்பட இயக்குனர்களும் மசாலாப் படங்களை கண்டு மயங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

மூன்றாம் பகுதி:

இந்த மாதம் குறும்பட திரையிடல் பகுதிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு. அழகப்பன். சி. அவர்கள் வந்திருந்தார்.

இந்த மாதம் திரையிடல் பகுதியில் முதலாவதாக திரு. சுப்புராஜ் அவர்கள் இயக்கிய "செடி" குறும்படமும், இரண்டாவதாக திரு. சொர்ணபாரதி அவர்கள் இயக்கிய "கொஞ்சம் கொஞ்சமாய்" குறும்படமும், மூன்றாவதாக திரு. கார்த்திக் அவர்கள் இயக்கிய "வாக்குமூலம்" குறும்படமும் திரையிடப்பட்டது. மூன்று குறும்படங்களையும் பார்த்துவிட்டு, அவற்றின் நிறை குறைகளை எடுத்துக் கூறிய அழகப்பன், பின்னர் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/200912#

அடுத்த மாதம் குறும்பட வட்டம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற இருப்பதால் அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------------ தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 12வது குறும்பட வட்டம்.

நாள்: சனிக்கிழமை (12-09-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை

10 AM - 2 PM - உலகப் படம் திரையிடல்

10 AM - 2 PM - உலகப் படம் திரையிடல் இந்த மாதம் உலகப் படம் திரையிடல் பகுதியில் "பாட்டில் ஷிப் ஆப் பொட்டம்கின்" (Battleship of Potomkin)" திரைப்படம் திரையிடப்படுகிறது.

இத்துடன் ஆர்வலர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.

3 PM - 7 PM - குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியம் -

இந்த மாதம் இலக்கியப் பகுதியில் எழுத்தாளர் அ. மார்க்ஸ் அவர்கள் கலந்துக் கொள்கிறார்.

தலித்தியம், பெரியார், பவுத்தம், மார்க்சியம், மனித உரிமைகள், கட்டுடைத்தல், பின்நவீனம் எனப் பல களங்களில் செயலாற்றி வருபவர் பேராசிரியர். அ.மார்க்ஸ். 90களில் புதிதாய் எழுத வந்த இளைஞர்களின் ஆதர்சமாய் விளங்கியவர். காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும், காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும், கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல் ; ஒரிசா - கர்நாடகம், பாரதி பாடல்களுக்குத் தடை, புத்தம் சரணம், பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன் போன்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

சிறந்த வலைப்பதிவர் விருது:

இந்த மாதம் சிறந்த வலைப்பதிவர் விருது பெறுபவர்: ?

நிச்சயம் தமிழ் வலைப்பதிவர்களில் ஒருவர்தான். அவர் நீங்களாகவும் இருக்கலாம். யார் என்று தெரிந்துக் கொள்ள, ஆர்வம் இருப்பவர்கள் நிகழ்ச்சியை நேரில் வந்து, பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட படத்தொகுப்பாளர் திரு. லெனின் பங்குபெறுகிறார். குறும்படங்களில் படத்தொகுப்பு, நடிப்பு, இயக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட தனது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். படத்தொகுப்பு நுணுக்கங்களையும் வாசகர்களுக்கு பயிற்றுவிப்பார். வாசகர்களும் படத்தொகுப்பு சார்ந்த தங்கள் ஐயங்களை அவரிடம் கேட்டு விடைப் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழில் புகழ்பெற்ற படத்தொகுப்பாளரான இவர் "நாக் அவுட்" என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். மேலும் ஊருக்கு நூறு பேர் என்கிற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். பிரபல இலக்கியவாதியான ஜெயகாந்தனின் நாவலை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம். இவரும், வி.டி. விஜயனும் சேர்ந்து பணிபுரிந்த படங்களில் பெரும்பான்மையான படங்கள் வெற்றிப் படங்கள்தான். தமிழில் பல முக்கியப் படங்களுக்கு படத்தொகுப்பு செய்த திரு. லெனின் அவர்கள்தான் தமிழ் குறும்பட உலகில் முன்னோடியாக கருதப்படுகிறார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு
கொஞ்சம் கொஞ்சமாய் சொர்ணபாரதி 7 நிமிடங்கள்
விளையாட்டு நீலகண்டன் 27 நிமிடங்கள்
வாக்குமூலம் கார்த்திக் 18 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இந்தப் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட இயக்குனர் திரு. அழகப்பன். சி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

இவர் சமீபத்தில் வெளிவந்த வண்ணத்துப்பூச்சி திரைப்படத்தின் இயக்குனர் ஆவார்.

குறும்பட உதவி:

இந்தப் பகுதிக்கு தேவையான கதைகள் போட்டிக்கு வராததால் இந்த மாதம் இலவச கேமரா மற்றும் படத்தொகுப்பு உதவி பிரிவு நடைபெறாது.

6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.

குறும்பட வட்டம் தமிழ் நாடு அரசின் "சொசைட்டி ஆக்ட்" இன் கீழ் திரைப்பட சொசைட்டியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மாதம் முதல் சந்தாத் தொகை நிரந்தரமாக ஐம்பது ரூபாயாக நிர்னைக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகம் யாரையும் சந்தாத் தொகை கட்ட சொல்லி நிர்பந்தம் செய்தது இல்லை. ஆனால் இனி அரசாங்கத்திடம் தணிக்கை காட்ட வேண்டியுள்ளதால் உறுப்பினர்கள் எல்லோரும் தங்கள் சந்தாத் தொகையினை செலுத்தி விடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இது வரை உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்தவர்களும் இந்த மாதம் புதிய உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த மாதம் முதல்தான் உறுப்பினர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். இது வரை உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்து இந்த மாதம் உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்யாவிட்டால் உங்கள் உறுப்பினர் தகுதி தானாகவே அதன் தகுதியை இழந்துவிடும். உங்கள் புரிதலுக்கும், ஆதரவுக்கும் நன்றி.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</