கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய பத்தாவது குறும்பட வட்டம்

ஆதவன் 13-07-09 : 10:03 PM

கடந்த சனிக்கிழமை (11-07-2009) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய பத்தாவது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது. இந்த மாதமும் குறும்பட வட்டம் காலை பத்து மணிக்கு தொடங்கியது. இந்த மாதம் காலை நிகழ்வில் உலகத் திரைப்படம் திரையிடல் நிகழ்ச்சியும், மாலை மூன்று மணியளவில் குறும்பட வட்டமும் தொடங்கியது.

இந்த மாதம் பத்தாவது வட்டம் என்பதால் சரியாக காலை பத்து மணிக்கு விழா தொடங்கியது. முதலில் "லு சுவான் இயக்கிய சீனமொழித் திரைப்படமான தி மௌண்டன் பட்டரோல்" திரைப்படம் திரையிடப்பட்டது. அடுத்து மசித் மசிதி இயக்கத்தில் வெளிவந்த தி கலர் ஆப் பாரடைஸ்" என்கிற இரானியத் திரைப்படமும் திரையிடப்பட்டது. அடுத்த மாதம் உறுதியாக "தி பாட்டில்ஷிப் ஆப் பொடேம்கின்" திரைப்படம் திரையிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மாதம் காலை முதல் அதிகப்படியான ஆர்வலர்கள் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்த துணை புரிந்தனர்.

முதல் பகுதி:

இந்த மாதம் எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் அவர்கள் இலக்கியம் பகுதியின் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். "மக்களின் வாழக்கைக்கு உதவும் இலக்கியம்" என்கிற தலைப்பில் மிக நல்லப் பலக் கருத்துகளை பதிவு செய்தார். குறிப்பாக பல நல்ல கதைகளை கூறி அவற்றின் கருத்தினை வாசகர்கள் மனதில் பதிய வைத்தார். கழுத்திலா மனிதன், புதுமைப் பித்தனின் கதைகள் என பல சுவாரசியமான கதைகளை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார். மேலும் பல உலகப்படங்களைப் பற்றியும் அவற்றின் கதைக் கருப்பற்றியும் வாசகர்களுடன் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. இறுதியில் வாசகர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

அடுத்ததாக இந்த மாதம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திருமிகு. தமிழ்நதி அவர்கள் இந்த மாதம் சிறந்த பதிவர் விருதை பெற்றார். தமிழில் மிகப் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரான தமிழ்நதிக்கு அவரது சக நண்பர் திரு. பிரபஞ்சன் அவர்கள் விருதினை வழங்கினார். பின்னர் தமிழ்நதி ஒரு சில நிமிடங்கள் தனது எழுத்துலக வாழ்க்கை பற்றி வாசகர்களுடன் தனது கருத்தினை பகிர்ந்துக் கொண்டார். இவரது வலைப்பூ முகவரி: http://www.tamilnathy.blogspot.com/

பின்னர், தமிழ் ஸ்டுடியோ.காம் அறிவித்த முதல் மாத மடல் போட்டி இனிதே நடைபெற்றது. அதற்கான பரிசளிப்பு விழாவும் குறும்பட வட்டத்துடன் நடைபெற்றது. கோவையை சேர்ந்த நா.கி. பிரசாத் அவர்கள் இந்த மாதத்தின் சிறந்த மடல் போட்டிக்கான பரிசுத்தொகையை பெற்றார். இந்தப் பரிசுத் தொகையை சிவகாசியை சேர்ந்த வி.ஆர்.பி. மனோகர் அவர்கள் ஸ்பான்சர் செய்தார்.

பரிசினை எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் அவர்கள் வழங்கினார். இந்த மாதம் முதல் மடல் போட்டி குறுகிய நாட்களுக்குள் அறிவிக்கப்பட்டு நடைபெற்றதால் இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மடல்களை தேர்ந்தெடுக்க இயலவில்லை. எனவே அடுத்த மாதம் முதல் மூன்று இடங்கள் பெற்ற மடல்களும் அறிவிக்கப்படும். தேநீர் விருந்தும் அடுத்த மாதம் முதல் தவறாமல் நடைபெறும். சிரமத்திற்கு வருந்துகிறோம்.

இரண்டாம் பகுதி:

இந்த மாதம் குறும்பட வழிகாட்டி நிகழ்வில் புகழ் பெற்ற படத்தொகுப்பாளர் திரு. லெனின் அவர்களால் தவிர்க்க முடியாத சிலக் காரணங்களால் வர இயலவில்லை. இந்த நேரத்தில் ஆபத் பாண்டவனாக வந்தார் பெப்சி அமைப்பின் துணைத் தலைவர் திரு. குணா அவர்கள். இவர் மவுனம் சம்மதம், ஏர்போர்ட் போன்ற படங்களுக்கு வசனகர்த்தாவாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறும்படங்களில் வசனங்கள் இடம் பெறவேண்டிய அவசியம் குறித்தும், தேவையற்ற இடங்களில் நீக்கப்படவேண்டிய வசனங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். மேலும் குறும்படங்களுக்கான சந்தை குறித்தும் வாசகர்களுடன் விரிவாகப் பேசினார். பின்னர் கலந்துரையாடலும் நடைபெற்றது. இக்கட்டான நேரத்தில் உதவி, நல்ல வழிகாட்டியாகவும் அமைந்த திரு. குணா அவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மூன்றாம் பகுதி:

மூன்றாம் பகுதியான குறும்படங்கள் திரையிடல் பகுதியில் இந்த வாரம் திரு. ஆனந்த நாராயணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். இவர் சமீபத்தில் வெளியான வால்மீகி திரைப்படத்தின் இயக்குனர் ஆவார்.

இந்த மாதம் முதலில் சிவகாசியை சேர்ந்த திரு. மனோகர் அவர்கள் இயக்கிய "நிலமெல்லாம் இரத்தம்" குறும்படமும், அடுத்து திரு. முரளி அவர்கள் இயக்கிய "குண்டன்" குறும்படமும், இறுதியில் திரு. சங்கர் நாராயணன் அவர்கள் இயக்கிய "ஆக்சிடன்ட்" குறும்படமும் திரையிடப்பட்டது.

மேலும் குறும்பட இயக்குனர்களுக்காக தமிழ் ஸ்டுடியோ.காம் அறிவித்த உதவியான கேமரா மற்றும் படத்தொகுப்பு இலவச சேவையை இந்த மாதம் பெற்றவர் திரு. ஜெயவேல். இவரது கிரெசன்ட் ஸ்ட்ரீட் என்கிற குறும்படக் கதை சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த மாதம் இவருக்கு கேமரா மற்றும் படத்தொகுப்பு உதவி தமிழ் ஸ்டுடியோ.காம் மூலம் வழங்கப்படுகின்றது.

இதற்கான அறிவிப்பை திரு. அனந்த நாராயணன் அவர்கள் குறும்பட வட்டத்தில் அறிவித்தார். அடுத்த மாதத்திற்கான உதவி பெற விரும்புவோர் அதற்கான தகவலை தமிழ் ஸ்டுடியோ.காம் இணையதளத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

முடிவில் ஆனந்த நாராயணன் பேசினார். இந்தப் பகுதி இன்னொரு வழிகாட்டல் பகுதியாக அமைந்தது. மிக விரிவாக திரைப்படங்கள் குறித்தும், குறும்படங்களின் தொழில்நுட்பம் குறித்தும் பேசினார். இறுதியாக திரையிடப்பட்ட மூன்று குறும்படங்களின் நிறை குறைகள் பற்றி மிக விரிவாக பேசினார்.

அடுத்ததாக மூன்றுக் குறும்படங்களின் இயக்குனர்களும் தங்கள் படங்கள் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

இந்த மாதம் நிகழ்ச்சியினை திரு. ராஜசேகர் அவர்கள் தொகுத்து வழங்கினார். மிக சிறப்பாக, சில இடங்களில் சிறப்பு விருந்தினர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு நிகழ்ச்சியினை சிறப்பாக தொகுத்து வழங்கினார். தமிழ் ஸ்டுடியோ.காம் சார்பாக அவருக்கும் எங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த மாதம் மிகச் சரியாக நூறு ஆர்வலர்கள் கலந்துக் கொண்டனர். மேலும் பல பிரபலங்களும் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர். அடுத்த மாதம் மட்டும் இலக்கியம் பிரிவு நடைபெறாது. அதற்கு பதிலாக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகளும், ஒவ்வொரு உறுப்பினர்களின் அறிமுகமும் நடைபெறும். எனவே அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.com/thamizhstudio/qBjnjK#

------------------------------------------------------------------------------------------------------

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பத்தாவது குறும்பட வட்டம்.

நாள்: சனிக்கிழமை (11-07-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை

10 AM - 2 PM - உலகப் படம் திரையிடல்

இந்த மாதம் உலகப் படம் திரையிடல் பகுதியில் 'லு சுவான்' இயக்கிய "மௌன்டைன் பெடரோல் (Mountain Patrol)" திரைப்படம் திரையிடப்படுகிறது.

இத்துடன் ஆர்வலர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.

3 PM - 7 PM - குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியமும் மக்கள் வாழ்க்கையும்

இந்த மாதம் இலக்கியப் பகுதியில் புகழ் பெற்ற எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் அவர்கள் "இலக்கியமும் மக்கள் வாழ்க்கையும்" என்கிறத் தலைப்பில் இலக்கியம் குறித்தான தனது விரிவான பார்வையை பதிவு செய்வார். இதில் மக்கள் நல் வாழ்வு வாழ இலக்கியம் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் பதிவு செய்கிறார்.

இவரைப் பற்றி:

தமிழ் எழுத்துலகில் புகழ் பெற்ற எழுத்தாளரான திரு. பிரபஞ்சன் இதுவரை ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சில: "வானம் வசப்படும், மானுடம் வெல்லும், எனக்குள் இருப்பவள், ஜீவநதி, பொன்முடிப்பு, நேற்று மனிதர்கள், இன்பக்கேணி, காகித மனிதர்கள், வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்".

சிறந்த வலைப்பதிவர் விருது:

இந்த மாதம் சிறந்த வலைப்பதிவர் விருது பெறுபவர்: ?

நிச்சயம் தமிழ் வலைப்பதிவர்களில் ஒருவர்தான். அவர் நீங்களாகவும் இருக்கலாம். யார் என்று தெரிந்துக் கொள்ள, ஆர்வம் இருப்பவர்கள் நிகழ்ச்சியை நேரில் வந்து, பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட படத்தொகுப்பாளர் திரு. லெனின் பங்குபெறுகிறார். குறும்படங்களில் படத்தொகுப்பு, நடிப்பு, இயக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட தனது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். படத்தொகுப்பு நுணுக்கங்களையும் வாசகர்களுக்கு பயிற்றுவிப்பார். வாசகர்களும் படத்தொகுப்பு சார்ந்த தங்கள் ஐயங்களை அவரிடம் கேட்டு விடைப் பெற்றுக் கொள்ளலாம்.

இவரைப் பற்றி:

தமிழில் புகழ்பெற்ற படத்தொகுப்பாளரான இவர் "ஊருக்கு நூறு பேர்" என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். பிரபல இலக்கியவாதியான ஜெயகாந்தனின் நாவலை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம். இவரும், வி.டி. விஜயனும் சேர்ந்து பணிபுரிந்த படங்களில் பெரும்பான்மையான படங்கள் வெற்றிப் படங்கள்தான். தமிழில் பல முக்கியப் படங்களுக்கு படத்தொகுப்பு செய்த திரு. லெனின் அவர்கள்தான் தமிழ் குறும்பட உலகில் முன்னோடியாக கருதப்படுகிறார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

திரையிடப்படும் குறும்படங்கள்:

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு
நிலமெல்லாம் இரத்தம மனோகர் 24 நிமிடங்கள்
விபத்து சங்கர் நாராயணன் 15 நிமி. / 30 நொடிகள்
குண்டன் முரளி 13 நிமி. / 10 நொடிகள்

இந்தப் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட இயக்குனர் திரு. அனந்த நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

இவரைப் பற்றி:

இவர் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அண்மையில் வெளிவந்திருக்கும் "வால்மீகி" திரைப்படத்தின் இயக்குனர்.

குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும்.

மேலும் இந்த வாரம் முதல் இரண்டுப் புதிய பகுதிகள் குறும்பட வட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

குறும்படங்களுக்கான உதவி:

ஒவ்வொரு மாதமும் ஒரு சிறந்த கதையை தேர்ந்தெடுத்து அதற்கு ஒளிப்பதிவு, மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றை இலவசமாக தமிழ் ஸ்டுடியோ.காம் செய்து தரும் என்கிற அறிவிப்பு ஏற்கனவே தமிழ் ஸ்டுடியோ.காம் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான முறையான அறிவிப்பு மற்றும் இந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை ஆகிய அறிவிப்புகளும் இடம் பெற உள்ளன.

மடல் போட்டி:

மடல் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ் ஸ்டுடியோ.காம் தளத்தால் அறிவிக்கப்பட்ட மடல் போட்டியில் பரிசு வென்ற மடல் மற்றும் போட்டியாளர் ஆகியோரும் அறிவிக்கப்படுவர்.

6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.

இந்த மாதம் சந்தாத் தொகை முப்பது ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஆர்வலர்களும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</