கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய முதல் குறும்பட வட்டம்

ஆதவன்  

தமிழ் ஸ்டுடியோ முதன் முதலில் ஏற்பாடு செய்த குறும்பட வட்டத்தில் முப்பதிற்கும் அதிகமான குறும்பட ஆர்வலர்கள் கலந்துக் கொண்டனர். இது போன்ற ஒரு நிகழ்வினை வெற்றிகரமாக முதித்து விட முடியுமா என்ற தயக்கத்துடனே நாங்கள் இந்த குறும்பட வட்டத்தினை ஏற்பாடு செய்தோம். ஆனால் எப்படியும் குறும்பட ஆர்வலர்களை ஒருங்கிணைத்து விட வேண்டும் என்கிற எங்கள் நோக்கமே எங்களுக்கான உந்துதலாக அமைந்தது. நூற்றுக்கும் அதிகமான ஆர்வலர்களை எதிபார்த்த எங்களுக்கு முப்பது ஆர்வலர்கள் மட்டுமே கலந்துக் கொண்டது ஒருவித ஏமாற்றமே அளித்தாலும், நாங்கள் அதற்கான விளம்பர அறிவிப்பை சரிவர செய்யவில்லை என்கிற காரணத்தால் சமாதானம் அடைந்தோம்.

நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் சேராததும் ஒருவிதத்தில் நல்லது என்று தோன்றியது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து கடற்கரையில் கூட்டம் போட்டால் சட்ட சிக்கல் வரும் என்பதை நாங்கள் முன்னமே சிந்திக்கவில்லை. எனவே முப்பது ஆர்வலர்கள் மட்டுமே வந்ததால் கூட்டம் சிறப்பாக எவ்வித சிக்கலுமின்றி நடந்தது. ஓரிரு முறை மழைக் குறிக்கிட்டாலும், நிகழ்வு வெற்றிகரமாகவே அமைந்தது.

சனிக்கிழமை நான்கு மணிக்கு நிகழ்வு தொடங்கும் என்று அறிவித்தோம். நான்கு மணியில் இருந்து ஒவ்வொருத்தராக வந்து சேர்ந்தனர். இறுதியில் ஐந்து மணிக்கு குறும்பட வட்டம் அனைவரின் அறிமுகத்துடனும் தொடங்கியது. 'நிழல்' திருநாவுக்கரசு தலைமை வகித்தார். தமிழ் ஸ்டுடியோ நிர்வாகி திரு. குணசேகரன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் முதலில் குறும்படங்களுக்கும் ஏன் ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும் என்கிற விவாதம் நடந்தது. "ஸ்டோரி ஆப் மை லைப்ரரி" இயக்குனர் திரு. ராஜ்குமார் அவர்களின் நண்பர் திரு. ராஜேஷ் பேசுகையில் ஆங்கிலத்தில் பெயர் வைப்பது உலக அளவில் சந்தையை ஏற்படுத்துவதற்கான ஒரு உத்தி என்று குறிப்பிட்டார்.

இறுதியில் உலக அளவில் படங்களை கொண்டு செல்லும்போது ஆங்கிலப் பெயர் வைத்து, ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிட்டால் அதை வரவேற்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் பார்வையாளர்கள் மத்தியில் ஆங்கிலப் பெயர் வைப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்கிற கருத்து ஒருமனதாக எட்டப்பட்டது. நண்பர் ராஜ்குமாரும் தனது அடுத்தப் படமான "இந்தியன் கேங்ச்டேர்" என்பதற்கு தமிழில் பெயர் வைக்க உறுதி பூண்டுள்ளார். இதையே முதல் குறும்பட வட்டத்தின் வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்.

அடுத்தாக குறும்பட விற்பனை பற்றி விவாதம் நடைபெற்றது. இதில் குறும்பட தயாரிப்பாளரோ அல்லது இயக்குனரோ தங்கள் படைப்புகளை உலகம் முழுவது விற்பனை செய்துவிட முடியாது என்கிற கருத்து முன்வைக்கப்பட்டது. இடைமறித்துப் பேசிய தமிழ் ஸ்டுடியோ நிர்வாகி திரு. அருண் அவர்கள் குறும்படங்களை விற்பதில் அதன் இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் உள்ள சிரமங்களை போக்க தமிழ் ஸ்டுடியோ தனது நிவாகத்தின் அதை கொண்டு வரும் என உறுதியளித்தார். இது பற்றி தொடர்ந்து அடுத்த அடுத்த குறும்பட வட்டத்தில் விவாதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், திரு. கோவி லெனின் அவர்கள் தனது அறிஞர் அண்ணாவைப் பற்றிய குறும்படத்தின் உலக அளவிலான விற்பனை பற்றிய செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவரதுக் கருத்தையும் தமிழ் ஸ்டுடியோ செம்மைப் படுத்த உறுதி பூண்டுள்ளது.

இடையில் அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. மழையும் குறுக்கிட்டது. மழையின் சாரலில் கடற்கரை மண் வாசத்தில், ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ள நிகழ்வில் சுக்கு சேர்த்து செய்யப்பட்ட தேநீர் கொடுத்த சுகம் அலாதியானது. மீண்டும் இது போன்ற ஒரு நிகழ்வு நடைபெறும் நாளை அனைத்து உள்ளமும் எதிர்பார்க்கத்தான் செய்தது.

மழை நின்றவுடன் மீண்டும் அடுத்த விவாதத்தை தொடங்கி வைத்தார். சூரியன் பண்பலை வரிசை நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு. ராஜசேகர். குறும்படத் துறையில் முனைவர் படிப்பை மேற்கொண்டுள்ள ராஜசேகர் அது தொடர்பான பல்வேறு வினாக்களை முன் வைத்தார். முதலாவதாக குறும்படத்தின் வரலாறு பற்றி வினா எழுப்பினார். அதற்கு 'நிழல்' திரு. திருநாவுக்கரசு அவர்கள் பதிலளித்தார். தொடர்ந்து அவர் குறும்பட வரலாறு பற்றிய பல்வேறு செய்திகளை முன்வைத்தார். இதுவரை யாரும் அறியாத பல செய்திகள் அவரது விடையில் காண நேர்ந்தது.

நமது நிகழ்விற்கு புதுச்சேரியில் இருந்து வருகைப் புரிந்த திரு. யாழ் நிலவன் அவர்கள் தனது குறும்பட அனுபவங்களிப் பகிர்ந்துக் கொண்டார். மேலும் தனது அடுத்தப் படைப்புக்கு பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் தேவை என்ற கோரிக்கையை முன்வைத்தார். உடனே திரைப்படக் கல்லூரியில் படிக்கும் திரு. தாஸ் ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றுக்கொண்டார். குறைந்த பொருட்செலவில் படங்களை எடுக்க நமக்குள்ளாகவே ஒரு ஒருங்கிணைப்பு தேவை என்கிற தமிழ் ஸ்டுடியோவின் நிலைப்பாடுக்கு கிடைத்த முதல் வெற்றியாக இதைக் கருதலாம்.

மேலும் பலரும் தங்களதுக் குறும்பட அனுபவத்தினைப் பகிர்ந்துக் கொண்டனர். இறுதியாக ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு அரங்கில் குறும்பட வட்டத்தை தொடர்ந்து இரண்டாவது சனிக்கிழமை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அரங்க வாடகை உள்ளிட்ட செலவுகளுக்காக குறும்பட வட்ட உறுப்பினர்களே மாதா மாதம் ஒரு சிறுத்தொகையினை தமிழ் ஸ்டுடியோவிற்கு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். இறுதியாக கனமழை வந்து நமது கூட்டத்தை முன்னதாகவே முடித்து வைத்தது. மீண்டும் அடுத்த குறும்பட வட்டம் நவம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் தேதி சென்னைக் கன்னிமாரா நூலகத்தின் எதிரில் உள்ள ஜீவன ஜோதி அரங்கில் நடைபெற உள்ளது. அதுப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/FirstKurumbadaVattam#
--------------------------------------------------------------------------------------------------------------------------------
முதல் குறும்பட வட்டம் நடைபெறும் நாள்: அக்டோபர் 11, 2008. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு

மேலும் விபரங்களுக்கு:

9840698236, 9894422268


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</