கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட உதவிகள் குறும்பட உதவிகள் வாயில்
 
குறும்பட உதவிகள் - குறும்பட இயக்குனர்களுக்கு ஓர் வாய்ப்பு
 

குறும்பட இயக்குனர்களே! உங்களிடம் நல்லக் கதைக் களம் இருக்கிறதா? குறும்படங்கள் இயக்க வேண்டும் என்கிற உங்கள் எண்ணத்திற்கு பணம் ஒரு தடையாக உள்ளதா? குறும்பட ஆர்வலர்களுக்கு தொடர்ந்து தன்னால் இயன்ற உதவிகளை செய்து வரும் தமிழ் ஸ்டுடியோ.காமின் அடுத்த முயற்சியாக உங்களுக்கு உதவும் அறிவிப்பு.

தமிழ் ஸ்டுடியோ.காமின் உதவி:

கேமரா மற்றும் படத்தொகுப்பு உதவி.

விபரங்கள்:

இன்றைய நாட்களில் குறும்படத் துறையில் அதிக செலவுப் பிடிக்கும் இரண்டு துறைகள், ஒன்று ஒளிப்பதிவு. இரண்டு படத்தொகுப்பு. இந்த இரண்டு தொழில்நுட்ப உதவிகளையும் தமிழ் ஸ்டுடியோ.காம் உங்களுக்கு இலவசமாக செய்துத் தர முன்வதுள்ளது. இதில் உங்களின் செலவு: நடிகர், நடிகைகளுக்கு கொடுக்க வேண்டியத் தொகை, மற்றும் இதர சிறு சிறு செலவுகள். மிக அதிக செலவாகும் கேமரா மற்றும் எடிட்டிங் சார்ந்த உதவிகள் எங்களிடம் இருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

எங்களிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும் உதவிகள்:

கேமரா:

panasonic GS 330 3CCD Handy Camera with tripod and single light. and camera with UV filter and small wide angle lense.

உங்களிடம் திறமை வாய்ந்த ஒளிப்பதிவாளர் இருக்கும்பட்சத்தில் நீங்களே கேமரா மற்றும் அது சார்ந்த உபகரணங்களை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்கு ஒளிப்பதிவாளர் உதவி தேவைப்படும் பட்சத்தில் ஒளிப்பதிவாளரையும் நாங்களே ஏற்பாடு செய்துத் தருகிறோம்.

படத்தொகுப்பு:

படத்தொகுப்பு மென்பொருள்:

1. Apple i-Movie or

2. A adobe premiere

படத்தொகுப்பு முழுதும் தமிழ் ஸ்டுடியோ.காம் செய்து கொடுக்கும். உங்களிடம் திறமை வாய்ந்த படத்தொகுப்பாளர் இருக்கும்பட்சத்தில் படத்தொகுப்பு ஸ்டுடியோ மற்றும் உபரகரணங்களை எங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்

படத்தொகுப்பாளர் இல்லையென்றால் நாங்களே படத்தொகுப்பும் செய்துக் கொடுத்து விடுவோம்.

நீங்கள் செய்யவேண்டியது:

1. உங்கள் கதை மற்றும் திரைக்கதையை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் அல்லது கொரியரில் அனுப்பி வைக்கலாம்.

2. இதற்கு முன் நீங்கள் குறும்படம் எடுத்திருந்தால் அது பற்றிய தகவல்களையும் உடன் இணைக்க வேண்டும். அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்களும் தெரிவிக்கப்பட வேண்டும்.

3. உங்கள் குறும்படத்தின் மொத்த செலவு (Budget) தொகையையும் தெரிவிக்க வேண்டும். இதில் கேமரா மற்றும் எடிட்டிங் வேலைகளுக்கும் சேர்த்தே பட்ஜெட் தயாரிக்க வேண்டும்.

4. குறும்படம் எடுக்கவிருக்கும் இடங்கள் பற்றியத் தகல்வல்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

நிபந்தனைகள்:

1. எங்களுக்கு வந்து சேரும் படைப்புகளில் இருந்து நடுவர் குழு தெரிவு செய்யும் குறும்பட கதைக்கு மேற்கண்ட உதவிகள் செய்யப்படும். ஒவ்வொரும் மாதமும் ஒருக் குறும்படத்திற்கு மேற்கண்ட உதவிகள் செய்யப்படும். எனவே உங்கள் படைப்புகளை ஒவ்வொரும் மாதமும் நீங்கள் தொடர்ந்து அனுப்பலாம்.

2. ஒரு மாதம் உங்கள் படைப்பு தெரிவு செய்யப்படாவிட்டால் அடுத்த மாதம் நீங்கள் வேறொரு கதையை அனுப்பி வைக்கலாம். ஒரே படைப்பை ஒவ்வொரும் மாதமும் அனுப்பி வைக்கக்கூடாது.

3. கேமரா மற்றும் இதர உபரகரணங்கள் பழுதுபட்டால் பழுதை சரிசெய்து கொடுக்கும் பொறுப்பு உங்களுடையது. ஒருக் குறும்படத்திற்கு அதிக பட்சம் ஐந்து நாட்கள் மட்டுமே கேமரா மற்றும் இதர உபகரணங்கள் கொடுக்கப்படும். ஐந்து நாட்களுக்கு மேல் தேவை ஏற்பட்டால் நடுவர் குழு அதனை தீர்மானிக்கும்.

4. நீங்கள் அனுப்பும் கதை மற்றும் திரைக்கதை எந்தக் காரணம் கொண்டும் திருப்பி அனுப்ப இயலாது. ஆனால் உங்கள் அனுமதியின்றி வேறொரு வடிவத்திலேயோ அல்லது அதே வடிவிலேயே தமிழ் ஸ்டுடியோ.காம் அதனை பயன்படுத்தாது.

5. உங்களுக்கு ஏற்படும் ஐயங்கள் குறித்து அறிந்துக் கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268

உங்கள் கதை மற்றும் திரைக்கதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thamizhstudio@gmail.com; editor@thamizhstudio.com

அஞ்சல் முகவரி தேவைப்படுமாயின் தொலைபேசி வாயிலாக கேட்டுத் தெரிந்துக்கொள்ளலாம்.

(நினைவிருக்கட்டும்: திரைப்படத்திற்கு உதவி செய்வது குறித்து நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. இதுக் குறித்த தகவல்களை தொலைபேசியில் பரிமாறிக் கொள்ள இயலாது.)

இந்த உதவிகள் முற்றிலும் இலவசமாக தமிழ் ஸ்டுடியோ.காம் மூலமாக உங்களுக்கு வழங்கப்படுகின்றது.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</