கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
பௌர்ணமி இரவு பற்றி
1
 

நகரின் சப்தங்கள் அனைத்தும் ஆர்பரித்துப் பின்னர் அடங்கிப் போன பின்பனி இரவு, முழு நிலவு, மனதுக்கு மிக நெருக்கமான அல்லது ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் செடிகளும், பூக்களும் நிறைந்த தோட்ட வெளியில், புல் தரை மீது அமர்ந்து நாம காணக் கிடைக்காத பல அரியத் திரைப்படங்கள், உலக குறும்படங்கள் மற்றும் நம் நண்பர்கள் உருவாக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் குறும்படம் ஆகியவற்றை, நிலா சோறு உண்டுக் கொண்டே பார்க்கும்போது ஏற்படும் பரவச நிலை பல ஆண்டுகள் செய்யும் தவத்திற்கு சமம். அத்தகைய தவ நிலைக்கு, அல்லது பரவச நிலைக்கு உங்களை அழைத்து செல்ல நாங்கள் தயார். வருவதற்கு நீங்கள் தயாரானால்!

தமிழ் ஸ்டுடியோ.காம் இணையதளத்தின் குறும்பட வட்டம் நிகழ்வு கடந்த பதினேழு மாதங்களாக மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஊடகங்களும், ஆர்வலர்களும் கொடுத்த பேராதரவே இதற்கு காரணம். அதே அளவிற்கான ஆதரவை எதிர்பார்த்து மேலும் ஒரு திரையிடல் நிகழ்வை தமிழ் ஸ்டுடியோ.காம் ஏற்பாடு செய்திருக்கிறது. எப்போதும் வெறும் வார்த்தையளவில் நாம் பேசிக்கொண்டிருக்கும் சில திரைபபடங்கள், விமர்சகர்கள் கொண்டாடும் சில இயக்குனர்களின் காணக்கிடைக்காத அரியத் திரைப்படங்கள், உலக அளவில் புகழ் பெற்ற குறும்படங்கள், உலகின் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆவணப்படங்கள், தமிழிலும் முயற்சி செய்கிறோம் என பறைசாற்றும் குறும்படங்கள் போன்றவை இந்த நிகழ்வில் திரையிடப்படும்.

மேலும், தமிழில் குறும்படம் எடுக்க விரும்பும், அல்லது அந்த குறும்படத்தில் பங்கேற்க விரும்பும் அல்லது குறும்பட உதவி வேண்டும் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்களுக்குள் குழுவாக பிரிந்து அது பற்றி விவாதிக்கும் நிகழ்வும் இந்த பெவுர்ணமி இரவில் நடைபெறும். தங்கள் மனதுக்குள் இருக்கும் பல்வேரு பிரச்சனைகளால் தாங்கள் உருவாக்க நினைத்த குறும்பட முயற்சியை தள்ளி வைத்த அனைத்து நண்பர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்கள் சிறப்பாக குறும்படம் எடுக்க இந்த நிகழ்வில் வழிநடத்தப்படும்.

உலகப் படங்கள் பற்றியான ஒரு புரிதலை ஏற்படுத்தவும், அதுபற்றி கலந்துரையாடவும், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு பார்வையாளர் பௌர்ணமி இரவில் நம்முடன் பங்கேற்பார். ஆர்வலர்கள் அந்த மாதம் பௌர்ணமி இரவில் திரையிடப்படும் படங்களை அந்த சிறப்பு பார்வையாளருடன் சேர்ந்து பார்த்துவிட்டு அந்தப் படம் குறித்து அவருடன் கலந்துரையாடலாம்.

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS  பௌர்ணமி இரவு பௌர்ணமி இரவு
வாயில் 
 

தமிழ் ஸ்டுடியோவின் பௌர்ணமி இரவு - நிகழ்ச்சி பற்றி பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு.


  02-03-2011


பௌர்ணமி இரவு பற்றி தினமணி


கொஞ்​சம் நிலவு...​ கொஞ்​சம் உணவு...​ நிறைய சினிமா!

திரைப்​பட இயக்​கு​ன​ராக வேண்​டும்.​ திரைத் துறை​யில் பெரிய அள​வில் சாதிக்க வேண்​டும் என்ற வண்​ணக் கன​வு​க​ளோடு தினம் தினம் சென்​னையை நோக்கி படை​யெ​டுத்​துக் கொண்​டி​ருக்​கும் இளை​ஞர் கூட்​டத்​துக்கு,​​ நல்ல சினிமா என்​றால் என்ன,​​ அது எப்​படி இருக்​கும் என்​ப​தை​யெல்​லாம் மாதம் தோறும் பெüர்​ணமி நாளில் விளக்கி வரு​கி​றது "குறும்​பட வட்​டம்' என்​னும் சென்​னை​யைச் சேர்ந்த அமைப்பு.​ இதன் நிறு​வ​னர்​கள் அருண்,​​ குண​சே​க​ரன் ஆகிய இரு​வ​ரும் தக​வல் தொழில்​நுட்​பத் துறை​யில் பணியி​லி​ருப்​ப​வர்​கள்.​

பெüர்​ணமி இர​வின் நிலா வெளிச்​சத்​தில் கையில் சுவை​யான உண​வு​டன் அகிரா குரோ​சேவா போன்​ற​வர்​க​ளின் திரைப்​ப​டங்​க​ளைப் பார்ப்​ப​தற்​கும் இரவு தங்​கி​விட்டு காலை​யில் எழுந்து செல்​வ​தற்​கும் சென்னை,​யுனைட்​டெட் இந்​தியா கால​னி​யில் இருக்​கும் தங்​க​ளின் அலு​வ​ல​கத்​தி​லேயே வழி செய்து கொடுத்​தி​ருக்​கும் அருண் மற்​றும் குண​சே​க​ரன் அமைப்​பின் மற்ற செயல்​பா​டு​கள் குறித்து நம்​மி​டம் பேசி​யதி​லி​ருந்து...​

""நானும் அரு​ணும் அப்​போது ஒரே நிறு​வ​னத்​தில் பணி​பு​ரிந்து கொண்​டி​ருந்​தோம்.​ அருண் இயக்​கு​ன​ருக்​கான பயிற்​சியை ஒரு தனி​யார் நிறு​வ​னத்​தில் எடுத்​துக் கொண்​டி​ருந்​தார்.​ எனக்​கும் கலை சார்ந்த விஷ​யங்​க​ளில் ஈடு​ப​ட​வேண்​டும் என்ற எண்​ணம் இருக்​கவே,​​ ஒத்த கருத்​து​டைய அரு​ணு​டன் என்​னை​யும் இணைத்​துக் கொண்​டேன்.​ எங்​க​ளு​டைய பணி​க​ளுக்கு முதல் கட்​ட​மாக தமிழ் ஸ்டூ​டியோ டாட் காம் என்​னும் இணைய தளத்தை தொடங்​கி​னோம்.​

இதைத் தொடர்ந்து குறும்​பட வட்​டம் என்ற அமைப்​பைத் தொடங்கி மாதம்​தோ​றும் இரண்​டா​வது சனிக்​கி​ழ​மை​க​ளில் சென்னை,​​ இக்ஷா மையத்​தில் கூடி குறும்​ப​டங்​கள் திரை​யி​டு​தல்,​​ எழுத்​தா​ளர்​க​ளோடு,​​ துறை சார்ந்த நிபு​ணர்​க​ளின் ஆலோ​ச​னை​க​ளைப் பகிர்ந்து கொள்​ளும் நிகழ்வை கடந்த 20 மாதங்​க​ளா​கத் தொடர்ந்து நடத்​தி​வ​ரு​கி​றோம்...''என்​றார் குண​சே​க​ரன்.​

""குறும்​ப​டம் எடுக்க ஆர்​வ​மாக இருப்​ப​வர்​க​ளுக்கு உத​வும் வகை​யி​லும் அவர்​க​ளுக்கு தொழில்​நுட்ப ரீதி​யான ஆலோ​ச​னை​க​ளைச் சொல்​வ​தற்​கும் வழி​செய்​கி​றோம்.​ இதற்​கான ஆலோ​ச​னைக் கூட்​டம் வாரம் தோறும் சனி,​​ ஞாயிற்​றுக் கிழ​மை​க​ளில் எங்​க​ளின் அலு​வ​ல​கத்​தி​லேயே நடக்​கி​றது.​ நல்ல கருத்​தோடு குறும்​ப​டம் எடுக்​க​வேண்​டும் என்று ஆர்​வத்​தோடு வரு​ப​வர்​க​ளுக்கு படம் பிடிப்​ப​தற்கு கேமரா மற்​றும் எடிட்​டிங் வச​தி​களை இல​வ​ச​மா​கவே செய்​துத் தரு​கி​றோம்.​ அப்​படி தற்​போது எங்​க​ளின் உத​வி​யோடு நான்கு குறும்​ப​டங்​கள் தயா​ரிப்​பில் இருக்​கின்​றன.​

நான்கு நிமி​டமே ஓடக்​கூ​டிய "இப்ப வருந்தி என்ன பயன்?​' என்​னும் குறும்​ப​டம் எங்​க​ளின் முதல் தயா​ரிப்பு.​ உதவி செய்​கி​றோமே தவிர,​​ அந்​தப் படைப்​பிற்கு நாங்​கள் எந்த வகை​யி​லும் சொந்​தம் கொண்​டா​டு​வது கிடை​யாது.​ அவர் அந்​தப் படத்தை எந்த நாட்​டில் நடக்​கும் குறும்​ப​டப் போட்​டிக்​கும் அனுப்​ப​லாம்.​

ஆரம்ப காலத்​தில் குறும்​ப​டம் தயா​ரிக்க நினைத்​த​போது,​​ நாங்​கள் ஐ.டி.துறை​யில் பணி​யில் இருப்​ப​தால் எங்​க​ளின் பணத்​தின் மீதே குறி​யாக பலர் இருந்​த​னர்.​

அவர்​கள் சொல்​லும் பட்​ஜெட்டை எல்​லாம் எங்​க​ளால் நினைத்தே பார்க்​க​மு​டி​யாத நிலை.​ அன்​றைக்கு எங்​க​ளால் முடி​யா​ததை இன்​றைக்கு எங்​க​ளால் மற்​ற​வர்​க​ளுக்கு இல​வ​ச​மாக தர​மு​டி​வ​தில் எங்​க​ளுக்கு ஒரு ஆத்ம திருப்தி.​ அதைத் தவிர வேறு ஒன்​று​மில்லை.​ இன்​னும் நாங்​கள் எடுக்க நினைத்த குறும்​ப​டத்தை எடுக்​க​வில்லை..'' என்​றார் அருண்.​
அருண் விட்ட இடத்தி​லி​ருந்து தொடர்ந்​தார் குண​சே​க​ரன்.​ "பெüர்​ணமி இர​வில் உலக அள​வில் வெளி​வந்த சிறந்த இயக்​கு​னர்​க​ளின் படம்,​​ ஈரா​னிய படங்​கள்,​​ ஆங்​கி​லத்​தில் எடுக்​கப்​பட்ட குறும்​ப​டங்​கள்,​​ தமி​ழில் எடுக்​கப்​ப​டும் குறும்​ப​டங்​கள் என எல்​லா​வற்​றை​யும் திரை​யி​டு​வோம்.​ மாதந்​தோ​றும் இந்த நிகழ்​வுக்கு திரைத் துறை சார்ந்த ஒரு பிர​மு​கரை அழைத்து திரை​யிட்ட படங்​க​ளைப் பற்றி பேசச் சொல்​லு​வோம்!​

கிரா​மத்​தில் இருந்து சினிமா கன​வு​க​ளோடு வரு​ப​வர்​கள் அகிரா குரோ​சேவா,​​ பெர்க்​மான் என்ற முத்​திரை பதித்த இயக்​கு​னர்​க​ளின் பெயர்​களை எல்​லாம் கேட்​டி​ருக்​கவே மாட்​டார்​கள்.​ அவர்​க​ளின் மிரட்​சி​யைப் போக்கி அவர்​களை நல்ல சினிமா ரசி​கர்​க​ளா​க​வும் படைப்​பா​ளி​க​ளா​க​வும் ஆக​வேண்​டும் என்​ப​து​தான் எங்​க​ளின் நோக்​கம்.​

ற்ட்​ஹம்ண்க்ஷ்ட்ள்ற்ன்க்ண்ர்.ஸ்ரீர்ம் என்​னும் எங்​க​ளின் இணைய தளத்​தின் விளம்​பர வரு​வா​யி​லும் மாதம் தோறும் விருப்​பப்​பட்​ட​வர்​கள் தரும் 50 ரூபா​யும் எங்​க​ளின் சொந்​தப் பண​மும்​தான் இந்த முயற்​சி​க​ளுக்கு உத​வு​கின்​றது.​

எங்​க​ளின் இந்த இணைய தளத்​தில் திரைப்​ப​டத்​தின் பல்​வேறு துறை​க​ளைச் சேர்ந்த நிபு​ணர்​க​ளும் அந்​தத் துறை​யின் நுணுக்​கங்​களை எழு​தி​யி​ருக்​கி​றார்​கள்.​ "பாரதி' படத்​திற்கு ஒளிப்​ப​திவு செய்த ராஜ்​கு​மார் ஒளிப்​ப​தி​வின் நுணுக்​கங்​க​ளைப் பற்​றி​யும் கூத்​துப் பட்​ட​றை​யில் பயிற்சி பெற்ற ஜெய​ராஜ் நடிப்​புப் பற்​றி​யும் எழு​தி​யி​ருக்​கி​றார்​கள்.​ நாங்​கள் திரை​யி​டும் சிறந்த குறும்​ப​டங்​களை எடுத்த இயக்​கு​நர்​க​ளுக்கு விருது அளித்து மரி​யாதை செய்​கி​றோம்'' என்​றார்.

http://www.dinamani.com/edition/story.aspx?&
SectionName=Kadhir&artid=232611&SectionID=
146&MainSectionID=146&SEO=&Title=%E0%AE%
95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E2%80%8B%E0
%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%
AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81...%E2%80
%8B%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D
%E2%80%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%
AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81...%E2%80%8
B%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%
AE%AF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE
%BF%E0%AE%AE%E0%AE%BE


------------------------------------------------------------------------------------

பௌர்ணமி இரவு பற்றி தினமலர்


வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.