கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
பௌர்ணமி இரவு பற்றி
1
 

நகரின் சப்தங்கள் அனைத்தும் ஆர்பரித்துப் பின்னர் அடங்கிப் போன பின்பனி இரவு, முழு நிலவு, மனதுக்கு மிக நெருக்கமான அல்லது ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் செடிகளும், பூக்களும் நிறைந்த தோட்ட வெளியில், புல் தரை மீது அமர்ந்து நாம காணக் கிடைக்காத பல அரியத் திரைப்படங்கள், உலக குறும்படங்கள் மற்றும் நம் நண்பர்கள் உருவாக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் குறும்படம் ஆகியவற்றை, நிலா சோறு உண்டுக் கொண்டே பார்க்கும்போது ஏற்படும் பரவச நிலை பல ஆண்டுகள் செய்யும் தவத்திற்கு சமம். அத்தகைய தவ நிலைக்கு, அல்லது பரவச நிலைக்கு உங்களை அழைத்து செல்ல நாங்கள் தயார். வருவதற்கு நீங்கள் தயாரானால்!

தமிழ் ஸ்டுடியோ.காம் இணையதளத்தின் குறும்பட வட்டம் நிகழ்வு கடந்த பதினேழு மாதங்களாக மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஊடகங்களும், ஆர்வலர்களும் கொடுத்த பேராதரவே இதற்கு காரணம். அதே அளவிற்கான ஆதரவை எதிர்பார்த்து மேலும் ஒரு திரையிடல் நிகழ்வை தமிழ் ஸ்டுடியோ.காம் ஏற்பாடு செய்திருக்கிறது. எப்போதும் வெறும் வார்த்தையளவில் நாம் பேசிக்கொண்டிருக்கும் சில திரைபபடங்கள், விமர்சகர்கள் கொண்டாடும் சில இயக்குனர்களின் காணக்கிடைக்காத அரியத் திரைப்படங்கள், உலக அளவில் புகழ் பெற்ற குறும்படங்கள், உலகின் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆவணப்படங்கள், தமிழிலும் முயற்சி செய்கிறோம் என பறைசாற்றும் குறும்படங்கள் போன்றவை இந்த நிகழ்வில் திரையிடப்படும்.

மேலும், தமிழில் குறும்படம் எடுக்க விரும்பும், அல்லது அந்த குறும்படத்தில் பங்கேற்க விரும்பும் அல்லது குறும்பட உதவி வேண்டும் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்களுக்குள் குழுவாக பிரிந்து அது பற்றி விவாதிக்கும் நிகழ்வும் இந்த பெவுர்ணமி இரவில் நடைபெறும். தங்கள் மனதுக்குள் இருக்கும் பல்வேரு பிரச்சனைகளால் தாங்கள் உருவாக்க நினைத்த குறும்பட முயற்சியை தள்ளி வைத்த அனைத்து நண்பர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்கள் சிறப்பாக குறும்படம் எடுக்க இந்த நிகழ்வில் வழிநடத்தப்படும்.

உலகப் படங்கள் பற்றியான ஒரு புரிதலை ஏற்படுத்தவும், அதுபற்றி கலந்துரையாடவும், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு பார்வையாளர் பௌர்ணமி இரவில் நம்முடன் பங்கேற்பார். ஆர்வலர்கள் அந்த மாதம் பௌர்ணமி இரவில் திரையிடப்படும் படங்களை அந்த சிறப்பு பார்வையாளருடன் சேர்ந்து பார்த்துவிட்டு அந்தப் படம் குறித்து அவருடன் கலந்துரையாடலாம்.

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS  பௌர்ணமி இரவு பௌர்ணமி இரவு
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது பௌர்ணமி இரவு

ஆதவன் 27-05-2010


தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது பௌர்ணமி இரவு: (27-05-2010) இரவு எட்டு மணி.

இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட ஒளிப்பதிவாளர் சி.ஜெ. ராஜ்குமார் அவர்கள் கலந்துக் கொண்டார்.

நிலாச்சோறு வழங்கப்படுதல்

முதலில் தமிழ் குறும்படம் "ஆழத்தாக்கம்" திரையிடப்பட்டது. அதுபற்றி விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. இக்குறும்படம் உலகமயமாக்கல் பற்றி மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது. இதன் இயக்குனர் நாகர்கோவிலை சேர்ந்த திரு. பைசல் அவர்கள்.

நிகழ்ச்சியில் நிலாச்சோறு வழங்கப்பட்டது.

பின்னர் "To Live " என்கிற சீனத் திரைப்படம் திரையிடப்பட்டு அதுகுறித்தான விவாதம் நடைபெற்றது.

நிகழ்வு இரவு 1 மணிக்கு முடிவுற்றது. ஆனால் சுமார் ஐந்து மணிவரை தொடர் விவாதங்கள் நைபெற்றது. அனைவரும் அதிகாலை ஆறுமணியளவில் புறப்பட்டு சென்றனர்.

எவ்வித இறுக்கமும் இல்லாமல் நினைத்த வண்ணம் சிறந்த படங்களை பார்த்து களித்தல்

நிகழ்வின் முழு ஒளிப்படங்களையும் காண:

http://picasaweb.google.co.in/thamizhstudio/wCHhVJ#


------------------------------------------------------------------------------------------------------
வியாழன், 27-05-2010

இரவு 7.15 மணிக்கு தொடங்கி, நிகழ்வு முடிய இரவு 12.30 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும் உறங்குமிடம் முதலியவை ஏற்பாடு செய்யப்படும். ஆனால் அதற்காக ஆர்வலர்கள் முப்பது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

இந்த மாதத்திற்கான சிறப்பு பார்வையாளர்: திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. சி.ஜெ. ராஜ்குமார்.

இவர் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சானிடம் "காதல் கோட்டை" படத்திலிருந்து "பாண்டவர் பூமி" படம் வரை சுமார் பதினைந்து படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

இவர் ஒளிப்பதிவு செய்த "ஆயிஷா" திரைப்படம் லண்டன் மற்றும் மும்பை திரைப்பட விழாக்களில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது. மேலும் தேசிய விருது பெற்ற "ஜானகி விஸ்வநாதன்" இயக்கிய "கனவு மெய்ப்பட வேண்டும்" படத்திற்கு ஒளிப்பதிவு செய்து விருதுகளும் பெற்றுள்ளார்.

திரையிடப்படும் படங்கள்:

தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: முதலாவதாக 'ஆழத்தாக்கம்' என்கிற குறும்படம் திரையிடப்பட்டு அது பற்றிய கலந்துரையாடல் நடைபெறும். இக்குறும்படத்தின் இயக்குனர் திரு. பைசல் அவர்கள்.

உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படம்: Huozhe (1994) in english To Live

இயக்கம்: Zhang Ymou

இந்தத் திரைப்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள:

http://www.imdb.com/title/tt0110081/

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</