காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்.
 
 

பௌர்ணமி இரவு பற்றி

நகரின் சப்தங்கள் அனைத்தும் ஆர்பரித்துப் பின்னர் அடங்கிப் போன பின்பனி இரவு, முழு நிலவு, மனதுக்கு மிக நெருக்கமான அல்லது ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் செடிகளும், பூக்களும் நிறைந்த தோட்ட வெளியில், புல் தரை மீது அமர்ந்து நாம காணக் கிடைக்காத பல அரியத் திரைப்படங்கள், உலக குறும்படங்கள் மற்றும் நம் நண்பர்கள் உருவாக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் குறும்படம் ஆகியவற்றை, நிலா சோறு உண்டுக் கொண்டே பார்க்கும்போது ஏற்படும் பரவச நிலை பல ஆண்டுகள் செய்யும் தவத்திற்கு சமம். அத்தகைய தவ நிலைக்கு, அல்லது பரவச நிலைக்கு உங்களை அழைத்து செல்ல நாங்கள் தயார். வருவதற்கு நீங்கள் தயாரானால்!

தமிழ் ஸ்டுடியோ.காம் இணையதளத்தின் குறும்பட வட்டம் நிகழ்வு கடந்த பதினேழு மாதங்களாக மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஊடகங்களும், ஆர்வலர்களும் கொடுத்த பேராதரவே இதற்கு காரணம். அதே அளவிற்கான ஆதரவை எதிர்பார்த்து மேலும் ஒரு திரையிடல் நிகழ்வை தமிழ் ஸ்டுடியோ.காம் ஏற்பாடு செய்திருக்கிறது. எப்போதும் வெறும் வார்த்தையளவில் நாம் பேசிக்கொண்டிருக்கும் சில திரைபபடங்கள், விமர்சகர்கள் கொண்டாடும் சில இயக்குனர்களின் காணக்கிடைக்காத அரியத் திரைப்படங்கள், உலக அளவில் புகழ் பெற்ற குறும்படங்கள், உலகின் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆவணப்படங்கள், தமிழிலும் முயற்சி செய்கிறோம் என பறைசாற்றும் குறும்படங்கள் போன்றவை இந்த நிகழ்வில் திரையிடப்படும்.

மேலும், தமிழில் குறும்படம் எடுக்க விரும்பும், அல்லது அந்த குறும்படத்தில் பங்கேற்க விரும்பும் அல்லது குறும்பட உதவி வேண்டும் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்களுக்குள் குழுவாக பிரிந்து அது பற்றி விவாதிக்கும் நிகழ்வும் இந்த பெவுர்ணமி இரவில் நடைபெறும். தங்கள் மனதுக்குள் இருக்கும் பல்வேரு பிரச்சனைகளால் தாங்கள் உருவாக்க நினைத்த குறும்பட முயற்சியை தள்ளி வைத்த அனைத்து நண்பர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்கள் சிறப்பாக குறும்படம் எடுக்க இந்த நிகழ்வில் வழிநடத்தப்படும்.

உலகப் படங்கள் பற்றியான ஒரு புரிதலை ஏற்படுத்தவும், அதுபற்றி கலந்துரையாடவும், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு பார்வையாளர் பௌர்ணமி இரவில் நம்முடன் பங்கேற்பார். ஆர்வலர்கள் அந்த மாதம் பௌர்ணமி இரவில் திரையிடப்படும் படங்களை அந்த சிறப்பு பார்வையாளருடன் சேர்ந்து பார்த்துவிட்டு அந்தப் படம் குறித்து அவருடன் கலந்துரையாடலாம்.

 

 

 

 

 

 

 
     
     
     
     
வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS  பௌர்ணமி இரவு பௌர்ணமி இரவு வாயில் 

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்திய 18வது பௌர்ணமி இரவு

(18th Full Moon Day Film Screening)

செந்தூரன் 14-07-2011

18 வது பௌர்ணமி இரவு இந்த மாதம் புதிய மாற்றங்களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.மூன்று அமர்வாய் நடைபெற்றது.முதல் நிகழ்வாய் விவாதம்.இன்றைய சமூக,கல்வி,பொருளாதாரம் சார் முக்கிய பிரச்சனைகளை மையமாய் வைத்து விவாதம் என்கிற அளவில் தலைப்பிற்க்கு கீழே விவாதங்கள் முன்வைக்கப்படும்.இந்த மாதத்தின் முதல் தலைப்பு "தீவிரவாதம்". மும்பை தாக்குதலை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது.கருத்துகள் பலவிதமாய் முன்வைக்கப்பட்டன.அதன் சாராம்சம்.

உலகத்தில் அன்பு கொஞ்சமாய் குறைந்து வருவதாலேயே தீவிரவாதம் கிளை பரப்புகிறது.பசி,பஞ்சம் ஆகியவை வெறி எனும் பெயரில் மறுவாக்கம் செய்யப்படுகிறது.நசுக்கும் அரசாங்கத்தினை எதிர்கின்றனர்.வெளிப்படுத்தும் முறையில் அப்பாவிகுழந்தைகளும்,தாய்மார்களும்,பெண்களும் இலகுவாய் தீவிரவாதத்துக்கு பலியாகிவிடுகின்றனர்.இதற்கான முடிவு அன்பாய் மட்டுமே இருக்கமுடியும்.மும்[பை தாக்குதல் 21 பேர் பலி,112 பேர் காயம்.இந்த இடைவெளிகளில் அரசு தீவிரவாதிகள் தாக்குதல் நடாத்தி 3 வருடங்கள் ஆகிவிட்டது என்று கதையளந்து கொண்டிருக்கின்றனர்.இவ்வாறு விவாதம் முடிவுற்றது.அதன் பின் நம் இரவின் முக்கிய நிகழ்வான "நிலாச்சோறு" பரிமாறப்பட்டது.பின் "சிடிசன் கேன்" திரைப்படம் திரையிடப்பட்டது.பின் விவாதம் நடைபெற்று நிகழ்வு இனிது நிறைவேறியது.இரவுகள் இன்றும் பேசிக்கொண்டுதான் இருக்கிறது.


நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/105647173808629498658/1802

--------------------------------------------------------------------------------------------------------------------------

வியாழன், 14-07-2011

இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)

http://thamizhstudio.com/thodarbukku.php

இந்த மாதம் பௌர்ணமி இரவு நிகழ்ச்சியில் திரையிடப்படும் உலகத் திரைப்படம்: Orson Welles இயக்கிய "Citizen Kane" (1941)

இந்த திரைப்படம் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள: http://www.imdb.com/title/tt0033467/

Citizen Kane படம் பற்றி தமிழ் ஸ்டுடியோவில் ஜீவா அவர்கள் எழுதிய திறனாய்வுக் கட்டுரை.

http://thamizhstudio.com/shortfilm_guidance_wc_10.php

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268

இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி (Citizen Kane):

Loading...


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</