காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்.
 
 

பௌர்ணமி இரவு பற்றி

நகரின் சப்தங்கள் அனைத்தும் ஆர்பரித்துப் பின்னர் அடங்கிப் போன பின்பனி இரவு, முழு நிலவு, மனதுக்கு மிக நெருக்கமான அல்லது ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் செடிகளும், பூக்களும் நிறைந்த தோட்ட வெளியில், புல் தரை மீது அமர்ந்து நாம காணக் கிடைக்காத பல அரியத் திரைப்படங்கள், உலக குறும்படங்கள் மற்றும் நம் நண்பர்கள் உருவாக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் குறும்படம் ஆகியவற்றை, நிலா சோறு உண்டுக் கொண்டே பார்க்கும்போது ஏற்படும் பரவச நிலை பல ஆண்டுகள் செய்யும் தவத்திற்கு சமம். அத்தகைய தவ நிலைக்கு, அல்லது பரவச நிலைக்கு உங்களை அழைத்து செல்ல நாங்கள் தயார். வருவதற்கு நீங்கள் தயாரானால்!

தமிழ் ஸ்டுடியோ.காம் இணையதளத்தின் குறும்பட வட்டம் நிகழ்வு கடந்த பதினேழு மாதங்களாக மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஊடகங்களும், ஆர்வலர்களும் கொடுத்த பேராதரவே இதற்கு காரணம். அதே அளவிற்கான ஆதரவை எதிர்பார்த்து மேலும் ஒரு திரையிடல் நிகழ்வை தமிழ் ஸ்டுடியோ.காம் ஏற்பாடு செய்திருக்கிறது. எப்போதும் வெறும் வார்த்தையளவில் நாம் பேசிக்கொண்டிருக்கும் சில திரைபபடங்கள், விமர்சகர்கள் கொண்டாடும் சில இயக்குனர்களின் காணக்கிடைக்காத அரியத் திரைப்படங்கள், உலக அளவில் புகழ் பெற்ற குறும்படங்கள், உலகின் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆவணப்படங்கள், தமிழிலும் முயற்சி செய்கிறோம் என பறைசாற்றும் குறும்படங்கள் போன்றவை இந்த நிகழ்வில் திரையிடப்படும்.

மேலும், தமிழில் குறும்படம் எடுக்க விரும்பும், அல்லது அந்த குறும்படத்தில் பங்கேற்க விரும்பும் அல்லது குறும்பட உதவி வேண்டும் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்களுக்குள் குழுவாக பிரிந்து அது பற்றி விவாதிக்கும் நிகழ்வும் இந்த பெவுர்ணமி இரவில் நடைபெறும். தங்கள் மனதுக்குள் இருக்கும் பல்வேரு பிரச்சனைகளால் தாங்கள் உருவாக்க நினைத்த குறும்பட முயற்சியை தள்ளி வைத்த அனைத்து நண்பர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்கள் சிறப்பாக குறும்படம் எடுக்க இந்த நிகழ்வில் வழிநடத்தப்படும்.

உலகப் படங்கள் பற்றியான ஒரு புரிதலை ஏற்படுத்தவும், அதுபற்றி கலந்துரையாடவும், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு பார்வையாளர் பௌர்ணமி இரவில் நம்முடன் பங்கேற்பார். ஆர்வலர்கள் அந்த மாதம் பௌர்ணமி இரவில் திரையிடப்படும் படங்களை அந்த சிறப்பு பார்வையாளருடன் சேர்ந்து பார்த்துவிட்டு அந்தப் படம் குறித்து அவருடன் கலந்துரையாடலாம்.

 

 

 

 

 

 

 
     
     
     
     
வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS  பௌர்ணமி இரவு பௌர்ணமி இரவு வாயில் 

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்திய 17வது பௌர்ணமி இரவு

(17th Full Moon Day Film Screening)

செந்தூரன் (படிமை மாணவர்) 15-06-2011

Thamizh studio.com இன் பௌர்ணமி இரவு திரையிடல் மிகச்சிறப்பாக நடந்தேறியது.அன்றைய இரவினில் ஈரானிய திரைப்படமான offside திரையிடப்பட்டது.ஈரானின் முக்கிய இயக்குனரான ஜாபர் பனாஹி இயக்கிய இந்தப்படம் சமகால ஈரானின் பிரச்சனைகளை பேசும் படம்.ஈரானும்,பஹ்ரைனும் உலக உதைப்பந்தாட்ட தேர்வுக்காக மோதிக்கொள்கின்றன.இதை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் உதைப்பந்தாட்டம் என்பதை பேரளவில் கொண்டிருந்தாலும் அதன் மய்யம் என்பது சமகால ஈரானில் பெண்களின் நிலை என்னவாய் இருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாய் காண்பிக்கிறது.இந்த போட்டியைக் காண ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கும் மைதானத்தினில் ஆறு பெண்கள் விளையாட்டைக் காண நுழைந்துவிடுகின்றனர்.

பின் இந்த பெண்கள் அனைவரும் மைதானத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இராணுவத்தின் கண்காணிப்பில் போட்டிமுடியும்வரை சிறைபிடிக்கப்படுகின்றனர்.போட்டி முடிந்தவுடன் அவர்கள் அனைவரும் ஒரு வாகனத்தில் அழைத்து செல்லப்படுகின்றனர்.இந்த நேரத்தில் அங்கு இன்னுமொரு சிறுவனும் இவர்களோடு கைது செய்யப்பட்டு அழைத்துவரப்படுகிறான்.அவர்கள் அனைவரும் தம் அணி வென்றுவிட்டது என்ற செய்தி கிடைத்தவுன் மகிழ்வடைகின்றனர்.இந்த மகிழ்வான நேரத்தில் எங்கும் திருவிழா கோலம்பூண அந்த பெண்கள் அனைவரும் அந்த கூட்டத்தோடு சென்று மறைகின்றனர்.இவ்வாறு இந்த படம் நிறைவடைகிறது. நண்பர்களோடு கூடி இந்த திரைப்படத்தை பார்ப்பதில் உள்ள மகிழ்வே வேறு.

அன்றைய பௌர்ணமி இரவின் முக்கியமான பௌர்ணமியை மட்டும் காணமுடியவில்லை.ஏனென்றால் அன்று சந்திரகிரகணம்.இரவுகளின் பனித்தூறல்களின் நடுவே பச்சை என்றிருந்த புல்வெளியின் மத்தியில் இரவு உணவு வழங்கப்பட்டது.செவ்வனே இரவு உணவு முடிந்தவுடன் படம் ஆரம்பித்து,முடிந்தவுடன் நண்பர்களின் விவாதம் ஆரம்பமானது.அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெடித்த கருத்துக்கள், அமைதியான அந்த இருள் சூழ்ந்த இரவை பிரகாசமாக்க ஆரம்பித்தன.விவாதம் மிகக்கடுமையாய் படத்தின் தொழில்நுட்ப குறைபாடு உள்ளது என்ற மையத்தை சுழன்றடித்தது.விவாதம் தொடர்ந்து நடைபெற்றுகொண்டிருந்தது.நள்ளிரவு 12க்கு மேல் நண்பர்கள் ஒரு சிலராய் புறப்பட்டனர்.மேலும் சிலர் தம் விவாதத்தை கீழ் அறையினுள் நகர்த்திச்சென்றனர்.சிலர் கனவுகளுக்குள் இடித்துக்கொண்டனர்.இவ்வாறு அன்றைய இரவு கழிந்தது.இரவுகள் மட்டும் ஏனோ தம் இருப்பை மீண்டும் மீண்டும் பதித்துக்கொண்டே இருந்தது.பதிவுகள்தாம் இருப்பை உணர்த்துகின்றனவோ என்னவோ?


தொகுப்பு: செந்தூரன் (படிமை மாணவர்)

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/105647173808629498658/17

---------------------------------------------------------------------------------------------------------------------
புதன்கிழமை, 15-06-2011

இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)

http://thamizhstudio.com/thodarbukku.php

இந்த மாதம் பௌர்ணமி இரவு நிகழ்ச்சியில் திரையிடப்படும் உலகத் திரைப்படம்: Jafar Panahi இயக்கிய "Offside"

இந்த திரைப்படம் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள: http://www.imdb.com/title/tt0499537/

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268

இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி (Offside):

Loading...


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</