காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்.
 
 

பௌர்ணமி இரவு பற்றி

நகரின் சப்தங்கள் அனைத்தும் ஆர்பரித்துப் பின்னர் அடங்கிப் போன பின்பனி இரவு, முழு நிலவு, மனதுக்கு மிக நெருக்கமான அல்லது ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் செடிகளும், பூக்களும் நிறைந்த தோட்ட வெளியில், புல் தரை மீது அமர்ந்து நாம காணக் கிடைக்காத பல அரியத் திரைப்படங்கள், உலக குறும்படங்கள் மற்றும் நம் நண்பர்கள் உருவாக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் குறும்படம் ஆகியவற்றை, நிலா சோறு உண்டுக் கொண்டே பார்க்கும்போது ஏற்படும் பரவச நிலை பல ஆண்டுகள் செய்யும் தவத்திற்கு சமம். அத்தகைய தவ நிலைக்கு, அல்லது பரவச நிலைக்கு உங்களை அழைத்து செல்ல நாங்கள் தயார். வருவதற்கு நீங்கள் தயாரானால்!

தமிழ் ஸ்டுடியோ.காம் இணையதளத்தின் குறும்பட வட்டம் நிகழ்வு கடந்த பதினேழு மாதங்களாக மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஊடகங்களும், ஆர்வலர்களும் கொடுத்த பேராதரவே இதற்கு காரணம். அதே அளவிற்கான ஆதரவை எதிர்பார்த்து மேலும் ஒரு திரையிடல் நிகழ்வை தமிழ் ஸ்டுடியோ.காம் ஏற்பாடு செய்திருக்கிறது. எப்போதும் வெறும் வார்த்தையளவில் நாம் பேசிக்கொண்டிருக்கும் சில திரைபபடங்கள், விமர்சகர்கள் கொண்டாடும் சில இயக்குனர்களின் காணக்கிடைக்காத அரியத் திரைப்படங்கள், உலக அளவில் புகழ் பெற்ற குறும்படங்கள், உலகின் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆவணப்படங்கள், தமிழிலும் முயற்சி செய்கிறோம் என பறைசாற்றும் குறும்படங்கள் போன்றவை இந்த நிகழ்வில் திரையிடப்படும்.

மேலும், தமிழில் குறும்படம் எடுக்க விரும்பும், அல்லது அந்த குறும்படத்தில் பங்கேற்க விரும்பும் அல்லது குறும்பட உதவி வேண்டும் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்களுக்குள் குழுவாக பிரிந்து அது பற்றி விவாதிக்கும் நிகழ்வும் இந்த பெவுர்ணமி இரவில் நடைபெறும். தங்கள் மனதுக்குள் இருக்கும் பல்வேரு பிரச்சனைகளால் தாங்கள் உருவாக்க நினைத்த குறும்பட முயற்சியை தள்ளி வைத்த அனைத்து நண்பர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்கள் சிறப்பாக குறும்படம் எடுக்க இந்த நிகழ்வில் வழிநடத்தப்படும்.

உலகப் படங்கள் பற்றியான ஒரு புரிதலை ஏற்படுத்தவும், அதுபற்றி கலந்துரையாடவும், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு பார்வையாளர் பௌர்ணமி இரவில் நம்முடன் பங்கேற்பார். ஆர்வலர்கள் அந்த மாதம் பௌர்ணமி இரவில் திரையிடப்படும் படங்களை அந்த சிறப்பு பார்வையாளருடன் சேர்ந்து பார்த்துவிட்டு அந்தப் படம் குறித்து அவருடன் கலந்துரையாடலாம்.

 

 

 

 

 

 

 
     
     
     
     
வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS  பௌர்ணமி இரவு பௌர்ணமி இரவு வாயில் 

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 15வது பௌர்ணமி இரவு

(15th Full Moon Day Film Screening)

  17-04-2011

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 16 வது பௌர்ணமி இரவு 17.04.2011 அன்று இனிதே நடந்தேறியது. இந்த பௌர்ணமி இரவின்போது, இதற்கு முந்திய மாதம் குறிப்பிட்டது போல் பௌராமி இரவு நிகழ்ச்சியில் முற்றுமுழுதாக வெறும் வெளிநாட்டுப் படங்கள் மட்டுமே திரையிடப்படும் என்று தமிழ் ஸ்டுடியோவினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் Iam Sam என்ற ஜெஸ்ஸி நெல்சன் இயக்கிய, அமெரிக்க நாட்டுத்திரைப்படம் திரையிடப்பட்டது.

Iam Sam

ஜெஸ்சி நெல்சன் இயக்கிய, அமெரிக்க நாட்டுத்திரைப்படமான Iam Sam.லாஸ் ஏஞ்சல், ஸ்டார் பக்ஸில் பணிபுரியும் மன வளர்ச்சி குன்றியவர் சாம் டாசின் (சியன் பென்). தனது ஆறு வயது மகள் லூசியின்(டேக்கொட்டோ பானின்) ஒரே பாதுகாவலன். சாமின் மனைவி லூசி பிறந்தவுடனேயே விடுத்து சென்றுவிடுகிறாள். இருந்தும் சாம் தனக்கு மனநலக்குறைபாடு இருந்தபோதும் அவன் அவனைப்போலவே மனநலக்குறைபாடுகள் கொண்ட தன் நண்பர்களின் உதவியோடும், தன் அண்டைவீட்டுக்காரியான ஆனியின் (டயான் விஸ்ட்) உதவியோடும் லூசியை ஆறு வயதுவரை வளர்க்கிறான்.சாம் லூசிக்கு அன்பான,அரவணைப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கிறார்.லூசி சாமைப்போல் இல்லாது அவளுடைய வயதுக்கு மீறிய அறிவுடன் வளர்கிறாள்.

தன் தந்தையை மற்ற குழந்தைகள் நையாண்டி பண்ணுவதையோ, கேலியையோ அவளால் தாங்கிக்கொள்ளமுடிவதில்லை. இந்த சூழ்நிலையில் ஒரு பிரச்னையை கையாள்வதற்காக சமூகசேவகி வருகிறாள். அவள் அங்கே சங்கடமன் சூழ்நிலையில் வளர்ந்துகொண்டிருக்கும் லூசியை தன் பாதுகாப்பில் அழைத்துச்சென்றுவிடுகிறாள். மேலும் சாம் தன் குழந்தையை வாரத்திற்கு இரண்டுமுறை பார்ப்பதற்க்கு அனுமதி வழங்குகிறாள். தன் குழந்தையை பறிகொடுத்த வலியை தாங்கிக்கொள்ளமுடியாத சாம்ற்கு நண்பர்களின் அறிவுரையின் படி நீதிமன்றத்தின் மூலம் மீட்டெடுப்பது என முடிவு செய்து வக்கீல் ரீட்டா ஹாரிசனிடம் (மிசேல் ப்டீபர்) வழக்கினை கொண்டு செல்கின்றார். ரீட்டா ஹாரிசன் மிக வேகமான நவீன வாழ்வினில் தன்னை தொலைத்துவிட்டவள், தனிப்பட்ட வாழ்வில் அவளுக்கிருந்த பிரச்சினைகள், அவளின் கடுமையான பேச்சு, நடவடிக்கைகள் இதன் காரணமாக அவளொரு உணர்வுகளற்ற பெண் என முத்திரை குத்தப்படுகிறாள். முதலில் இந்த வழக்கினை எடுத்து வாதாட தயங்கும் அவள், பின் தன் வாழ்வில் தன் மேல் விழுத்தப்பட்ட நிழலினை கிழிப்பதர்க்காய் சாமின் வழக்கினை எடுத்து வாதாட நினைக்கிறாள். சாம் ஒரு சரியான தந்தை, அவரின் லூசி மீதான உரிமையையும்,பாசத்தையும் மீட்டெடுப்பதற்கு இருவரும் சேர்ந்து உழைக்கின்றனர்.சாம் தன்னையும் அறியாமல் ரீட்டாவின் சொந்த வாழ்க்கைக்கும்,தன் மகனுடன் இருந்த முரண்பாடுகளை தீர்த்து வைத்தும், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் கணவரைவிட்டு பிரிவதிலும் உள்ள பிரச்சினையை தீர்த்து வைக்கிறான். இந்த நேரத்தில் லூசியை ராண்டி கார்பென்டர் (லாரா டர்ன்) வளர்க்கிறாள்.அவளின் வீட்டிலிருந்து தப்பிக்கும் லூசி தன் தந்தையிடம் தப்பிப்பது தவறில்லை என்பது போல் கூறுகிறாள்.ஆனால் சட்டத்தை மதிக்கும் சாம் அவளை ராண்டியின் வீட்டில் விட்டுவிடுகிறான். நீதிமன்றத்தில் எதிர்க்கட்சி வக்கீல் சாம் சரியான தந்தைக்குரிய தகுதியே இல்லாதவன் என கூறும்போது சாம் உடைந்து சிறு குழந்தைபோல் அழுகிறான். இப்பொழுது லூசியை ததேடுத்துக்கொண்ட ராண்டி அவளை சாமிடமே ஒப்படைத்துவிடுவதென முடிவு செய்கிறார்கள். லூசியின் வளர்ப்புச்செலவுக்கு நாங்கள் உதவுவோம் என்ற நிபந்தனையுடன்.

இறுதிக்காட்சி அமைப்பு ஓர் பெரிய மைதானத்தில் நடுவராக சாமும். வீராங்கனையாக லூசியும், பார்வையாளர்களாக ராண்டி, ரீட்டா, சாமின் நண்பர்களென படம் நிறைவடைகிறது.

1.Best actor
2.youth in film
3.stanly kramer award
4.Special achievment award for out standing new talent
5.Best family feauture film
6. Young actress age ten or under

இவ்வாறு படம் முடிந்ததும் பௌர்ணமி இரவுகளின் நண்பர்கள் சூழ்ந்து நிலாச்சோறு சாப்பிட்டதன் பின் விவாதம் நடைப்பெற்றது.விவாதம் பகிர்வாய் மாறியது. இதில் பல நண்பர்கள் இந்த படத்தினை சிலாகித்து பேசினர்.

விவாதம்

இப்படம் அன்பினை மட்டுமே போதிப்பதை உள்ளது. அன்பின் மகத்துவம் பற்றி பேசியிருக்கின்றனர் என்று ஒரு நண்பர் பேசினார். மேலை நாடுகளில் நாய் குட்டி ஈன்றவுடன் விட்டிச்செல்லுமா என்று தெரியவில்லை ஆனால் இங்கு அப்படியில்லை. ஒரு தாய், தன் குழந்தை பிறந்தும் தன் குழந்தை முகத்தைகூட பார்க்க விரும்பவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும்,முதிர்வானவர்கலாக நாம் நம்மை அடையாளப்படுத்தி நாம்தான் சரியாய் நடந்துகொள்கிறோம் என முடிவெடுத்துக்கொள்கிறோம். இங்கு சரியாய் இருப்பவர்களே என பறைசாற்றிக்கொள்பவர்களுக்கும், எங்கள் அன்புக்கும் உள்ள இடைவெளிபற்றி அதாவது OCD பற்றி பேசக்கூடிய படம்தான் இது. மற்றுமொரு நண்பர் "இதுவந்து மறுபடியும் நண்பர்களோட சேர்ந்து அசை போடக்கூடிய நிலைதான்.இந்த படத்தில ஆரம்ப shot லேயே கதை சொன்ன விதம் நல்லா இருந்துச்சு". இந்த படத்துக்கு என்ன என்ன அவார்டெல்லாம் கொடுக்கமுடியுமோ அதையெல்லாம் கொடுத்ததுக்கு அப்புறம் அத எப்படி விமர்ச்சிக்கிராதுன்னு தெரியல.கதை சொல்லப்பட்ட விதம் என்றதுள இந்த கதை ஒரு நடு கயிருலருந்துதான் தொடங்குதுன்னு நான் நினைக்கிறன்.எப்பிடினா இந்த சாமோட குழந்தை பிராயமோ, இல்லனா படம் முடிஞ்சதுக்கு பிறகு அவங்க எப்பிடி இருந்தாங்கன்னு சொல்ல இல்லையா? அதனால இது நடுப்பகுதினு சொல்றேன்னு இவ்வாறு விவாதம் இரவு 12 வரைக்கும் நடைபெற்று பின் சிலர் இரவோடு இரவாக வீட்டிற்க்கு சென்றனர். சிலர் அலுவலகத்திலேயே தூங்கினர். பல நண்பர்கள் இரவு முழுவதும் பல்வேறு விவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/105647173808629498658/1502#

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிற்றுக் கிழமை, 17-04-2011

இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)

http://thamizhstudio.com/thodarbukku.php

பௌர்ணமி இரவு நிகழ்ச்சியில் இதுவரை ஒரு தமிழ் குறும்படம், அல்லது ஆவணப்படம் போன்றவை முதலாம் பகுதியிலும், ஒரு உலகத் திரைப்படம் இரண்டாம் பகுதியிலும் திரையிடப்பட்டு வந்தது. இந்த மாதம் முதல் பௌர்ணமி இரவு முழுவதும், ஒரு அயல் நாட்டு குறும்படம், ஒரு அயல்நாட்டு திரைப்படம் (உலகத் திரைப்படம்) மட்டுமே திரையிடப்படும். ஆவணப்படங்கள் திரையிடுவதற்காக அடுத்த மாதம் முதல், ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று தமிழ் ஸ்டுடியோவின் அலுவலக மொட்டை மாடியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

இந்த மாதம் பௌர்ணமி இரவு நிகழ்ச்சியில் திரையிடப்படும் உலகக் குறும்படம்:

இந்த மாதம் பௌர்ணமி இரவு நிகழ்ச்சியில் திரையிடப்படும் உலகத் திரைப்படம்: Jessie Nelson இயக்கிய "I am Sam"

இந்த திரைப்படம் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள: http://www.imdb.com/title/tt0277027/

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268

இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி (Trailor of I am Sam):

Loading...


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</