கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
பௌர்ணமி இரவு பற்றி
1
 

நகரின் சப்தங்கள் அனைத்தும் ஆர்பரித்துப் பின்னர் அடங்கிப் போன பின்பனி இரவு, முழு நிலவு, மனதுக்கு மிக நெருக்கமான அல்லது ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் செடிகளும், பூக்களும் நிறைந்த தோட்ட வெளியில், புல் தரை மீது அமர்ந்து நாம காணக் கிடைக்காத பல அரியத் திரைப்படங்கள், உலக குறும்படங்கள் மற்றும் நம் நண்பர்கள் உருவாக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் குறும்படம் ஆகியவற்றை, நிலா சோறு உண்டுக் கொண்டே பார்க்கும்போது ஏற்படும் பரவச நிலை பல ஆண்டுகள் செய்யும் தவத்திற்கு சமம். அத்தகைய தவ நிலைக்கு, அல்லது பரவச நிலைக்கு உங்களை அழைத்து செல்ல நாங்கள் தயார். வருவதற்கு நீங்கள் தயாரானால்!

தமிழ் ஸ்டுடியோ.காம் இணையதளத்தின் குறும்பட வட்டம் நிகழ்வு கடந்த பதினேழு மாதங்களாக மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஊடகங்களும், ஆர்வலர்களும் கொடுத்த பேராதரவே இதற்கு காரணம். அதே அளவிற்கான ஆதரவை எதிர்பார்த்து மேலும் ஒரு திரையிடல் நிகழ்வை தமிழ் ஸ்டுடியோ.காம் ஏற்பாடு செய்திருக்கிறது. எப்போதும் வெறும் வார்த்தையளவில் நாம் பேசிக்கொண்டிருக்கும் சில திரைபபடங்கள், விமர்சகர்கள் கொண்டாடும் சில இயக்குனர்களின் காணக்கிடைக்காத அரியத் திரைப்படங்கள், உலக அளவில் புகழ் பெற்ற குறும்படங்கள், உலகின் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆவணப்படங்கள், தமிழிலும் முயற்சி செய்கிறோம் என பறைசாற்றும் குறும்படங்கள் போன்றவை இந்த நிகழ்வில் திரையிடப்படும்.

மேலும், தமிழில் குறும்படம் எடுக்க விரும்பும், அல்லது அந்த குறும்படத்தில் பங்கேற்க விரும்பும் அல்லது குறும்பட உதவி வேண்டும் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்களுக்குள் குழுவாக பிரிந்து அது பற்றி விவாதிக்கும் நிகழ்வும் இந்த பெவுர்ணமி இரவில் நடைபெறும். தங்கள் மனதுக்குள் இருக்கும் பல்வேரு பிரச்சனைகளால் தாங்கள் உருவாக்க நினைத்த குறும்பட முயற்சியை தள்ளி வைத்த அனைத்து நண்பர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்கள் சிறப்பாக குறும்படம் எடுக்க இந்த நிகழ்வில் வழிநடத்தப்படும்.

உலகப் படங்கள் பற்றியான ஒரு புரிதலை ஏற்படுத்தவும், அதுபற்றி கலந்துரையாடவும், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு பார்வையாளர் பௌர்ணமி இரவில் நம்முடன் பங்கேற்பார். ஆர்வலர்கள் அந்த மாதம் பௌர்ணமி இரவில் திரையிடப்படும் படங்களை அந்த சிறப்பு பார்வையாளருடன் சேர்ந்து பார்த்துவிட்டு அந்தப் படம் குறித்து அவருடன் கலந்துரையாடலாம்.

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS  பௌர்ணமி இரவு பௌர்ணமி இரவு
வாயில் 
 

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்திய 13வது பௌர்ணமி இரவு

(13th Full Moon Day Film Screening)


  18-02-2011

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 13 வது பௌர்ணமி இரவு முதலாமாண்டு கொண்டாட்டமாக இனிதே நடைபெற்றது. முதலில் அருள் எழிலன் இயக்கிய "ராஜாங்கத்தின் முடிவு" குறும்படம் திரையிடப்பட்டு அதுபற்றிய விவாதம் நடைபெற்றது. கலந்துரையாடலில் அருள் எழிலன் மற்றும் கார்டூனிஸ்ட் பாலா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

பின்னர் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் விதமாக நிலாச் சோறு நிகழ்வில் மூன்று வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

பிறகு அகிரா குரோசோவாவின் "செவென் சாமுராய்" திரையிடப்பட்டு அதுப் பற்றிய விரிவான விவாதம் நடைபெற்றது. நிகழ்வு அதிகாலை நான்கு மணியளவில் நிறைவு பெற்றது.

மேலும் நிகழ்வு சார்ந்த ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/thamizhstudio/13

-------------------------------------------------------------------------------------

வெள்ளி, 18-02-2011

இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)

http://thamizhstudio.com/thodarbukku.php

வணக்கம் நண்பர்களே,

இது பௌர்ணமி இரவின் இரண்டாமாண்டு தொடக்க விழா..

குறும்படங்களுக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை "குறும்பட வட்டம்" நடத்திய போதும், மாற்று திரைப்படம் சார்ந்த ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்த அது போதுமானதாக இல்லை. மேலும், திரைப்படம் என்றாலே இருளின் பிரம்மிப்பில் தனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் ஒருவித இறுக்கமான சூழ்நிலையில்தான் காண நேரிடுகிறது. இதுப் போன்ற நிலைகளை தவிர்த்து அவரவர் தன் விருப்பபடி, படுத்துக் கொண்டும், சாய்ந்துக் கொண்டும், எவ்வித இறுக்கமும் இல்லாமல் இரைச்சல்கள் அடங்கிய ஒரு இரவு நேரத்தில் உலக அளவிலும், இந்திய அளவிலும் எடுக்கப்பட்ட மிக சிறந்த திரைப்படங்களை கண்டு நல்ல திரைப்படத்திற்கான புரிதலை உருவாக்கி கொள்ளும் எண்ணத்துடன் பௌர்ணமி இரவு தொடங்கப்பட்டது.

இதில் ஒவ்வொரு மாதமும், தமிழில் எடுக்கப்பட்ட ஒரு சிறந்த குறும்படமும், உலக அளவில் எடுக்கப்பட்ட சிறந்த உலகப் படமும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. சில மாதங்கள் சிறப்பு விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். ஆனால் இரவு நேரம் என்பதால் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களை அழைப்பதில் இருந்த சிக்கல்களால் பௌர்ணமி இரவு வாசகர்களே திரைப்படங்களை பார்த்து அதுபற்றி மிக பெரிய அளவில் கலந்துரையாடும் நிகழ்வாக மாறியது.

இதில் உச்சக்கட்டமாக ஒவ்வொரு மாதமும் "நிலாச்சோறு" என்கிற உணவு உபசரிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டது. மொட்டை மாடியில், இதமான தென்றலின் இம்சையில், முழு நிலவை ரசித்தவாறே நமக்கு பிடித்த திரைப்படங்களை பார்த்துக் கொண்டே, மூலிகை செடிகளின் வாசத்தில் உணவருந்தும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது. தொடங்கி ஒரு வருடத்திற்குள் பத்திரிகை நண்பர்களும், தொலைக்காட்சி நண்பர்களும், ஆர்வலர்களும் கொடுத்த வரவேற்பு மிக பெரியது.

கத்திரி வெயில், அடைமழை, பேய்க்காத்து, கடுங்குளிர் என எந்த ஒரு சீதோசன நிலையிலும் திறந்த வெளியில் நடத்தப்படும் இந்த பௌர்ணமி இரவு ஒரு மாதம் கூட நிறுத்தப்படாமல் 12 மாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. உங்களின் அதே ஆதரவை எதிர்வரும் மாதங்களிலும் கொடுத்து இந்த பௌர்ணமி இரவு நிகழ்ச்சியை வெற்றியடைய செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

சென்னையின் மையபகுதியில், மரங்கள் அடர்ந்த ஒரு மொட்டைமாடியில், சுற்றிலும் மூலிகை செடிகளின் வாசத்தில், புல்வெளியில் அமர்ந்துக் கொண்டு, ஒத்த உணர்வுள்ள நண்பர்களுடன் நமக்குப் பிடித்த திரைப்படங்களை பார்த்து, அது பற்றி விவாதத்தில் கலந்துக் கொண்டு, இந்த நிலாச்சோற்றை ருசிக்க வாருங்கள். நீங்களில்லாமல் எந்த ஒரு நிகழ்வும் வெற்றி பெற சாத்தியமில்லை. உங்களை இனிதே எதிர் நோக்குகிறோம்.

இந்த மாதம் திரையிடப்படவிருக்கும் படங்கள்:

இந்த மாதம் தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: ராஜாங்கத்தின் முடிவு, அருள் எழிலன் இயக்கிய இந்தக் குறும்படம் சதத் ஹசன் மாண்டோவின் சிறுகதையை அப்படியே பிரதிபலித்து எடுக்கப்பட்டது.

இந்தப் படத்தை பார்த்துவிட்டு, நம்முடன் உரையாட தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வரவிருக்கிறார்.

இரண்டாவதாக உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படங்கள் வரிசையில்: செவன் சாமுராய் (அகிரா குரோசோவா)

இத்திரைப்படம் மேலும் தெரிந்துக் கொள்ள: http://www.imdb.com/title/tt0047478/

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முதலாமாண்டு நிறைவு விழா, இரண்டாமாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இந்த மாதம் ஒரு குட்டி உணவுத் திருவிழாவே நடக்கவிருக்கிறது. வகை வகையான உணவினை ருசிக்க, சிறந்த திரைப்படங்களைக் கண்டு ரசிக்க வாருங்கள் நண்பர்களே...

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268


வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.