கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  மறக்கப்பட்ட ஆளுமைகள் TS தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கங்கள் TS திரைப்பட இதழ்கள் TS திரையிடல் திரைப்படச் சங்கங்கள்
 
 
 

 

 

 

 
     
     
     
   
 
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில்   

சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் - முதல் திரையிடல்

- ரியாஸ்  

தமிழ் ஸ்டுடியோவின் சாமிக்கண்ணு திரைப்பட சங்கம், இந்தியாவின் மிக பெரிய திரைப்பட அமைப்பான Inididoc (இன்டிடாக்) உடன் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் சென்னையில் மிக முக்கியமான திரைப்படங்களை, அந்த திரைப்பட இயக்குனர்களின் முன்னுரையோடு திரையிடவிருக்கிறது. இந்த மாதம், முதல் திரையிடலாக கமர் அஹ்மத் சைமன் (Kamar Ahmad Simon) மற்றும் சாரா அப்ரீன் (Sara Afreen) னின் Shunte Ki Pao! ( Are You Listening ) (2012) எனும் வங்க நாட்டைச் சேர்ந்த வங்க மொழிப் படத்தை 02-10-2014 அன்று திரையிட்டது.

Are you listening ! (ஆர் யு லிசனிங்) - கதைச்சுருக்கம்.

ராக்ஹி (27) தன் கணவன் சௌமென் (32) மற்றும் தன் மகன் ரஹுள் (6) உடன் வங்க நாட்டின் கடற்கரையைச் சார்ந்த சதுப்பு நிலக் காடான சுந்தரவனத்தின் அருகில் அமைதிருக்கும் சுடர்க்ஹலி என்னும் சிறு கிராமத்தில், பல தலைமுறைகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் கிட்டத்தட்ட நூறு குடும்பங்களுடன் வாழ்ந்து வருகிறாள்.

25 மே 2009, ரஹுளுக்கு 4 வயதே ஆகியிருந்த போது, பெரும் கடல் அலைகள் அவர்கள் வாழ்ந்து வந்த மொத்த கிராமத்தையும், அவர்கள் விவசாயம் செய்து வந்த மொத்த நிலங்களையும் வெள்ளத்தால் மூழ்கடிகின்றது. இதனால் மொத்த கிராமமும் நீரை நெறிபடுத்த அமைக்கப்பட்ட ஒரு பழமையான மதிலின் மீது அகதிகளாக குடி அமர்ந்து, விருப்பமில்லாமல் அங்கு உயிரோடு இருந்து கொண்டிருக்கிறார்கள். ராக்ஹி, சௌமென் மற்றும் ரஹுளுக்கும் வாழ்க்கை சூழல் மாறுகிறது.

Are you listening ! (ஆர் யு லிசனிங்) தன் மகனுக்கு ஒரு கண்ணியமான எதிர்காலத்தை உறுதிபடுத்த வேண்டும் என்னும் ஒரு தாயின் நம்பிக்கையை பற்றியது. தன் குடும்பத்திற்கு எதையும் தர முடியாத ஒரு கணவனின் ஏமாற்றத்தையும், இழந்த நிலத்தை மீட்க போராடும் ஒரு சமூகத்தையும் பற்றியது.

Are you listening ! (ஆர் யு லிசனிங்) பற்றி....

இந்த படம் சாரா அப்ரீன் (Sara Afreen) தயாரித்து, கமர் அஹ்மத் சைமன் (Kamar Ahmad Simon) எழுதி, இயக்கிய Shunte Ki Pao! ( Are You Listening ) (2012) எனும் வங்க நாட்டைச் சேர்ந்த வங்க மொழிப் படமாகும். இந்த படத்தை பார்க்கும் போது, உண்மையான வாழ்க்கை மற்றும் சம்பவங்கள் காட்டப்படுவதால் (கவனிக்க - காட்டப்படுவதால்), அதில் சமந்தப்பட்ட உண்மையான மனிதர்கள் காட்டப்படுவதால், அவர்கள் வாழும் உண்மையான நிலப்பரப்பு காட்டப்படுவதால் மற்றும் அதை சார்ந்த உண்மையான பிரச்சனைகள் காட்டப்படுவதால், இது ஒரு ஆவணப்படம் என்றே நமக்கு தோன்றும். இந்த படத்தை சரியாக உள்வாங்கினால் மேலே குறிப்பிட்ட உண்மையான விஷயங்களின் ஊடே ஒரு கதை இடம்பெற்றிருப்பதையும் கவனிக்கமுடியும், கவனித்தால் இது கதைப் படமா? இல்லை ஆவணப்படமா ? என்று சிறு சந்தேகம் எழலாம். இந்தப்படம் ஆவணப்படத்தின் கீழ் வரும் டைரக்ட் சினிமா (direct cinema) என்னும் ஓர் வகையின் பாதிப்பில் உருவான அப்செர்வ்வேஷன்னல் சினிமா (observational cinema).

டைரக்ட் சினிமா (direct cinema) என்றால் சினிமாவில் கதைச் சொல்ல பயன்படுத்தப்படும் படத்தின் அமைப்பு, கதைக்களன் அமைப்பு, கதைக்களத்தில் பயன்படுத்தும் பொருட்கள், நடிப்பவர்கள், ஆடை அகலங்கரம், ஒளி அமைப்பு, கேமரா நகர்வுகள், படத்தொகுப்பு போன்ற உருவாக்கப்பட்ட கூறுகளின் மூலமாக உண்மைக்கு பக்கத்தில் சென்று அதை பிரதிபலிப்பது அல்லது உண்மைக்கு இட்டுச்செல்வது. இது யதார்த்தத்திற்கும், கோட்பாடுக்கும் உள்ள தத்துவார்த்த வேறுபாட்டை போன்றது. அப்செர்வ்வேஷன்னல் சினிமா (observational cinema) என்பது காட்சியமைப்பு மற்றும் ஒலியமைப்பு மூலமாக பார்வையாளர்களை நேரடியாக படத்தோடு பங்குபெறசெய்வது.

இந்தப்படம், நாம் படம் பார்க்கிறோம் என்னும் உணர்வை மறக்கச்செய்து நேராக நம்மை கதைக்களத்தில், கதை மாந்தர்களோடு பயணிக்க செய்யும், அவர்கள் உரையாடுவதை அவர்களோடு அமர்ந்து கேட்கச்செய்யும், அவர்கள் வெள்ள நீரை தடுக்க கூடயுழைக்கும் போது நம்மையும் அந்த சேற்றில் பார்வையாளர்களாக நிறுத்தும், ராக்ஹி மற்றும் சௌமெனின் விவாதமும் அவர்களின் குடும்ப சூழலும், பெண்களுக்குள் நடக்கும் யதார்த்தமான பேச்சும், அங்கே இருக்கும் மக்கள் தங்களின் பிரச்சனைகள் பற்றி கூடி விவாதிப்பதும், அரசை விமர்சிப்பதுன், அவர்களின் அசௌகரியங்களும், ஆசைகளும், முயற்சிகளும் படம் பார்த்து முடித்த பிறகு சிறிது நேரத்திற்கு நாம் வேறு ஒரு சின்ன வாழ்கையை வாழ்ந்து விட்டு வந்திருக்கிறோம் என தோன்ற வைக்கும். படம் தொடங்கும் போது அதனோடு ஈடுபட கொஞ்சம் சிரமமாய் இருக்கலாம், ஆனால் சிறிது நேரத்தில் நாம் இந்த படத்தோடு ஒன்றிவிடுவோம்.

இந்த ஆவணப்படம்2012 ஆண்டு உலகின் புராதனமான ஜெர்மனியின் Dok-Leipzig என்னும் ஆவணப்படவிழாவின் 55வது ஆண்டில் தொடக்க படமாக திரையிடப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டது மற்றும் பல ஆவணப்படவிழாக்களிலும், திரைபடவிழக்களிலும் திரையிடப்பட்டு உயரிய விருதுகளை பெற்றிருக்கிறது.

--------------------------------------------------------------------------------------------------
நண்பர்களே, நாளை தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் திரையிடப்படும் "Are you Listening?", திரைப்படத்தை நீங்கள் திரைப்பட விழாக்களில் மட்டுமே பார்க்க முடியும். இணையத்தில் பார்க்க முடியாது. அதற்கான டி.வி.டி. கிடையாது. திரையரங்கில் வெளிவராது. எனவே நண்பர்கள் சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் சார்பில் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் திரையிடப்படும் படங்களை தவறாமல் பார்த்துவிடுங்கள். காரணம், அந்த படங்களை வேறெங்கும் பார்க்க முடியாது. இந்த திரையிடல் அனைத்தும், தொடர்புடைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் அனுமதியோடு தொடர்ந்து நடக்கும். நாளை நடக்கும் திரையிடலை நண்பர்கள் தவறவிடாமல் கலந்துக்கொள்ளுங்கள்.

சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் - முதல் திரையிடல்...

நாள்: 02-10-2014, வியாழன், மாலை 5.30 மணிக்கு.

இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம், 30-A, கல்கி நகர், கொட்டிவாக்கம், KFC உணவகம் அருகில். தொடர்புக்கு: 9840698236

திரையிடப்படும் படம்: Are you listening? (Bangladesh Film)

ARE YOU LISTENING?

Bangladesh, 2012, 90 Minutes

Directed by Kamar Simond Ahmed and Sara Afreen

Synopsis:

Rakhi (27) lives with her man Soumen (32) and son Rahul (6) in a small village named Sutarkhali next to the mangrove forests of Sundarbans in the coastal belt of Bangladesh. Along with around hundred other families, they live on the land for generations. On 25 May 2009, when Rahul is only four years old, a tidal surge sweeps over the coasts of Bangladesh, flooding the entire villge and the lands they cultivate. Life changes for Rakhi, Soumen and Rahul as the entire village takes refuge on an age-old dyke, surviving on relief from outside. Are You Listening! is about a mother’s hope to ensure a dignified future for her son. It's about a jobless husband’s frustration for failing to provide for his family, and a community’s struggle to get back the land they have lost.

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio