சினிமா கலை இரசனை இயக்கம் மற்றும் நிழல் இணைந்து நடத்தும் குறும்பட ஆவணப்பட போட்டி. (இறுதித் தேதி: 30.11.2009)
தமிழ் மக்கள் கலை விருது ருபாய் 50,000 பரிசுத்தொகை.
நிழல் இதழ் ஒன்பதாம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டியும், சிதம்பரம் சினிமா கலை இரசனை இயக்க ஆரம்பத்தை முன்னிட்டும் நடத்தப்படும் குறும்பட / ஆவணப்பட போட்டிகளுக்கான படங்கள் கீழ்காணும் விதிகளுக்குட்பட்டு வரவேற்கப்படுகின்றன.
*
குறும்படங்கள் / ஆவணப்படங்கள் எந்த உள்ளடக்கத்திலும் இருக்கலாம்.
*
குறும்படங்கள் 30 நிமிடத்திற்குள்ளும் ஆவணப்படம் கால வரையின்றியும் இருக்கலாம். குறும்படத்திற்கு 25 ஆயிரமும், ஆவணப்படத்திற்கு 25 ஆயிரமும் பரிசுத்தொகை பிரித்து வழங்கப்படும்.
*
படங்கள் 1.1.2008 க்குப் பிறகு எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும்.
*
தேர்வு செய்யப்படாத படங்கள் திருப்பி அனுப்ப இயலாது.
*
போட்டி முடிவு தொடர்பாக நடுவர் குழு தீர்ப்பே இறுதியானது. போட்டி தொடர்பாக கடிதத்தொடர்பு அனுமதிக்கப்பட மாட்டாது.
*
போட்டி முடிவுகள் ஜனவரி மாத நிழல் இதழில் வெளியிடப்படும். பிப்ரவரி முதல் வாரம் சிதம்பரத்தில் நடக்கும் விழாவில் பரிசுகள் தரப்படும். தேர்வு பெற்ற படங்கள் திரையிடப்படும்.
*
படங்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: 30.11.2009
*
நுழைவுக் கட்டணம் ரூபாய் 150/- பணவிடையாகவோ, அல்லது வங்கி வரைவோலையாகவோ, Film art appreciation movement trust, payable at chidambaram என்ற பெயருக்கு அனுப்ப வேண்டும்.
*
மேலே கண்ட விதிகளை ஏற்றுக் கொண்டு படத்தின் உரிமையாளர், படம் குறித்த விபரங்களும், ஏற்கனவே பரிசுப் பெற்றிருந்தால் அது பற்றிய விபரமும் கொண்ட கடிதமும், இயக்குனர் புகைப்படமும் இணைக்கப்பட வேண்டும்.
* படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர், சினிமா கலை இரசனை இயக்கம்,
க்ரீட் வளாகம், 23 அரங்கநாத நகர்,
சிதம்பரம், கடலூர் மாவட்டம். - 608001
அலைப்பேசி: 9150079632, 9789692295
|