வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
பட்டறைகள்
1
 
1
1
1 பயிற்சிப் பட்டறை - 2
1
1 பயிற்சிப் பட்டறை - 3
1
1 பயிற்சிப் பட்டறை - 4
1
1 பயிற்சிப் பட்டறை - 5
1
1 பயிற்சிப் பட்டறை - 6
1
1 பயிற்சிப் பட்டறை - 7
1
1 பயிற்சிப் பட்டறை - 8
1
1 பயிற்சிப் பட்டறை - 9
1
1  
1
1  
1
1  
1
1  
 
  பட்டறைகள்
   
 

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய முதல் ஒளிப்பதிவு பயிற்சி வகுப்பு

கடந்த திங்கட்கிழமை (18-05-09) அன்று சென்னை பாலவாக்கத்தில் உள்ள A.S.K ஸ்டுடியோவில் தமிழ் ஸ்டுடியோ.காம் மற்றும் A.S.K. ஸ்டுடியோ இணைந்து நடத்திய முதல் ஒளிப்பதிவு பயிற்சி வகுப்பு புதன் கிழமையன்று (20-05-09) இனிதே முடிந்தது.

பயிற்சி நாளின் முதல் நாளன்று ஒளிப்பதிவின் அடிப்படைகள் குறித்தும், ஒளிப்பதிவு கருவிகள் குறித்தும் ஒளிப்பதிவாளர் திரு. C.J. ராஜ்குமார் விளக்கினார். தொடர்ந்து ஒளிப்பதிவில் சிறந்து விளங்கும் திரைப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டது. இரண்டாவது நாளன்று ஒளிப்பதிவுக் கருவியின் பயிற்சியுடன் லைட்டிங் மற்றும் லென்சுகள் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டது.

பயிற்சியின் மற்றொரு சிறப்பாக கோடக் நிறுவனத்தின் திரு. அமுதவாணன் அவர்களின் பயிற்சியும் நடைபெற்றது. சென்னை வடபழனியில் உள்ள கோடக் நிறுவனத்தின் அரங்கில் நடைபெற்ற வகுப்பில் ஒளிப்பதிவு குறித்தும், லைட்டிங் குறித்தும் மிக விரிவாக திரு. அமுதவாணன் அவர்கள் வகுப்பெடுத்தார். இடையில் மாணவர்கள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும்

மிக பொறுமையாகவும், மிகச் சரியாகவும் பதிலளித்தார்.

ஒளிப்பதிவின் முன்னேற்பாடுகள் (Pre-Production), படப்பிடிப்பு (Shooting), இறுதிக் கட்டப் படப்பிடிப்பு (Post Production) போன்றவற்றை பெரிய திரையில் கணினி உதவியுடன் அவர் மாணவர்களுக்கு எடுத்துக்கூறிய விதம் மிகச் சிறப்பாக அமைந்தது. பிலிம் மற்றும் அதன் வகைகள், பில்டர்கள், லென்சுகள், என ஒவ்வொன்று பற்றியும் தனித்தனியாக விளக்கிய விதம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. எவ்வித எதிபார்ப்பும் இன்றி மிக சிறப்பாக இந்நிகழ்ச்சி சிறப்புற பங்காற்றிய அமுதவாணன் அவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் மற்றும் அதன் மாணவர்கள் எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் விடைபெற்றோம். மிகச் சிறப்பாக வழிகாட்டியமைக்கு திரு. அமுதவாணன் அவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.  மேலும், நிகழ்ச்சியின் இறுதி வரை எங்களுக்கு உறுதுணையாக இருந்த திரு. செந்தில் அவர்களுக்கும் தமிழ் ஸ்டுடியோ.காம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

மூன்றாம் நாளின் பிற்பகுதியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பேராண்மை திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. சதீஷ் அவர்கள் பங்குபெற்றார். தனது ஒளிப்பதிவு அனுபவத்தை மாணவர்களுடன் பகிர்ந்துக் கொண்ட சதீஷ் அவர்கள், பின்னர் மாணவர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடையளித்தார்.

பலூன் லைட் பற்றி மாணவர்கள் கேட்ட கேள்விக்கு படம் வரைந்து அவர் விளக்கிய விதம், அவரின் நேர்மையை பறைசாற்றும் விதமாக அமைந்தது. பின்னர் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதலும், பாடப்புத்தகமும் வழங்கப் பட்டது. சான்றிதலை வழங்கி மாணவர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டு விடைபெற்றார் திரு. சதீஷ் அவர்கள்.

நிகழ்ச்சியில் மூன்று நாளும் மாணவர்களுக்கு மிகச் சிறப்பாக வழிகாட்டிய திரு. ராஜ்குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு ஒளிப்பதிவாளர் மூன்று நாட்கள் தொடர்ந்து வேறு எந்தப் பணியையும் பாராமல் மாணவர்களுக்கு நல்ல முறையில் வகுப்பெடுத்து அவர்களுக்கு ஒளிப்பதிவின் தன்மையை விளக்க வேண்டும் என்று அவர் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டிற்குரியது.

இறுதி நாளன்று மாணவர்கள் முகத்தில் இருந்த பொன்சிரிப்பே ராஜ்குமாரின் மூன்று நாள் வகுப்பு எந்த அளவுக்கு அவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்பதற்கு சான்றாக அமைந்தது. ஒரு நல்லாப் பணியை மிகச் சிறப்பாக சீரிய முறையில் நடத்திக் கொடுத்தமைக்காக திரு. ராஜ்குமார் அவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. நிகழ்ச்சியின் இறுதி வரை தமிழ் ஸ்டுடியோவின் இணைந்து நல்லதொருப் பணியை செய்து முடித்த A.S.K. ஸ்டுடியோ நிர்வாகிகளுக்கும் தமிழ் ஸ்டுடியோ.காம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


பங்கேற்றோரின் கருத்துகள்

"தன்னைபோல் எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் வளர வேண்டும் என்று நினைத்து மூன்று நாட்களும் காலை ஒன்பது மணி முதல் இரவு ஏழு மணி வரை எங்களுக்காக பாடுபட்ட திரு. ராஜ்குமார் அவர்களுக்கும், தமிழ் ஸ்டுடியோ.காமிற்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்"

மணிகண்டன், சென்னை

"இது என் போன்றோர்க்கு மிக சிறந்த அனுபவமாக அமைந்தது. இந்தப் பயிற்சியில் பங்கேற்றமைக்காக நான் பெரிதும் பெருமைப்படுகிறேன். ராஜ்குமாருக்கும், தமிழ் ஸ்டுடியோ.காமிற்கும் எங்கள் நன்றிகள் பல".

தண்டாயுதபாணி, சென்னை

"பல ஆண்டுகள் முயன்று தெரிந்துக் கொள்ள வேண்டிய கலையை திரு. ராஜ்குமார் அவர்கள் மூன்று நாட்களில் திருக்குறள் போல தெரிவித்தார். தமிழ் ஸ்டுடியோ.காம் பரவலாக பல வல்லுனர்களை உருவாக்க வாழ்த்துகிறேன்.".

தணிகை முருகன், சேலம்

"இந்தப் பயிற்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதேப் போன்று பயிற்சியை தொடர்ந்து நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்".

லக்ஷ்மணன், விழுப்புரம்

----------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் ஸ்டுடியோவின் ஒளிப்பதிவு பயிற்சி வகுப்பு

தமிழ் ஸ்டுடியோ.காம் இல் வெளிவரும் கேமரா தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள், நேரடி வகுப்புகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான உரிமம் இந்த முறை சென்னையை சேர்ந்த A.S.K. ஸ்டுடியோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

நாள்: மே 18- 20, 2009 (மூன்று நாட்கள்)
இடம்: A.S.K. ஸ்டுடியோ, சென்னை. (இந்த ஸ்டுடியோ சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கத்தில் அமைந்துள்ளது.)


கட்டணம்: ரூபாய் 1750 மட்டும் (மதிய உணவு, திரைப்பட கேமரா பயிற்சி உள்ளிட்டவைகளுக்கும் சேர்த்து) தங்குமிடம் தேவை இருப்பவர்களுக்கு குறைந்த செலவில் ஏற்பாடு செய்து தரப்படும்.

நேரடி வகுப்பின் பாடத்திட்டங்கள்.

1. ஒளிப்படம் மற்றும் திரைப்படக் கலை வரலாறு.
2. கேமரா வகைகள்
3. பிலிம் தோற்றமும் வளர்ச்சியும்
4. பிலிம் வகைகள்
5. கேமராக் கோணங்களும், அதனை இயக்குதலும்
6. லென்ஸ் வகைகளும், அதன் செயல்பாடுகளும்

மேலும், திரைப்படத் தயாரிப்பின்

முன்னேற்பாடுகள் (Pre-Production)
படப்பிடிப்பு (Shooting)
இறுதிக் கட்டப் படப்பிடிப்பு (Post Production)

ஆகியவையும் இதில் அடங்கும். இது மட்டுமின்றி மூன்று நாட்களும் திரைப்படங்களில் பணிபுரியும் ஒளிப்பதிவாளர்கள், இயக்குனர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் நடைபெறும்.

மூன்றாம் நாள் குழுவாக பிரித்து கேமாராக்கள் கொடுக்கப்பட்டு மாதிரி குறும்படங்கள் எடுக்க பணிக்கப்படும். இதன் அடிப்படையில் சிறந்த ஒளிப்பதிவில் தேறும் ஒருவருக்கு உதவி கேமராமேன் வாய்ப்பு பெற்றுத் தர முயற்சிக்கப்படும்.

இது மட்டுமின்றி, திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் கேமராவைக் கொண்டு பயிற்சி கொடுக்கப்படும்.

தொடர்புக்கு: 9840698236, 9894422268, 9884135344

கருத்து பதிவு

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.