வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
பதிவுகள்  
1
 
1 ஓர் பார்வை
1
1 ஆவணப்படங்கள்
1
1 குறும்படங்கள்
1
1 பட்டியல் - 1
1
1 பட்டியல் - 2
1
1 பட்டியல் - 3
1
1 பட்டியல் - 4
1
1 நெய்வேலி போட்டி - 1
1
1 நெய்வேலி போட்டி - 2
1
1 சேலம் பட்டறை
1
1 பட்டியல்
1
1  
1
1  
 
  நெய்வேலி போட்டி - 1
   
 

நெய்வேலி புத்தக கண்காட்சி 2008 குறும்படப் போட்டி

சென்னையை அடுத்து புத்தக கண்காட்சி பெரிய அளவில் நடைபெறும் இடங்களில் நெய்வேலியும் ஒன்று. இங்கு புத்தக கண்காட்சியை ஒட்டி ஆண்டுதோறும் குறும்படப் போட்டியினையும் நடத்துகின்றனர். குறும்படங்களுக்காக ரூபாய் 35,000 பரிசாகத் தருகின்றனர்.

இந்த ஆண்டு போட்டி அறிவித்த நாளில் இருந்து முடிவு தேதிவரை என்பது படங்கள் போட்டித் தேர்வுக்கு வந்தன. பல ஊர்களில் இருந்தும் பலதரப்பட்டவர்களும் தங்கள் படைப்புகளை அனுப்பி இருந்தனர். சிறந்த தேர்வாளர்களை வைத்து சலித்து எடுத்து எட்டு படங்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசினை முரளி மனோகர் இயக்கிய 'கர்ண மோட்சம்' என்ற குறும்படம் தட்டிச் சென்றது. இதன் பரிசுத் தொகை ரூபாய் 15,000. இரண்டாம் பரிசான ரூபாய் 10,000 அபிலாஷா இயக்கிய 'ஒரே ஒரு நாள்' என்கிற படத்துக்கு வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசை அமுதா இயக்கிய 'திருகாணி' பெற்றது.

பரிசு பெற்ற மூன்று படங்களுக்கு அடுத்தபடியாக தொழில் நுட்பத்திலும் தரத்திலும் சிறந்து விளங்கிய கீழ் கண்ட படங்களுக்கு ரூபாய் 1000 பரிசு தொகை வழங்கப்பட்டது.

செடி (எ. ஆர். சுப்புராஜ் - நடிப்பு)
கண்மணி (ஷர்மிலா - நடிப்பு)
என்று மடியும் (சி. ஜே. முத்துக்குமார் சிறந்த கதை கரு)
புதிய தடம் (விஜயன் - சிறந்த கதை கரு)
விடியலுக்காக ( ஆதித்யா - சிறந்த ஒளிப்பதிவு)
இது தவிர கலந்துக் கொண்ட அனைத்துப் படங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இனி ஒவ்வொரு படமாக பார்ப்போம்:

கர்ண மோட்சம் (முதல் பரிசு)

தமிழக அரசு திரைப்படக் கல்லூரி மாணவரான முரளி மனோகர் இயக்கத்தில் வெளிவந்தது தமிழக அரசின் தங்கப் பதக்கத்தினை பெற்ற படம். இப்படம் அடுத்ததாக தமிழ்நாடு, ஆவணப்பட / குறும்பட படைப்பாளிகள் சங்கத்தின் முதல் பரிசினையும் முன்பே பெற்றது. எங்கு போட்டிக்கு சென்றாலும் முதல் பரிசை பெரும் அளவிற்கு காட்சி ரீதியாகவும், தொழில் நுட்பத்திலும் மிகுந்த தேர்ச்சி பெற்று உள்ள படம்.

பள்ளி ஒன்றில் கூத்து பற்றிய நிகழ்வுக்காக கூத்துகலைஞர் வருகிறார். அன்றைய தினம் பள்ளியின் தாளாளர் இறந்ததால் பள்ளி மூடப்பட்டிருக்கிறது. கூத்துக் கலைஞர் தனது மகனின் சென்னையை சுற்றி பார்க்கும் ஆர்வத்திற்காக அவனையும் உடன் வந்துள்ளார். அவன் அமைதியாக இல்லாமல் அது வேண்டும், இது வேண்டும், என நச்சரிக்கின்றான். பள்ளி தலைமையாசிரியருக்கு தொலைபேசி மூலம் தன்னிடம் பணம் இல்லை என்கிற தகவலை தெரிவிக்கிறார்.

தலைமையாசிரியர் தாளாளர் வீட்டுக்கு வருமாறு பணிக்கிறார். பசியில் துடிக்கும் மகனுக்கு சென்னையின் சாலயோர கடையில் இட்லி வாங்கித்தந்துவிட்டு, அவர் ஒரு வடை மட்டும் சாப்பிடுகிறார். கடையில் வேலை பார்க்கும் பேசமுடியாத சிறுமிக்கு கூத்து அடவுகளை ஆடிக்காட்டுகிறார். கடைக்காரனால் அவமானபடுத்தப் படுகிறார். ஆசிரியராக பாவித்த சிறுமியோ கூத்துக் கலைஞருக்கு ஒரு ரூபாய் தருகிறாள். கூத்தில் கர்ண வேடத்தில் வந்துள்ள கலைஞரின் கை தாழ்ந்து போகிறது.

சாலைகளில் வரும் சிறுவர்களிடம் தனது கிரீடம் முதலியவற்றைத் தந்துவிட்டு சோகத்துடன் செல்வதுடன் படம் முடிகிறது. கலைஞனின் கலை, அவனது வாழ்நிலை, இன்றைய உலகம் அதனை எவ்வாறு எதிர் கொள்கிறது. யதார்த்த வாழ்கைக்கும், கலை வாழ்கைக்கும் உள்ள குழப்பமான கலைஞனின் மனநிலை போன்றவற்றை மிகச்சரியாக இப்படம் சித்தரித்துள்ளது.

குழந்தையின் மன நிலையை படம் பிடித்து இரண்டாம் பரிசை வென்ற படத்தை பற்றியும், மாற்ற படங்கள் பற்றியும், அடுத்த வாரம் பார்ப்போம்.

                                                                                                                                                                 பதிவுகள் படரும்...

                                                                                                                                             அடுத்து


கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.