வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
பதிவுகள்  
1
 
1 ஓர் பார்வை
1
1 ஆவணப்படங்கள்
1
1 குறும்படங்கள்
1
1 பட்டியல் - 1
1
1 பட்டியல் - 2
1
1 பட்டியல் - 3
1
1 பட்டியல் - 4
1
1 நெய்வேலி போட்டி - 1
1
1 நெய்வேலி போட்டி - 2
1
1 சேலம் பட்டறை
1
1 பட்டியல்
1
1  
1
1  
 
  பயிற்சிப் பட்டறை
   
 

சேலம் குறும்பட பட்டறை

தமிழகம் தழுவிய அளவில் சேலத்தில் நடத்தப்பட்டது என்றாலும் சேலம் பகுதியில் இருந்து நிறைய பயிற்சியாளர்கள் வந்து கலந்து கொண்டனர். இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காடு மலையடிவார கிராமமான விளசையூரில் ஆறு நாட்கள் நடந்தது. திரைப்படம் பயிலுவதற்கான கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியாத கிராமப்புற இளைஞர்கள் பயன்பெற வேண்டும் என்கிற குறிக்கோளில்தான் எமது பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது என்றாலும் மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர் போன்ற பல துறையிலும் பணியாற்றும் நண்பர்கள் திரைப்பட தொழில் நுணுக்கத்தை பயில வேண்டும் என்கிற ஆசையை மனதில் எங்கோ ஒரு மூலையில் வைத்திருக்கக் கூடியவர்களும் இந்த குறுகிய கால பயிற்சி பட்டறையினை பயன்படுத்திக் கொண்டனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை 12 பயிற்சி பட்டறையினை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி குக்கிராமத்தினரும் திரைப்பட நுணுக்கங்களை அறிய எமது பயிற்சி பட்றை உதவி உள்ளது. திரை உலகில் உள்ள சனாதனிகள் இப்போது கூப்பாடு போடுகின்றனர். எல்லோரும் திரைப்படம் எடுத்தால் யார் பார்ப்பது? `கருவிலே திரு உடையவர்கள்’ மட்டுமே படைப்பாளுமை பெற்றவர்கள் என்று மறைமுகமாக மனுநீதியை தூக்கிப்பிடிக்கும் ஆசாமிகளின் அமுக்கமான மனநிலையை மெல்ல, மெல்ல காட்டிவருகின்றனர். `எல்லாரும் படிக்க வந்துட்டா மத்தவேலையெல்லாம் யார் செய்யறது? என்ற மூப்பதுகளில் bச்hன்ன அதே வாய்களின் பேரப்பிள்ளைகள்தான் இவர்கள் என்பது நமக்கு தெரியாமலில்லை.

திரைப்படத்தில் `ஜனநாயகம்’ எப்போது தோன்றும் என்ற கேள்விக்கு பிரஞ்சு புதிய அலை’ இயக்குநர் கோடார்ட் சொன்னார், “ஒவ்வொருவரும் பேனா வைத்துக் கொள்வது போல, கேமரா வைத்துக் கொள்ளும்போது தான்” என்றார். அன்று அவர் சொன்னதை இன்றைய அறிவியல் எல்லோர் கைகளிலும் தவழும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது. இனிமேல்தான் உண்மையான சினிமா வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.

பயிற்சிப் பட்டறையின் அடிப்படை நோக்கமோ திரைப்பட கருவிகள் மீது இருக்கும் அச்சத்தை போக்குவதுதான். யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். நடிக்கலாம் என்பதை நிறுவ விரும்புகிறோம். அப்போதுதான் ரசிகர் மன்ற கலாச்சாரமும் ஹீரோயிஸமும் ஒழியும். தமிழக இயக்குநர்களும், நடிகர்களும் ஊடகங்களும் போலியாக இவர்களை உயரே தூக்கி வைக்கும் மனப்பாங்கை ஒழிக்க மக்கள் மனத்தில் இருந்து நீங்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை. அப்போதுதான் உண்மையான சினிமா வளரும்.

இறுதியாக செனகல் நாட்டு இயக்குநர் ஏழை நாட்டு திரைப்பட ஆர்வலர்களுக்கு சொன்னதுடன் முடிக்கலாம் என நினைக்கிறேன் : சினிமா, நீங்கள் சினிமாப் பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று கற்கத் தேவையில்லை. ஒரு நல்ல கலைஞன் சினிமா கல்லூரிகளில் கற்றுக்கொள்ளவும் முடியாது. இன்றும் பொருளாதார ரீதியில் பிற்பட்ட நாடுகளிலிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் சினிமாவை வேறெங்கு சென்றும் கற்றுக் கொள்வது அவ்வளவு சுலபமில்லை.

நீங்கள் இருக்கும் இடத்திலேயே சினிமாவை உருவாக்க முயலுங்கள். நண்பர்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள். தோள் போட்டுக் கொள்ளுங்கள். உங்கள் பாட்டி மற்றவரின் தாய், மற்றவரின் மகன், இன்னொருவரின் மாமா இவர்கள்தான் பாத்திரங்கள். இவர்கள் வாழ்வைத் தேடிப்போங்கள். இவர்கள் வாழ்வில் காதல் இருக்கிறது. துக்கம் இருக்கிறது. கோபம் இருக்கிறது. அடிமைத் தனம் இருக்கிறது. எதிர்ப்புணர்வு, காஷ, இசை, நடனம், பாடல், பறவைகள், மரம் செடி, கொடி , பிராணிகள், இயற்கை எல்லாம் இருக்கிறது. வாழ்ந்ததை வாழவிருந்த கனவைச் சொல்லுங்கள். குறும்படங்களுக்கும் ஆவணப் படங்களுக்குமான வித்யாசம் 3:1 என்ற அளவிலேயே சென்றாண்டும் இருந்தது. குறும்படங்களை பார்க்காதவர்கள் எடுத்த குறும்படங்களில் பெரும்படத்தின் தாக்கமும், தொலைக்காட்சி தொடர்களின் தாக்கமும் இல்லாமல் போகவில்லை. `பொன்மொழி’ என்ற `வாலை’ இன்னமும் பலர் விடாமல் இருக்கின்றனர்.

படங்களில் உரையாடலை அமுக்கி விடக்கூடிய பின்னணியிசையை சில படங்களில் காண முடிந்தது. சமூகத்துக்கு ஏதேனும் விஷயம் சொல்லவேண்டும என்கிற ஆசையில் பலர் எடுத்த குறும்படங்கள் பிரச்சார படங்களாகவே இருந்தன. தமிழகம் முழுவதுமே குறும்படங்கள் எடுக்கத் தொடங்கி இருப்பது நல்ல அறிகுறியாகப் படுகிறது. எதற்கும் தலைநகரையே நோக்கி இருக்கும் முறை குறைந்து கிராமங்களிலும் படம் எடுப்பதால் பன்மைத்தும் பெருக வாய்ப்பிருக்கிறது. போட்டிக்காக பணம் எடுக்காமல், தங்கள் படைப்பாளுமையை வெளிக்காட்டுவதாக குறும்படங்கள் இருந்தால் நன்றாக வரும். தமிழகத்தின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களின் படைப்புகளை எடுத்துக்கொண்டு, தங்கள் கலை வெளிப்பாட்டை நிரூபிக்கலாம். பார்த்த படங்களில் கல்லூரி மாணவர்கள் அளவுக்கு வெளியே இருக்கும் படைப்பாளிகளின் படைப்புகள் வீர்யமாக இல்லை. அவர்கள் திரைப்பட நுட்பங்களை படங்களைப் பார்த்தும் படித்தும் தங்கள் அறிவை செம்மையாக்கிக் கொள்ளலாம். பெரும் கஷ்டத்திற்கு இடையிலும் ஈழத்திலிருந்து வெளி வந்திருந்த படங்களின் நுணுக்கம் வெளிப்பட்டது. முதன் முதலாக ஒரு தமிழ் குறும்படம் பெர்லின் சர்வதேச விழாவில் அங்கீகாரம் பெற்றது எது என்றால், பிரான்ஸ் நாட்டில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் பிரதீபன் எடுத்துள்ள `என்வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’ படம் தான். ஜெயகாந்தனின் `டிரெடில்’ சிறுகதையை கண்ணன், `அச்சுப்பிழை’ என்ற குறும்படமாக கொண்டு வந்துள்ளார். காலக்கட்ட படங்களை எடுப்பவர்கள் இப்படத்தினை கட்டாயம் பார்க்கவேண்டும்.

சிறந்த சோதனைப் படமாக, சொல்லப்படவேண்டியது: “லீசாக்” இதனை கௌரிசங்கர் அற்புதமாக கொண்டு வந்துள்ளார். இதுபோன்ற படங்களை பார்த்து நிறையக் கற்றுக்கொள்ளலாம். சதத் ஹசன் மாண்டோவின் சிறுகதையை மிக அற்புதமான முறையில் குறும்படமாக்கியுள்ளார். என்னெரசு பெரியார். இப்படம் 2008-இல் வெளிவந்த தமிழ்நாட்டுப் படங்களில் வியந்து கூறத்தக்கதாக இருக்கிறது.

2008-ஆம் ஆண்டு 24 ஆவணப் படங்கள் வெளிவந்திருக்கிறது. ஜெயகாந்தன், திகசி, அண்ணாதுரை, சுந்தர ராமசாமி, ஃபிடல்காஸ்ட்ரோ, நாடக ராமானுஜம், க. அயோத் திதாசபண்டிதர், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்றவர்களின் வாழ்க்கையை ஒவ்வொருவரும் அவருக்கேயான முறையில் சிறப்பாக வெளிக் கொண்டு வந்துள்ளனர்.

புட்டேஜூகளை (முன்பே எடுக்கப்பட்ட காட்சிகள்) மிக சிறப்பான முறையில் தங்கள் படங்களில் அமைந்திருந்த விதம் அருமையாக இருந்தது. தமிழக பெருமக்களை செல்லுலாய்டில் பதிவு செய்தது ஒரு வரலாற்று ஆவணமாகும்.

தமிழக திரைப்பட வரலாற்றை ஆவணமாக்கும் முயற்சியில் திரு சந்தான கிருஷ்ணனும், சண்முக நாதனும் முனைந்து ஈடுபட்டு, தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.

ஈழப் பிரச்சினை கொழுந்துவிட்டு எரியும் நிலையில் அதன் ஒரு பகுதியான `யாழ்ப்பாண நூலகம்’ சிங்கள காடையர்களால் எரியூட்டப்பட்டதை சோமிதரனும், தமிழக மக்களின் ஆதரவு நிகழ்வினை பொன். சன்முகவேலும், ஆவனப்படுத்தியுள்ளனர். போர்க்கால சூழலில் கிடைத்தவற்றை வைத்துக் கொண்டு ஆவணப்படமாக்கியுள்ளார் டெரென்ஸ்.

சாதியப் பிரச்சினை மதியழகனும். பாரி செழியனும் ஆவணமாக்கியுள்ளனர். அரவாணிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்கி, அவர்களுக்கு இந்தச் சமூகம் செய்யவேண்டிய ஆதரவினை திருஞானம் தெளிவுபடுத்தியுள்ளார்.

குறும்படக் காரர்களை விட ஆவணப்படம் எடுக்கும் இயக்குநர்களின் திறன் மேம்பட்டிருப்பதை அவர்கள் படங்கள் காட்டுகின்றன. இனிவரும் காலங்களில் உலகளவுக்கான ஆவணப் படங்கள் வெளிவரும் என்கிற நம்பிக்கையினையும் இப்படங்கள் உணர்த்துகின்றன.

                                                                                                                                                                 பதிவுகள் படரும்...

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.