இந்த இணைப்பில் 'நிழல்' பத்திரிகை ஆசிரியர் திரு. ப. திருநாவுக்கரசு அவர்கள் குறும்பட / ஆவணப்படப் பதிவுகளைத் தொடர்ந்து எழுத உள்ளார்.
அவரைப் பற்றி...
 |
அவர் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். பத்திரிக்கையாளர், பதிப்பாளர் மற்றும் இசை ஆய்வாளர். மக்களிடம் சினிமாவின் நுட்பங்களைக் கொண்டுச் செல்பவர். 2004 - ம் ஆண்டு 'கே.பி.சுந்தராம்பாள்' நூலுக்காகத் தமிழக அரசின் விருது பெற்றவர். நிழல் என்கிற குறும்படம் / ஆவணப்படத்திற்கான இதழைக் கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்தி வருபவர். |
கிராம மக்களும் திரைப்பட நுட்பத்தை உணர வேண்டும் என்கிற குறிக்கோளில் இதுவரை 400 - கிராமங்களில் உலகப் புகழ்ப் பெற்ற திரைப் படங்களை திரையிட்டுள்ளார். பலத் திரைப்பட சங்கங்கள் உருவாகக் காரணக் கர்த்தாவாக இருந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் குறும்படப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறார். தமிழகத்தில் குறும்பட / ஆவணப்படப் படைப்பாளிகள் சங்கத்தினைத் தோற்றுவித்தவர்.
இவரது 'சொல்லப்படாத சினிமா' என்கிற நூல் உலக அளவில் எடுக்கப்பட்டக் குறும்பட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகம் செய்துள்ளது. தமிழக மாணவர்கள் / இளைஞர்கள் எடுக்கும் குறும்படம் / ஆவணப்படங்களை உலக அளவில் எடுத்துசென்றுப் பல விருதுகளையும், பரிசுகளையும் தமிழக மாணவர்கள் பெற வழி வகுத்தவர்.
|