Facebook         தொடர்புக்கு வாயில்  
 
 

 

 

 

 
     
     
     
     
 
 
சந்தோஷ் கொளஞ்சி

 

சினிமா பயணம்

சிறுவயதிலிருந்து படம் பார்க்கும் பழக்கம் என் மாமாவிடமிருந்து எனக்கு தொற்றிக்கொண்டது. வாரம் ஒரு முறை என்னை ஒரு புது படத்திற்கு கூட்டிசெல்வார். சினிமா என்றாலே எனக்குள் ஒரு சந்தோஷம். போட்டோ பிலிமிலுள்ள பிம்பங்களை லென்சின் உதவியால் அப்பாவின் வெள்ளைவேட்டியில் பிரதிபலித்து பிம்பங்களை பெரியதாக பார்த்த அனுபவம் எனக்குளிருந்த சினிமா ஆசையை துண்டியது. வளர வளர சினிமாவின் மீது தீராத ஆசை உண்டானது. அந்த ஆசையில் நண்பர்கள் உதவியால் காமிரா போனில் பாஸ் செய்து பாஸ் செய்து ஒரு குறும்படம் எடுத்தோம். அப்போதே சினிமா எவ்வளவு கஷ்டமான விஷயம் என்று புரிந்தது. நாளடைவில் படிப்பின்மீது கவனம் செலுத்து வேண்டிய கட்டாயத்தினால் சினிமவிலுருந்து இடைவேளை விட்டு பொறியியல் பட்டபடிப்பு படித்தேன். அப்போது வகுப்பை கட்டடித்துவிட்டு பல படங்களை பார்த்தேன். நான் பார்த்த படங்கள் என்னுள் ஒரு பிரம்மிப்பையும் பாதிப்பையும் உண்டாக்கியது. பட்டபடிப்பு படித்தவுடன் ஒரு சினிமா கல்லூரியில் படித்து நல்ல படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன் அதனால் ஒரு வருட சினிமா படிப்பு பற்றிய கல்லூரி ஒன்றில் சேர்ந்து படித்துகொண்டிருந்தேன்.

கல்லூரிக்கு அருகிலுள்ள சினிமா பற்றிய சில திரையிடளுக்கும் உரையாடலுக்கும் சென்று கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவரின் உதவியால் தமிழ் ஸ்டுடியோ பற்றி தெரியவந்தது.தமிழ் ஸ்டுடியோவின் facebook கணக்கின் மூலம் தமிழ் ஸ்டுடியோவை பின்தொடந்தேன். தமிழ் ஸ்டுடியோ நடத்திய அனைத்து நிகழ்ச்சியிலும் தவறாமல் பங்கேற்றேன். சினிமா மீதான எனக்கிருந்த பார்வை சற்று மாற தொடங்கிய நேரமது. மற்றும் நான் படிக்கும் கல்லூரியின் சினிமா பற்றிய புரிதலுக்கும் தமிழ் ஸ்டுடியோவின் மாற்று சினிமாவிற்கும் நிறைய வித்தியாசங்களை பார்க்க முடிந்தது. தமிழில் வெளிவரும் மசாலா படங்களையும் பல வணிக ரீதியான படங்களையும் என் சினிமா பார்வை வெறுத்தது. இயல்பான திரைகதைகளையும் இலக்கியங்களையும் தேடினேன். எனவே என் சினிமா பார்வை மாற்று பார்வையுடன் பயணம் செய்ய தமிழ் ஸ்டுடியோவில் சேர்ந்தேன். ஒரு படம் வியாபார ரீதியில் வெற்றியடைவதைவிட மக்கள் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் என் சினிமா பயணம் தொடர்கிறது.

 

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: படிமை (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio