Facebook         தொடர்புக்கு வாயில்  
 
 

 

 

 

 
     
     
     
     
 
பிரவின் செல்வம்

 

நானும் சினிமாவும்

கதைகள், கலைப்படைப்புகள் என கலை சார்ந்த எந்த வடிவத்திலும் ஆர்வம் இல்லாத நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் நான். வெறும் பொழுதுப்போக்கிற்காக தான் சினிமா என்று இருந்த எனக்கு இசையின் மூலமாக தான் நல்ல திரைப்படங்கள் அறிமுகமானது. பள்ளிக்காலங்களிலிருந்தே நல்ல இசையின் அடிமை நான். இசையின் தேடலில் நான் உட்புகுந்த களம் தான் சினிமா.

நிறைய நல்ல திரைப்படங்களின் தேடல்கள் அது குறித்த சிந்தனைகள் என என் மனம் முழுக்க சினிமாவின் தாக்கம் ஆழ பதிந்தது. திரைப்பட பட்ட படிப்பு பெற வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்தது, ஆனால் என்னுடைய ஆசை அப்பொழுது நிறைவேறவில்லை. கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்ப பிரிவில் படிக்க துவங்கினேன். கல்லூரியின் முதற்பருவத்தில் தமிழ் வகுப்பெடுத்த பேராசிரியரின் திரைப்பட பார்வை, இலக்கிய பார்வை என்னை அடுத்த கட்டதிற்கு இட்டு சென்றது. அவர் மூலமாக தான் நவீன சினிமாவின் வணிக நோக்கங்களையும், கலைப்படத்திற்காக இயக்குனர் திரு.பாலுமகேந்தரா, திரு.மகேந்திரன் போன்றோரின் பங்களிப்பையும் அறிந்தேன். அதன் தொடர்ச்சியாக தான் மாற்று சிந்தனை சினிமாக்கள், இலக்கிய படைப்புகள் குறித்த தேடல்கள் அதிகரித்தது.

கல்லூரி காலங்கள் முடிவடையும் நேரத்தில் நான் ஒரு திரைப்பட ரசனையாலனாக மாறியிருந்தேன், என் நண்பர்கள் அனைவரும் வாழ்கையின் அடுத்த கட்ட பயணத்தை நோக்கி நகரத் தொடங்கினர், என்னால் நிச்சயமாக ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் அசையும் பொருளாக இயங்க முடியாது என்பதில் தெளிவாக இருந்தேன். என் நண்பர்களும் எனக்கு பக்க பலமாக இருந்தனர். என்னை புரிந்து கொண்ட என் பெற்றோர், பொருளாதார சிக்கலிலும் நான் சென்னையில் ஒரு தனியார் திரைப்பட கல்லூரியில் சேர உறுதுணையாக இருந்தனர்,

வண்ண கனவுகளோடு வந்து சேர்ந்த எனக்கு சினிமா உலகத்தை பற்றிய வேறு முகம் தெரிய வந்தது. என்னுடன் படிக்கும் மாணவர்களுக்கு சினிமாவை பற்றிய பார்வை வேறு, படைப்பு என்பது வணிகம் சார்ந்தது என்ற நோக்கமே அவர்களிடத்தில் இருந்தது. நேர்மையான ஒரு படைப்பை உருவாக்குவதற்க்கு நான் தேர்ந்தெடுத்த களம் முற்றிலும் வேறு திசை என உணர்ந்தேன். சில ஆசியர்களின் வழிகாட்டுதலால் நிறைய வாசிக்க துவங்கினேன், இலக்கியம் சார்ந்த சில கூட்டங்களுக்கும், திரையிடல்களுக்கும் செல்லும் வழக்கத்தை உருவாக்கினேன்.

அதன் விளைவாக தான் தமிழ்ஸ்டுடியோ-வும் படிமை திரைப்பட பயிற்சி இயக்கமும் அதன் முயற்சிகளும் எனக்கு பரிச்சியம் ஆனது. நேர்மையான படைப்பிற்க்கான தெளிவு அறிவு என என்னை தயார் படுத்திக்கொள்ள படிமை இயக்கத்தோடு பயணித்துக்கொண்டிருக்கிறேன்.

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: படிமை (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio