Facebook         தொடர்புக்கு வாயில்  
 
 

 

 

 

 
     
     
     
     
 
தமிழரசன்

 

உதவி இயக்குநருக்கான முயற்சிகள், வேலைக்கான போராட்டம், வீட்டின் பொருளாதார சோதனைகள், இருப்பிட சூழல் போன்ற வெவ்வேறு வகையான இன்னல்களுக்கு இடையேயும் சினிமா எனற ஒன்றை நோக்கிய பயணம் தொடர்ந்துக்கொண்டுதான் இருந்தது. சினிமாவை பற்றி பேச, பார்க்க சுவாசிக்க சுதந்திர இடத்தை தேடிக்கொண்டு அலையும் பொழுது படிமை என்ற ஒரு அமைப்பு அதற்கான வழிகாட்டுதலாக இருந்தது. வாரத்தில் விடுமுறை நாட்களில் சினிமாவிற்கான வகுப்புகள், நடைபெறுவதை அறிந்து அதில் இணைய விருப்பங்கள் அதிகமாயின. சாதாரணமாக வாய்ப்புகளை தேடி வடபழனி, கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் சுற்றிக்கொண்டு இருந்தவனில் நானும் ஒருவன்.

சில ஏமாற்றங்கள், அவமானங்கள் அதற்கான தகுதியாக கிடைத்தன. சினிமாவை பற்றி பேச ஒரு இடம் கூட இல்லாத சூழ்நிலை. என்னோடு பயணப்பட்டவர்கள் அனைவரும் வேறு விதமான வாழ்க்கை சூழலை தேடிக்கொண்டு இருந்தனர். அதனால் திரைத்துறையில் எனக்கான முயற்சி சற்று கடிமானது என கூறலாம். படித்தது கட்டிடவியல் துறை அதற்கான தகுதி நேர வேலையை முதலில் தேர்வுசெய்துகொண்டேன். சினிமாத்துறையில் பெரும்பாலான அனுபவர்களில் அறிவுரை “உனக்கென பொருளாதார தேவையை வேறு இடத்தில் இருந்து பெற்றுக்கொண்டு பிறகு சினிமாவில் முயற்சி செய்” என்பது தான்.

ஒரு திரைபடத்தை எடுக்க அந்தந்த இயக்குனர்களுக்கு ஆறுமாதத்தில் இருந்து ஒரு வருட காலம் ஆகலாம். அக்காலம் முழுவதும் உதவி இயக்குநர்களில் வேலை இயக்குநர்களை நிழலாக தொடர்வது தான். படிமை என்ற அமைப்பில் இலவசமாக கற்று தரப்படும் சினிமா சார்ந்த வகுப்புகள் மிகவும் என்னை ஈர்த்தது.

வார நாட்களில் எனக்கென ஒரு வேலையையும் விடுமுறை நாட்களில் சினிமாவிற்கு என ஒரு பகுதியாகவும் பிரித்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தேன்.

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: படிமை (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio