Facebook         தொடர்புக்கு வாயில்  
 
திரைப்பட மேதைகளின் பொன் மொழிகள்
 
- மதியழகன் சுப்பையா
 
‘’பிரெஞ்சு திரைப்படங்கள் மீது அனுதாபப் படுகிறேன், காரணம் அவைகளிடம் பணம் இல்லை. அமெரிக்க திரைப்படங்கள் மீது அனுபதாபப் படுகிறேன் காரணம் அவைகளில் கருத்து இல்லை’’
– ஜென் – லாக்- கோடார்டு
---------------------------------------------------------------------------------------------------

‘’நீங்கள் திரைப்படத்தை உருவாக்காதீர்கள், அது உங்களை உருவாக்கும்’’
– ஜென் – லாக்- கோடார்டு
---------------------------------------------------------------------------------------------------

‘’நான் எப்பொழுதும் ஒரே திரைப்படத்தைத்தான் இயக்கிக் கொண்டிருக்கிறேன். என்னால் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறு படுத்தி காட்ட முடியவில்லை’’
- பெடரிக்கோ பெலினி
---------------------------------------------------------------------------------------------------

‘’எனக்கு பரிசுகள் பெறுவதில் விருப்பமில்லை- அவை நாய்களுக்கு குதிரைகளுக்குமானது’’
–வெர்னர் ஹெர்ஜாக்
---------------------------------------------------------------------------------------------------

‘’எனது திரைப்படங்கள் மக்களை வருத்தப் பட வைக்கிறது என்று தெரியும். நான் அவர்களை வருத்தப்படச் செய்ய விரும்புகிறேன்’’
- கென் ரஸ்ஸல்
---------------------------------------------------------------------------------------------------

‘’நாம் இதுவரை திரைப்படத்தை கண்டதாக எனக்குப் படவில்லை. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாம் காட்சியாக்கப் பட்ட உரைநடைகளையே கண்டு வருவதாகப் படுகிறது.’’
- பீட்டர் கிரின்வே
---------------------------------------------------------------------------------------------------

‘’ஒரு இயக்குனர் தன் வாழ்வில் ஒரேயொரு படத்தைத்தான் இயக்குகிறார் பின் அதை பல துண்டுகளாக பிய்த்து மீண்டும் மீண்டும் இயக்குகிறார்.’’
- ஜென் ரீனொய்ர்
---------------------------------------------------------------------------------------------------

‘’எனது படங்களுக்கு நான் தந்தையைப் போல் உணர்கிறேன். நீங்கள் குழந்தைகளை உலகுக்கு கொண்டு வருகிறீர்கள், அவர்கள் வளர்கிறார்கள், தாங்களாகவே இயங்குகிறார்கள். கால இடைவெளிகளில் நீங்கள் சந்தித்துக் கொள்கிறீர்கள். அவர்களை மீண்டும் பார்ப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறீர்கள்.’’
– மைக்கேலேஞ்ஜலோ அன்டோனியோனி
---------------------------------------------------------------------------------------------------

‘’திரைப்படங்களை உருவாக்குவது கழிவறைகளை சுத்தம் செய்வதை விட மேலாது ‘’
– கிளாஸ் கின்ஸ்கி
---------------------------------------------------------------------------------------------------

‘’திரைப்படத்தை உருவாக்குவது என்பது ஒரு முழுமையான பிரபஞ்ஜத்தை படைப்பதற்கு இணையாகும்’’
– இங்மர் பெர்க்மன்
---------------------------------------------------------------------------------------------------

‘’திரைப்படத்தில் உங்களுக்கு வன்முறையை பிடிக்கவில்லை என்பது, நகைச்சுவைகளை அல்லது ஆடல் பாடல் காட்சிகளை பிடிக்கவில்லை என்பது போலாகும்.’’
– குவான்டின் டாரான்டினோ
---------------------------------------------------------------------------------------------------

‘’நாளுக்கு இரண்டு மணி நேரம் மட்டும் வேலை செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள் மற்ற இருபத்திரெண்டு மணி நேரமும் கனவு காண வேண்டும்.’’
– லூயிஸ் பனுவெல்
---------------------------------------------------------------------------------------------------

‘’உங்களுக்கு கதைகள் சொல்ல வேண்டுமானால் எழுத்தாளராகி விடுங்கள், திரைப்பட இயக்குனராகாதீர்கள்.’’
-பீட்டர் கிரீன்வேய்
---------------------------------------------------------------------------------------------------

‘’திரைப்பட உலகத்திற்குள் தொலைந்து போவது, மிகவும் அற்புதமான விஷயம்.’’
-டேவிட் லின்ச்
---------------------------------------------------------------------------------------------------

‘’மக்கள் வன்முறைகளில் ஈடுபட திரைப்படங்கள் தான் காரணம் என்னும் கருத்து மக்களிடையே உள்ளது, ஆனாது எனது அபிப்ராயப் படி சமுதாயத்தின் வன்முறையைத்தான் திரைப்படங்கள் பிரதிபலிக்கின்றன.’’
–பவுல் வெர்ஹோய்வென்
---------------------------------------------------------------------------------------------------

‘’திரைப்பட உருவாக்கம் என்பது உயிரனுக்களைப் போல; கோடியில் ஒருவரால் மட்டுமே நீந்தி வெற்றி பெற முடியும்.’’
- கிளாவ்டி லீலவுச்
---------------------------------------------------------------------------------------------------

‘’திரைப்படம் என்பது வாழ்க்கையின் ஒரு துண்டு அல்ல, ஆனால் அது கேக்கின் ஒரு துண்டு.’’
-அல்பர்டு ஹிட்ச்காக்
---------------------------------------------------------------------------------------------------

‘’ஞானத்தின் உச்ச நிலையைத்தான் பைய்த்திக்காரத்தனம் என்கிறார்கள்.’’
–ஜீன் காக்டீயூ
---------------------------------------------------------------------------------------------------

‘’என்னை முழுதும் திருப்தி படுத்திய ஒரு திரைப்படத்தை நான் உருவாக்கவே இல்லை.’’
– ரோமன் போலான்ஸ்கி
---------------------------------------------------------------------------------------------------

‘’ஒரு நல்ல கலைஞன் தனிமை படுத்தப் படவேண்டும். அப்படி இல்லையெனில் ஏதோ தவறு நடந்திருக்கலாம்.’’
– ஆர்ஸன் வெல்ஸ்
---------------------------------------------------------------------------------------------------

‘’ஒரு திரைப்படமென்பது ஷூவுக்குள் விழுந்த கல் போல இருக்க வேண்டும்.’’
– லார்ஸ் வான் டிரையர்
---------------------------------------------------------------------------------------------------

‘’பூரணத்துவம் குறித்து பயம் வேண்டாம்- அதை எப்போதும் அடைய முடியாது.’’
– சல்வாதோர் டாலி
---------------------------------------------------------------------------------------------------

‘’எதையும் பார்த்து அதைப்போலச் செய்ய (காப்பியடிக்க) விரும்பாதவர்கள், எதையும் உருவாக்க மாட்டார்கள் .’’
– சல்வாதோர் டாலி
---------------------------------------------------------------------------------------------------

‘’திரைப்படம் என்பது கற்றுத் தேர்ந்தமேதைகளுக்கான கலையல்ல, ஆனால் அது கல்லாதவர்களுக்கானது. ‘’
– வெர்னர் ஹெர்ஜாக்
---------------------------------------------------------------------------------------------------

‘’கலைப்பணிகள் முற்றுப் பெற்றிட வில்லை, அவை நின்று போயுள்ளது.’’
– பீட்டர் கிரீன்வேய்
---------------------------------------------------------------------------------------------------

‘’குழப்பமான சிந்தனையுடன் உங்களால் தெளிவான படத்தைப் பெற முடியாது.’’
– ஜென் – லாக்- கோடார்டு
---------------------------------------------------------------------------------------------------

‘’துவக்கம், நடுப்பாகம் மற்றும் முடிப்பு ஆகியன திரைப்படத்தில் இருப்பதை நான் விரும்புகிறேன், ஆனால் அவை வரிசை ஒழுங்குப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை.’’
– ஜென் – லாக்- கோடார்டு
---------------------------------------------------------------------------------------------------

‘’உலகின் மிக அழகான பொய் திரைப்படம்தான் ‘’
– ஜென் – லாக்- கோடார்டு
---------------------------------------------------------------------------------------------------

‘’புகைப்படங்கள் மெய்யானவை ‘’
-– ஜென் – லாக்- கோடார்டு
---------------------------------------------------------------------------------------------------

‘’திரைப்படம் என்பது உள்நோக்கியப் பயணம் ‘’
– ராபர்ட் பிரெஸ்ஸன்
---------------------------------------------------------------------------------------------------

‘’வெற்றிக்கு எந்த சூத்திரமும் இல்லை. ஆனால் தோல்விக்கு சூத்திரம் உள்ளது அது அனைவரையும் திருப்தி படுத்த வேண்டும் என்பதே .’’
– நிக்கோலஸ் ரேய்
---------------------------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
© காப்புரிமை: படிமை (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio