Facebook         தொடர்புக்கு வாயில்  
 
 

 

 

 

 
     
     
     
 
 
Black & White-குறும்பட திரைப்பட விவாதம்
 
- கிருபாஷங்கர் மனோகரன் (Batch II)
 

படிமை திரைப்பட இயக்கம் இரண்டாம் நாள் வகுப்பன்று Black & White என்ற குறும்படம் திரையிடப்பட்டது. சுவாரசியம் என்ற விஷயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுத்த படம் இது. மரணத்தின் விளிம்பில் ஒரு மனிதனின் மனநிலையை மிக துள்ளியமாக பதிவு செய்திருக்கின்றது இந்த குறும்படம்.மிக சாதரணமான கதை என்றாலும் அடுத்து நடக்க போவது என்ன என்ற சுவாரசியம் எல்லா காட்ச்சிகளிலும் நன்றாக அமைந்தது.படத்தின் இறுதிகாட்சியில் இன்னும் சில நொடிகளில் இறக்க போகிறோம் என்றால் ஒருவரது மனநிலை என்னவாக இருக்குமோ அதை உண்மை தன்மையுடன் காட்ச்சி படுத்திய விதம் படத்தின் உச்சம்.

கதையின் சுருக்கம் என்னவென்றால் வசந்த் என்ற ஒரு போட்டோகிராபர். அவனிடம் அவனது மகள் வந்து ஒரு பார்சல் ஐ கொடுக்கிறாள். பிரித்து பார்த்தால் ஒரு பழைய மாடல் கேமரா. அந்த காமெரா வின் மேல் Made in Russia என்று எழுத பட்டிருக்கின்றது. புகை படக்கருவியை எடுத்து கொண்டு வெளியில் சென்று ஒரு நீண்ட ஏரிக்கரையில் சில காட்சிகளை புகைப்படம் எடுக்க நினைக்கிறான்..தூரத்தில் தோன்றிய ஒரு மணல் திட்டில் யாரோ இருவர் இருப்பதை கண்டு அந்த புகைப்பட கருவியை zoom in செய்து பார்க்கிறான். இளம் காதல் ஜோடி ஒன்று விளையாடி கொண்டிருக்கின்றனர். அந்த பெண்ணை படம் எடுக்க காமெராவை zoom in செய்து அவள் எதையோ குனிந்து எடுக்கும் கனத்தை புகைப்படம் எடுக்கிறான். எடுத்த கணம் அந்த பெண் மணலில் சரிந்து விழுகிறாள். மயங்கி விழுந்த பெண்ணின் நிலையறிய ஓடிவரும் அந்த ஆண் தன கையில் இருக்கும் தண்ணீர் பாட்டிலில் சிறிது தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் தெளிக்கிறான். அதையும் படம் பிடிக்க கேமரா பட்டனை அமுக்கும் பொழுது காதலனும் மயங்கி விழுகிறான்.

காமெராவின் அமானுஷ்ய செயலை கண்டு பயந்து பதட்டமான மனநிலையில் தூரத்தில் மயங்கி கிடக்கும் அந்த இருவரையும் பார்த்து கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்கிறான். தூரத்தில் இருந்து இன்னும் சில பேர் அந்த ஜோடிகள் மயங்கி விழுந்த இடத்தை நோக்கி ஓடுவதை பார்த்து கொண்டே வண்டியை எடுத்து கொண்டு வேக மாக நகர்கிறான்..

வரும் வழியில் அந்த காமெராவின் அமானுஷ்யமான செயலை பற்றி யோசித்து கொண்டே ஒரு பேருந்து நிறுத்தத்தின் எதிரே வந்து நிற்கிறான். எதிரே பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெரியவர் அமர்ந்திருக்கிறார். ஒரு இளம் வயது வாலிபன் பேருந்திற்காக காத்து கொண்டிருக்கிறான். கமெரா வின் அமானுஷ்ய சக்தியை பரிசோதிக்க மீண்டும் அந்த கிழவனை ஒரு பதட்டமான மனநிலையில் மீண்டும் படம் எடுக்க அந்த கிழவனும் மயங்கி கீழே விழுகிறான். பேருந்திற்காக காத்திருக்கும் அந்த வாலிபன் கிழவன் மயங்கி விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து எதிரே படம் எடுக்கும் இவனை துரத்த அங்கிருந்து மிக வேகமாக வண்டியை ஓட்டி கொண்டு வீட்டிற்கு வந்து கதவை சார்த்தி கொள்கிறான்..

பதட்டம் குறைந்த வுடன் அந்த கேமரா வை அனுப்பிய நபர் யாராக இருக்கும் என்று தெரிந்து கொள்ள அந்த பார்சலை எடுத்து பார்க்கிறான். பார்சல் இன் மேல் என்று எழுத பட்டிருக்கிறது. யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டிருக்கையில் ஒரு தொலை பேசி அழைப்பு வருகிறது. அழைப்பை எடுத்தால் ஒரு பெண்ணின் குரல்.
வசந்த் எங்க இருக்க..சந்திப்போமா என்று கேட்க அவன் குரல் சோர்ந்து பேச அவள் என்ன டா Any Problem?? உன் மனைவி வந்துட்டாளா என்று கேட்க இவன் ஏதும் பேசாமல் தொலைபேசியை கையில் வைத்து கொண்டே நிற்கிறான்.

அவன் மகள் டாடி என்று அழைக்க இவன் திரும்பி பார்க்கும் பொழுது அந்த சிறுமியின் கையில் அந்த காமெரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறான். டாடி ஸ்மைல் ப்ளீஸ் என்று சொல்லி அவள் அந்த கமெராவில் தன் படம் எடுக்க இவன் மரண ஓலத்தில் Noo எட்று கத்துகிறான்..இதுவே படத்தின் இறுதி காட்சி..அடுத்து என்ன வாகி இருக்கும் என்ற விறுவிறுப்புடன் படத்தை முடித்த விதம் பார்வையாளர்களின் மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன. பத்தே நிமிடம் ஓடும் ஒரு திரைப்படம் பார்க்கும் எல்லா பார்வையாளர்களுக்கும் மரணத்தின் பயத்தை ஏற்ப்படுத்தும் விதமாக ஒவ்வொரு Frame காட்சி படுத்த பட்டிருக்கின்றன.

திரையிடப்பட்ட பின் மாணவர்கள் சுரேஷ், சுந்தர் நவராஜ், தினேஷ் சுந்தர் மற்றும் கிருபா படத்தை பற்றிய தங்களின் பார்வையை விவாதம் செய்தனர்.

சுரேஷ் சுந்தர் மற்றும் நவராஜ் படம் முழுமை அடையாமல் வெறும் ச்வாரசியதிர்க்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்க பட்டிருக்கின்றது என்று தனது கருத்தை பதிவு செய்தார். சுந்தர் இந்த படத்தை ஒரு நல்ல சிருஷ்டி என்று சொல்லி,பத்தே நிமிடத்தில் ஒரு கேமரா, அதை பயன்படுத்தும் ஒரு புகைப்பட கலைஞன் அவன் அன்றாடும் செய்யும் தொழில் இதை வைத்து மிக அற்ப்புத மாக எடுக்கப்பட்ட சுவாரசியமான திரைமொழி என்று தனது கருத்தை பதிவு செய்தார்.

தினேஷ் காமெரா வின் அமானுஷ்ய தன்மையை உறுதி செய்ய அந்த கிழவனை புகைப்படம் எடுக்கும் பொழுது அந்த புகைப்பட கலைஞன் எச்சில் முழுங்கும் காட்சி அற்ப்புதமாக காட்சிபடுத்த பட்டிருக்கின்றன என்றும், பயத்தை சொல்லும் ஒவ்வொரு காட்சியிலும் அந்த புகைப்பட கலைஞன் உணர்ந்த அத்தனை பயத்தை தானும் உணர்ந்தேன் என்று தனது கருத்தை பதிவு செய்தார்.

இன்னொரு மாணவர் சுரேஷ் என்பவர் கதையே இல்லாமல் இப்படியும் படம் எடுக்க முடியுமா என்று ஆச்சர்யத்துடன் எல்லா காட்சியிலும் சுவாரசியத்தை உணர்ந்ததாக தனது கருத்தை பதிவு செய்தார்.

கிருபா ஒவ்வொரு காட்சியிலும் தனக்கு எழும்பிய கேள்விகளையும் முரண்பாடான காட்சி, காட்சி படுத்திய முறையை விவரித்தார். உதாரணமாக படத்தின் தலைப்பு கருப்பு வெள்ளை(Black & White). தலைபிர்க்கேற்ப படம் முழுவதும் கருப்பு வெள்ளை படமாக எடுக்க பட்டிருக்கிறது. காமெரா கூட பழம் காலத்து காமெராவை நினைவு படுத்தியது..ஆனால் அவன் வாழும் அடுக்கு மாடி கட்டிடம் அதில் பயன்படுத்தி இருக்கும் நாற்காலி எல்லாம் படம் எடுக்க பட்ட காலத்திற்கு பொருந்தியவையாக இல்லை என்றார். மேலும் காமெரா வில் Made in Russia என்று பொறிக்க பட்டிருக்கின்றது. பார்சலில் இருந்து பிரித்து அந்த கமெராவில் Made in Russia என்று எழுதிருக்கும் இடத்தை அந்த புகை பட கலைஞன் தனது விரல்களால் சிறிது நேரம் தடவி பார்க்கிறான். இந்த காட்சி ஏதோ ஒரு விஷயத்தை குறியீடாக சொல்வது போல் உள்ளது என்று தனது பார்வையை முன்வைத்தார்.

காட்சிக்கு காட்சி சுவாரசியம் தந்து பார்வையாளனை தன் வசம் கட்டி போடும் வித்தை எல்லா இயக்குனர்களுக்கும் இருக்க வேண்டிய முக்கியமான திறமை. அது இந்த படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்பு ராஜ் இன் தனிதன்னமை என்றே நினைக்க தோன்றுகிறது.

 

  

 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: படிமை (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio