Facebook         தொடர்புக்கு வாயில்  
  மறக்கப்பட்ட ஆளுமைகள் TS தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கங்கள் TS திரைப்பட இதழ்கள் TS திரையிடல் திரைப்படச் சங்கங்கள்
 
 

 

 

 

 
 

ஆசிரியர் குழு

மா. பாலசுப்ரமணியம்
பால் நிலவன்
இரா. குமரகுருபரன்
விஜய் ஆனந்த்
சோமித்ரன்
தமிழ் ஸ்டுடியோ அருண்
தா. மரிய ரீகன்
எம். ராஜ்குமார்

ஆலோனைக் குழு

வீ. அரசு
கோ. ரவீந்திரன்
ட்ராட்ஸ்கி மருது
சொர்ணவேல்
யமுனா ராஜேந்திரன்
ஆர்.ஆர். சீனிவாசன்
ஒளிப்பதிவாளர் செழியன்
இசை விமர்சகர் ஷாஜி
தம்பி மில்லர்
மாமல்லன் கார்த்தி

நிர்வாக ஆசிரியர் :

சிவ செந்தில்நாதன்

முகவரி :

பரிசல் புத்தக நிலையம்
96, ஜே.ப்ளாக்,
நல்வரவு தெரு,
எம்.எம்.டி. ஏ. காலனி
அரும்பாக்கம்,
சென்னை - 600106


மின்னஞ்சல் : padapetti@gmail.com

 
     
     
   
படப்பெட்டி இதழ் 4 - ஆகஸ்ட் 2011
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS படப்பெட்டி TS படப்பெட்டி 4 திரைப்பட இதழ்கள் வாயில்

திரைப்பட ஆவணக் காப்பகம் - சாமிக்கண்ணு வின்செண்ட்

மில்லர்

 

தமிழ் திரைப்பட வரலாற்றைப் பாதுகாத்தல்;ஆவணப்படுத்துதல் சினிமா எனும் சலனப்படம் உலகின் அதிஉயர் பொழுதுபோக்கு சாதனமாகக் கண்டறியப்பட்ட 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தென் இந்தியாவின் முதல் திரைப்படம் தமிழகத்தில் ‘மெட்ராஸ்புரடக்ஷன்’ தயாரிப்பில் 1916 ஆம் ஆண்டு பிறந்தது. திரையில் காட்சிகளை சலனப்படுத்திய அத்திரைப்படத்தின் பெயர்‘கீசகவதம்’. மௌன மொழியில் சலனப் படங்கள் திரையில் அசைந்தாடிய சில ஆண்டுகளில்‘சினிமா’ பேசும் படமாக,தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தது. 1931இல் முதல்பேசும் படமாக ‘காளிதாஸ்’ வெளிவந்தது.2000ஆம் ஆண்டிற்குப் பின் இந்திய சினிமா தயாரிப்புத்துறையில், இந்தி மொழிதிரைப்படத் துறைக்கு அடுத்து,வணிக ரீதியில் மிகப்பெரிய இடத்தை தமிழ்த் திரைப்படத்துறை வகிக்கிறது.

தமிழகத்தைத் தவிர ஏனைய மாநிலங்கள் அனைத்திலும் அல்லது தமிழைத் தவிர பிற இந்திய மொழிகள் அனைத்தின் மீதும் செல்வாக்கு செலுத்துவதால், இந்தித்திரைப்படத் துறையும் அதன் தலைமை இருப்பிடமான மும்பையும் வணிக ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் அளவில் இருக்கின்றன. ஆனால்,90களுக்குப் பிறகு அதாவது புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தனியார் மயம் - தனியார் மயம் உற்பத்தித் துறைகளையும் சந்தையையும் விரிவடையச் செய்த இரு பத்தாண்டுகளில், இந்தியத் திரைப்படத் துறையில் முதன்மைக் கேந்திரமாக சென்னையும் திரைப்படத் தயாரிப்பில் ஏனைய மொழிகளைவிட, தமிழும் எவரும் செல்ல முடியாத இடத்தை இன்று அடைந்திருக்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல.இன்றைய உலகத் திரைப்பட சூழலில் தமிழ்த் திரையுலகின் இடம்

1. எண்ணிக்கையில் இந்தியமொழிகளில் அதிக அளவிலானதிரைப்படங்களைத் தயாரிப்பது தமிழ்த் திரையுலகமே.

2. ஆசியாவிலேயே அதிக ஊதியம் பெறும் நடிகரை தன்னகத்தே கொண்டிருக்கும் இடத்திலிருப்பதும் தமிழ்த் திரையுலகமே.

3. இந்தியாவிலேயே அதிக வருமானம் ஈட்டும் இயக்குநர் இருப்பதும் தமிழ்த் திரையுலகமே.

4. திரைப்படங்களைத் தாண்டி,ஆயினும் திரைப்படங்களை மய்யப்படுத்தி (Maiyapaduthi) மிகப் பெரிய தொலைக்காட்சி வலைப்பின்னலில் இயங்கிக் கொண்டிருப்பதும் தமிழ்த் திரையுலகத்தினர்தான்.

5. இயக்கம், இசை,ஒளிப்பதிவு ஆகிய துறைகளில்உலகத் தரத்திலான ஆளுமைகளை வகித்துக்கொண்டிருப்பதால்,இந்தியத் திரைப்படங்களுக்கான வெளிநாட்டு வர்த்தகத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பதும் தமிழ்த் திரையுலகமே.6. உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் பரவி வாழ்வதால் தமிழ்த் திரைப்படங்கள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக, ஒரே நாளில் உலகின் பலநாடுகளிலும் வெளியிடப்படும் வர்த்தக மதிப்பை அடைந்திருக்கின்றன.

6. கடந்த 15 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் சர்வதேச அளவிலான திரைப்பட விழாக்களில் பங்கேற்று, பார்வையாளரகளின் பாராட்டையும் விருதுகளையும் பெறத்தக்க வகையில், சில திரைப்படங்களை ஆண்டுதோறும் தயாரித்து தன் புகழுக்கு, மேலும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம்.


இப்படி ஆழமான பதிவை உலகளவில் ஏற்படுத்தியிருக்கும் தமிழ் சினிமா கலை வரும் நூற்றாண்டுகளில் எப்படி வரலாற்றில் வாழப் போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக கண்முன் நிற்கிறது.அமெரிக்காவின் ‘ஹாலிவுட்’உலகமோ அய்ரோப்பிய நாடுகளின் திரையுலகமோ,சலனப்படங்களின் இயக்கப்போக்கில் உலகை மேலாதிக்கம் செய்யும் அளவில் வளர்ந்து நிற்கின்றன. அதற்கான காரணம் எதுவென்பதை நாம் ஒருகணம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?

அவர்களின் கலைநுட்ப அறிவோ,தொழிற்நுட்ப தேர்ச்சியோ,அறிவியல் ஆராய்ச்சிகளோ மட்டுமல்லாது, அடிப்படையான காரணம் என்பது அவர்கள் தன் வரலாற்றைப் பதிவு செய்வதும்,அதற்கான தரவுகளைப் பாதுகாப்பதுமே ஒரு சமூக இயக்கத்தின் ஆளுமைக்கு அடிப்படையாக அமையும். நீண்ட நெடிய பாரம்பரியமுள்ள நம் தமிழ்ச் சங்கம், நமக்கான வாழ்வியல் தொல்லையில் சான்றுகளைக் கூட இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். சமூகம், அரசியல்,பண்பாடு ஆகிய துறைகளில் போதுமான தரச்சான்றுகளை பாதுகாத்து வைக்காத சோம்பல் மரபு ஒன்றின் வழியாகத்தான், நாம் பயணப்பட்டு வருகிறோம்.அத்தகைய நிலையில்தான்,மேற்கூறிய சிறப்புகளைப் பெற்றிருந்தும்,தமிழ்த் திரைப்பட வரலாற்றை ஆவணப்படுத்தி, பாதுகாப்பதில் ஆர்வமும் அக்கறையுமின்றி, இது நாள்வரை காலத்தை வீணடித்து வந்திருக்கிறோம். தமிழ்த் திரையுலகத்தின் மிகப் பெரியபயனாளிகளாக இருப்பவர்கள்கூட, இதற்கென ஒரு கல்லையும் நகர்த்தவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

சமூகப் பிரச்சனைகளின்,வாழும் மனிதர்களின்,அவ்வப்போதைய பண்பாட்டு நடவடிக்கைகளின் பிரதிபலிப்புகளாக திரைப்படங்கள் இருக்கின்றன என்ற கருதுகோளை பெரும்பான்மையோர் ஏற்றுக்கொள்வர். அவ்வகையில் தமிழ்த் திரைப்படங்களை வரலாற்றுப் போக்கில் ஆவணப்படுத்துவது என்பது,தமிழ்ச் சமூகப் பண்பாட்டுஅடையாளங்களை குறியீட்டளவில் பாதுகாப்பதும் ஆகும். எதிர்காலத் தலைமுறையினர் செவி வழியாகவோ, எழுத்து வழியாகவோ, ஆய்வுப் புலம் வழியாகவோ அறிந்து கொள்வதைவிட நேரடியான காட்சிப் புலம்வழியாக தம் பண்பாட்டுஅடையாளங்களை, கடந்த காலப் பிரச்சனைகளை அறிந்து கொள்வதற்கு திரைப்படங்களும் ஆவணப்படங்களுமே எளியவாய்ப்பாக இருக்கும்.

எனவே படச்சுருளில் பதிவு செய்யப்பட்ட அத்தனையும் வரலாற்று நோக்கில், பாதுகாக்கப்பட வேண்டிய கருவூலங்களே என்பதை நாம் மறுக்க முடியாது.மேலும், தமிழ்த் திரைப்பட உலகத்தின் பண்பாட்டு வரலாற்றை, தமிழ்த் திரைப்படங்களை ஆக்கிரமித்திருக்கும் மலையாள-இந்தி நடிகைகள், விடலைக் கதாநாயகன்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வும் கலைத் தன்மையுமற்ற திரைக் காட்சியமைப்புகள் மூலம் மட்டும் அறிய நேரும் அவலமே எஞ்சி நிற்கும்.‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன்போன்ற சில தனிப்பட் டஆர்வலர்கள் மூலமே, இதுவரையான தமிழ்த் திரைப்பட நினைவுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.இதிலும் கூட அவருக்குப் பிறகு அவரின் தொடர்ச்சியாக அவர் காதலுடன் செய்த அரும்பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல யாருமே இல்லை என்பது ஒரு துன்பியல் செய்தி.தமிழ்த் திரைப்படங்களையும் அதன் துணை நிலைகளையும் ஆவணமாக்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. ‘காளிதாஸ்’தொடங்கி இன்றுவரை வெளியான 5000க்கும் மேற்பட்டபடங்களில் 99.9 சதவிகித படங்களுக்கு மறு வெளியீடு என்பதே கிடையாது....

மறு வெளியீடுகளில் வரும் படங்களில் ஒரு சில நட்சத்திரப் படங்களாகவே குறுகி நிற்கின்றன. ‘அவள்அப்படித்தான்’ போன்ற மாற்றுச் சிந்தனை படங்களைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு எதுவுமே தெரியாது.‘அக்ரகாரத்தில் கழுதை’ எனும்உலகப் புகழ் பெற்ற தமிழ் படம் இன்னும் தமிழகத்தில் வெளியாகவே இல்லை.அறுபது ஆண்டுகாலம் சினிமாவை வளர்த்தெடுத்த ஜாம்பவான்களின் அடையாளமே இன்று காணப்படுவதில்லை.“இவாஊதினா அவாவருவா”என்று மங்கம்மா சபதத்தில் மொழியில் பண்பாட்டுஆராய்ச்சிக்கு துணைபுரியும் வசனத்தை எழுதிய வசனகர்த்தா யாரென்றே தெரியாது. சாதனைபுரிந்து இந்தியாவையே தமிழகம் நோக்கி திரும்ப வைத்த சந்திரலேகா படத்தை இன்று பார்க்க வேண்டுமானால் எங்குபோக வேண்டும் என்றுதெரியவில்லை.ஈரானிய படங்களையும்,பின்லாந்து படங்களையும் பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் தமிழ் திரைப்பட உலகின் வரலாற்றுத் திரைப்படங்களை தெரிந்துகொள்வதில் இருப்பதில்லை.

இத்தகைய படைப்பு மூலாதாரங்களைப் பாதுகாக்க ஒருவரும் முன்வரவில்லை யெனில், ஆய்வு ரீதியாகவும், பரவலாக்கும் வகையிலும் இக்கலைச் சொத்துக்களை வகை மாதிரியாக உயிர்ப்புடன் பேணுவது என்பது கேள்விக்குரியதாகவே மாறிவிடும்எனவே, இப்பாரம்பரியச் செழுமையைப் பாதுகாக்க,தமிழ்த் திரையுலகம் அதற்கேயுரிய வல்லுநர்களுடன் தகுந்த ஓர் தளத்தை நிர்மானிக்க முன்வரவேண்டும். அதை உருவாக்குவதற்கான தகுதியையும் வாய்ப்புகளையும் தமிழ்த்திரையுலகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதையும் உணரவேண்டும். அத்தகைய சிறப்புமிக்க பணி குறித்தான, ஒரு வேலைத்திட்ட முன்வரைவையே நாம் இங்கு முன்மொழிகின்றோம்.விரைவில் இயங்க இருக்கும் சாமிக்கண்ணு வின்சென்ட் திரைப்பட ஆவணக் காப்பகம் தமிழ் திரைப்பட உலகில் ஆய்வுகுறித்த ஆவணப்பெட்டகமாக்கி தமிழ்த் திரையுலகை உலகப்பரப்பில், செய்தியாக்கும், பண்பாடாக்கும் முயற்சியில் ஈடுபட முயற்சிக்கிறது அதன் பணிகளுக்கான குறிப்புகள்:

1. சினிமா எனும் திரைக்கலைக்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான ஊடகமய்யமாகவும் திரைப்பட ஆவணப் பாதுகாப்புமய்யமாகவும் இயங்கும்.

2. ஒரு கலை வடிவமாகவும் அதே நேரத்தில் ஒரு தொழிற்துறையாகவும் இருக்கும் சலனத் திரைப்படத்தின் வரலாறு மற்றும் வளர் நிலைகளைத் தொகுக்கும்.

3. தமிழ்த் திரைப்பட வரலாற்றின் தடயங்களைத் தேடிக் கண்டடைந்து ஒழுங்கமைத்து,பாதுகாக்கும்.

4. தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய முழுமையான புள்ளிவிவரங்களை வரிசைப்படியும் வகைப்பாட்டின் அடிப்படையிலும் ஆவணப்படுத்தும்.

5. தமிழ்த் திரைப்படங்கள் மீதான ஆய்வுகளை ஒழுங்கமைத்து, ஊக்கப்படுத்தும் மற்றும் வழிகாட்டும்.

6. மய்யத்தின் அனைத்து செயல்பாடுகளும் தமிழ்த் திரைப்படங்களைக் குவிமய்யப்படுத்துவதாகவே இருக்கும்.

7. தொகுக்கப்படும்,ஆவணப்படுத்தப்படும்,பாதுகாக்கப்படும் மற்றும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும் மூலம் பிரதிகளையும் துணைச் சான்றுகளையும், தமிழ்த்திரையுலகின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாகப் (ஊக்கஆற்றலாக) பயன்படுத்தும்.

8. தமிழ்த் திரைப்படங்களின்,இயக்குநர்கள், மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள், புகைப்படங்கள் திரைப்படத்தின் நெகட்டிவ்கள்,பிரிண்டுகள், பாட்டுப்புத்தகங்கள், படத்தின் முழுக் கதைக்கான திரைக்கதை எழுத்துக்கள், அழைப்பிதழ்கள்,சுவரொட்டிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு இணையத்தில் அனைவரும் பகிர்ந்துகொள்ளலாம்.இதை எட்டும் வழிகள் குறித்து தமிழ் சினிமாவை நேசித்து,அக்கறையால் பயன்பெற்றோர் அனைவரும் ஆராயவேண்டும்.ஒரு கலை வடிவமாகவும் ஒரு தொழிற்துறையாகவும் நிலைபெற்றிருக்கும் தமிழ்த் திரைப்படத் துறையின் வரலாற்றைப் பாதுகாக்கவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பெரிதும் துணைபுரியும் நிறுவனமாக,இத்திரைப்பட ஆவண மய்யத்தை உருவாக்குவது, உலக அளவில் தமிழ்த் திரைப்படத் துறை பற்றிய ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை மய்யமாகவும் சர்வதேசத் தரத்துடன் இயங்கும்.

தொடர்புக்கு:svfilm foundation@gmail.com (புகைப்படம்: வின்சென்ட் சாமிகண்ணுவின் வாழ்க்கையின் சில பக்கங்கள்.

படங்கள் உதவி: கோவை ஆனந்த்,கோணங்கள் திரைப்பட இயக்கம்)எம்.பி.சீனிவாசன், நிமாய் கோஷ்படங்கள் – FEFSI

‘சாமிக்கண்ணு வின்சென்ட் ஆவணக்காப்பகத்தில்’ அமைக்கப்படவேண்டியவை.

1.சினிமா நூலகம் அமைக்கப்பட வேண்டும். தமிழ் மற்றும் உலகத்தின் திரைப்பட நூல்கள் சேர்க்கப்பட வேண்டும்.

2.தமிழ் சினிமாவின் வரலாறு நிரந்தரப் புகைப்படக் கண்காட்சியாக வைக்கப்பட வேண்டும்.

3.தமிழ் திரைப்படத்திற்கான ஆராய்ச்சி மையம் இதில் அமையவேண்டும்.

4.சினிமா சொற்பொழிவுகள் வாராவாரம் நடத்தப்படவேண்டும்.

5.பொதுமக்களுக்கு தினசரி திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும்.

6.திரைப்படம் உருவாகும் விதத்தை, பொதுமக்கள் புரிந்து கொள்வதற்காக சிறிய படப்பிடிப்புத்தளங்கள் உருவாக்கப்படவேண்டும்.

7.விரும்பும் படத்தைப் பார்ப்பதற்கு சிறிய திரையரங்கும் உருவாக்கப்பட வேண்டும்.

8.நாடகங்கள் நடத்தப்பட மேடைகள் உருவாக்கப்பட வேண்டும்.

9.தமிழ் சினிமாவின் அனைத்துப்படங்களும் DVD பிரின்ட்,நெகடிவ், இசைத்தட்டுக்கள்,பாட்டுப்புத்தகங்கள், புகைப்படங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, 4 டிஜிட்டல் முறையில்தொகுக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட வேண்டும்.

10.அரசு சார்பில் ‘திரைப்பட இதழ்கள்’ நடத்தப்பட்டு வெளியிடப்படும் திரைப்படங்களின் வரலாறு தொகுக்கப்படவேண்டும்.

தமிழ் சினிமா-தமிழக அரசின் கவனத்திற்கு

திரைப்படம், இலக்கியம், தனித்த பண்பாட்டுக் கூறாகப் பார்க்கப்பட வேண்டும். ‘பண்பாட்டுத்துறை’ (Ministry of Culture)என்று தனி அமைச்சரவை உருவாக்கப்பட்டு அதன் கீழ் திரைப்படம், கலை இலக்கியங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.திரைப்படத்திற்கான மாநில விருதுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு கொடுக்கப்பட வேண்டும். இரண்டு மூன்று வருடங்கள் சேர்த்து தரப்படக்கூடாது, மாநில விருதுக்கான சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்க தகுதியான, திரைப்படம் பற்றி தெரிந்த குழு உறுப்பினர்கள் உருவாக்கப்பட வேண்டும். திரைப்படப் புத்தகங்கள், குறும்படங்கள்,ஆவணப்படங்கள் விருதுப்பட்டியலில் இடம் பெற வேண்டும்.கேலிக்கூத்தாக மாறிவிட்ட தமிழ் திரைப்பட விருதுகள் மரியாதைக்குரிய விருதாக மாற்றப்படவேண்டும்.குறைந்த முதலீட்டில் உருவாகும் தரமான படங்களுக்கு அரசுமான்யம் வழங்கவேண்டும் ‘புதியஅலை’ திரைப்படங்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும்.திரைப்படத் துறைக்கு என்று தனித்த அகாதெமி (Academy)) உருவாக்கப்பட வேண்டும்.திரைப்படம் குறித்த அனைத்துச் செயல்பாடுகளும் இதன் கீழ் வரவேண்டும்.

திரைப்படத்துறைக்கும், தமிழக அரசிற்கும் இணைப்புப் பாலமாக இது செயல்படவேண்டும். திரைப்படத்துறை குறித்து அரசின் முடிவுகள் எடுக்க அகாதெமி உதவி செய்யவேண்டும்.திரைப்படம், நாடகத்திற்கு அடையாளமாகவும், சென்னையில் பாரம்பரிய சினிமாவும் விளங்கும்‘விக்டோரியா பப்ளிக் ஹால்’ சினிமா ஆவணக் காப்பகமாகவும்,அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட வேண்டும்.இந்த ஆவணக் காப்பகத்திற்கும்,அருங்காட்சியகத்திற்கும் இந்தியாவின் திரைப்பட முன்னோடி, தமிழர் சாமிக்கண்ணு வின்சென்ட் பெயர் வைக்கப்பட வேண்டும். ‘சாமிக்கண்ணுவின்சென்ட் ஆவணக்காப்பகம்’என்று அழைக்கப்படவேண்டும்.

படப்பெட்டி இதழ் 4 ஐ PDF வடிவில் படிக்க:

http://thamizhstudio.com/padapeti 8 11.pdf


முந்தையக் கட்டுரை அடுத்த கட்டுரை 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio