கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

மற்றவை பகுதியில், குறும்பட செய்திகள், குறும்பட இயக்குனர்களின் அனுபவங்கள், முக்கிய ஆவணங்கள், குறும்பட நிகழ்வுகள், உண்டியல் போன்ற பகுதிகள் இடம்பெறும்
 
 

மற்றவை பகுதியில், குறும்பட செய்திகள், குறும்பட இயக்குனர்களின் அனுபவங்கள், முக்கிய ஆவணங்கள், குறும்பட நிகழ்வுகள், உண்டியல் போன்ற பகுதிகள் இடம்பெறும்

 

 

 

 
     
     
     
   
திரைக்களஞ்சியம்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS மற்றவை TS திரைக்களஞ்சியம்

 
திரைக்களஞ்சியம் - 3
 
 
   ரீல் (Reel)
பொதுவாக ஒரு ரீல் ஆயிரம் அடிகளைக் கொண்டதாகும். இது பதினொரு நிமிடம் திரையில் ஓடக் கூடியது; அல்லது ஒரு ரீல் முன்னூறு மீட்டர்களைக் கொண்டிருக்கும். 'ரீல்' என்பது படத்தின் நீளத்தை மிகச் சரியாக அறிந்துக் கொள்வதற்கான வழிமுறை அல்ல. அடி அல்லது மீட்டர்தான் நீளத்தைக் குறிப்பதற்கான சரியான அளவாகும்.
 
   35 எம். எம். பிலிம் (35 MM Film)
35. எம். எம். பிலிம் படத்தில் ஒரு நொடி ஓடக்கூடிய படச்சுருள் ஒன்னரை அடி இருக்கும். அதாவது இருபத்தி நான்கு பிரேம் (சட்டகங்களை) களைக் கொண்டிருக்கும். ஒரு அடி படத்துக்கு பதினாறு பிரேம்கள் இருக்கும். சரியாக ஒரு நிமிடம் ஓடக் கூடிய படம் தொண்ணூறு அடி நீளமுள்ளதாக இருக்கும்.
 
   அண்மைக் காட்சி (Close shot)
ஒரு மனிதரையோ அல்லது பொருளையோ அண்மையில் எடுக்கப்படும் ஷாட்டுக்கு அண்மைக் காட்சி என்று பெயர். இது மூன்று வகைப்படும். மனிதர்களின் இடுப்பு வரை எடுக்கப்படும் கட்சிக்கு மிட் க்ளோஸ் அப் என்றும், முகத்தை மட்டும் எடுப்பதற்கு க்ளோஸ் அப் என்றும், நெற்றி, கண், உதடு போன்றவற்றை மட்டும் எடுப்பதை டைட் க்ளோஸ் அப் என்றும், எக்ஸ்ட்ரீம் க்ளோஸ் அப் என்றும் சோகர் க்ளோஸ் அப் என்றும் அழைக்கின்றனர். மனிதர்களை அன்மைக்கட்சியில் மற்றவை மறைந்து எந்த பகுதியை மையப்படுதுகிரோமோ அது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இதனால் மனிதனின் உணர்வுகளை தெளிவாக உணர முடியும்.
 
   மிட் சாட் (Mid Shot)
சாதாரணமாக ஒருவரை பார்க்கும்போது கால்வரை நாம் பார்ப்பதில்லை. இடுப்பு வரைதான் பார்ப்போம். இடுப்புவரை எடுக்கப்படும் காட்சியை இடைநிலைக் காட்சி எனலாம். பொதுவாக திரைப்படங்களில் இக்காட்சியை அதிகம் பயன்படுத்துவார்கள். இக்காட்சியில் ஐ லெவல் மாட்சிங் கோம்போசிசின் நில் அமைப்பதால் கதைக்கும், பார்வைக்கும் ஒரு விருவிருப்புத் தன்மையை கொடுக்கிறது. உரையாடலுக்கு ஏற்ற ஷாட் இது.
 
   லாங் ஷாட் (Long Shot)
நகரத்தையோ, நிலப்பகுதியையோ காண்பிப்பதற்கு யற்ற ஷாட் 'தூரக்காட்சி' இதனையும் மூன்று ஷாட்டுகளாக எடுக்கின்றனர். தூரக்காட்சி, இடைநிலை தூரக்காட்சி, வெகு தூரக்காட்சி என்கிற முறையில் எடுக்கின்றனர். ஷாட்டுகளின் தலைமையாக இந்த ஷாட் விளங்குகிறது.
 
   புல் ஷாட் (Full Shot)

ஒரு மனிதனை முழு அளவுக்கு எடுக்கப்படும் ஷாட்டுக்கு பெயர் 'முழுக்காட்சி'.


நீ ஷாட் (Knee Shot)

முழங்காலில் இருந்து பாதம் வரை எடுக்கப்படும் காட்சிக்கு நீ ஷாட் என்று பெயர்.

பின் தொடரும் காட்சி (Follow Shot)

இருவர் பேசியபடி ஒரு அறையில் இருந்து ஹாலுக்கு நடந்து செல்கின்றனர். இருவரையும் 'டாலி' யின் முன்புறமாக அல்லது பக்கவாட்டில் பின்தொடர்ந்து காமிரா செல்வதை 'பின் தொடரும் காட்சி' என்கிறோம்.

மாஸ்டர் ஷாட் (Master Shot)

ஒரு இடத்தையோ, பொருளையோ அல்லது ஒரு செயல் நடந்து கொண்டிருக்கும் காட்சியையோ, முழுமையாக காண்பிக்கும் காட்சியை 'மாஸ்டர் ஷாட்' என்கிறோம்.

 
   மாண்டேஜ் (Montage)
மாண்டேஜ் என்கிற சொல் பிரான்சிலிருந்து எடுக்கப்பட்டது. அடிப்படையில், இது படத்தொகுப்பை குறிக்கும். பிரபல சோவியத் இயக்குனர் 'ஐசன்ஸ்டின்' கருத்துப்படி தொடர்ந்து வரும் இரு ஷாட்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கவேண்டும். அதாவது ஷாட் 'எ' வும் ஷாட் 'பி' யும் இணைக்கும்போது உண்மையில் பதிவு செய்யப்படாத 'சி' யின் அர்த்தம் இந்த இணைப்பின் மூலம் வர வேண்டும்.
 
   சர்குலர் ஷாட் (Circular Shot)
 
காட்சிப் பொருளையோ நபரையோ முழுமையாக சுற்றிவந்து எடுக்கும் ஷாட்டுக்கு 'சர்குலர்' ஷாட் என்று பெயர். இந்த வட்டமிடும் ஷாட் மூலம் முழு பரிமாணத்தைக் கொண்டு வர முடியும். காமிரா, மேஜை, காதலர்கள், மல்யுத்தக்களம், ராட்டினம் போன்றவற்றை வட்டமிட்டுக் காட்டும்போது புதுவித உணர்வை பெறலாம்.
 
   கிரேன் ஷாட் (Crane Shot)
'ஓங்கிக்காட்சி' ஓங்கி உயர்ந்து இடத்தைக் காண்பிப்பதற்கு ஏற்ற ஷட்டகும். ஓங்கியில் இருந்து கொண்டு பலவித சாட்டுக்களை எடுக்க முடியும். மனிதன் பார்க்க முடியாத பலவித கோணங்களையும் இதன் மூலம் எடுக்கலாம்.
 
   பார்வைக்கோணம் (Angles)

ஒரு காட்சியை மூன்று வித கோணங்கள் மூலம் கொண்டு வர முடியும். இதனை புற நிலைக்கோணம்; அகநிளைக்கோணம்; பார்வையாளர் கோணம் என்று அழைப்பர்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</