கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

மற்றவை பகுதியில், குறும்பட செய்திகள், குறும்பட இயக்குனர்களின் அனுபவங்கள், முக்கிய ஆவணங்கள், குறும்பட நிகழ்வுகள், உண்டியல் போன்ற பகுதிகள் இடம்பெறும்
 
 

மற்றவை பகுதியில், குறும்பட செய்திகள், குறும்பட இயக்குனர்களின் அனுபவங்கள், முக்கிய ஆவணங்கள், குறும்பட நிகழ்வுகள், உண்டியல் போன்ற பகுதிகள் இடம்பெறும்

 

 

 

 
     
     
     
   
திரைக்களஞ்சியம்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS மற்றவை TS திரைக்களஞ்சியம்

 
திரைக்களஞ்சியம் - 2
 
 
   போகஸ் (Focus)
நடிகர் காமிராவுக்கு எவ்வளவு தூரத்திலிருக்கிறார் என்பதை அளந்து பார்த்து, லென்ஸ் அந்த தூரத்தலிருந்து வரும் ஒளியை வாங்கும்படி போகஸ் செய்வார். அதாவது பரப்பபட்டிருக்கும் ஒலி பிரதிபலித்து வரும் ஒளிக் கிரணங்கள் ஒன்று கூடும் மையமாக இருக்கும்படி கண்ணாடிக் கண்ணை சரிபடுத்துவதே போகஸ் செய்வது எனப்படும்.
 
   அவுட் ஆப் போகஸ் (Out of Focus)
நடிகர் காமிராவுக்கு இருபது அடி தூரத்திலிருக்கிறார் என்றால் அவர் மேல் விழுந்து பிரதிபலித்து லென்சுக்கு வரும் ஒளிக்கிரணங்கள் இருபது அடி தூரத்திலிருந்து வருகின்றன. லென்ஸ் அந்த தூரத்திலிருந்து வரும் ஒளியை வாங்கி உட்புறம் அனுப்பும்படி அதைச் சரிபடுத்த வேண்டும். அப்படி இல்லாமல் லென்ஸ் பதினைந்து அடி கிரணங்களை வாங்கும் நிலையிலிருந்தால், பிடிக்கும்படம் மங்கலாகவும், குன்றியும் இருக்கும். இதைத்தான் அவுட் ஆப் போகஸ் என்கிறோம்.
 
   ரியாக்சின் ஷாட் (Reaction shot)
ஒரு கதவை வேகமாக தள்ளிவிட்டால் அது அந்த திசையில் போய் எல்லையை தொட்டுவிட்டு அதன் நேர் எதிர் பக்கத்தில் திரும்பி வருகின்றதல்லவா? அதைப் போல ஒரு காரியம் நடக்கும் போது அதனால் ஏற்படும் எதிர் வினையை எடுத்துக்காட்டுவதை ரியாக்சின் ஷாட் என்கிறோம்.
 
   ஸ்லொவ்மோசின் (Slow Motion)
காமிரா வினாடிக்கு இருபத்தி நான்கு பிரேம்களை படம்பிடிக்க வேண்டும். இதற்கு மேல் அதிக அளவு பிரேம்கள் படம் பிடிக்கப்பட்டால், படம் திரையில் மெதுவாக நகரும் இதனை ஸ்லொவ்மோசின் என்கிறோம்.
 
   பாஸ்ட் மோசின் (Fast Motion)
காமிரா வினாடிக்கு இருபத்தி நான்கு பிரேம்களை படம்பிடிக்க வேண்டும். இதற்கு குறைந்து படம் பிடித்தால், அதாவது பிரேம்கள் இருபத்தி நாளுக்கு குறைந்தால் படம் வேகமாக நகர்வது போலத் தோன்றும். இதனை பாஸ்ட் மோசின் என்கிறோம்.
 
   டில்டிங் (Tilting)
காமிரா கீழ் நோக்கி குனிந்து பார்ப்பதுப் போல் படம் எடுப்பதற்கு டில்டிங் டவ்ன் என்றும், நிமிர்ந்து பாப்பதுப் போல் எடுப்பதற்கு டில்டிங் அப் என்றும் பெயர்.
 
   பேநின்க் (Paning)
காமிரா வலமிருந்து இடமாகவோ, இடமிருந்து வலமாகவோ பக்கவாட்டில் கழுத்தை திருப்புவது போல திரும்பி எடுப்பதற்கு பேநின்க் என்று பெயர்.
 
   ட்ரால்லி ஷாட் (Trolley Shot)
 
ரயில்வே தண்டவாளம் போல அமைக்கப்பட்டிருக்கும். அதன் மீது நான்கு சக்கரங்கள் கொண்டு சிறிய தள்ளுவண்டியின் நீண்ட கரம் போன்ற பாகமிருக்கும். அந்தக் கரத்தை மேலும் கீழும் இறக்க, உயர்த்த, பக்கவாட்டில் கழற்ற வசதியாக பற்சக்கரங்கள் கொண்ட வண்டி மீது காமிராவை வைத்து ஆடாமல், அசையாமல், பேசிக்கொண்டே நடந்து செல்வதை படம் பிடிப்பர். இதனையே ட்ரால்லி ஷாட் என்று ஹாலிவுட்டில் அழைப்பர். ட்ராக்கிங் ஷாட் என்கிற பெயரும் இதற்கு உண்டு.
 
   சைடு ட்ரால்லி (Side Trolley)
செட்டில் படம் எடுக்கும்போது இந்தக் காமிரா அதிக தூரம் நகருவதற்காக இருவரின் பக்கவாட்டில் நகர்ந்து சென்று படமாக்குவர் இதனை சைடு ட்ரால்லி ஷாட் என்கிறோம்.
 
   சைனீஸ் டாலி (Chinees Trolley)

முன்புறமிருந்து திரும்பியபடி பின்னால் நகர்ந்தபடியே சென்று முன்புறமுள்ளதை காட்டுவதற்காக அமைக்கப்படும் ஷாட் சைனீஸ் டாலி என்று ஹாலிவுட்டில் அழைக்கப்படுகிறது. இருவர் பின்பக்க நிலையில் இருப்பதைக் காமிரா சாய்வு நிலையில் பார்த்த படியே நகர்ந்து முன்பக்க நிலையில் இருவரையும் காட்டுகிறது. இதுவும் 'சைனீஸ் டாலி' வகையைச் சார்ந்ததுதான்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</