கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

மற்றவை பகுதியில், குறும்பட செய்திகள், குறும்பட இயக்குனர்களின் அனுபவங்கள், முக்கிய ஆவணங்கள், குறும்பட நிகழ்வுகள், உண்டியல் போன்ற பகுதிகள் இடம்பெறும்
 
 

மற்றவை பகுதியில், குறும்பட செய்திகள், குறும்பட இயக்குனர்களின் அனுபவங்கள், முக்கிய ஆவணங்கள், குறும்பட நிகழ்வுகள், உண்டியல் போன்ற பகுதிகள் இடம்பெறும்

 

 

 

 
     
     
     
   
திரைக்களஞ்சியம்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS மற்றவை TS திரைக்களஞ்சியம்

 
திரைக்களஞ்சியம்
 
 
 
இந்தப் பகுதிக்கு பல்வேறு ஷாட்ஸ், கோணங்கள், படத்தொகுப்பு உத்திகள் பற்றி தொழில்நுட்ப வார்த்தை மற்றும் அதற்கான விளக்கங்கள் அளித்த நிழல் திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கும், தியாகச்சுடர் திரு. முத்துக்குமார் அவர்களுக்கும், தமிழ் ஸ்டுடியோவின் நன்றிகள் பல.
 
   சட்டகம் (Frame)
திரையில் காட்டப்படும் ஒரு தனியான பிம்பம்; படச்சுருளிலும் பின்னர் திரையிலும் தெரியும் பிம்பத்தின் அளவு மற்றும் வடிவம். மேலும் சட்டகம் என்பது திரைப்படத்தின் அமைப்பு ரீதியான ஒரு யூனிட் ஆகும்.
 
   காட்சி (Scene)
சினிமாவின் கதையோட்டத்தில் காட்சி என்பது ஒரு முழுமையான யூனிட் ஆகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் ஒரு நிகழ்ச்சியைக் காட்டும் பல்வேறு ஷாட்டுக்களின் தொகுப்பு. இது ஒரே ஷாட்டாகவும் இருக்கலாம்.
 
   துண்டு (Shot)
ஒரு தனித்த துண்டு படம்; இடையே எந்த வெட்டும் இல்லாமல் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட ஒரு படமாகும்; அது எவ்வளவு நீளமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஷாட் என்பது சினிமா காட்சியின் அடிப்படை யூனிட் ஆகும். இயக்குனர் ஸ்டார்ட் சொன்னதிலிருந்து கட் சொல்வது வரை ஷாட் என்று எளிமையாக சொல்லலாம்.
 
   அங்கம் (Sequence)
ஒரு நாவலில் பல அத்தியாயங்கள் இருப்பது போல் படக்கதயையும் பல அத்தியாயங்கள் அல்லது அங்கங்களாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு அங்கத்தையும் பல காட்சிகளாகப் பிரிப்பர். இதனை அங்கங்கள் என்கிறோம்.
 
   மங்கித் தெரிதல் (Fade)
திரைப்படத்தில் ஒரு அங்கம் முடிந்து அடுத்த அங்கம் தொடங்குவதற்கு கையாளப்படும் உத்தி முறைக்கு 'மங்கித் தெரிதல்' என்று பெயர்.
 
   பேட் இன் (Fade In)
காட்சிகளை பிரிப்பதற்கு உதவும் ஒரு வழிமுறை முதலில் திரை இருளாக இருக்கும். அதில் உருவம் மெல்லத் தோன்றி படிப்படியாக முழுவதுமாக தெரியும்.
 
   பேட் அவுட் (Fade Out)
பேட் இன் முறைக்கு எதிரான ஒன்றாகும். இதில் திரையில் பிரகாசமாக உள்ளக் காட்சி படிப்படியாக மங்கிக் கடைசியில் இருளாகி விடும்.
 
   டிஸ்சால்வே (Kalavai)
 
ஒரு ஷாட்டின் கடைசி சில பிரேம்கள் கொஞ்சம், கொஞ்சமாகத் தேய்ந்து கொண்டே போகும். அதே சமையத்தில் அடுத்த ஷாட்டின் ஆரம்ப பிரேம்கள் கொஞ்சம், கொஞ்சமாகத் தெரிந்து கொண்டே வரும். முன் ஷாட்டுகள் முழுவதும் மறைந்து அடுத்த சாட்டுத் தெளிவாகத் தெரியும். இப்படி ஒரு ஷாட்டின் மேல் இன்னொரு சாட்டைக் கலப்பதுதான் 'டிஸ்சால்வே'
 
   டைம் லாப்ஸ் (Time Lapse)
நீண்ட நேரம் நடைபெறும் ஒரு நிகழ்வை மிகக்குறைந்த ஃப்ரேம் ரேட்டில் எடுத்து இயல்பான வேகத்தில் ஓட்டுவதற்குப் பெயர்தான் டைம்லாப்ஸ். உதாரணத்திற்கு சூரியோதயம். சூரியன் முழுமையாக உதிப்பதற்கு எட்டுநிமிடம் ஆகிறது. அந்த எட்டுநிமிட்மும், வினாடிக்கு மூன்று, அல்லது நான்கு என அவரவர் தேவைப்பட்ட வேகத்தில் கேமராவை ஓடவிட்டுப் படமாக்கிக்கொள்வார்கள். இதை ப்ரொஜக்டரில் இயல்பான வேகத்தில் ஓட்டும்போது, எட்டுநிமிடத்தில் உதிக்க வேண்டிய சூரியன் எட்டு வினாடியில் உதிப்பதைப் பார்ப்போம். இத்ற்கு இன்னுமொரு பிரபல உதாரணம், மலர்கள் மலர்வது.

உதாரணத்திற்கு இந்த இணைப்பை பாருங்கள்:


http://in.youtube.com/watch?v=Cz3wscJMbuo&feature=related


 
   துடைப்பு (Wipe)
பேட், கலவை, ஆகிய இரண்டைத் தவிர அடுத்த காட்சிக்குப் போக வைப் என்றொரு முறையும் இருக்கிறது. ஒரு ஷாட் போய்க் கொண்டிருக்கும் போதே, திரையின் ஒரு பக்கத்திலிருந்து அதை அழித்துக் கொண்டு இன்னொரு ஷாட் வருவதை அடிக்கடி பார்த்திருக்கலாம். 'இங்கே இப்படி இருக்க அங்கே' என்று எழுதுவது போலத்தான் துடைப்பும். துடைப்பு முறை பல ரூபங்களில் கையாளப்படுவதுண்டு. திரையின் வலது பக்கத்திலிருந்து இடது பக்கமும், மாற்றியும், கீழிருந்து மேலும், மாற்றியும், திரையின் நடுவிலிருந்து அலை வட்டம் போலப் பரவியும் வரும் துடைப்புகளை பல தமிழ்ப் படங்களில் பார்த்திருப்பீர்கள்.
 
 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</