வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
செய்திகள்
1
 
1 சென்னை விழா
1
1 திரையிடல் விழா
1
1 திரையிடல் விழா - 2
1
1 ஸ்பானிஷ் விழா
1
1 குறும்பட விழா
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  நிகழ்வுகள்
 
உலகம் முழுவதும் நடைபெறும் குறும்படம் / இலக்கியம் / வரலாறு தொடர்பான நிகழ்வுகளை பதிவு செய்தே இந்தப் பகுதி. முதலில் சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம் பற்றிய பதிவு.

சென்னை சர்வதேச திரைப்பட விழா
 

சென்னையில் தமிழக அரசு உதவியுடன் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 36 நாடுகளைச் சேர்ந்த 120 படங்கள் பங்கேற்கின்றன.

சுப்பிரமணியபுரம், அஞ்சாதே, பூ மற்றும் காஞ்சிபுரம் ஆகிய தமிழ்ப் படங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன.

சென்னையில் உள்ள பிலிம் சேம்பர், உட்லண்ட்ஸ், சிம்பொனி ஆகிய திரயரங்குகளில் தினசரி 5 காட்சிகளாக இந்தப் படங்கள் காட்டப்படுகின்றன.

இதுகுறித்து சென்னை இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் துணைத் தலைவர் எஸ்வி சேகர் கூறியதாவது:

இந்த திரைப்பட விழா நடக்க தமிழக அரசு உதவி செய்துள்ளது. அதற்காக முதல்வர் கலைஞருக்கு நன்றி. டிசம்பர் 17-ம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கில் இந்த விழா தொடங்குகிறது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர்.

இதுவரை நடந்த திரைப்பட விழாக்களை சற்று சிரமத்துடன்தான் ஏற்பாடு செய்தோம். ஆனால் இந்த முறை அரசு உதவி கிடைத்ததால் சற்று நிம்மதியாக ஏற்பாடு செய்துள்ளோம். இனிவரும் ஆண்டுகளில் இதுபோன்ற சூழல் நிலவ முயற்சி செய்வோம்.

மேலும் அடுத்த ஆண்டு முதல் திரைப்பட விழாவில் பங்கேற்கும் படங்களுக்கு விருதுகள் வழங்குவது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம் என்றார்.

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் தலைவர் கண்ணன், பொதுச் செயலாளர் தங்கராஜ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

திரைப்படங்கள் சென்னை பிலிம் சேம்பேர் மற்றும் வுட்லண்ட்ஸ் சிம்பொனி திரையரங்கம் ஆகியவற்றில் திரைப்படுகின்றன.

thamizhstudio@gmail.com


கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.