வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
கொட்டகைகள்
1
 
1
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  கொட்டகைகள்
   
 

கொட்டகைகள் (Theater, Touring Talkies, Tent) இந்த ஒரு வார்த்தைதான், இந்த சமூதாயத்தின் பல ஏற்றத் தாழ்வுகளை போக்கியது என்று சொன்னால் கூட அது மிகையாகாது. மனிதனின் பரிணாம வளர்ச்சிக்குப் பின் அவனிடம் தான்தான் பெரியவன் என்கிற அகங்காரம் குடிகொண்டது. உயர் சாதிக்காரன் வசிக்கும் தெருவில் தாழ்ந்த சாதிக்காரன் நடந்து செல்வதுக் கூட கேள்விக் குறிதான். ஆனால் திரைப்படங்களின் வருகை அத்தகைய ஏற்றத் தாழ்வுகளை ஓரளவிற்கு போக்கியது என்னவோ உண்மைதான். இன்று மலந்திருக்கும் இந்த சமத்துவ சமூதாயத்தின் தொடக்கமே கொட்டகைகள்தான்.

அங்கும் ஆரம்பத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தது உண்மை. ஆனால் காலப் போக்கில் அந்த ஏற்றத்தாழ்வுகள் காணமல் போய்விட்டன. கால சுழற்சியில் இன்றைய நவீன யுகத்தில் மல்டிப்ளெக்ஸ் எனப்படும் பல திரையரங்குகள் ஒரே இடத்தில் வந்தாலும் திரைப்படத்தின் ஆரம்பத்தில் இருதே நம்மோடு பயணிக்கும் இந்தக் கொட்டகைகள் என்றும் நம் மனதில் அழியாத பல நினைவுகளை ஏற்படுத்தியவை.

தமிழ்நாட்டில் ஆரம்பக் காலத்தில் இருந்தக் கொட்டகைகள், இப்போது தனது பொழிவை இழந்து வாடும் கொட்டகைகள், கால சுழற்சியில் தன்னையே இழந்த கொட்டகைகள், அந்தக் கொட்டகைகளில் புகழ் பெற்றவர்களின் அனுபவங்கள் என இப்பகுதி விரிகிறது.

இது சாதாராண விடயம் அல்ல. இந்தத் தகவல்களை சேகரிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. எனவே தமிழ் ஸ்டுடியோ.காம் வாசகர்களும் தங்களை இப்பணியில் இணைத்துக் கொள்ளலாம். உங்கள் கிராமத்தில் அல்லது நகரத்தில் இருந்த கொட்டகைகள் பற்றிய விபரங்களை எங்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம். குறைந்த பட்சம் இந்த ஊரில் இது போன்ற கொட்டகை ஒன்று உள்ளது என்ற தகவல் கூட எங்களுக்கு போதுமானது. மேல் விபரங்களை நாங்கள் சேகரித்துக் கொள்வோம். எனவே சிரமம் பாராமல் வாசகர்களும் இதில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

கொட்டகைகள் பற்றிய தகவல்கள் மட்டுமின்றி நவீன வசதிகளுடன் தமிழ்நாட்டில் இருக்கும் திரையரங்குகள் பற்றிய விபரங்களும் இங்கு இடம் பெரும். காரணம் கால சுழற்சியில் பின்னொரு நாளில் அத்தகைய திரையரங்குகளும், கொட்டகைகளாக மாறும் நிலை நேரலாம்.!.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9840698236, 9894422268

தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thamizhstudio@gmail.com

                                                                                                                                               உள்ளே



 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.