வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
கவிஞர்கள்
1
 
1
அக்பர் - பீர்பால்
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  எழுத்துக் கவிஞர்கள்
   
 
1)சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா அவர்கள் மதுரை மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டில் 1912 ஆம் ஆண்டு பிறந்தார் . சொந்த ஊர் சின்னமனூர் .கல்லூரியில் படித்த பொழுதே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைத்தண்டனையை அனுபவித்தவர் .தனது முழுவாழ்வையையும் இலக்கியத்தோடு கழித்தவர்.சி.சு.செல்லப்பா தனது 86 ஆவது வயதில் 18/12/1998 அன்று சென்னையில் சி.சு.செல்லப்பா காலமானார்.

சிறுகதைகள்: சரசாவின் பொம்மை,மணல் வீடு,சத்யாக்ரகி,அறுபது,கைதியின் கர்வம்,செய்தகணக்கு ,பந்தயம்,ஒரு பழம், நீர்க்குமிழி, பழக்கவாசனை,  சி.சு.செல்லப்பா சிறுகதைகள் (7 தொகுதிகள் சிறுகதை)வடிவாசல் - குறுநாவல் கவிதை :1)மாற்று இதயம் , 2) நீ இன்று இருந்தால்

கட்டுரை:  தமிழில் சிறுகதை பிறக்கிறது,தமிழில் சிறுகதை முன்னோடிகள், இலக்கிய விமர்சனம் , படைப்பிலக்கியம் , காற்று உள்ள போதே , ஏரிக்கரை , குறித்த நேரத்தில்,எல்லாம் தெரியும் , ஊதுபத்திப்புல் , மாயதச்சன், பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி நாவல்:1) ஜீவனாம்சம் , 2) சுதந்திரதாகம்

சுதந்திரதாகம் (சாகிதிய அகடாமி விருது பெற்றது)

2) ந.பிச்சமூர்த்தி

மணிக்கொடி இதழில் (1934) காதல் என்ற முதல் புதுக்கவிதையை எழுதிய ந.பிச்சமூர்த்தி அவர்கள் புதுக்கவிதை பிதாமகன் என்றழைக்கப்படுகிறார். "என் முயற்சிக்கு விட்மனின் புல்லிதழ் வித்திட்டது , அதைப் படித்த போது கவிதையின் ஊற்றுக் கண் தெரிந்தது.

தொடர்ந்து பாரதியின் வசனகவிதை என்கருத்தை வலுவடையச் செய்தது, இவற்றின் நிறைவாக கவிதைகளை எழுதத்தொடங்கினேன் - என்று காட்டு வாத்து முன்னுரையில் ந.பிச்சமூர்த்தி எழுதியிருக்கிறார்.

நடேச தீட்சிதர் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாக 15/08/1900 அன்று கும்பகோணத்தில் பிச்சமூர்த்தி பிறந்தார்.அவருடைய இயற்பெயர் வேங்கட மகாலிங்கம் . இவருக்கு முன்னாள் பிறந்த மூன்று குழந்தைகளில் இருவர் இறந்து விட்டதால் வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயரை , பிச்சை என்று இவருடைய பெற்றோற்கள் மாற்றி வைத்தார்கள் .பிச்சை , சுப்பு , குப்பு குப்பை என்று பெயர் வைத்தால் எமதர்மராஜன் இந்தஅற்பமான பெயர்கள் கொண்ட குழந்தைகளை அழைத்துச் செல்லமாட்டான் என்று ஒரு நம்பிக்கை . பிச்சமூர்த்தி அவர்கள் தனது எழுபத்தி ஆறாவது வயதில் 04-12-1976 அன்று காலமானார்.

பிச்சமூர்த்தியின் படைப்புகள்

சிறுகதைகள் : 1. பதினெட்டாம் பெருக்கு (2). ஜம்பரும் வேஷ்டியும் (3). மோஹினி (4). பிச்சமூர்த்தி கதைகள் (5). மாங்காய்த்தலை இரட்டை விளக்கு குடும்ப ரகசியம் (நாவல்) 8. காக்கைகளும் கிளிகளும் (சிறுவர் கதைகள்) மேலும் பல நூல்கள்..

சிக்கலோ, டம்பமோ இல்லாத ஒரு எளிய நீரோட்டம் போல எளிதாக வழுக்கிச் செல்கிற நடையில் பிச்சமூர்த்தியின் கதைகள் , மனிதனுக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் புதைந்து பார்த்த ஒரு முங்கு நீச்சுக்காரன் தரும் செய்திகளை கலையுருவ அழகின் தீய்ப்போடு மனசில் சூடு போடுகின்றன - வானமற்ற வெளி (பிரமிள்)

3) க.நா.சுப்ரமணியம்

கந்தாடை நாராயணசாமி ஐயர் சுப்பிரமணியம் (க.நா.சு) 31/01/1912 அன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் என்ற ஊரில் பிறந்தார் . தஞ்சாவூர் ,சிதம்பரம் , சென்னை , பெங்களூர் , மைசூர் , திருவனந்தபுரம் , புதுடில்லி ஆகிய நகரங்களில் வாழ்ந்திருக்கிறார் .16/12/1988 அன்று புதுடில்லியில் தன் மகள் வீட்டில் காலமானார்.

சூறாவளி , சந்திரோதயம் , இலக்கியவட்டம் ஆகிய சிற்றிதழ்களை நடத்திதன் வாழ்நாள் முழுவதையும் இலக்கியத்திற்காகவே செலவிட்டார்.மயன் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

க.நா.சு. நாவல்கள் : சர்மாவின் உயில் , பசி , வாழ்வும் தாழ்வும் ,சக்தி விலாசம் , பொய்த்தேவு , ஏழுபேர் , ஒரு நாள் , அசுரகணம் புழுதித்தேர்,ஏழுமழை , வக்கீல் ஐயா , மால்தேடி , ஜாதிமுத்து , வாழ்ந்தவர் கெட்டால் , ஆயுள் தண்டனை , கந்தர்வ கோலத்தில் கொலை , நடுத்தெரு , திருஆலங்காடு,ஆட்கொல்லி, கோபுர வாசல் , சமூக சித்திரம் , அவரவர் பாடு

சிறுகதைத் தொகுப்புகள் : மணிக்கூண்டு, ஆடரங்கு , கருகாத மொட்டுவிமர்சனம் : விமர்சனக் கலை , படித்திருக்கிறீர்களா ? உலகத்துச் சிறந்த நாவல்கள் , முதல் ஐந்து தமிழ் நாவல்கள் , இலக்கிய விசாரம் ,இந்திய இலக்கியம் , பத்து சிறந்த இந்திய நாவல்கள்

மொழிபெயர்ப்பு : அன்புவழி (ஸ்வீடிஸ் நாவல் ) ,தபால்காரம் (பிரெஞ்சு நாவல்),மதகுரு(ஸ்வீடிஸ் நாவல் ) , நிலவளம் (நார்விஜி நாவல்) , மிருகங்கள் பண்ணை(ஆங்கில நாவல்கள்)

க.நா.சு வின் மிகச் சிறந்த ஆக்கம் பொய்த்தேவு தான், இதற்கு முன் எழுதப்பட்டவற்றில் அ.மாதவையா , ராஜம் ஐய்யர் , வேதநாயகம் பிள்ளை ,ஆகியோரின் எழுத்துக்கள் வெறும் எழுத்துக்கள் வெறூம் முன்னோடி முயற்சிகள் மட்டுமே . நாவல் என்ற வடிவத்தை நோக்கி பிரக்ஞையுடன் எடுத்துவைக்கப்பட்ட முதல் எட்டு பொய்த்தேவு . ஆனாள் நாவலாசிரியருக்குத் தேவையான எதையும் நிகழ்த்தக் கூடிய புனைவு மொழி , விரிவான வாழ்க்கை அவதானிப்புகள்,புற உலகை நிகழ்த்தி காட்டும் திறன் ஆகியவை " பொய்த்தீவு " வில் இல்லைஎ ன்பதால் அது நாவலாக முழுமை பெறவில்லை - ஜெயமோகன்

4) பிரமிள்

அஜித்ராம் பிரமிள் - 20/04/1939 அன்று இலங்கையில் உள்ள திருகோணமலையில் பிறந்தார். தனது இருபது வயதிலேயே , தருமசிவராமு என்ற புனைபெயரில் கவிதைகளும் , கவிதைகள் குறித்த கட்டுரைகளையும் எழுத்து இதழில் எழுதத் தொடங்கினார். எழுபதுகளில் இவர் எழுதிய கட்டுரைகள் கசடதபற , அஃ , ஞானரதம் , சதங்கை , பிரக்ஞை, கொல்லிப்பாவை, லயம் மற்றும் மீறல் முதலிய பத்திரிகைகளில் பிரசுரமாயின -

பிரமிளின் கவிதைப்படைப்புகள் - கண்ணாடியுள்ளிருந்து , கைப்பிடியளவு கடல் , மேல்நோக்கிய பயணம்.

விமர்சனம் - விமரசன ஊழல்கள் , தமிழின் நவீனத்துவம் (எழுத்து கட்டுரைகள்)

கதை - லங்காபுரி ராஜா (இரு குறு நாவல்களும் இறு சிறுகதைகளும்) , ஆயி (குறுநாவல்) ,நட்சத்ரவாஸி (மூன்று நாடகங்கள்) , படிமம் (இலக்கியத் தொகுப்பு) , சாது அப்பாதுரையின் தியானதாரா (சாது அப்பாதுரையின் வரலாறும் வாழ்வும்), ஸ்ரீலங்காவின் தேசிய தற்கொலை (சரித்திரம்)

நான் என் கவிதைகளின் மூலம் மெட்டா ·பிஸிக்சை உருவகப்படுத்துகிறேன் . நான் புதுமையான எல்லா எண்ணங்களுடனும் எனது சிந்தனைகளுக்குத் தெளிவு கிடைப்பதற்காகப் போராடுகிறேன் . இந்த மல்யுத்தம் தான் எனக்கு காவிய ரசனையையும் அளித்தது .நான் ஒரு புதுமை கவிஞராக ஆவதற்கோ ,சர்ரியலிஸ்டிக் கவிஞராவதற்கோ கவிதை எழுதவில்லை . நான் என்னையே தேடிச் செல்கிறேன் . இத்தேடலில் தான் என்னுடைய சாராம்சம் உள்ளது. தேடலின் போதுநான் நடந்து செல்லும் பாதை கவிதையினுடையது - பிரமிள் (மீறல் சிறப்பிதழ்)

5) வைத்தீஸ்வரன்

1935 ஆம் ஆண்டில் கோயம்பத்தூரில் பிறந்த கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன் கல்லூரி மேற்படிப்பிற்காக சென்னைக்குச் சென்று , பின் சென்னையிலேயே குடியேறிவிட்டார் . இவர் இந்தியன் ஏர்லைன்ஸில் விமான அதிகாரியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

எழுத்து , நடை , கணையாழி , கசடதபற , ஞானரதம் சதங்கை, கொல்லிப்பாவை ,நவீனவிருட்சம் , சுபமங்களா முதலிய இதழ்களில் இவர் கவிதை எழுதியுள்ளார்.

உதய நிழல் ( 1970 ) , நகரச்சுவர்கள் (1994) விரல் மீட்டிய மழை(1996)ஆகிய கவிதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டிருக்கிறார் .இது தவிர வைத்தீஸ்வரன் கவிதைகள் என்ற தொகுப்பு நூலும் வெளிவந்திருக்கிறது.

6) தி.சோ.வேணுகோபாலன்

தி.சோ. வேணுகோபாலன் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 1929 ஆம் ஆண்டு பிறந்தார். பொறியியல் பட்டதாரி. கோடைவயல் (1965) , மீட்சி விண்ணப்பம் (1977) ஆகிய இரு கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார் . தி.சோ.வேணுகோபாலன் கேரளாவில் உள்ள அழகப்பாநகரில் உள்ள அழகப்பா பாலிடெக்னிக்கில் பேராசிரியாராகப் பணிபுரிந்திருக்கிறார் .

7) சி.மணி

ஆங்கில இலக்கியத்தில் நன்கு பரிச்சயமுள்ள சி.மணியின் இயற்பெயர் எஸ்.பழனிச்சாமி ஆங்கிலப் பேராசிரியப் பணிபுரிந்தவர். இவர் வே.மாலி என்ற பெயரிலும் கவிதைகள் எழுதியிருக்கிறார் . பல ஆங்கில ஹைக்கூ கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் .வரும் போகும்(1974) , ஒளிச்சேர்க்கை (1976) என்ற கவிதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார்.

   << முன் பக்கம்  | 1 2 3                                                                                                                     அடுத்தப் பக்கம் >>


கருத்து பதிவு

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.