கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

திரைப்படம் சார்ந்த பயணம் பற்றிய அறிவிப்புகள், கட்டுரைகள் இங்கே இடம்பெறும்.
 
 

 

 

 

 
     
     
     
   
திரைப்பயணம்
1
 

வணக்கம்,

தமிழ் ஸ்டுடியோவின் புதிய பகுதி - திரைப்பயணம்.

வணக்கம் நண்பர்களே,

குறும்பட வட்டம், குறும்படங்கள் / ஆவணப்படங்கள்/ உலகப்படங்கள் திரையிடல், பௌர்ணமி இரவு, குறுந்திரைப் பயணம், நூல் வெளியீட்டு விழா, இலக்கிய நிகழ்வுகள், குறும்பட பயிற்சிகள் / ஆலோசனை, திரைப்பட பயிற்சியகம் ஆகியவற்றை தொடர்ந்து தமிழ் ஸ்டுடியோவின் இன்னொரு புதியப் பகுதி திரைப் பயணம்.

திரைப்படங்களை தங்களின் வாழ்வின் மிக முக்கியமான அங்கமாக கொண்டுள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு அதுப் பற்றிய சரியான புரிதல் இல்லை. திரைப்பட ரசனை கூட இங்கே சரியாக வளர்க்கப்படவில்லை. திரைப்படத் துறையில் இருந்தே முதல்வர்கள் தொடர்ச்சியாக அரியணை ஏறும் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்லூரிகளில் திரைப்படம் பற்றிய அடிப்படை பாடம் இல்லை. திரையங்களில் தவமிருந்து சிலத் திரைப்படங்களை பார்க்கும் ரசிகனுக்கு உரிய அங்கீகாரம் இங்கே இல்லை. திரைப்படத் துறையில் நடிக / நடிகையரை பார்த்து பிரமித்துப் போகும் மனநிலை இங்கே இன்னும் அதிகம். திரைப்படம் பற்றிய மாயை இங்கே இன்னும் ஒரு நூற்றாண்டு மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

இப்படியான சூழ்நிலையில் முன்னமே திரைப்பட மாயை உடைப்பதில் தமிழ் ஸ்டுடியோ சீரியப் பங்காற்றி வருகிறது. ஆர்வம் உள்ள அனைவருக்கும் முறையான பயிற்சியளித்து அவர்களாலும் திரைப்படம் எடுக்க முடியும் என்பதை தமிழ் ஸ்டுடியோ நிரூபித்து வருகிறது. மாற்று ஊடக வளர்ச்சியில் தமிழ் ஸ்டுடியோ பயணம் இன்னமும் விரிவடைந்துக் கொண்டேப் போகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ் ஸ்டுடியோவின் புதிய திட்டம், திரைப்பயணம். இதன் படி இனி மாதம் ஒருமுறை / அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆர்வமுள்ள நண்பர்களை இணைத்து தமிழ் ஸ்டுடியோ இந்த திரைப்பயனத்தை தொடர்ந்து நடத்தும். திரைப்படம் சார்ந்த இடங்களுக்கு சென்று அந்த இடத்திற்கு திரைப்படங்களுக்கு உள்ள தொடர்பு, அங்கே இருக்கும் திரைப்படம் சார்ந்த தகவுகள், திரைப்படத் துரையின் வளர்ச்சியில் அந்த இடத்தின் பங்கு, அந்த இடத்தில் இருந்து வந்த திரைப் பிரபலங்கள் போன்ற திரைப்படத் துறைக்கும் பயணம் செல்லும் இடத்திற்கும் உள்ள பிணைப்பை இந்த திரைப்பயணம் விவரிக்கும்.

இதன்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில் (அதிகபட்சம் பத்து நண்பர்கள்) இணைந்து இந்த திரைப்பயனத்தை மேற்கொள்வார்கள். அந்த இடத்தின் திரைப்படத் துறை சார்ந்த ஒருவர் அனைவரையும் வரவேற்று திரைப்படத் துறைக்கும், அந்த குறிப்பிட்ட இடத்திற்கும் உள்ள பிணைப்பை விவரிப்பார்கள். இதுமட்டுமின்றி, திரைப்பட ரசனை, படங்களின் வெற்றி தோல்வி, உலகப் படங்கள் குறித்து விவாதமும் நடைபெறும். மேலும் குறும்படம், ஆவணப்படம், உலகப் படங்கள் திரையிட்டு அதுப் பற்றியும் விரிவான விவாதம் நடைபெறும் (இது எல்லாப் பயன்களிலும் நடைபெறாது. நேரத்தைப் பொறுத்தே இவையனைத்தும் உறுதி செய்யப்படும்).

இதற்கு சிறியக் கட்டணம் உண்டு.

 

 
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS திரைப்பயணம்  

திரைப்பயணம்

   
# பயணங்கள் நாள்
   
  அறிவிப்பு

 

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

  எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் இலக்கியம் குறும்பட வட்டம்
Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்படம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் நாடகம் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு களம் படிமை
    திரைப்பட இதழ்கள் குறும்பட உதவிகள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம் - All rights reserved.

Best viewed in Windows 2000/XP |  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome


Concept, design, development & maintenance by thamizhstudio.com