வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
படத்தொகுப்பு
1
 
1 அறிமுகம்
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  படத்தொகுப்பு
   
 
 

படத்தொகுப்பைப் படிப்போமா?

பிறந்தது முதல் இன்று வரை இந்தத் திரை உலகம் தன் பாதையில் போராட்டங்களை சந்தித்து வந்தது, வருகிறது, இனிமேலும் வரும் போராட்டங்களையே சந்தித்து வந்தாலும் சோதனைகளை வென்று மனித வாழ்க்கையில் சாதனைகளைப் படைப்பது மனிதனின் போராட்டங்களைக் கதையாகச் சொல்லித்தான் உலகின் எந்த இடத்திலும் நான் நின்றாலும் அங்கும் அந்த மண்ணின் அந்த மனிதர்களின் கதையைச் சொல்லி நம்மை பரவசப்படுத்தும் கதை சொல்லிகள் இருப்பர்.

மற்றவர்களின் கதையைக் கேட்பதற்கு எந்த மனிதனுக்குத்தான் ஆசை இருக்காது. நேரத்திற்கு ஒரு பொருத்தமான கதையைக் கேட்டும் சொல்லியும் பாட்டிமார்கள் நம்மைப் பாங்குற வளர்த்த சமுதாயம் இது. காலை நேரத்துக்கும் நடுப்பகலுக்கும் மாலைக்கும் இரவுக்கும் என்று பாடும் பாட்டையே குறிப்பிட்ட ராகத்தின் அடிப்படையில் பாட வைத்து பரவசப்படுத்திய சமுதாயம் அல்லவா நமது சமுதாயம்.

குறிப்பிட்ட செய்தி ஒன்றைச் சொல்ல வேண்டுமா? அதைக் குறிப்பிட்ட பத்திரிகையில் பிரசுரித்து அதைப் பரப்பியவர்கள் நம் பெரியவர்கள். ஒவ்வொரு ஊடகத்துக்கும் ஒரு வகை கதை என்று உணர்ந்து கொண்டு உரைத்தார்கள். பத்திரிகைகளில் மட்டும் அன்றி பார்க்கும் திரைப்படங்களைப் படைக்கும் நிறுவனங்களுக்கும் பொருத்திப் பார்த்தார்கள். பிரம்மாண்டமா அதற்கொரு ஜெமினி. குடும்பப் பாங்கைச் சொல்லும் மெலோ டிராமாக்களா அதற்கொரு ஏவிஎம். வல்லவர்களின் சாகசத்தைச் சொல்லும் மாடர்ன் தியேட்டர்ஸ். ராஜா ராணிக் கதைகளா அதற்கொரு விஜயா வாஹினி. பல மொழிகளிலும் சொல்ல பொருத்தமான பிரசாத்.

இந்தப் பாதையில் பயணம் செய்த இயக்குநர்கள் ஏராளம். குடும்பக் கதைகளா? அதற்கொரு கே எஸ் கோபாலகிருஷ்ணன். குடும்பத்துடன் கொஞ்சப் புரட்சியும் கலக்க வேண்டுமா இதோ கிருஷ்ணன் பஞ்சு. அன்றே ராமாயணம் தந்த கே சோமு. நேற்று புராணப் படங்களுக்கு ஏ பி நாகராஜன், கே சங்கர், சமுக போராளிகள் கதைக்கென்று ஒரு பந்துலு சரித்திரக் கதைகளா அதற்கென்று ஏஎஸ்ஏ சாமி. இவ்வாறு இயக்குநர்கள் இந்த திரை உலகிற்குச் சொல்லிக் கொடுத்த பாடம் திரைத் தயாரிப்பே திரைக் கதையில் தான் தொடங்குகிறது என்பதைத் தான் அந்த திரைக்கதையை மக்களின் மனதில் இணைப்பதே எடிட்டிங் எனும் படத்தொகுப்பு என்பதை எடிட்டர்களாக இருந்து இயக்குநர்களாகிய கிருஷ்ணன் பஞ்சு. பீம்சிங், திருமுகம் முதலியோர் காட்டினார்கள். கதை சொல்லிகளை நம் முன்னே இயக்குனர்களாகக் காட்டியதும் இந்த படத்தொகுப்பு தான்.

ஆனால் இந்த படத்தொகுப்பை வெறும் தேவையற்ற காட்சிகளை நீக்குகின்ற இணைப்பாளராக நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். நமது மக்களில் பெரும்பாலோர் வீட்டில் குப்பைகளைக் கூட்டத் தள்ளுகின்ற வேலைக்காரனின் வேலை அது என்று எண்ணிக் கொண்டு உள்ளார்கள். ஆனால் அதே தொகுப்பாளர்கள் தான் வெறும் சமாதியையே தாஜ்மகாலாக்கும் கலைஞர்கள் என்பதை மறந்து விடுகின்றனா.

கதையின் கருவிற்கு ஏற்றாற்போல காட்சிகளை இணைத்துக் காணும் ரசிகர்களைக் கவிஞர்களாக்கும் படைப்பாளிகள் அவர்கள். இதைத்தான் கோபார்ட் என்ற பிரெஞ்சு இயக்குனர் ப்ரீத்லெஸ் என்ற படத்தை இயக்கியவர் சொல்கின்றார். 'திரைப்படம் என்பதே ஒரு போர்க்களம், அங்கே காதல் வெறுப்பு நடிப்பு வன்முறை இறப்பு' என்று எல்லாம் ஒரு வார்த்தையில் நின்று காட்டும் எமோசன் உணர்வுக்குவியல் ஆகும். மேலும் கோபார்ட் கூறுகின்றார். 'இயக்கம் என்பது திரைத்துறையில் அதுதான் பார்வை, எடிட்டர் என்பது இதயத்துடிப்பு' என்கின்றார், ''பாரடைஸ் கான் பை'' என்ற படத்தின் இயக்குனர் ப்ரௌன் லோ எழுதுகின்றார் எடிட்டிங் என்பது திரைப்படத்தை இரண்டாவது முறை இயக்குவதாகும் என்று. எனவே நல்ல திரைப்படத்தில் எடிட்டிங்கின் ஆரம்பமே அந்தப் படத்தின் திரைக் கதையை எழுத ஆரம்பிப்பதில் தான் தொடங்குகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இயக்குனரும் கதாசிரியரும் இணைந்து பணியாற்றும் போது காட்சிகளின் இணைப்பும், வசனங்களின் தொகுப்பு முதலிய திரைத்தாயரிப்பு வேலை செய்யும்போது அவர்கள் பணி கட்டிங் எனப்படுகிறது. சான்றாக ரஷியாவில் லியோ டால்ஸ்டாயின் வார் அன்ட் பீஸ் கதை திரைப்படம் ஆகும்போது அந்தப்படம் பல தொடர் இரவுகளில் தொடர்ச்சியாக காட்டப்பட்டது. ஆனால் பாராட்டு பெறவில்லை. ஆனால் அதேசமயம் ராபர்ட் போல்ட்டும் டேவிட்லீனும் இணைந்து சுருக்கித் தயாரித்த டாக்டர் ஜிவாகோ பெரும் பாராட்டைப் பெற்றது. ஏனெனில் டேவில் லீனின் தயாரிப்பில் நடந்தது எடிட்டிங் ஆகும். அதற்கு அவர்கள் கையாண்ட வழிமுறைகள் ஆகும். டேவிட் எடிட்டராக இருந்தது இந்த வெற்றிக்குக் காரணம் ஆகும்.

டேவிட் தொகுப்பில் தந்தது சரியான பேசிங் அதனால் கதையின் உயிர் ரிதம் வெளிப்பட்டது. இங்கே பேசிங் என்பது ஷாட்ஸ்களின் காட்சிகளின் நீளத்தை வைத்து இணைக்கப்படும் அம்சம் ஆகும். அதனால் ஏற்படும் காட்சியின் உயிர் அது தான் ரிதம் எனும் நயமம் ஆகும். இந்த ரிதம் தான் படத்தொகுப்பின் காரண கர்த்தாவாக உள்ள அம்சம்.

அதனால்தான் படத்தொகுப்பில் அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் ரசகிர் மனதில் தாக்கம் ஏற்பட இயக்குநரின் ஆளுமை வெளிப்படுகிறது. இங்கே தான் தேர்வு பணி நடைபெறுகிறது. இது எப்போது வெட்டவேண்டும்? எதை வெட்டவேண்டும் என்று காட்டுகிறது. இதனால் கதை அமைப்பு என்று கட்டுமானம் ஏற்படுகிறது. கதையின் முழுமையில் இணைக்கப்படும் காட்சி தனக்குரிய இடத்தைப் பெறுகிறது. சொல்ல வந்த கதையின் கருத்தைக் காட்சி நிற்கும். இதனால்தான் ரிதம் என்பது திரைமொழியில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. நமது கோவில்களில் உள்ளேயும் வெளியேயும் பல வேலைப்பாடுகள் பார்த்தாலும் நமது ஆத்மாவைக் கவருவது அந்த கர்ப்பகிருகம்தானே. அதுபோலத்தான் எங்கும் நிறைந்துள்ள முக்கியமான ரிதம்தான் காட்சிக்கு அமைப்பும் கருத்தும் அளிக்கிறது. அப்போதுதான் கர்ப்பகிருகத்தில் ஒளிவிடும் விக்ரத்தின் முகம்போல எமோஷன் தலை நிமிர்ந்து நின்று நம்மை ஆட்கொள்கிறது.

இதனால்தான் ஆங்கில இயக்குநர் சஸ்ஸன்ஸ் திலகம் ஆல்பிரட் ஹிட்ச்காக் சொன்னார் 'படத்தின் வேலை ஆரம்பம் ஆவது திரைக்கதை எழுதுவதில்தான். அது என் பிரைனில் முற்று பெறுகிறது. இதயத்தில் திருப்தியைத் தந்து எமோஷனல் இம்பாக்ட் அடைகிறது. அப்போதுதான் திரைப்படம் எழுதப்படும் நிலையைத் தாண்டி பேசப்படும் நிலையைக் கடந்து நம்மை அனுபவத்திற்கு உள்ளாக்குகிறது.

இந்த ரிதம் தான் பல ஊடகங்களுக்குக் கதையின் கருவை வழி நடத்துகிறது. இதுதான் சினிமாவாகவும் நாடகமாகவும் செய்தித்தாளில் குறிப்பாகவும் நாவலாகவும் பல்வேறு பரிமாணங்களை அடைகிறது. இதனால்தான் ரிதம் கட்டுப்படுத்துகின்ற படத்தொகுப்பு பணி எடிட்டிங் என்ற சிறப்பை அடைகிறது. அது காட்சிகளின் தொகுப்பு, ஷாட்ஸ்களின் தொகுப்பு காட்சிக்குள் காட்சிக்குரிய காரணம் இவைகளை வழிப்படுத்துவது ரிதம் ஆகும். இந்த ரிதம் தான் கதையின் கருவின் முகம் காட்டி அது பயணிக்கின்ற பாதையில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டுகின்றது. அதனால்தான் நமக்கு கருவின் நிலை நமக்குக் கிடைக்கறிது. அதனால் டெம்போ நாம் உணர்கிறோம், இப்படி ரிதம் என்ற ஒன்றைத் தம் கைக்குள் வைத்துக்கொண்டு நுகர்வோரின் மனதில் கதையை இணைக்க எடிட்டிரால் முடிகிறது.

படத்தொகுப்பில் ஷாட்ஸ் களின் இணைப்பதால் மட்டும் ரிதம் ஏற்படுவது இல்லை. அது அந்த ஷாட்ஸ்களின் உள்ளடக்கும் கருத்தினாலும் உருவத்தை அடைகிறது. பிறகு தான் அது உணர்வைத் தருகிறது. இப்படி உணர்வோடு விளையாடி நம் உள்ளத்தைத் தொடுவதால்தான் கட்டிங் என்பது உருமாறி எடிட்டிங் என்று உணரப்படுகிறது.

படத்தொகுப்பின் உயிர் காற்று இந்த ரிதம் தான் சிறுகதையாகவும் நெடுங்கதையாகவும் பாடலாகவும் கவிதையாகவும் வெவ்வேறு உருவங்களை அடைகிறது. இங்கே உருவமாற்றங்களால் படத்தொகுப்பு முறைகளும் மாறுபடுவதை நாம் உணரவேண்டும். இதனால் காட்சி இணைப்பு முறைகளும் மாறுபடுகின்றன. காட்சிகளின் அர்த்தங்களும் மாறுபடுகின்றன. ஆகத் திரையின் உருவ உள்ளடக்க மர்மமே இந்த எடிட்ங்கில் தான் உள்ளது. இங்கே ஒரு உதாரணம் எடுத்துக்கொண்டு எளிதாக உணரலாம். வங்க இயக்குனர் ரித்விக் கட்டக் 'அஜாந்தரிக்' என்ற படம் எடுத்தார். அதில் அவரின் தோழர் பாளி பானர்ஜி கதாநாயகன். கட்டக், காளியிடம் கூறியதாக சு கிருஷ்ணமுர்த்தி 'சினிமா அன்ட் ஐ' என்ற கட்டக்கின் புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து அதில் கூறியுள்ளார். அவர் (ரித்விக்) என்னிடம் சொன்னார். 'காளி, நீ காத்திருந்து பார். இந்தப் படத்தின் உண்மையான மர்மம் படப்பிடிப்பில் இல்லை. எடிட்டிங்கிலும் இசையிலும் தான் இருக்கிறது. என் நடிக வாழ்வில் முதல்முறையாக நான் படத் தயாரிப்பின் இந்த முக்கியமான அம்சத்தைப் பற்றி அதாவது எடிட்டிங், உசிதமான பின்புல இசை இவை பற்றி உணர்ந்து கொண்டேன்''. இவ்வாறு கருத்துக்களைக் கருத்தரிக்கவும் அவற்றை முழு உருவமாக வெளிப்படுத்தவும் எடிட்டிங்கினால்தான் முடிகிறது என்பதை உணர்ந்தோம்.

படத்தொகுப்பு தொழில் நுட்பங்களை இன்னும் விரிவாக நாம் தெரிந்து கொள்ளத் திரைப்படத்தைப் பற்றி 30 சீரியசான மனப்போக்கை வளர்ப்பது முக்கியமாகும். ஆகையால் நாம் அவ்வப்போது செய்ய வேண்டியது என்னவென்றால் ரோம், தி ஓப்பன் சிட்டி, பைசைகிள் தீப்' போன்ற திரைப்படங்களைப் பார்க்கவேண்டும். ரித்விக் சொன்ன இந்த அறிவுரையைப் பின்பற்ற நாம் ஆரம்பிப்போமா?

உங்கள் வினாக்கள் மற்றும் பாடங்களில் ஏற்படும் ஐயங்கள் தீர தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

thamizhstudio@gmail.com


இப்பகுதி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை (15 நாட்களுக்கு) புதுப்பிக்கப்படும்.


உள்ளே

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.