வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
சார்லி சாப்ளின்
1
 
1 ஓர் அறிமுகம்
1
1 பகுதி - 1
1
1 பகுதி - 2
1
1 பகுதி - 3
1
1 பகுதி - 4
1
1 பகுதி - 5
1
1 பகுதி - 6
1
1 பகுதி - 7
1
1 பகுதி - 8
1
1 பகுதி - 9
1
1 பகுதி - 10
1
1 பகுதி - 11
1
1 பகுதி - 12
1
1 பகுதி - 13
1
1 பகுதி - 14
1
1 பகுதி - 15
1
1 பகுதி - 16
1
1 பகுதி - 17
1
1 பகுதி - 18
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1  
1  
1  
1  
1  
1  
 
  சார்லி சாப்ளின்
 


சாப்ளின் நிச்சயம் ஜினியஸ் தான். தன்னுடைய படங்களில் சிறப்பான தரத்தை எதிர்பார்ப்பவர். ஒரளவு மக்களின் நாடியையும் தெரிந்து வைத்திருந்தார். அதனால் தான் தொழிலுக்கு வந்து சில நாட்களிலெயே அவரால் உன்னத நிலையை அடைய முடிந்தது. ஆனால் யானைக்கே அடி சறுக்கும், சாப்ளினுக்கு?

சறுக்கியது. சறுக்களின் முதல் பாகம் அவரின் சொந்த வாழ்க்கையில் தொடங்கியது. "மில்டரிட் ஹாரிஸ்" என்னும் நடிகையை சாப்ளின் மணந்தார். சதா சர்வ காலமும் சினிமாவைப் பற்றி மட்டும் சிந்திக்கும் சாப்ளினால் அவரின் மண வாழ்க்கையை கவனிக்க இயலவில்லை. அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தை மூன்று நாட்களிலேயே இறந்தது. சாப்ளின் வருத்தப்பட்டாலும் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை.

தன் சினிமா வேலைகளை கவனிக்கத் தொடங்கினார். இது தம்பதிகளுக்குள் விரிசலை ஏற்படுத்தி விவாகரத்து வரை சென்றவிட்டது. சிதறிய கவனத்தால் இரண்டு படங்கள் தடுமாறின ஒன்று ’Sunnyside’ இன்னொன்று ’A days pleasure’.

சன்னிசைட் திரைப்படத்தில் சாப்ளின் விடுதியில் வேலை செய்பவராக வருவார், அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு விவசாயின் மகளான எட்னா மீது காதல் கொள்வார், ஆனால் எட்னாவோ அந்த ஊரில் விடுதியில் தங்க வரும் ஒரு அழகான பணக்காரரை காதலிப்பார். காதலில் தோல்வியுற்ற சாப்ளின் தன் வாழ்க்கயை பழையபடி தொடருவார்.

இந்தப் படம் ஏன் தோல்வியடைந்தது? என்று முதலில் தெளிவாக சொல்ல முடியவில்லை. சாப்ளின் தன் படங்களுக்கே உரிய அனைத்து விஷயங்களையும் வைத்திருந்தார். இது வரை வெற்றி பெற்றுவந்த பார்முலா, ஒன்றா இரண்டா 30௦க்கும் அதிகமான படங்கள், இப்பொழுது தோல்வி என்றால்?

கொஞ்சம் யோசித்த பின் சாப்ளினுக்கு விளங்கியிருக்கலாம் ஆனால் அவர் அதற்குள் அடுத்த படமான ‘A Days Pleasure’ எடுத்துவிட்டார். இந்த முறையும் மக்களிடம் பெரிய வரவேற்பில்லை.

பொறுமையாக உட்கார்ந்து ஆரய்ந்து அடுத்தப் படத்தில் இப்படி ஏற்ப்படாதவாறு பார்த்துக்கொண்டார். முதலில் தன்னுடைய படங்களில் வரும் க்ளிஷ்க்களை அகற்றினார். மீண்டும், மீண்டும் ஒரே மாதிரியான நகைச்சுவை காட்சிகள். இரண்டாவது படத்தில் இன்னொரு தவறையும் சாப்ளின் செய்திருந்தார்.

போகிறப் போக்கில் நகைச்சுவை தானே என்று கருப்பினத்தவரை கேலி செய்திருந்தார். இது சற்றே விமரிசிக்கபட்டு மறைந்துவிட்டது. சாப்ளின் படங்களில் நகைச்சுவை என்பது மற்றவரை அடிப்பதில் மட்டும் தான் வருகிறது என்பதை சாப்ளின் மாற்றவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

‘A Days Pleasure’ படத்தில் இன்னொரு காட்சியில் கப்பலில் திண்பண்டங்களை விற்கும் சிறுவனை சாப்ளின் தாக்குவார் இது பெரும் கண்டனங்களை சாப்ளினுக்கு கொண்டுவந்தது.

சாப்ளின் நிச்சயம் ஒரு ஜீனியஸ் தான், ஆனால் அவரை அந்த துறையில் இன்னும் மெருகேர செய்தது இந்த திரைப்படத் தோல்விகள் தான். அதுவரை நகைச்சுவையை மையபடுத்தி அதில் லேசாக சமுதாயத்தை சாடிய சாப்ளின். சமுதாய விசயங்களை நகைச்சுவையாக்கியது இதன் பின் தான்.

சாப்ளினின் மிகச் சிறந்த படங்கள் என்று சொல்லப்படும் திரைப்படங்கள் இதன் பின் உருவாகியவை தான்.

தோல்விகள் கண்டு துவண்டு விடாமல் தன்னை மெருகேற்றிக் கொண்டதால் சாப்ளின் அடுத்து நமக்கு கொடுத்த திரைப்படம் தான் ‘The KID’. இன்றாளவும் சினிமா ரசிகர்களாலும், சினிமாப் படைப்பாளிகள், விமர்சகர்கள் என் அனைவராலும் இன்றளவும் கொண்டாடப்படும் படம்.

தன் வாழ்க்கயில் மிக முக்கிய சினிமாவாக இந்தப் படத்தை எத்தனையோ பிரபலங்கள் வைத்து மகிழ்கிறார்கள். அந்த விதத்தில் சாப்ளினின் அறிவை வெளியே தெரியவர காரணமாக இருந்த தோல்விகளுக்கு தான் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.

Shoulder Arms:

முதலாம் உலகப் போர் சமயம், உலகமே போரிட்டுக் கொண்டிருக்க சாப்ளின் சினிமா வேலையில் முழுகியிருந்தார். இதனால் பல விமர்சனங்கள் வந்து சாப்ளின் மீது விழுந்தது.

சாப்ளின் இங்கிலாந்து குடிமகன். அங்கே இங்கிலாந்து போரில் பங்கேற்றிருக்க இங்கே இவர் சுகமாக இருப்பதா? இது தான் நாட்டு பற்றா?

இந்தப் பிரச்சனையை சாப்ளின் எளிதாக சமாளித்துவிட்டார். காரணம் சாப்ளின் வேலையில்லாமல் அலையும் போதே ராணுவத்திற்க்கு விண்ணபித்து அவர்களால் நிராகரிக்கபட்டிருந்தார்.ஆனால் பணத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா போரில் இறங்கிவிட்டது.

சாப்ளின் இந்த முறை ராணுவ விரர்களின் வாழ்க்கையை ஒரு படமாக தயாரித்தார். அது மட்டுமில்லாது போருக்கான பத்திரங்களை விற்று போர் நிதி திரட்ட பெரும் உதவியாக இருந்தார்.

இவரும், இவரின் நண்பரும், நடிகருமான ரிச்சர்ட் ஃபேர்பேங்க்சும் (இவரைப் பற்றி விரைவில் விரிவாகப் பார்ப்போம்) மக்கள் முன் தோன்றி பத்திரங்களை விற்க தொடங்கினர். கட்டுக்கடங்காத கூட்டம், சாப்ளினுக்கு இது இன்னும் புகழை தேடித் தந்தது. நிறைய நிதியும் திரட்டி அரசாங்கத்திற்கு கொடுத்தார். அதே ஆர்வத்தில் அவர் நடித்து இயக்கிய படம் ’Shoulder Arms’. இந்த திரைப்படத்தில் சாப்ளின் ஒரு ராணுவ வீரராக வந்து தனக்கே உரிய நகைச்சுவை காட்சிகளின் மூலம் மக்களை மகிழ்வித்தார்.

அதே சமயம் நகைச்சுவை காட்சிகளினூடே ராணுவ விரர்களின் கஷ்டமான வாழ்க்கயையும் படம்பிடித்து காட்டினார்.

இதில் இன்னொரு விசேஷம், சாப்ளின் நேரடியாகவே உண்மையான நாட்டின் அதிபர்களை இதில் கதாபாத்திரங்களாக வைத்திருந்தார்.படம் அவருக்கு பல சிக்கல்களை விடுவித்து, புகழையும் தேடிக்கொடுத்து.

அடுத்து நாம் சாப்ளினின் ‘The Kid’ திரைப்படத்தை அலசி ஆராய்வோம்.




சாப்ளின் வருவார்....

    அடுத்து



thamizhstudio@gmail.com

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.