வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
சார்லி சாப்ளின்
1
 
1 ஓர் அறிமுகம்
1
1 பகுதி - 1
1
1 பகுதி - 2
1
1 பகுதி - 3
1
1 பகுதி - 4
1
1 பகுதி - 5
1
1 பகுதி - 6
1
1 பகுதி - 7
1
1 பகுதி - 8
1
1 பகுதி - 9
1
1 பகுதி - 10
1
1 பகுதி - 11
1
1 பகுதி - 12
1
1 பகுதி - 13
1
1 பகுதி - 14
1
1 பகுதி - 15
1
1 பகுதி - 16
1
1 பகுதி - 17
1
1 பகுதி - 18
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  சார்லி சாப்ளின்
 


The Great Dictator

பெயர் : த கிரேட் டிக்டேடர்
ஆண்டு: 1940
நேரம்: 125 நிமிடம்.
இயக்கம்: சார்லி சாப்ளின்.
நடிகர்கள்: சாப்ளின், பவுல கோடார்ட்

கதைச் சுருக்கம்

சார்லி சாப்ளினின் முதல் முழு நீள பேசும் படம். சாப்ளின் தன் தொழிலை வெறும் பணம் சம்பாதிக்கும் கருவியாக, அவர் பார்க்கவில்லை அதனால் தான் தான் சம்பாதிக்கும் அனைத்தையும் நல்ல படமெடுக்க செலவு செய்து அனைத்துப் படங்களையும் அவரேதான் தயாரித்தார். அந்த காலகட்டதில் தன் படங்களின் வழியே சமுதாயத்திற்க்கு பல செய்திகளை சொல்லி கொண்டிருந்த சாப்ளின், இரணடாம் உலக போர் சமயத்தில் ஜெர்மனியில் யூத மக்களுக்கு கொடுமைகள் இழைக்கும் ஹிட்லரை கேலி செய்து படமெடுக்க முடிவு செய்தார். அதன் வெளிப்பாடே உலகின் மிக பெரிய திரை பொக்கிஷமான தி கிரேட் டிக்டேடர்.

ஒரு சாதாரண மாறு வேட கதைதான், டுமேனியா என்ற நாட்டையே ஆட்டி படைக்கு சர்வாதிகாரி ஹென்கெல், தனது பக்கத்து நாட்டு அதிபரான நெப்போலியனுடன் ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திடுகிறார். அதன்படி இரு நாட்டு ராணுவமும் இணைந்து உலகை கைப்பற்ற புறப்படுகின்றன. இன்னொரு பக்கம் நாட்டில் உள்ள யூதர்களை கண்டுபிடித்து அழிக்குமாறு உத்தரவிடுகிறார் அதிபர். அதன் படி ராணுவ பணியிலிருந்து விடுபட்டு தனது முடித்திருத்தும் கடையை நடத்த வரும் யூதரை ராணுவம் சிறைப்பிடிக்கிறது. முடித்திருத்துபவரும், நாட்டின் அதிபரும் ஒரே உருவத்தில் இருக்கிறார்கள். இந்த சமயத்தில் ஒரு முறை வேட்டைக்கு செல்லும் அதிபர் மரணமடைகிறார். அதே நேரம் ஜெயிலிருந்து தப்பிக்கும் முடி திருத்தும் நபரை அதிபர் என நினைத்துக் கொண்டு பாதுகப்பு அதிகாரிகள் அழைத்து செல்கிறார்கள்.

மக்களுக்கு உரையாற்றும்போது யூத கொடுமைகளை நினைக்கும் அந்த முடி திருத்துபவர், உலக ஒற்றுமையையும் மனித நேயத்தையும் பற்றி உரையாற்றுகிறார். மக்கள் ஆர்பரித்து ஒன்றாக இணைய படம் முடிவடைகிறது.

ஜெர்மெனி அதிபர் ஹிட்லரின் கொடுர மனித அழிப்பை கேள்விபட்ட சாப்ளின், ஒரு முறை தன் நணபரை சந்திக்க சென்றபோது அதை பற்றி இருவரும் பேச தொடங்கினார்கள். அப்போது அவர் நண்பர், ’நீ கூட தான் ஒரு சாயலில் ஹிட்லர் போலிருக்கிறாய்’ என்று சொல்ல உடனே சாப்லீனுக்க இந்த திரைபடத்தின் கரு உதித்தது. நனபர் ஒரு வேளை நாடோடியின் மீசையையும் ஹிட்லரின் மீசையை வைத்து அப்படி சொல்லியிருக்கலாம். ஆனால் ஹிட்லருக்கும் சாப்ளினுக்கும் இன்னும் சில ஒற்றுமைகள இருந்தன.

ஹிடலரும் சாப்ளினும் ஒரே ஆண்டு பிறந்தவர்கள். 1889 (2 வாரங்கள் தான் வித்தியாசம்). தங்களின் ஆரம்ப காலங்களை மிகுந்த ஏழ்மையுடன் கழித்தவர்கள். இருவருமே அதிகமாக தாயிடம் தான் வளர்ந்தார்கள். அவர்கள் சிறு வயதாக இருக்கும் போதே தம் தந்தையர்களை இழந்தவர்கள். இருவருக்குமே பிறந்த நாடும் பிழைக்க சென்ற நாடும் வேறு. ஒரே நிறம். ஒரே உயரம் இருவரும் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள். கலையில் ஈடுபாடுள்ளவர்கள்.

சாதரணமாக சாப்ளின் படமெடுக்கிறார் என்றால் பிரச்ச்னைகள் நிச்சயம் வரும். ஒரு நாட்டின் அதிபரையே கிண்டல் செய்து படமெடுக்கிறார் என்றால், அதுவும் இவர் படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டது 1936,அப்பொழுதே இங்கிலாந்து இந்த படத்தை தடை செய்வோம் என அறிவித்துவிட்டது. நல்ல வேளையாக அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வோல்ட் சாப்ளினை ஊக்குவித்தார்.

இதுதான் சாப்ளின் நாடோடியாக நடித்த கடைசிப் படம். அதே மாதிரி சாப்ளின் கதாப்பாத்திரத்திற்கு பெயர் இருந்த சில படங்களில் இதுவும் ஒன்று. சாப்ளின் இந்த படத்தில் ஜெர்மனி அதிபர் ஹிட்லர், இத்தாலி அதிபர் முசோலினி என சகலரையும் கிண்டல் செய்திருந்தார்.

ஆரம்பத்தில் ராணுவத்தில் இருக்கும் முடி திருத்துபவரான சாப்ளின் அப்பாவியான மிக நல்லவர். ஆனால் சர்வாதிகாரி ஹென்கலோ மிக மோசமானவர். அதனால் சாப்ளினின் அக்மார்க் நகைச்சுவைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லை.

படத்தின் முதல் காட்சியை படமாக்கும் பொழுது செட்டிர்க்கு வந்திருந்த சாப்ளினின் மகன் சிட்னி சாப்ளின் சிரித்த சிரிப்பிற்க்கு காட்சியை படமாக்க முடியாமல் சிறிது நேரம் படபிடிப்பு தடைபட்டது என்றால் அந்த காட்சியின் சிறப்பை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த படத்தில் இன்றளவும் குறிப்பிடப்படும் இரண்டு விஷயங்கள் உலக உருண்டையை ஹென்கல் கதாபத்திரம் போட்டு விளையாடும் காட்சி. இரண்டாவது, படத்தின் இறுதியில் சாப்ளின் ஆற்றும் அந்த புகழ் பெற்ற உரை. இந்த படத்தில் தன் தாயின் நினைவாக கதாநாயகி பவுலாவின் கதபாத்திர பெயர் ஹன்னா என்று சூட்டியிருந்தார் சாப்ளின். அதிபர்களின்

வேஷம், அரசியல், போர் யூத ஒழிப்பு என சகல சம கால விஷயங்களையும் கேலி செய்த சாப்ளின் அதற்க்கு தீர்வும் அளித்தத் திரைப்படம் இது. ராணுவ வீரர்கள் தங்கள் அதிபர் சொல்கிறார் என ஆடுமாடுகளை போல் தூப்பாக்கியை தூக்கி கொண்டு சென்றுவிட கூடாது. அதற்க்கு பதில் சிந்திக்க வேண்டும். மனித நேயத்தை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என தன் உணர்ச்சிமிகு உரையில் குறிபிடுவார்.

பின்பு அந்த உரையை பல வானொலிகளில் மீண்டும் பேசவும் செய்தார். படம் வெளியான போது தடை செய்வேன் என சொன்ன இங்கிலாந்தும் போரில் குதித்திருந்தது. அதனால் உலகம் முழுவதும் இந்த படம் திரையிடபட்டது. ஜெர்மெனியில் ஹிட்லர் இந்த படத்தை தடை செய்தார். இருந்தும் ஜெர்மெனியில் ரகசியமாக படம் வெளியிடபட்டது.

தடை செய்தார் தவிர ஹிட்லரால் இந்த படத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் இந்த படம் ஹிட்லருக்காக அவர் வீட்டில் திரையிடபட்டது. ஆம் தன்னை கேலி செய்திருக்கும் படத்தை ஹிட்லர் ஒரு முறையல்ல இரு முறை பார்த்தார். ஆனால் அதை பற்றி கருத்தேதும் சொல்லவில்லை. இதனை அறிந்த சாப்ளின், இந்த படத்தை பற்றிய ஹிடலரின் கருத்தை அறிய தான் எவ்வளவு விலை கொடுக்கவும் தயார் என்று தெரிவித்தார்.

இந்த படத்தில் சாப்ளின் ஆற்றிய அந்த உரையை பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

சாப்ளின் வருவார்....

    அடுத்து



thamizhstudio@gmail.com

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.