Modern Times
பெயர் : மாடர்ன் டைம்ஸ்
ஆண்டு: 1936
நேரம்: 81 நிமிடம்.
இயக்கம்: சார்லி சாப்ளின்
நடிகர்கள்: சாப்ளின், பவுலா கோடார்ட்
தயாரிப்பு: சார்லி சாப்லின்.
 |
தொழிற்ச்சாலைகளில் நசுக்கப்படும் மனித நேயத்தை களமாக அமைத்து வழக்கமான தன் நாடோடியுடன் திரையில் மக்களை சந்திக்க இந்த முறை சாப்ளின் முடிவு செய்தார். இதில் வசனங்கள் இடம்பெறவில்லை என்றாலும், பேச்சுக்கள் பதிவாகின. வழக்கமான நம் நாடோடி இதில் பேசவில்லை மாறாக தன் குரலில் ஒரு பாடலை மட்டும் பதிவு செய்தார்.
கதைச் சுருக்கம்:
தொழிற்ச்சாலை ஒன்றில் வேலை பளு காரனமாக மனநிலை பாதிக்கப்படும் தொழிலாளி, மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இன்னொருப் பக்கம் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் முற்றி மக்கள் போராட்டம் வெடிக்கிறது. |
போராட்டத்தை கட்டுப்படுத்த நடக்கும் துப்பாக்கி சூட்டில் கதாநாயகி பவுலாவின் தந்தை மரணமடைகிறார்.
மருத்துவமனையில் இருந்து வெளிவரும் நாடோடியும், பவுலாவும் சந்திக்கின்றனர். தொழிலாளர் போராட்டங்களை நடத்தியதற்காக நாடோடி கைது செய்யப்படுகிறார். பின்பு நன் நடத்தையின் காரணமாக விடுவிக்கப் படுகிறார். வெளியே வேலைக்காக பல முயற்ச்சிகள் செய்து, அவை யாவும் தோல்வியடைந்து மீண்டும் சிறையில் அடைக்கபடுகிறார். சிறையிலிருந்து வெளியே வந்து, பவுலா வேலை செய்யும் நடனவிடுதியில் பாடகராக முயற்ச்சிக்க, பவுலாவை தேடி போலிஸ் வருகிறது. அவர்களிடம்மிருந்து தப்பித்து, சோர்வாக ஒரு மரத்தடியில் இருவரும் அமர்கிறார்கள். பவுலா சோர்ந்து சோகமாக, அவளை தேற்றி வாழ்க்கையை மிகிழ்ச்சியாக எதிர்கொள்ள வேண்டும். சிரி என்று சொல்லி தங்கள் பயணத்தை தொடங்க படம் நிறவடைகிறது.
மனிதனும்-மிஷினும்:
சாப்ளின் இந்த படத்தை ஆரம்பித்த நேரம் அமெரிக்கா பொருளாதர நெருக்கடியில் இருந்து மீள தொடங்கிய நேரம். ஆனால் அதே சமயம் இந்த பொருளாதர நெருக்கடியை பயன்படுத்தி கம்யூநிசம் நுழைந்துவிடக்கூடாது என்பதில் அமெரிக்க அரசாங்கம் மிக தெளிவாக இருந்த நேரம்.1932ல் ஆரம்பித்த இந்தத் திரைப்படம் 1936ல் வெளிவந்தது. மீண்டும் இது மௌனப் படமாக இருந்தாலும், சில இடங்களில் மட்டும் குரல்கள் உபயோகிக்கபட்டன. சாதுர்யமாக...
படத்தின் முதல் காட்சியில் கடிகாரம் ஒன்றில் நேரம் சரியாக ஆறு மணியாக அடுத்த காட்சியில் மாண்டேஜாக, கூட்டமாக நடக்கும் ஆடுகள் காட்டப்படும். அதை தொடர்ந்து மனிதர்கள் கூட்டமாக தொழிற்ச்சாலைகளுக்கு செல்லும் காட்சி காண்பிக்கபடும். சாப்ளின் ஆரம்ப காலங்கலிருந்த இந்த மாண்டேஜ் காட்சியமைப்பை உபயோகித்துள்ளார். ஆனால் 1924 ஐசன்ஸ்டையின் மாண்டேஜ் என்னும் ஒரு விஷயத்தை முறையாக விளக்க திரைப்படங்கள் அந்தத் தியரியை எடுத்துக்கொண்டன. அந்த வகையிலும் சாப்ளின் இந்த மாதிரியான தொழில்நுட்பங்களை முயற்சித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
தொழிற்ச்சாலையில் கொல்லப்படும் மனித நேயத்தை சுட்டிக்காட்ட சாப்ளின் விரும்பினார். ஒரு தொழிற்சாலையில் லாபத்தை மட்டும் குறியாக கொண்டு செயல்படும் முதலாளி, அதனால் உற்பத்தியை பெருக்க, சிறு இடைவெளிக்கூட இல்லாமல் வேளை செய்யும் தொழிலாள்ர்கள். உண்மையாக நான் சொல்லும்பொழுது இது சோகத் திரைப்படம் போல் காட்சியளிக்கும். உண்மைதான், ஆனால் சோகமான விஷயத்தையும் நகைச்சுவை கலந்து மெதுவாக மக்கள் மனதில் பதியவைக்கும் திறமை சாப்ளினிடம் இருந்தது. அதில் சாப்ளின் சிறந்து விளங்கினார்.
 |
குறிப்பாக வேலை செய்யும் பொழுது, தொழிளாலர்களுக்கு அரை மணி நேரம் உணவு இடைவெளி விட வேண்டிவரும். அதனால், அரைமணி நேர உற்பத்தி பாதிக்கும். அதற்காக ஒரு நிறுவனம் வேலை செய்யும் தொழிலாளிக்கு உணவு ஊட்டிவிட ஒரு இயந்திரத்தை சோதனை செய்யும் காட்சி. சாப்ளின் அதில் சோதனையாளராக மாட்டிக்கொள்ள, அந்த நேரத்தில் இயந்திரம் பழுதாகி
|
தொலைக்க அதனை தொடர்ந்து நாம் சிரித்தாலும், இரக்கமில்லாத முதலாளித்துவத்தை இதைவிட மக்களுக்கு புரியவைக்கவோ, கேலிச் செய்யவோ முடியாது.
ஒரு கட்டத்தில் தொடர் வேலையினால் மனநிலை பாதிக்கப்படும் சாப்ளின் அதை தொடர்ந்து அந்த தொழிற்சாலையில் அடிக்கும் கொட்டம், சாப்ளினின் ட்ரேட்மார்க் நகைச்சுவை வகை. மனநிலை சரியாகி வெளியே வந்தால் சத்தம், போராட்டம், வேலையில்லா திண்டாட்டம். இதன் நடுவே அமைதியாக தெருவில் நடந்து செல்லும் சாப்ளின் அந்த வழியாக செல்லும் வண்டியில் இருந்து விழும் சிகப்பு கொடியை எடுத்து அந்த வண்டிக்காரரிடம் கொடுக்க கொடியை அசைத்தபடி நடப்பார். அவரை தொடர்ந்து ஒரு தொழிலாளர் போரட்ட குழு பின்னே வர, போராட்டத்தை கட்டுப்படுத்த போலிஸ் நடத்தும் தடியடியில் கொடிபிடித்து வந்த இவர் தான் தலைவர் என்று சாப்ளினை கைது செய்துவிடுவார்கள். அந்த காட்சியை யோசித்த விதம் படைப்பாளியில் சாப்ளின் நிச்சயம் ஜீனியஸ் தான் என்று சொல்ல வைக்கும்.
சிறையில் நன்மதிப்பை பெற்ற கைதியாக, படுக்கையில் படுத்துக்கொண்டு செய்தித்தாளை படிப்பார். நாட்டில் எங்கும் பஞ்சம், வேலையில்லாத் திண்டாடம். ஒரு வழியாக சிறையே அவருக்கு ஏதுவான வீடு போன்று மாறிவிடும். சிறையிலிருந்து வெளியே நற்சான்றிதழுடன் ஒரு வேலைக்கு செல்ல, அது ஒரு கப்பல் கட்டும் இடம். அங்கே ஒருவர் ஒரு மரத்துண்டை எடுத்து வர சொல்லுவார். சாப்ளின் அங்கும் இங்கும் தேட ஒரு இடத்தில் சரியான மரத்துண்டைப் பார்ப்பார். ஆனால் அதை நகர்த்த முடியாமல் தவிப்பார். பின்னர் ஒரு பெரிய சுத்தியலை எடுத்து அதை நகர்த்த முயல, அது அசைந்து அங்கு கட்டுவதற்க்காக நிறுத்தபட்டிருக்கும் ஒரு பெரிய கப்பல் கடலுக்குள் சென்றுவிடும்.
பின்பு ஏழை தொழிலாளி பவுலாவுடனான உறவு தொடர, இருவரும் கனவு காணும் அழகான வீட்டைப் பற்றிய காட்சி அதை தொடர்ந்து அவர்கள் வாழும் அந்த வீடு, போராடி பெறும் வேலையும் இழந்துவிட வெறுப்பில் எரியும் கல், போலிஸை தாக்க மீண்டும் சிறை.
சிறையிலிருந்து வெளிவந்தது ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை. வழக்கமான சாப்ளினின் நகைச்சுவை மலர, ஹோட்டல் முதலாளியோ சாப்ளினை பாட சொல்லிவிடுவார். சாப்ளினின் குரலில் பாட்டு வந்தாலும் காட்சி படி பாடல் வரியை மறந்துவிடும் சாப்லீன் ஏனோ தானோ, என்று உளறுவது தான் பாட்டாக வரும். ஆனால் அவர்கள் அதையும் தொடர முடியாமல் போக, வருத்தபடும் பவுலாவிடம் சாப்ளின் தன்னுடைய வழக்கமான தன்னம்பிக்கையுடன், வாழ்க்கையை எதிர்கொள்ள சொல்லிவிடுவார். அது தானே சாப்ளின்....அது தானே நாடோடி.
 |
உண்மையாக சாப்ளின் எடுத்த இறுதி காட்சி, சாப்ளின் மீண்டும் மனநிலை பாதிக்க பட்டவராக மருத்துவமனையில் ஓய்வு பெற, அங்கு பவுலா கன்னியாஸ்திரியாக சாப்ளினை காண வரும் காட்சி. ஆனால் சாப்ளின் இறுதி காட்சி மக்களுக்கு நம்பிக்கை தருவதாக இருக்க வேண்டும் என அந்த காட்சியை மாற்றிவிட்டார். படத்தின் இன்னொரு சிறப்பு இயந்திரங்களால் நசுக்கபடும்
|
மனிதத்தை சாப்ளின் இன்னொரு விதத்திலும் காட்சிப்படுத்தியிருந்தார். அதாவது, படத்தில் இடம்பெறும் அனைத்து குரல்களும் இயந்திரத்திலிருந்து தான் வெளிபடும், பதிவு செய்யபட்ட ஒளியாக, ஒளிப்பெருக்கிளியிலிருந்து வெளிபடும் ஒளி, என்று அனைத்து மனித குரலும் இயந்திரம் வாயிலாக வெளிபடும். சாப்ளின் டச்.
அடுத்து நாம் பார்க்க போகும் படம், ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளையும் ஹிட்லரையும் கேலி செய்து எடுத்த படம். நம்புங்கள் அந்த படத்தை ஹிட்லரே இரண்டு முறை பார்த்தார்....
சாப்ளின் வருவார்....