வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
சார்லி சாப்ளின்
1
 
1 ஓர் அறிமுகம்
1
1 பகுதி - 1
1
1 பகுதி - 2
1
1 பகுதி - 3
1
1 பகுதி - 4
1
1 பகுதி - 5
1
1 பகுதி - 6
1
1 பகுதி - 7
1
1 பகுதி - 8
1
1 பகுதி - 9
1
1 பகுதி - 10
1
1 பகுதி - 11
1
1 பகுதி - 12
1
1 பகுதி - 13
1
1 பகுதி - 14
1
1 பகுதி - 15
1
1 பகுதி - 16
1
1 பகுதி - 17
1
1 பகுதி - 18
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1  
1  
1  
1  
1  
1  
 
  சார்லி சாப்ளின்
 

City Lights

படம் : சிட்டி லைட்ஸ்
வருடம்: 1931
நடிகர்கள்: சாப்ளின், விர்ஜினியா செரில், ஹேரி மேயர்ஸ்
இயக்கம்: சாப்ளின்.
நேரம் : 81 நிமிடங்கள்.
தயாரிப்பு : சார்லி சாப்ளின் தயாரிப்பு.
சாப்ளின் கதாபத்திரம்: வழிப்போக்கன்

வாசகர்களுக்கு:
கடந்த தொடரின் இறுதியில் ஒரு சிறு பிழையாக அடுத்து பார்க்கபோகும் படம் “மாடர்ன் டைம்ஸ்” என்று எழுதியதற்கு மன்னிக்கவும். சிட்டிலைட்ஸை தொடர்ந்து அடுத்தப் பட வரிசையில் மாடர்ன் டைம்ஸை பற்றி பார்ப்போம்.

கதைச் சுருக்கம்:
வாழ்க்கையில் அனைத்தையும் சந்தோஷமாக எடுத்துக்கொள்ளும் நாடோடி, போலிசிடமிருந்து தப்பிக்க சாலையில் உள்ள ஒரு காரில் ஏறி, அதன் அடுத்த கதவு வழியாக இறங்குகிறான். நடைபாதயில் கண் தெரியாமல் இருக்கும் பூ விற்கும் பெண், இந்த நாடோடியை பணக்காரர் என நினைத்து பூ வாங்குமாறு கேட்கிறாள். அவள் மீது இறக்கமும், காதலும் கொண்டு நாடோடி பூ வாங்கிக்கொண்டு, பணக்காரன் போலவே நடிக்கிறான். அன்றிரவு தற்கொலைக்கு முயலும் குடிகாரர் ஒருவரை நாடோடி காப்பாற்றுகிறான். அவரோ ஒரு பெரிய பணக்காரர், காப்பாற்றியதர்க்கு நன்றி கடனாக அவனை தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.

ஆனால், காலை எழுந்தவுடன், போதை தெளிந்த நிலையில் நாடோடியை அடையாளம் தெரியாமல் வீட்டை விடு வெளியே துரத்துகிறார்.

மீண்டும் அந்த கண் தெரியாத பெண்ணிடம் வந்து நட்பு கொள்ளும் நாடோடி அவளுக்காக, பணம் திரட்ட முயலுகிறான். ஒரு நாள் போதயில் நாடோடியை காணும் பணக்காரார் அவனை தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அவரிடம் பண உதவி செய்யுமாறு நாடோடி கேட்கிறான். அவரும் 1000 டாலர் பணம் கொடுக்கிறார். விதி மறு நாள் போதை தெளிந்ததும் வழக்கம்போல் நாடோடியை தெரியாமல் அவன் பணத்தை திருடிவிட்டதாக போலிஸிடம் பிடித்து கொடுக்கிறார். போலிசிடமிருந்து தப்பித்து அந்த பனத்தை தன் காதலியின் மருத்துவ செலவிற்க்கு கொடுத்துவிட்டு, ஜெயிலுக்கு செல்கிறார். அந்த பெண் கண் பார்வையும் பெற்று, ஒரு பெரிய அலங்கார பூக்கடையை திறக்கிறாள், தனக்கு உதவி செய்த தன்னுடைய காதலனுக்காக காத்திருக்கிறாள்.

ஜெயிலிலிருந்து கிழிந்த உடைகளுடன் தன் காதலியை பழைய நடைபதை இடத்திற்கு வந்து தேடுகிறார், நாடோடி. அங்கு காணாமல் விரக்தியுடன் நடக்கையில், ஒரு பெரிய கடையில் கண் தெரிந்த நிலையில் இருக்கும் தன் காதலியை பார்க்கிறார். அவளிடம் ஆசையுடன் நெருங்க, அவளோ நாடோடியை பிச்சைகாரர் என நினைத்து பணம் கொடுக்க வருகிறாள். இதனால் வெட்கமும் கவலையும் அடையும் நாடோடி வாங்க மறுத்து அங்கிருந்து ஓட முயல, அந்த பெண் வலுக்கட்டாயமாக அவன் கையில் காசை திணிக்கிறாள்.

அப்பொழுது ஸ்பரிசத்தின் மூலம் தன் காதலன் இவன் தான் என்பதை உணரும் அந்த நொடியில் நாடோடி, இவளிடம் உன்னால் இப்பொழுது பார்க்க முடிகிறது என்கிறான். அவர்கள் இருவரும் கண்ணிருடன் இணைய படம் நிறைவடைகிறது.

பேச தொடங்கிய சினிமா; பேச மறுத்த சாப்ளின்:

சிட்டி லைட்ஸ் படம் தொடங்க நினைத்த போது ஹாலிவுட் சினிமா பேச தொடங்கியது. ஊமை படங்கள் ’டாக்கி’களாக மாறியிருந்தது. அதனால் பலரும் மக்களின் ஆதரவை பெற பேசும் படங்களை தயாரிக்கவும் திரையிடவும் தொடங்கினர். பேசும் படங்களை திரையிட அந்த திரையரங்குகளில் சில விசேஷ மாற்றங்களையும் கருவிகளையும் பொருத்த வேண்டியிருந்தது. அப்படி சிறப்பு திரையரங்குகள் அதன் பெயர்களுடன் ‘டாக்கிஸ்’ என்பதை இணைத்துக் கொண்டன.அது போன்று த்யாரிப்பு நிறுவனங்களும் டாக்கிஸ் என்ற அடை மொழியுடன் பேசும் படங்களை பெருவாரியாக ஆதரித்தனர்.

சாப்ளின் திட்டவட்டமாக மறுத்தார். நாடோடி பேசினால் அவனிடம் உள்ள வசீகரம் குறைந்துவிடும். அவனும் மற்ற பாத்திரங்களை போல சாதரனமாகிவிடுவான். என நம்பினார். தன் படங்களை பேசும் படமாக்கி ஆங்கிலம் பேசுபவர்கள் மட்டும் பார்க்கும் படமாக மாற்றாமல், உலகின் ஆங்கிலம் தெரியாத அனைவரும் ரசிக்கும் படமாக எடுக்க வேண்டும் என நினைத்தார்.

பல்வேறு காரணங்களுக்காக இந்த படம் சுமார் மூன்று வருடம் வரை படப்பிடிப்பில் இருந்தது. படத்தின் ஒரு காட்சி சிறப்பாக அமையவில்லை என்பதற்காக 342 டேக் வரை எடுத்திருக்கிறார் சாப்ளின். படத்தின் நடுவே, நடிகை விர்ஜின்யாவை படத்திலிருந்து தூக்கிவிட்டார். அந்த வேடத்தை ‘த கோல்ட் ரஷ்’ படத்தில் நாயகியாக நடித்த ஹாலேவிற்க்கு கொடுத்தார். ஆனால் பெரும்பாலான காட்சிகளை விர்ஜினியவை வைத்து படம்பிடித்துவிட்டாதால் வேறு வழியின்றி இரண்டு மடங்கு சம்பளத்தை கொடுத்து விர்ஜினியாவை மீண்டும் நடிக்க அழைத்தார்.

இந்த படத்தில் சாப்ளின் எடுத்துக் கொண்ட களம் நகர வாழ்க்கை. ஒரு பக்கம் கண் தெரியாத ஏழை பூ விற்க்கும் பெண், இன்னொரு பக்கம் நிறைய பணமிருந்தும் மன அமைதியில்லத லட்சாதிபதி. இந்த் இரண்டு முரண்படுகளின் நடுவே வாழ்க்கையை எந்நேரமும் ரசிக்கும் நாடோடி, இதுவே சாப்ளினுக்கு இந்த படத்தில் நகைச்சுவை, சோகம் ,காதல் போன்ற விஷயங்களில் புகுந்து விளையாட போதுமானதாக இருந்தது.

சாப்ளின் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை இந்த படதில் பல இடங்களில் நிரூபித்திருந்தார். அப்பாவியான நாடோடியாக வந்து மக்களை சிரிக்கவும் அதே சமயம் அவர்களை அழ வைக்கவும் அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. இந்த படத்தை அமெரிக்கவில் திரையிடும் பொழுது ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டையினும், இங்கிலாந்தில் திரையிடும் பொழுது பெர்னாட் ஷாவும் கலந்து கொண்டு சாப்ளினை கவுரவித்தனர்.

படத்தின் பெயரான சிட்டி லைட்ஸ் (நகரின் விளக்குகள்) என்று போடும் பொழுது பரப்பரப்பான நகர வீதியையும், அங்கே பளபளப்பாக எரிந்துக் கொண்டிருக்கும் விளக்குகளையும் காண்பித்தார். ஏற்கனவே டாக்கிகள் நடுவில் பேசாத படமாக வந்திருக்கும் இந்த படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்கிற சுமை கூடியிருந்தாலும் தன் சாதுரியமான படமாக்கும் வித்தில் அதை எளிதாக சமாளித்தார், சாப்ளின்.

முழுக்க முழுக்க செட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும், சாப்ளின் நிறைய செலவு செய்து அதை ஒரு நிஜ நகர வீதியாகவே நிர்மானித்திருந்தார், பிரமாண்டம், நிறைய துனை நடிகர்கள் என் செட் திருவிழா கோலம் பூண்டது.

இன்றல்ளவும் உலக சினிமா ரசிகர்களாலும், சினிமா துறையினராலும் , சினிமா விமர்சகர்களாளும் பெரிதளவில் பாரட்டப்படும் இந்தப் படத்தைப் பற்றி அடுத்த வாரமும் தொடருவோம்…..

சாப்ளின் வருவார்....

    அடுத்து



thamizhstudio@gmail.com

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.