வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
சார்லி சாப்ளின்
1
 
1 ஓர் அறிமுகம்
1
1 பகுதி - 1
1
1 பகுதி - 2
1
1 பகுதி - 3
1
1 பகுதி - 4
1
1 பகுதி - 5
1
1 பகுதி - 6
1
1 பகுதி - 7
1
1 பகுதி - 8
1
1 பகுதி - 9
1
1 பகுதி - 10
1
1 பகுதி - 11
1
1 பகுதி - 12
1
1 பகுதி - 13
1
1 பகுதி - 14
1
1 பகுதி - 15
1
1 பகுதி - 16
1
1 பகுதி - 17
1
1 பகுதி - 18
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1  
1  
 
  சார்லி சாப்ளின்
 

சாப்ளின்: கலைக்களுக்கான ஒரு கலை

மே மாதம், 1913. அமெரிக்காவில் சுற்றுபயணம் செய்துக் கொண்டிருந்த ’ஃப்ரெட் கரனொ’ இசை குழுவின் மேலாளரான ஆல்ஃப் ரீவ்ஸுக்கு ஒரு தந்தி. தந்தியில் இருந்த வாசகம் இதுதான், “ உங்கள் குழுவில் ’சாஃப்மேன்’ அல்லது அதையொத்த பெயரில் யாரவது இருந்தால், நியூயார்க் நகரில் உள்ள எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள்” என்று விலாசத்தை சுமந்திருந்தது.

Youngster Chaplin

நிச்சயம் அவர்கள் குறிப்பிட்டிருந்தது சார்லி சாப்ளினை தான். மிகுந்த சிரமம் ஏதுமில்லாமல், சாப்லினுக்கு அந்த தந்திக் கிடைத்தது. சற்றே குழப்பத்துடனும், சற்றே உற்சாகத்துடனும் சாப்ளின் நியூயார்க் புறப்பட்டார். சினிமா உலகை ஆளப்போகும் ஒரு வாய்ப்புக்கான தந்தியுடன் சாப்லின் நியுயார்க் நோக்கிப் பயணமானார்.

கண்கள் முழுவதும் கனவுகள், நம்பிக்கை. பின்னே! அதுதானே இத்தனை போரட்டங்களையும் தாண்டி சாப்ளினை உயிர் வாழ வைத்திருக்கிறது. ஆம். சாப்ளின் இப்பொழுது அமெரிக்காவிற்கு வந்திருப்பது பயணம் தான். அவர் பிறந்தது, வளர்ந்ததெல்லாம் இங்கிலாந்தில். தாய், தந்தை இருவருமே நாடகக் கலைஞர்கள். தந்தை பெரும் குடிகாரர். அதனால், சாப்லினின் பெற்றோர் பிரிந்தனர். சாப்லினையும் அவரது அண்ணனையும் வளர்க்கும் பொறுப்பு தாயிடம்.

மேடை கலைஞராக இருந்த தாயின் சொற்ப வருமானம் குடும்பத்தை ஓட்ட கொஞ்சம் உதவியது. தாயும், தந்தையும் மேடை கலைஞர்கள் என்பதால், சாப்ளினின் ரத்தத்தில் நடிப்பும், இசையும் கலந்திருந்தது. எப்பொழுதும் தன் தாயின் மேடை நிகழ்ச்சிகளை ஓரமாக இருந்து பார்த்து, பார்த்து அவருக்கு நாடக மேடை, கொட்டகை, மக்கள் கூட்டம், யாவும் பழகிப்போனது - ஒருவிதமான வசீகரத்தை ஏற்படுத்தியது.

ஒரு முறை தன் தாயின் குரல் பிசகவே, முதன் முறையாக தன் ஐந்து வயதில் மேடையேறிய சாப்ளின், தன் மழலை குரலாலும், இயல்பான நடனத்தாலும் மக்களை அசத்தினார். அன்று தொடங்கிய அந்த அசத்தும் தொழில் அவர் வாழ்வின் இறுதி நாள் வரை தொடர்ந்தது.

Chaplin's Family
ஒரு பக்கம் தாய் மனநலம் பாதிப்படைய, சார்லியும் அவரது அண்ணனும், அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். பின்பு கொஞ்சம் வயது வந்தவுடன் சாப்ளின் நாடக மேடைகள் ஏறி சம்பாதிக்க ஆரம்பித்தார். அமெரிக்கா வரை சுற்றுப் பயணமும் வந்துவிட்டார். அப்படி ஒரு நாடகத்தில் தன் நடிப்பாற்றலால் ஒரு சினிமா தயாரிப்பாளரை அசத்த, அவர்தான் அந்த தந்தியை அனுப்பி சாப்ளினை வரச்சொன்னார்.

(அவருக்கு சாப்ளினின் பெயர்க்கூட தோரயமாக தான் தெரியும்). அதற்கு தான் சாப்ளின் இந்த பயணத்தை மேற்கொண்டு நியூயார்க் சென்றுக்கொண்டிருக்கிறார்.

ஒரு வழியாக ’கீ ஸ்டோன்’ என்ற அந்த சினிமா தயாரிக்கும் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நடிகராக தேர்வு பெற்றார். சிறிது நாட்களில் அவர் அண்ணன் சிட்னி சாப்ளினும் சார்லியுடன் இணைந்துக்கொண்டார். அன்றிலிருந்து சாப்ளினின் கணக்கு வழக்குகளை பார்த்து, சார்லியை யாரும் ஏமாற்ற முடியாத படியும், சாப்ளின் நிம்மதியாக தன் படைப்பு வேலைகளை கவனிக்கவும் உதவியாக இருந்தார்.

நடிகராக சாப்லின் எழுச்சி மற்றும்The Tramp’ (வழிப்போக்கன்) கதாபத்திரத்தின் தோற்றம் பற்றியும் அடுத்த வாரம் பேசுவோம்.

சாப்ளின் வருவார்....

இத்தொடர் பறிய உங்கள் கருத்துகளை தயவு செய்து தெரிவிக்கவும்.

    அடுத்து


thamizhstudio@gmail.com

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.