கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  அறிமுகம் TS கட்டுரைகள் TS சிறுகதைகள் TS நூல்கள் TS நேர்காணல்
 
 
 

 

 

 

 
     
     
     
   
 
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
     
     
 

 

 

 

 வாயில்

அறிமுகம்

இயக்குனர் அம்ஷன் குமார் தமிழ் ஸ்டுடியோ அருண் பற்றி எழுதிய கட்டுரை.

அருண், ஒர் குறிக்கோளுடன் இயங்கும் சினிமா அறிவுஜீவி - அம்ஷன் குமார். தமிழில் - யுகேந்தர்

பகட்டான இந்நகரத்தில், விரும்பிய ஒன்றுக்காக இலாபகரமான வேலையை தொழில் வல்லுநர்கள் விடுவதென்பது ஆபத்தானதாகும். ஆனாலும், அவர்கள் பிரச்சனைகளை எதிர்க்கொண்டு நிற்பது வீண்போகாது, அதற்கான வெகுமதி அவர்களுக்கு கிடைக்கும். அப்படியானவர்களில் ஒருவர் மோ.அருண், லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் திரைப்பட டிப்ளமோ முடித்திருந்தாலும் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபடாமல், தமிழ் குறும்படங்களை ஊக்குவிக்கும் பாதையை தேர்ந்தெடுத்தார். "நான் வேலையை விட்ட செய்தியை, எனது மனைவியிடம் மட்டுமே பகிர்ந்திருந்தேன். ஆனால் எனது குடும்ப உறுப்பினர்களுக்கு இது தெரிய வந்த போது அவர்கள் பீதியடையவில்லை". நல்ல சினிமாவை நேசிப்பவர்கள், எழுத்து மற்றும் பேச்சின் மூலம் அதற்கான ஒரு சாதகமான சூழலை உருவாக்க பொதுவாக முயற்சிப்பார்கள். அருண், அதை கடந்தும் சென்றார்.

அவர் 2008'இல் thamizhstudio.com'ஐ ஆரம்பித்தார். துவங்கும் போது குறும்பட ஆர்வலர்களுக்கான ஒர் இணைய வெளியாகவே அது இருந்தது. ஆனால் அடுத்த வருடமே அருண் அதை ஒரு இயக்கமாக மாற்றினார். செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக முப்பது பேருடன் முதல் கூட்டம் மெரினா கடற்கரையில் நடந்தது. இயக்கத்தை தற்போது ஆயிரக்கணக்கானோர் பின்தொடருகிறார்கள். அவரின் எந்த தகவலானலும், அது பலரால் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.

ஆனால், ஏன் அவர் குறும்படங்களை ஊக்குவிக்க வேண்டும் ?

"நமது குறும்படங்களின் உள்ளடக்கம் மிகவும் முற்போக்கானதாகவும், மாறுபட்டதாகவும், பிரதான முழு நீள திரைப்படங்களைக் காட்டிலும் கலை நயம் கொண்டதாகவும் இருப்பதை என்னால் எளிதில் கண்டுக்கொள்ள முடிந்தது. ஊக்கம் கொடுத்து சரியான முறையில் செயல்படுத்தினால், சிறந்த உலக சினிமாக்களுடன் நமது குறும்படங்களைத் திரையிடலாம்" என தனது உத்தரவாதத்தை அளிக்கிறார் அருண்.

குறும்படங்களுக்கு ஊக்கமளிப்பதற்கு பேரார்வம் கொண்ட அருண், பல்வேறு வகைப்பட்ட வடிவங்களில் அதை செய்கிறார். தமிழ் ஸ்டுடியோவில் மாதாந்திர குறும்பட திரையிடலும் அதை தொடரந்து பல்வேறு துறைகளிலிருந்து நிபுணர்களின் பேச்சுக்களையும் நடத்தினார். இன்றுவரை, அறுபதுக்கும் மேற்பட்ட கூட்டங்களை ஐந்து ஆண்டுகளில் அவர் நடத்தியுள்ளார். அவரது இயக்கத்தை தமிழகத்தின் உட்பகுதிகளுக்குள்ளும் எடுத்து சென்றுள்ளார், இருபத்தியிரண்டு மாவட்டங்களுக்கு கொண்டுசென்றுள்ளார். வழக்கமான குறும்பட திரையிடலே அவரது தனித்தன்மை என்றாலும், உலகின் சிறந்த திரைப்படங்களை தனது உறுப்பினர்களுக்கு திரையிட வந்த எந்த ஒரு வாய்ப்பையும் அவர் நழுவவிட்டதில்லை. இந்திய திரைப்பட நூற்றாண்டின் கொண்டாடத்தின் ஒரு பகுதியாக, நூறு சிறந்த இந்திய திரைப்படங்களை ஓராண்டு முழுவதும் திரையிட அவர் ஏற்பாடு செய்தார்.

தனது அலுவலகத்தின் மொட்டை மாடியில் பவுர்ணமி தினத்தன்று திரையிடல் நடத்துவார், அதை தொடர்ந்து இரவு உணவு மற்றும் நீண்ட கலந்துரையாடல்கள் நடக்கும். லெனின் விருதை (படத்தொகுப்பாளர் பீ.லெனின் அவரின் பெயரில்) அவர் நிறுவினார். ஒவ்வொரு வருடமும் சிறந்த குறும்பட/ஆவணப்பட திரைப்பட கலைஞருக்கு இவ்விருது கொடுக்கப்படுகிறது. சான்றிதழுடன் பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசை கொண்டது இவ்விருது. இந்த ஆண்டு, அறிமுக குறும்பட திரை கலைஞருக்காக பிரத்தியேகமாக புதிய விருதொன்றை அறிமுகப்படுத்தியுள்ளார், அதன் பெயர் பாலு மகேந்திரா விருது. தனது செயல்பாடுகளுக்கு தூணாக இருந்த பாலு மகேந்திராவின் நினைவாக அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் இவ்விருது நிறுவப்பட்டது.

திரையிடல் மற்றும் விருது நிகழ்வுகள் தவிர்த்து, அவர் முழு கவனம் செலுத்தும் இன்னொரு பகுதியும் உள்ளது, மாணவர்களுக்கு திரைப்படமெடுக்க பயிற்சி கொடுப்பது அது. அவரது படிமை பாடத்திட்டம் தனித்துவமானது, அது குறுகிய கால பயிற்சி வகுப்பு அல்ல. படிமையில் சேரும் மாணவர்கள், திரைப்படம் சார்ந்த பயிற்சி மட்டுமல்லாமல் பல்வேறு பாடங்களை சொல்லித்தரும் வகுப்புகளுக்கும் வருகை தந்து கவனிக்க வேண்டும். "மற்ற கலைகள் சார்ந்த அறிமுகம் திரைக் கலைஞர்களுக்கு மிகவும் முக்கியம், ஏனெனில் சினிமா என்பது கலைகளின் செய்ற்கையான தொகுப்பாகும்" என்கிறார் அருண். நிபுணர்கள் கற்பிக்க அழைக்கப்படுகிறார்கள். ஒர் விழாவில் கலந்துக்கொள்ள சமீபத்தில் சென்னை வந்த மேற்கு வங்க திரைப்பட இயக்குநர் புத்ததேவ் தாஸ்குப்தா, படிமை மாணவர்களின் மத்தியிலும் உரையாற்றினார். மற்ற நிகழ்வுகளைப் போலவே, இந்த படிமை வகுப்புகளும் முற்றிலும் இலவசம். சமீபத்தில் அவர் சினிமா சார்ந்த புத்தகங்களைப் பதிப்பிக்க துவங்கியுள்ளார்.

தமிழ் சினிமா காட்சி மொழி சார்ந்த கதை சொல்லலில் தவறு செய்யும் போது அருண் தொடர்ந்து சளைக்காமல் விமர்சித்து வருகிறார். **நல்ல சினிமா சார்ந்த அவரது ஆதரவு, நேரங்களில் உறுதியான அளவு இருக்கிறது [His support for good cinema at times takes solid proportions].** சமீபத்தில், ஒரு சிலரின் மிரட்டலைத் தொடர்ந்து பிரசன்ன விதானேகேயின் தமிழ்-சிங்கள இருமொழி திரைப்படமான 'வித் யு வித் அவுட் யு' படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் மறுத்தனர். அவர் அமளி மற்றும் குழப்பத்திற்கு மத்தியில் அந்த படத்தின் திரையிடலை ஏற்பாடு செய்தார். திரைப்பட இயக்குநரே அந்த திரையிடலில் கலந்துக்கொண்டார். பல வேலைகள் மற்றும் அதன் திட்டங்கள் மத்தியில் அனைத்தையும் அவர் முறைப்படுத்துவது ஆச்சரியத்தை தருகிறது.

அவரது இலக்குகளை அடைய எங்கிருந்து பணம் வருகிறது?. "என்னால் இயன்றவரை எனது பணத்தை செலவு செய்தேன், பின்பு கடனில் சிக்கிக்கொண்டேன். நான் அடிக்கடி மற்றவர்களிடம் பணம் கேட்கமாட்டேன். நன்கொடைகளை கொடுப்பவர்கள் குறித்து விசாரித்த பின்பே ஏற்றுக்கொள்வேன். பல சந்தர்ப்பங்களில், கடைசிக் கணம் வரை நிதி வேண்டி காத்திருப்பேன், அப்போது எனது நலம்விரும்பிகள் என்னை அற்புதகரமாக காப்பாற்றுவார்கள்." அவருக்கு பல நலம் விரும்பிகளும் நண்பர்களும் உண்டு.

கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டு லெனின் விருது தமிழ் சாதனையாளருக்கு கொடுக்கப்படவில்லை, சர்வதேசளவில் புகழ் பெற்ற ஆவணப்படத் திரை கலைஞர் ஆனந்த் பட்வர்தனுக்கு வழங்கப்பட்டது. இத்தகைய அளவிலான நிகழ்வுகளைக் கொண்டு, அருண் தலைமையில் இயங்கும் தமிழ் ஸ்டுடியோ, தான் அமைத்த எல்லைகளை கடந்துவிட்டது. தமிழ் ஸ்டுடியோ தனது ஏழாவது ஆண்டில் இந்த மாதம் அடியெடுத்து வைக்கிறது, அதன் இந்த கொண்டாட்டத்தில், உலகின் சிறந்த குறும்படங்கள் குறித்து அருண் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை "நாடு கடந்த கலை" என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடுகிறார்.

- அம்ஷன் குமார்

----------------------------------------------------------------------------------------------------------------------
 

M. Arun's Thamizh Studio has revolutionized the public discourse on cinema, in particular that on Tamil cinema and its aesthetics and its socio-political engagement. Similarly, his online Tamil cinema journal Pesamozhi, initially a monthly and now published as a bi-monthly, has created a space for iconic writers like the historian S. Theodore Baskaran, and Tamil cinema's most prolific scholar and most widely read Marxist thinker in Tamilnadu, Yamuna Rajendran, to regularly write and engage with the aesthetics of Tamil cinema and push the limits as far as the expectations regarding its future is concerned as far as cinema as an art form which is capable of revitalizing the debates around contemporary issues surrounding the appropriation of Periyar's Dravidian movement by the DMK and the AIADMK, and the silent witnessing of the genocide in the neighboring Sri Lanka.

Most important, Marudu Trotsky, arguably, the greatest living painter and multimedia artist in Tamilnadu who is also a designer and art director, has written his very precious memoir in Pesamozhi-an achievement for Arun and his commitment towards quality as Marudu is a busy artist and it is not easy to get him to write on a regular basis for a film journal.

Arun's background as a highly successful infotech engineer who pursued his dreams of filmmaking by going to London to do his masters in cinema marks his uncompromising attitude as far as the pursuits of his dreams regarding good cinema is concerned. He has remained truthful to the cause of good cinema by his strong criticism of anything less than what he considers as the best in terms of good cinema as defined by the masters/auteurs belonging various historical movements of cinema like the New Wave, Neorealism and Indian New Cinema.

It is, therefore, not a surprise that the iconic documentarian Anand Patwardhan accepted the coveted Lenin Award, installed by Arun in the name of Tamil cinema's foremost editor/filmmaker B. Lenin. Arun, thus, is incomparable as a scholar, researcher, editor, blogger, and critic of Tamil cinema, and unparalleled in his achievements as far as creating a healthy and multi-vocal space for discussing Tamil cinema, and in particular for writing and creating short films and documentaries, as epitomized by his book Naadu Kadandha Kalai (Meipporul 2014). His publishing house has brought out books on the Sri Lankan conflict and cinema by the legendary Yamuna Rajendran, and a book on cinematography during this era of the digital by the famous cinematographer Vijay Armstrong.

Arun's passion for cinema, thus, is matched only by his painstaking efforts and unmatched energy.

Wishing you the very best,
Swarnavel

 
 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio