கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  அறிமுகம் TS கட்டுரைகள் TS சிறுகதைகள் TS நூல்கள் TS நேர்காணல்
 
 
 

 

 

 

 
     
     
     
   
 
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
     
     
 

 

 

 

 வாயில்

நூல்கள்

1. நாடு கடந்த கலை, மெய்ப்பொருள் வெளியீடு, விலை: ரூபாய் 120/-

அருண் இப்புத்தகத்தில் அலசும் படங்களை மூன்று வகையறாக்களாகப் பிரிக்கலாம். ஒன்று இனம், மதம் (சாதி), நாடு, போர் என்ற வேறுபாடுகளைச் சுட்டி நமது மானுடத்தை உசுப்பும் மனசாட்சியை கேள்வி கேக்கும் படங்கள்: த லன்ச் டேட், ப்ளாக் ரைடர், ஓம்னி பஸ், ஆப் சைட், இன்ஜா, எஸ் ஐ லே டையிங், லிட்டில் டெர்ரரிஸ்ட், டென் மிநிட்ஸ், ஆகிய படங்கள் இந்த வகைமைக்குள் அடங்கும். இரண்டாவது செவ்வியல் தன்மை கொண்ட இன்றைய டாகுமெண்டரி கேனனில் முதன்மை வகிக்கும் படங்கள்: அன் அக்கரன்ஸ் அட் த ஔல் க்ரீக் ப்ரிட்ஜ், க்ளாஸ், ஹாப்பி அன்னிவர்சரி, நைட் மெயில், பிக் சிடி ப்ளூஸ், போன்ற படங்கள் இந்தப் பிரிவுக்குள் அடங்கும். மீதமிருக்கும் இரண்டு படங்களான் டேங்கி அர்ஜெண்டினி மற்றும் மீல்ஸ் ரெடி காதல் மற்றும் விளிம்பில் உள்ளோரை மனிதத்துடன் அணுகும் சினிமாவின் ஆன்மாவிற்கு பலம் சேர்க்கும் கரிசனம் என்ற வகையினத்தில் வைத்து வாசிக்கலாம். அருண் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த பதினைந்து படங்கள் இன்று நாம் வாழும் சூழலையும் பிரதிபலிக்கின்றன. அவரது தொகுப்பிலுள்ள பதினைந்தில் எட்டு குறும்படங்கள் மனிதர்களுக்கூடான இடைவெளிகளையும் விரிசல்களையும் வெறுப்புகளையும் சினங்களையும் கோபதாபங்களையும் உள்ளடக்கங்களாக கொண்டுள்ளன. பெருமாள் முருகன் என்ற கலைஞனின் குரல்வலையின் மூலமாக கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் இந்துத்வா மற்றும் பிற அழிவு சக்திகள் இத்தகைய படங்களின் மூலம் கலையின் மையத்திலுள்ள மானுடத்திற்கான கூவலைக் கேட்டு மனம் இளகலாம்.

நாடு கடந்த கலை நூலுக்காக பேராசிரியர் சொர்ணவேல் எழுதிய முழு விமர்சனத்தையும் படிக்க: http://www.thamizhstudio.com/Pesaamozhi/Mag_29_nkkreview.php
----------------------------------------------------------------------------------------------------------------------
 
2. பேசும் சித்திரங்கள், சூரியன் பதிப்பகம் வெளியீடு, விலை: ரூபாய் 150/-

தமிழில் இதுவரை வந்துள்ள சிறந்த குறும்படங்கள் சிலவற்றை அருண், மிக நுட்பமாகவும், ஆழமாகவும் இப்புத்தகத்தில் அலசியிருக்கிறார். என்னைப் போல் பலருக்கு, நாங்கள் உருவாக்கிய குறும்படங்களைப் பார்த்த பின்பே முழுநீளத் திரைப்பட்த்தைத் தயாரிக்க, தயாரிப்பாளர்கள் முன்வந்தனர். ஆனால் இன்று ஒரு தயாரிப்பாளரை வெறுமனே Impress செய்வதற்கு மட்டும் என பலர் குறும்படங்கள் எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் முழுநீள கமர்ஷியல் திரைப்படங்களின் சுருக்குமான வடிவமாக பல குறும்படங்கள் உள்ளன. அதைப் போன்ற படைப்புகளைத் தாண்டி genuine to its art form ஆக படைக்கப்பட்ட பல குறும்படங்கள், பெரும்பாலும் சில திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுவிட்டு பின் Youtubeல் upload செய்யப்பட்டு பெருங்கூட்ட்த்தில் கண்டுகொள்ளப்படாமல் அதன் ஆயுளை நிறுத்திக்கொள்கிறது. அவ்வாறான படைப்புகளை அலசி ஆராய்ந்து, அதன் online link கொடுக்கப்பட்டு, அந்தந்த படங்களின் இயக்குனரைப் பற்றியும் அந்தக் குறும்படம் எடுக்கப்பட்ட நோக்கத்தையும் கூறியிருப்பது மிகச் சிறப்பு.

----- கார்த்திக் சுப்புராஜ்

 
 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: அருண் @ தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio