கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  அறிமுகம் TS கட்டுரைகள் TS சிறுகதைகள் TS நூல்கள் TS நேர்காணல்
 
 
 

 

 

 

 
     
     
     
     
வாயில்

வேற்றுமொழித் திரைப்படங்களை பார்க்கும்போது சப்-டைட்டில் தேவையா?

 

நான் மிக உறுதியாக ஒன்றை நம்புகிறேன். சப்-டைட்டில் இல்லாமல் பார்த்து, நீங்கள் ஒரு படத்தை புரிந்துக் கொண்டால் அதுதான் உலகப் படம். தவிர, சப்-டைட்டில் இருக்கிற படங்களைப் பார்க்கும்போது நமது கவனம் முழுவதும் சப்-டைட்டிலை நோக்கியே இருக்கும். அதை படித்துக் கொண்டே காட்சிகளையும், மற்ற முக்கியமான விசயங்களையும் கோட்டை விட்டுவிடுவோம். மிக முக்கியமாக வேற்றுமொழித் திரைப்படங்களை பார்த்துக்கொண்டிருக்கும்போது, சப்-டைட்டிலை படித்துக்கொண்டிருந்தாள், அதில் வரும் காட்சிகளை நம்மால் பார்க்கமுடியாது. மாறாக தொடர்ந்து என்ன உரையாடல் நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள கண்கள் முழுக்க சப்-டைட்டில் இடத்திலேயே திரிந்துக்கொண்டிருக்கும். எனவே உலகப் படங்களை எங்கே திரையிட்டாலும், நான் ஒருபோதும் சப்-டைட்டிலை ஆன் செய்வதே இல்லை. இந்த சப்-டைட்டில் யாருக்கு தேவை? உலகப் படங்களை பார்த்துவிட்டு, உள்ளூர் படங்களை குறை சொல்ல, தனது அறிவுஜீவி தனத்தை காட்டிக் கொள்ள, இருக்கிற உலகப் படங்களின் கதைகளை எழுதி, தான் ஒரு உலக அறிவுஜீவி என்று நிரூபித்துக் கொள்ள விழைபவர்களே முதல்முறையாக பார்க்கும் படங்களில் சப்-டைட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில படங்களில் நிச்சயம், வசனங்களின் தேவை கருதி, சப்-டைட்டில் இருக்க வேண்டும் என்று நானும் கருதுவதுண்டு. ஆனால் அதெல்லாம், தனது காட்சிகளால் அந்த திரைப்படம் என்னை வசீகரித்தே பின்னரே. இல்லாமல், காட்சிகளால் என்ன வசீகரிக்கத எந்த படத்தையும் நான் இன்னொரு முறை பார்ப்பதில்லை. காட்சிகளால் வசீகரித்த படங்களை, மீண்டும் சப்-டைட்டில் ஆன் செய்துவிட்டு பார்ப்பேன். அப்போது விட்டுப் போன சில முக்கியமான விடயங்களையும் தெரிந்துக் கொண்டிருக்கிறேன்.

உலகப் படங்களை பார்த்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? இத்தனை படத்தை பார்த்திருக்கிறேன் என்று நீங்கள் சொல்வதால் உங்களுக்கு என்ன பெரிய வெகுமதி கிடைத்துவிடப் போகிறது? உலகப் படங்களை பார்ப்பது, நமது ஆத்மா திருப்திக்காக.. நமது திரைப்பட அறிவை வளர்த்துக் கொள்வதற்காக.. நிச்சயம், இதற்காக நாம் உலகப் படங்களை இரண்டு மூன்று முறை பார்த்துதான் ஆகவேண்டும். மாறாக நான் இத்தனை உலகப் படங்களை பார்த்திருக்கிறேன், என்று உலகப் படங்களின் அருமை பெருமைகளை பேசிவிட்டு, தமிழில் அதே படங்களை காப்பி அடிப்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கும் கூட்டங்களும் தன்னை அறிவுஜீவியாக நிறுவிக் கொள்ள உலகப் படங்களை ஒரே முறை சப்-டைட்டிலோடு பார்த்துவிட்டு மார்தட்டிக் கொள்ளும் மேதாவிகள் குறித்தும் எனக்கு பெரிய அக்கறை இல்லை. சினிமாவை நேசிப்பவர்கள், உலகப் படங்களை பார்த்து சினிமாவை இன்னும் தெரிந்து கொள்ள விழைபவர்கள், சினிமாவை ஆத்மா திருப்திக்காக பார்ப்பவர்கள், அனைவரும் முதல் முறை சப்-டைட்டிலை ஆஃப் செய்துவிட்டு, அந்த படம் தனது காட்சி மொழியால் உங்களை கவர்ந்தால் இன்னொரு முறை சப்-டைட்டிலை ஆன் செய்து பாருங்கள். இரண்டு முறை பார்ப்பதால் நீங்கள் இழக்கப்போவது ஒன்றுமில்லை. ஆனால் பெறப்போவது மிக அருமையான தருணங்களை….

- தமிழ் ஸ்டுடியோ அருண்

 

thamizhstudio@gmail.com

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: அருண் @ தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio