வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
1
 
1 ஓர் அறிமுகம்
1
1 பகுதி-1
1
1 பகுதி-2
1
1 பகுதி-3
1
1 பகுதி-4
1
1 பகுதி-5
1
1 பகுதி-6
1
1 பகுதி-7
1
1 பகுதி-8
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1  
 
  ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
 
தொடர்கள் முதல் பக்கம்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் – கற்பனையிகளின் சக்ரவர்த்தி: வாழ்க்கை தொடர்

HE WAS DISAPPINTED IN THE WORLD, SO HE BUILT ONE OF HIS OWN
-JEDEDIAH LELAND ON CHARLES FOSTER KANE IN ”CITIZEN KANE”


ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் – இந்த பெயர் தற்கால சினிமாவில் உற்சாகத்திற்குரிய பெயர், மதிப்பிற்குரிய பெயர், ஹாலிவுட்டில் கோடிகள் வசூல் செய்து கொடுக்கும் பெயர். பேண்டசி வகை திரைபடங்களில் உலக ரசிகர்களை கட்டி போட்டவர். மொழி பற்றிய கவலை வேண்டாம். இவர் படத்தை ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட பார்த்து குதூகலிப்பார்கள். வேற்று கிரக வாசிகள் பற்றிய இவரது கற்பனையும், இவர் உயிர்பித்து கொடுத்த டைனாசர்களும் இவரது கற்பனையின் உச்சத்திற்கு சான்று. வெறும் பேன்டசி படங்களை மட்டும் தான் ஸ்பீல்பெர்க்கால் எடுக்க முடியும். அந்த மாதிரி படங்களை எடுத்து சம்பாதிப்பதில் என்ன பெரிய சாதனையிருக்கிறது? என்று விமர்சித்தவர்களை “The Color Purple” மற்றும் “Schindlers List” போன்ற படங்களின் மூலம் திகைக்க வைத்தவர்.

இன்று சினிமாவில் பிரகாசிக்க நினைக்கும் அனைவருக்கும் இவர்தான் ரோல் மாடல். இவர் படங்களை போன்று வசூல் பெற வேண்டும். இவர் படங்களை போன்று விருதுகளை அள்ளி குவிக்க வேண்டும். இவரை போன்று காட்சிகளை படமாக்க வேண்டும் என்று ‘ஸ்பீல்பெர்க் போல்“ என்ற வகையறாக்கள் அதிகம் இவர் படம் வெளிவருகிறது என்றால் பேய்த்தனமாக வரிசையில் நின்று முதல் நாளே படம் பார்க்கும் ரசிக கோடிகள் இன்றும் உலகம் முழுதும் பரவியிருக்கிறார்கள். இவரது படத்தை முதல் நாள், முதல் காட்சி பார்ப்பதையே அவர்கள் பெருமிதமாக நினைக்கிறார்கள்.

இவர் எடுத்த “ET” குழந்தைகளுக்கான திரைபடங்களில் முக்கிய இடம் வகிக்கும். உலகப்படங்களை பற்றி பேசும்போதும் நம்மால் ஸ்பீல்பெர்க்கின் படைப்புகளை ஒதுக்க முடியாது. நவீன சினிமாவில் இவர் தன்னிகரற்ற சாதனையாளர். உன்னதமான படைப்பாளி, கற்பனைகளின் சக்ரவர்த்தி.. சிறு வயதில் தன் தந்தை கொடுத்த கேமிராவில் இவர் பிடித்த படங்கள் பார்க்க அழகாக இருக்க, தன் வீட்டின் கார் ஷெட்டை சினிமா ஸ்டுடியோ ஆக்கி, அக்கம் பக்கத்து வீட்டாரை நடிக்க வைத்து, இவர் எடுத்த படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. அது மாதிரி இவர் எடுத்த ஒரு படம் திரையரங்கில் திரையிடப்பட்டு லாபமும் அடைந்தது. அப்போது ஸ்பீல்பெர்க் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். சினிமாதான் தன் வாழ்க்கை என முடிவு செய்து, ஹாலிவுட்டை சுற்றிப்பார்க்க போன ஸ்பீல்பெர்க், ஒரு கழிவறைக்குள் ஒளிந்துக்கொண்டு வேண்டுமென்றே வண்டியை தவறவிட்டு, யுனிவர்சல் ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்ந்து, அங்கேயே படம் இயக்கும் அளவிற்க்கு தன்னை வளர்த்துக்கொண்டவர்.

இவரைப் பற்றிய செய்திகள் சேகரிக்கும்போது, அவை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. இத்தனை நாள் நான் பார்த்த இவரது படங்களின் பின்னணியில், இவர் அதை கட்டமைத்த விதமும், படம்பிடித்த விதமும், கற்பனை செய்து உருவாக்கிய விதமும் ஒரு ஸ்பீல்பெர்க் படத்திற்கே உரிய சுவாரசியங்கள் நிறைந்தது. இதனால் இவரது படங்களை பற்றி எழுதுவதே ஒரு ஜாலியான அனுபவமாகயிருக்கும் என்பதால் இனி ஸ்பீல்பெர்க் படங்களை பற்றியும் அவரது வாழ்க்கையை பற்றியும் பேசப்போகும் ஒரு தொடர் எழுதுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ’ஜாஸ்’ என்கிற இவரது படம் வெளியாகி, பலர் குளிக்க கடலிலும், ஆற்றிலும் இறங்கி நீந்தவே பயந்த நேரம். படம் வசூலில் சாதனை புரிந்துக்கொண்டிருக்க ஸ்பீல்பெர்க்கை உலகம் கவனிக்கத் தொடங்கியது. அவரைப் பற்றி அவரது தங்கை ஆனியிடம் கேட்டபோது, அவர் இப்படி சொன்னார்.

“ஸ்டீவன் சின்ன வயதில் எங்களை பயமுறுத்திக் கொண்டிருந்தான், இப்பொழுது.... உலகத்தை!”

பிரம்மாண்டம் வளரும்...

இப்பகுதி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று புதுப்பிக்கப்படும்.


அடுத்து

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.