வாயில்      குறும்பட விற்பனை        படைப்புகள்       படைப்பாளிகள்      தொழில்நுட்பம்
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  பார்வைக்கு வந்தவை
  போட்டிகள்
  பட்டறைகள்
  திரைக் களஞ்சியம்
  குறும்பட சேமிப்பகம்
  குறும்பட வழிகாட்டி
  குறும்பட வட்டம்
  உண்டியல்
  தொடர்கள்
  அனுபவம் புதுமை
  ஆவணங்கள்
  கட்டுரைகள்
  செய்திகள்
  நிகழ்வுகள்
  வலைப்பூக்கள்
  வெள்ளித்திரை
  மற்றவை
  தொடர்புக்கு
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
 
     
11
1
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
1
 
1 ஓர் அறிமுகம்
1
1 பகுதி-1
1
1 பகுதி-2
1
1 பகுதி-3
1
1 பகுதி-4
1
1 பகுதி-5
1
1 பகுதி-6
1
1 பகுதி-7
1
1 பகுதி-8
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1  
1  
1  
1  
1  
 
  ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
 
தொடர்கள் முதல் பக்கம்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் – ௦06 - அக்னிப்பார்வை

ஸ்பீல்பெர்கை வெளியேத் தள்ளுங்கள்
!

A story should have a beginning, a middle, and an end . . . but not necessarily in that order
--- Jean Luc Goddard

Night Gallery – இது தான் ஸ்பீல்பெர்க், யுனிவர்சல் ஸ்டூடியோவிற்காக இயக்கிய முதல் தொலைக்காட்சி தொடர். உண்மையாக சொன்னால் மூன்று பகுதிகள் கொண்ட அந்த தொடரில் ஒரு பகுதியை தான் இயக்கினார். ஸ்பீல்பெர்க் இயக்கிய அந்த பகுதி தான் தொடரின் இறுதி பகுதி, உணர்ச்சிமயமானது.

அந்த தொடரில் ஜோன் ஒரு விதவை, கண் தெரியாத பணக்காரராக நடித்திருந்தார். படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போதே ஸ்பீல்பெர்கை அழைத்து இறுதி காட்சி எடுப்பதற்கு முன் தனக்கு ஒத்திகை பார்க்க நேரம் ஒதுக்க வேண்டும் என கேட்டிருந்தார். ஸ்பீல்பெர்கோ, படப்பிடிப்பை அவசரமாக முடிக்க வேண்டியிருந்ததால் அதை மறந்துவிட்டார். இறுதி படப்பிடிப்பு நடத்த வேண்டிய நாளில், ஜோன், ஸ்பில்பெர்கை அழைத்து அழ தொடங்கிவிட்டார். “இங்கே பார் ஸ்டிவன், அந்த காட்சிக்கு முன் ஒத்திகை பார்க்க வேண்டும் என்று நான் சொல்லியிருந்தேன், இப்பொழுது பார், எனக்கு அந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை: என்றார்.

ஸ்பீல்பெர்கின் காவல் தெய்வமாயிற்றே ஜோன், ஸ்பீல்பெர்க் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஜோன் ஒத்திகை பார்க்க அனுமதித்தார். அதன் விளைவு ஜோன் அந்த இறுதிக்காட்சியை அற்புதமாக நடித்துக் கொடுத்தார்.

படப்பிடிப்பு முடிந்தவுடன், எடிட்டிங் இசை சேர்ப்பு போன்ற போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் தொடங்கின. எடிட்டிங் செய்தபோது ஸ்பீல்பெர்கின் தொல்லை தாங்காமல், எடிட்டர் ஸ்பீல்பெர்கை ஸ்டுடியோவை விட்டு வெளியே தள்ளிவிட்டார்.
பிரச்சணை இது தான். ஒரு கண் அறுவை சிகிச்சையின் உண்மையான காட்சிகளை கொண்டுவந்து இணைக்க சொன்னார் ஸ்பீல்பேர்க். உண்மையான அறுவை சிகிச்சை காட்சிகளை எங்கே இணைக்க வேண்டும் என்று எடிட்டரால் தீர்மானிக்க முடியவில்லை. அவர் அந்த தொடரை அதன் ஆரம்பத்திலிருந்து எடிட் செய்து வருபவர். எவ்வளவு சொல்லியும் ஸ்டிவன் கேட்கவில்லை. கோபமாகி அந்த எடிட்டர் ஸ்பில்பெர்கை வெளியே தள்ளிவிட்டார். நல்ல வேளை யாரும் இதை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.

ஸ்பீல்பெர்க் அருமையாக படம் பிடித்திருக்கிறார் என்ற பாரட்டு கிடைத்தது. ஆனால் அதே நேரம் ஸ்பீல்பெர்க் மனதிலோ “இது என் தொழிலல்ல, நான் இதற்கு லாயக்கில்லை” என்ற என்ணமும் மேலோங்கியது.

படம் மட்டும் எடுக்க வேண்டும். என்ன இது? உண்மையான ஸ்டுடியோ இயங்கும் விதம் அவரை எரிச்சல் பெற செய்தது. முக்கியமாக நாடகங்கள் இயக்குவது ஸ்பீல்பெர்கின் எண்ணம்ல்ல. அவ்ர் நினைத்ததெல்லாம் படங்கள் இயக்க வேண்டும் என்பது தான்.
இன்னொரு பக்கம் யுனிவர்சல் ஸ்டுடியோவில் இருக்கும் பிற மானவர்களின் படைப்புகளை பார்த்து ஸ்பீல்பேர்க் வியக்க தொடங்கினார் அதுவும் அந்த பையன்-ஸ்பீல்பெர்கின் ஒத்த வயதுடையவன். இயக்கும் படங்கள் அருமையாக உள்ளன. அமெரிக்க திரைப்பட தொழில்நுட்ப கல்லுரியில் படித்தவனாயிற்றே அவன் பெயரென்ன ஆங்...லூகாஸ். ஜியார்ஜ் லூகாஸ்.

ஸ்பீல்பெர்கின் நாட்கள் பெரும்பாலும் வேலையில்லாமல் ஸ்டுடியோவை சுற்றுவதிலும், புதியவர்களுக்கு ஸ்டியோவை சுற்றி காண்பிப்பதிலும், எப்பொழுதாவது வரும் சில தொடர்களிலும் நாட்கள் கழிய தொடங்கின..

ஒரு நாள் ஸ்பீல்பெர்கின் மேஜை மீது ப்ளேபாய் பத்திரிக்கை இருந்தது. ஸ்பீல்பேர்க் புரட்ட தொடங்கினார். ஸ்பீல்பெர்கின் காரியதரிசி அதை கொண்டுவந்திருந்தார். அதிலிருக்கும் ஒரு சிறுகதையை ஸ்பீல்பேர்க் படமாக எடுத்தால் நன்றாக இருக்கும் என தன் விருபத்தை தெரிவித்திருந்தார்.

ஸ்பீல்பேர்க் அந்த சிறுகதையை படித்தார்.உடனே அதை திரைப்படமாககுவது பற்றி ஸ்டுடியோவிடம் பேசினார். ஒப்புதல் கிடைத்து, ஒரு வாரம், ஒரு புரட்க்‌ஷன் யூனிட் ஸ்பீல்பெர்கிற்கு வழங்கபட்டது. நான்கு கேமாராக்கள் வந்திருந்தன.முதலில் ஸ்பில்பெர்கின் கவலை நான்கு கேமரவை வைத்து என்ன செய்ய வேண்டும் என்பது தான்....

மன்னிக்கவும்.. கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேன். காரியதரிசி கதையை கொடுத்தார். ஒப்புதல் கிடைத்து.அதற்கு திரைக்கதை அமைக்க வேண்டுமே.. முதலில் கதையே கொஞ்சம் ஏடாகூடமானது. காலை நெடுஞ்சாலை ஒன்றில் ஒருவர் தன் காரில் பயணம் மேற்கொள்கிறார். சாலையில் போய்க்கொண்டிருக்கும் பொழுது அவர் முன் ஒரு பெரிய லாரி வழிவிடாமல் செல்கிறது. அந்த லாரியை ’ஓவர்டேக்’ செய்து பயணத்தை தொடர்கிறார்.

மெதுவாக சென்று கொண்டிருக்கும் அவரை அந்த லாரி திடிரென் ஓவர்டேக் செய்கிறது. இவர் கொஞ்சம் கடுப்பாகி அதை ஓவர் டேக் செய்ய முயல அவர்களுக்குள் ஒரு ஈகோ யுத்தம் உருவாகிறது.. அவர்களுக்குள் நடக்கும் அந்த போட்டி ஒருவிதமாக முற்றி லாரி ஓட்டுனர், கார் ஓட்டுனரை கொல்ல முயற்ச்சிக்கிறார். லாரி ஒட்டுனரிடமிருந்து தப்பித்தால் போதுமெனெ கார் ஓட்டுனர் போவதும் அவரை துரத்தி பிடித்து கொல்ல வேண்டும் என லாரி ஓட்டுனர் போவதும் இறுதியில் என்னவாகியது என்பது தான் அந்த சிறுகதை.

முதலில் இதை படித்தவுடன், ஸ்பீல்பெர்கிற்கு ஏதோ ஒன்று அந்த சிறுகதையை பற்றி ஒரு பொறி தட்டியது. முதல் காரணம் அமெரிக்கர்களின் வாழ்க்கை முறை. அவர்கள் வீட்டிற்கு கட்டாயம் ஒரு காராவது (கார்) வைத்திருப்பார்கள். அசாதரணமான வேகமாக செல்ல கூடியவர்கள்.

இதை படிப்பவர்களில் பயணம் செய்பவராக, குறிப்பாக ஓட்டுனராக இருந்தால், சாலையில் நமக்கே தெரியாமல் நாம் பங்கு பெறும் ஈகோ போட்டிகளை பற்றி நன்கு புரியும்.

அருமையான கதை அதை திரைக்கதையாக மாற்ற வேண்டும்..

ஸ்பீல்பெர்க் தன் வாழ்நாளின் மிக முக்கிய பாடம் ஒன்றை திரைக்கதை அமைக்கும் போது தான் கற்றார். ஹாலிவுடில் புதினங்களோ, சிறுகதைகளோ திரைப்படமாக்குவது இயல்பான ஒன்று. ஆனால்..ஒரு சிறுகதையை படமாக மாற்றும் போது உள்ள சிரமங்கள் கணக்கிலடங்காதவை. நீங்கள் அதை வெற்றிகரமாக செய்துவிட்டால் உண்மையாகவே நீங்கள் பெரிய இயக்குனர் தான்.

பதேர்பாஞ்சாலி படத்தை பார்த்துவிட்டு அதை புதினமாக எழுதிய பிபுதிபூஷ்ன் பட்டாச்சரியா, “படம் நன்றாக எடுக்கவில்லை“ என்று சத்யஜித்ரேவை குறை கூறினார். நிலைமையை புரிந்துக்கொள்ளுங்கள். இதை ஹாலிவுட் வெற்றிகரமாக செய்து வருவதே ஒரு வித புரிதலால்தான். சரி இந்த கடினமான நிலையை ஸ்பீல்பெர்க் எவ்வாறு கையாண்டார்.. என்று பார்போம்...

பிரம்மாண்டம் வளரும்...

இப்பகுதி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று புதுப்பிக்கப்படும்.


அடுத்து

கருத்து பதிவு
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.