பேசாமொழி பதிப்பகத்தின் - ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா - தினேஷ்

தனக்குத்தெரிந்த ஒளிப்பதிவுத் தகவல்களை வெறும் தரவுகளாக மட்டுமே புத்தகத்தின் பக்கங்களெல்லாம் நிரவி நூலின் கனத்தை அதிகப்படுத்தி, அதன் செறிவைக் கெடுக்காமல் ஒளிப்பதிவுக் கலை சினிமாவில் எவ்விதம் பரிணாமிக்கிறது?, அதன் செயல்பாடு என்ன?, கேமராவின் தொழிற்நுட்பக் கூறுகள் யாவை? என்ற கேள்விகளுக்கெல்லாம் தன் எழுத்தின் வழியே எளிமையாக விளக்கிச்செல்கிறார் திரு. விஜய் ஆம்ஸ்ட்ராங்க். கேமராவின் அடிப்படை விதிகளை இவர் விளக்கிக்கூறுகிற பொழுது ஒவ்வொன்றிற்கும் தகுந்த உதாரணங்களையும், படங்களையும் இடைச்செறுகலாகக்கொடுத்து வாசகர்களின் புரிதலை இன்னும் எளிமையாக்கியிருப்பது சிறப்பு. உதாரணமாக 180 டிகிரி ரூல்...

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

மலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - சுகுமாரன்

உலக சினிமாவின் முதல் பொதுக் காட்சி 1895 இல் பாரீஸில் நடத்தப்பட்டது. லூமியர் சகோதரர்கள் அதை நடத்தினார்கள். வெற்றிகரமான திரையிடலாக இருந்தது அது. அந்த வியாபார வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள உலகப் பயணம் செய்து திரையிடல்களை நடத்தினர். லூமியர் சகோதரர்கள். பாரீஸில் முதல் திரைப்படக் காட்சி நடந்த மறு வருடமே பம்பாயிலும் லூமியர் காட்சி நடந்தது. லூமியே-ன் ஏஜெண்டுகள் காட்சி நடத்தித் திரும்பிப் போனார்கள். அவர்கள் விட்டுச்சென்ற கேளிக்கை வணிகத்தில் தூண்டப்பட்ட இந்தியர்கள் பலர் புரொஜக்டர்களை வெளிநாடுகளிலிருந்து தருவித்து உள்நாட்டில்...

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
டாக்குமெண்டரி படங்களின் தந்தை ராபர்ட் ஃப்ளஹர்ட்டி - ரவி இளங்கோவன்

ஃப்ளஹர்ட்டிக்கு ஒன்பது வயதாகும்போது சுரங்கப் பொறியாளரான அவரது தந்தை, வேலை தேடி குடும்பத்துடன் கனடாவின் வட பகுதிக்கு இடம் பெயர்ந்தார். இதனால் முறையான கல்வி அவருக்கு கிடைக்கவில்லை. அங்கு சுரங்கங்களுக்கு அருகில் இருந்த குடியிருப்பில் ஃப்ளஹர்ட்டியின் குடும்பம் வசித்தது. இதனால் சுரங்கத் தொழிலாளர்களாக இருந்த பழங்குடி மக்களின் நேசமும், நெருக்கமும் ஃப்ளஹர்ட்டிக்குக் கிடைத்தது. அம்மக்களின் இயல்பான, சுதந்திரமான வாழ்க்கை முறை ஃப்ளஹர்ட்டியைக் கவர்ந்தது. மெக்கன்சி என்பவர் ஃப்ளஹர்ட்டியை ஹட்சன் விரிகுடாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இரும்புத்தாது கிடைக்கிறதா? என்பதைக் கண்டறியும் ஆராய்வாளராகப் பணியில் அமர்த்தினார்.


  மேலும் படிக்க
 
 


பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் - வருணன்


அமெரிக்க சினிமாவின் மிக ஆரம்பகால வரலாற்றை புரட்டினால் நாம் இன்று அறிவியல் அறிஞர், தலைசிறந்த கண்டுபிடிப்பாளர் என வியந்தோதும் தாமஸ் ஆல்வா எடிசனின்- நமக்கு அறிமுகமே இல்லாத- முதலாலித்துவ முகம் தெரிய வரும். அந்த அளவிற்கு சகலரும் உலக சந்தையை தம்வயப்படுத்த இயன்றவரை சினிமாவை வணிகப்படுத்த முயற்சித்தனர். போர், திரைப்படங்கள் எடுக்கும் சாத்தியத்தைத் தான் ஐரோப்பிய பிராந்தியத்தில் முடக்கியிருந்ததேயொழிய சினிமாவைப் பார்க்க விரும்பும் மக்களின் ஆவலை அல்ல. ஒரு வகையில் சொல்லப் போனால் மனிதனுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் நிலையில், அந்த இக்கட்டான சூழலில் இருந்து ஒரு தற்காலிக விடுதலை மிக அவசியமானதாக இருக்கும்.


  மேலும் படிக்க
       
 
 
'குத்துவிளக்கு’ - மண் மணம் வீசிய திரைப்படம் - தம்பிஐயா தேவதாஸ்

திரு. துரைராஜாவை நான் ரூபவாஹினியில் பேட்டி கண்டபோது, அவர் சொன்னார். “இலங்கைத் தமிழருக்குத் தனித்துவம் இருக்கிறது. அவர்களின் பேச்சுவழக்கு, பழக்க வழக்கங்கள் வாழ்க்கை முறைகள் போன்றவை தனித்துவமானவை. இந்த இலங்கைத் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக் கலைஞர்களைக் கொண்டே இங்கு ஒரு தமிழ்ப்படம் உருவாக்கக்கூடாதா என்று எண்ணினேன். இலங்கைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொழில் நுட்பவல்லுனர்கள் போன்றோரை ஒன்றிணைந்து ஒரு உன்னதமான தமிழ்ப்படத்தை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் என் உள்ளத்தில் நீண்ட நாட்களாகவே நிலை கொண்டிருந்தது.

 

 

  மேலும் படிக்க
 
 
வெட்கத்தினால் உடைந்தழிந்து போனார் புத்தர் - எம்.ரிஷான் ஷெரீப்

அடுத்த வீட்டுச் சிறுவன் கல்வி கற்பதைப் பார்த்து அந்த ஐந்து வயதுச் சிறுமிக்கு, பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்கும் ஆர்வம் எழுகிறது. அவளிடமோ அப்பியாசக் கொப்பியோ, பென்சிலோ இல்லை. வாங்குவதற்கு வீட்டிலும் பணம் இல்லை. கடைக்காரரின் யோசனைக்கிணங்க, வீட்டில் அவள் வளர்க்கும் கோழியிட்ட நான்கு முட்டைகளை எடுத்துக் கொண்டுபோய் சந்தையில் விற்கப் பாடுபடுகிறாள். அதிலும் இரண்டு முட்டைகள் விழுந்து உடைந்து விடுகின்றன. மீதியிரண்டைப் பாடுபற்று விற்றுக் கிடைக்கும் பணத்தில் ஒரு கொப்பி வாங்குகிறாள். பென்சில் வாங்கப் பணம் போதவில்லை. எனவே வீட்டுக்கு வந்து தாயின் லிப்ஸ்டிக்கை வைத்து எழுதலாம் என்ற எண்ணத்தோடு அதை எடுத்துக் கொண்டு அந்தச் சிறுவனோடு பள்ளிக்கூடத்துக்கு வருகிறாள்.




  மேலும் படிக்க
   
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
குறும்படங்களின் பத்தாண்டுகள் – 1900 – 1909 - லதா ராமகிருஷ்ணன்

1900 மத்தியில் F.B. தானாவாலா என்ற இசுலாமியர், மின்பொறியாளர் இத்தகைய சிறு படங்களை வாங்கித் திரையிடுவது என்பதைவிட்டு தானே தயாரிப்பதில் ஈடுபடத்தொடங்கினார். கல்பாதேவியில் இருந்து அவரது கடையில் திரைப்படக் காட்சிக்கருவி (Projector) ஒலிப்பதிவுக் கருவி முதலியன விற்கப்பட்டன. வசதி படைத்த மற்றும் உயர் குடிக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அவற்றை வாங்கித் தங்கள் வீடுகளில் வைத்துக்கொண்டனர். அந்தஸ்து சம்பந்தப்பட்ட காரணங்களுக்காகவும், தனியாக அல்லது தங்களுடைய உள்வட்ட மனிதர்களோடு அமர்ந்து பொழுதுபோக்கவும் அந்தக் கருவிகள் அவர்களுக்குப் பயன்பட்டன. சமயங்களில் வறட்சி நிவாரண நிதி முதலிய பொதுநலக் காரியங்களுக்குப் பணம் வசூலிக்கவும் சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்ய இந்தக் கருவிகள் பயன்பட்டன.



  மேலும் படிக்க
 
 


”கண்ணீர் வேண்டாம் சகோதரி” – தான்யா

ஈழத்தைப் பொறுத்தவரை நிர்மலா – ராஜனி சகோதரிகளின் பங்களிப்பு, விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பில் முக்கியமானது. யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்களான ராஜனி திரானகம, ராஜன் கூல், தயா சோமசுந்தரம் மற்றும் கே.சிறீதரன் போன்றவர்களால் ‘முறிந்த பனை’ என்கிற ஆவணம் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க சேகரிக்கப்பட்டது. இந்நூல் ஈழப் போராட்ட வரலாற்றையும், போக்கையும், அதன் நீட்சியையும், இயக்கங்களுள் ஏற்பட்ட பிளவுகளையும் பேசியிருந்தது. இன்று ராஜனியை ‘முறிந்த பனை’ எழுத்தாளராய் மட்டுமே முன்னிறுத்திவிடுகிறார்கள்.



 

 

 

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome