வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

“அந்தத் தூசியையாவது தட்டிக் கொண்டுவந்து தரக் கூடாதா” என்பாள்.. காணாததற்கு அம்மா தாத்தா, கிராமத்தில் இறந்த போனபின் அங்கேயுள்ள பந்திப் பாய், ஜமுக்காளங்களும் இங்கே வந்து விட்டது.”போ, அதுக்கும் மண்டையிடி புடிச்சாச்சா” என்று அங்கலாய்ப்பாள்.

 

இரண்டு கட்டில்கள் கிடந்தன ஒரு பெண், ஒரு கட்டிலில் இருந்தாள், அவசரமாக எழுந்தாள். வட்ட முகம் நீளமான முடி. நடிகை அம்பிகா, (அந்தக்கால அம்பிகா-மலையாள நடிகை-அவள்தானோ என்று பல தடவை நினைத்ததுண்டு-) போலிருந்தாள். அப்பாவைப் பார்த்ததும் அவளும், “வாங்க, வீட்ல எல்லாரும் சௌக்கியமா, உங்களை பாக்கத்தான் வந்தாரா, நானும் வந்திருப்பேனே” என்றாள்.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 

சுஜாதா தேசிகன்

"தேசிகன் என் கதைகளில் ஒரு 'அத்தாரிட்டி' என்று கூட சொல்லலாம். பல சமயங்களில் நான் எழுதிய
கதைகளைப் பற்றிய சந்தேகங்களை நானே அவரிடம் கேட்பேன். இந்த வருசத்தில், இன்னப பத்திரிகையில்
எழுதியது என்று தெளிவாகத் தகவல் கொடுப்பார். மேலும் நான் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் என்னிடம் இல்லை, தேசிகனிடமிருக்கிறது. புத்தக வடிவில் இன்னும்வராத கட்டுரைகள் கூட வைத்திருக்கிறார்.

ஓர் எழுத்தாளனுக்கு இவ்வகையிலான வாசகர்கள் அமைவது அதிர்ஷ்டமே!" என்று தமிழுலகம் கொண்டாடும் எழுத்தாளர் சுஜாதா அவர்களிடம் பாராட்டுப் பத்திரம் வாங்கியவர் தேசிகன். பெங்களூரு மாநகரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி புரிந்துக் கொண்டிருந்தாலும், தொடர்ந்து இலக்கியத் துறையில் தனது முத்திரையை பதித்து வருபவர். சிறுப் பத்திரிகை மட்டுமல்லாது வெகுஜனப் பத்திரிகைகளிலும் தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருபவர்.

1995 ஆம் ஆண்டில் tamil.net எனும் வலைப்பக்கத்தை தொடங்கி கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். தற்போது http://www.desikan.com/
எனும் அவருடைய சொந்த இணையதளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கூடு விட்டு கூடு TS சுஜாதா தேசிகன் தொடர்கள் வாயில்


என்னே இந்த சமூகத்தின் கொடுமை!

சுஜாதா தேசிகன்  

திருச்சியில் என் அறைக்கு எதிரில் குடை மாதிரி மரம் ஒன்று என்னை வருடம் முழுக்க பார்த்துக்கொண்டு இருக்கும். முழுவதும் பச்சையாக இலைகளுடன், முருங்கைக்காய் போன்ற காய்களுடன். சில மாதங்களில் மரம் முழுவதும் மொட்டுவிட்டு ஒரு நாள் இலைகளே இல்லாமல் முழுவதும் திராட்சை கொத்து போன்ற மஞ்சள் பூக்களுடன்... ஒரு வாரத்தில் உன்னால் முடியும் தம்பி படத்தில் பூக்கள் உதிர்வது போல உதிர்ந்து கீழே இருக்கும் பெரிய கற்களுக்கு ஸ்டென்ஸில் போட்டுவிடும். பிறகு முழு மரமும் மொட்டையாகி திரும்ப இலைகள் வரும். படிக்கும் காலத்தில் அந்த மரத்தின் பெயர் தெரியவில்லை. ஒரு முறை ஒரு கோயில் அர்ச்சகர் சைக்கிள் கேரியர் மீது ஏறி சில பூக்களை பறித்துக்கொண்டு இருந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

அந்த மரம் இருந்த இடம் அண்ணன் தம்பிக்கு பங்கு போடப்பட்டு சில நாட்களில், இரண்டு பேர் சில மணி நேரத்தில் மரத்தை மாட்டுவண்டியில் எடுத்துக்கொண்டு போனார்கள்.

போன வருடம் மே மாதம் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் இந்த மரத்தை பற்றி சின்ன குறிப்பு வந்திருந்தது. அதில் இந்த பூ ஒரு ரூபாய் இந்திய தபால் தலையில் அலங்கரித்துள்ளது, அதன் பெயர் Golden Shower என்று போட்டிருந்தார்கள். பல வருடங்கள் கழித்து, எதேச்சையாக பெங்களூரிலிரிந்து சென்னைக்கு போகும் போது வேலூர் தாண்டி வலது பக்கம் இரண்டு மரங்களை பார்க்க முடிந்தது. இந்த மரத்தின் தமிழ் பெயர் கொன்றை!

போன கூடு இதழில் சுஜாதா பற்றிய பதிவில் ஜாகரண்ட பூ பற்றி எழுதியிருந்தது நினைவிருக்கலாம். சில வாரங்களாக பெங்களூர் முழுக்க இந்த பூவை பார்க்க முடிகிறது, கொட்டுவதற்குள் பார்த்துவிடுங்கள்.

- 0 - 0 - 0 - 0 - 0 -

இந்த வாரம் சிறுகதை முடிவுகளை பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். கதையை எப்படி சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு "கண்ணீர் வர சொல்லலாம், சிரிக்கச் சிரிக்க சொல்லலாம், கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்புவர,படிப்பவருக்கு ஒன்பதில் ஏதேனும் ஒரு உணரச்சியைத் தந்தால் போதும்." என்று சுஜாதா சிறுகதை எப்படி எழுதுவது என்ற குறிப்பில் எழுதியிருக்கிறார். பல கதைகளின் முடிவுகளை பற்றி அவரிடம் பேசியிருக்கிறேன். ஒரு முறை மலைக்கோட்டை ரயிலில் என் கூட படித்த நண்பன் டீ விற்றுக்கொண்டிருந்ததை பார்த்து அதை வைத்து எழுதிய கதை வின்னி. சுஜாதாவிடம் பல அடித்தல் திருத்தல் வாங்கிய கதை இது. முடிவை வைத்துக்கொண்டு எழுதுவது என்பது சுவாரஸியமான விஷயம் என்று கற்றுக்கொண்டேன். 'பிச்சை' என்ற கதை விகடனில் தேர்வான போது விகடன் அலுவலகத்திலிருந்து ஒருவர் "Selected" என்ற குறுஞ்செய்தி அனுப்பினார். அதில் உள்ள விசித்திரத்தை வியந்து எழுதிய கதை தான் ஆவி கதை. கதை ஆவி பற்றியதாக இருந்தாலும் ஆவி - ( ஆனந்த விகடன்) நினைவாக எழுதிய கதை அது.

சிறுகதைகள் படிக்கும் வாசகர்கள் பலர் கடைசியில் அந்த எதிர்பாராத திருப்பம், அதில் கிடைக்கும் கிக்கிற்காகவே படிக்கிறார்கள். ஜெப்ரி ஆர்ச்சர், சாகி போன்றவர்கள் இதில் மிக பிரபலம் "A Twist in the Tale" என்ற சிறுகதை தொகுப்பு தற்போது எல்லா பிளாட்பாரம் கடைகளிலும் கிடைக்கிறது. இன்னும் படிக்கவில்லை என்றால் படித்துவிடுங்கள். சில வாரங்களுக்கு முன் ஜெப்ரி ஆர்ச்சர் பெங்களுருக்கு தந்த பேட்டியிலும் சிறுகதை முடிவை பற்றி பேசியுள்ளார்.

சுஜாதா எழுதிய அரிசி என்ற கதையை பலர் படித்திருப்பீர்கள். ஒரு முறை என்னிடம் இந்த கதையை ஒரே வரியில் கெடுத்துவிடலாம் எப்படி என்று சொல்லு பார்க்கலாம்?" என்றார். "எப்படி?" என்று திரும்ப கேட்டேன் அதற்கு "என்னே இந்த சமூகத்தின் கொடுமை" என்று கடையில் ஒரு வரி போதும் என்றார். சில காலம் கழித்து இந்த கதையை பற்றிய குறிப்பு எழுதும் போது இப்படி எழுதினார்.

"This is one of my much discussed stories.Written more than a decade ago When I was in Bangalore, this was translated into many Indian languages . The incident happened in front of me almost in full. But a true incident like this is not sufficient theme for a short story Traffic accidents occur every day in every town.Old men on bicycles die every day .That is not enough .Only when I saw the two little boys picking up the scattrerd grains of rice it suddenly transformed into a truly effective theme for a short story. The implied message in this is not only left unsaid.Just imagine how the effect of the shock ending could be destroyed if I had added one more sentence like என்னே இந்த சமூகத்தின் கொடுமை!"

சிறுகதையின் முடிவை எழுதி வைத்துக்கொண்டு எப்படி கதை எழுதலாம் என்ற சவால் எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று. கூகிள் உதவி செய்யாது நீங்களாகவே வாசகனாகவும், எழுத்தாளனாகவும் மாறி மாறி கதை எழுத வேண்டியிருக்கும். பல மாதமாக ஒரு முடிவை வைத்துக்கொண்டு எப்படி கதையாக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது சட் என்று கதை தோன்றும். அந்த கணம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்.

- 0 - 0 - 0 - 0 - 0 - 0

போன வாரம் ஜப்பான் பூகம்பத்தால் சுமார் 8 அடி நகர்ந்துள்ளது என்று படிக்கும் போது வியப்பாக இருந்தது. பூமிக்கு தனது அச்சிலிருந்து மேலும் 4 இன்ச் அளவுக்கு சாய்வு
ஏற்பட்டது என்று படிக்கும் போது பயமாக இருந்தது. இதனால் பூமி வேகமாக சுற்ற ஆரம்பித்து ஒரு நாளில் 1.6 மைக்ரே செகண்ட் குறைந்துள்ளது. 130,500 ஆண்டிகள் கழித்து ஒரு நாளில் ஒரு நிமிஷம் குறையுமாம். ஏன் இப்படி வேகமாக சுற்றியது என்று தெரிந்துக்கொள்ள Angular Velocity (கோணவேகம்) போன்ற சில விஷயங்களை பள்ளியில் ஒழுங்காக படித்திருக்க வேண்டும். நான் சரியாக படிக்கலை! 1.6 மைக்ரோ செகண்ட் குறைந்ததை வைத்து கூட ஒரு நல்ல விஞ்ஞான சிறுகதை எழுத யாராவது முயற்சிக்கலாம்.

கூடுவோம்...

--------------------------------------------------------------------------------------------------------------------------------

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.