வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
-------------------------

தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931ல் முதன் முதல் பேசிய தமிழ்ப்படம் காளிதாஸ். அதன் பிறகு இதுவரை சுமார் ஐயாயிரம் படங்களுக்கு மேல் வெளிவந்துவிட்டன என்று எண்ணிக்கையைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இன்றளவும் உலகத்தரமான படம் ஒன்றைக்கூட நம்மால் தயாரிக்க இயலாமல்போனது மிகப்பெரிய அவலம்தான்.

ஏதோ, கதை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறோம். சமீபகாலமாக சில நல்ல இலக்கியவாதிகள் திரைத்துறைக்கு வந்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. இன்றைய தமிழில் முக்கிய படைப்பாளிகள் -- ஜெயமோகன் (நான் கடவுள்) ச. தமிழ்ச்செல்வன் (பூ), நாஞ்சில் நாடன் (சொல்ல மறந்த கதை) எஸ். ராமகிருஷ்ணண் (சண்டக்கோழி) போன்றோரின் -- வருகை, இனி வரும் காலத்தில் உன்னதமான திரைப்படங்கள் உருவாவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கும் என்கிறவிதத்தில் நம்பிக்கையை அளிக்கிறது. மேலும் சில சிறந்த இளம் இயக்குனர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் பரிச்சயத்தோடு திரைத்துறைக்கு வர ஆரம்பித்திருப்பதும் ஒரு நல்ல அடையாளம். எனவே இந்த இலக்கியவாதிகளின் புதிய வரவு நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கும் அதே நேரம், தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்துறைக்கு பங்களிப்பு செய்த, செய்து வரும் இலக்கியவாதிகள் சிலரை இந்நேரம் நினைவு கூரத்தோன்றுகிறது. இந்த மாய உலகத்தில் உலவிய இவர்களில் சிலரை இப்போது நினைவு கூர்வோம்.

 
     
     
     
   
தொடர்கள்
1
 
மாயலோகத்தில்
ஆசிரியர் பற்றி

------------------------
 
 

 

 
 

என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.

2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.

'அமுதசுரபி' எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சிலக் கட்டுரைகள் 'உயிரோசையில்' வெளிவந்தது.

கிருஷ்ணன் வெங்கடாசலம்

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS மாயலோகத்தில் TS கிருஷ்ணன் வெங்கடாசலம் தொடர்கள் வாயில்


கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை


கிருஷ்ணன் வெங்கடாசலம்  

நாஞ்சில்நாடு இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதி. 1956ல் மொழி வாரி மாகாணங்கள் அமைவது வரை திருவிதாங்கூர் - கொச்சி சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. மலையாளத்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்த அந்த நாஞ்சில் நாட்டுப் பகுதி தமிழுக்கு அளித்த கொடை மிக அதிகம்.

தசாவதானி செங்குத்தம்பி பாவலர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ம. அரங்கநாதன், பொன்னீலன், தமிழவன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், ஹெப்சிபா ஜேசுதாசன், கிருத்திகா, தோப்பில் முகம்மது மீரான், ஜோ.டி.குரூஸ் போன்ற மிகச் சிறந்த இலக்கிய வாதிகளை தமிழுக்குத் தந்திருக்கிறது.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மிகச் சிறந்த கவிஞர். பெரியவர்களுக்கு மாத்திரம் என்று இல்லாமல், குழந்தைப் பாடல்கள் பலவும் மிகச்சிறப்பாக இயற்றியுள்ளார்.

'தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு, அங்கே துள்ளிக்குதிக்குது கன்றுக் குட்டி'
'தம்பியே பார், தங்கையே பார், சைக்கிள் வண்டி இதுவே பார்',

போன்ற குழந்தைப்பாடல்கள், அக்காலங்களில் ஆரம்பப் பள்ளிப் புத்தகங்களில் தவறாது இடம் பெறுவது வழக்கம்.

பெரியவர்களுக்காக, மலரும் மாலையும்' ஆசிய ஜோதி, உமர்கய்யாம், மருமக்கள் வழி மான்மியம் போன்ற கவிதை நூல்களைப் படைத்துள்ளார். இவைகள் யாவுமே மிக இலக்கியத்தரம் வாய்ந்தவை.

கவிமணியின் மருமக்கள் வழி மான்மியம் மிகவும் பரபரப்பாக அக்காலத்தில் பேசப்பட்டது. மருமக்கள் வழி மான்மியம் என்பது திருவிதாங்கூரில் அக்காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த சொத்துரிமை சம்பந்தமான ஒரு ஏற்பாடு. சட்டம் போல் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த முறையின்படி ஒருவருக்குப் பிறந்த மகனுக்கோ, அல்லது மகளுக்கோ தகப்பனாரின் சொத்தில் உரிமை கிடையாது. மருமகன் (சகோதரியின் மகன்) களுக்கே தந்தையின் சொத்துகள் போய்ச் சேர்ந்துவிட வேண்டு. அரசர்களுக்கும் அப்படித்தான் இவ்வாறே தான் திருவிதாங்கூரின் அரசர்கள் அனைவரும் ஆட்சிக்கு வந்தார்கள்.

கவிமணி இம்மாதிரியான ஏற்பாட்டிற்கும், சட்டங்களுக்கும் எதிர்ப்பாளர். எனவே இம்முறையைக் கிண்டல் செய்து எழுதப்பட்ட கவிதை நூல்தான் மருமக்கள் வழி மான்மியம்.

அக்காலத்தில் நீதிமன்றச் செயல்பாடுகளை மிகவும் தைரியமாக விமர்சனம் செய்திருக்கிறார்.

ஒரு நீதிமன்றக் காட்சி, சாட்சியிடம் வக்கீல் ஒருவர் கேள்வி கேட்டு விசாரணை செய்கிறார்.

வக்கீல் - ஓடுற குதிரைக்கு கொம்பு ஒண்ணா? ரெண்டா?
சாட்சி - குதிரைக்கு ஏதுங்க கொம்பு.
வக்கீல் - கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. கேட்ட கேள்விக்கு
பதில். கொம்பு ஒண்ணா? ரெண்டா? அதைத்தான் சொல்லணும்.

இந்த நீதியில் தான் நீதிமன்ற நடவடிக்கை அக்காலத்தில் திருவிதாங்கூரில் இருந்ததாகத் தெரிவிக்கிறார்.

சுசீந்திரம் என்கிற ஊரின் அருகாமையிலுள்ள எழில் நிறைந்த தேரூர் என்னும் சிற்றூர் இவரது சொந்த ஊரானாலும், நாகர்கோவில் நகரை அடுத்த புத்தேரி' என்கிற ஊரில்தான் கடைசி வரை வாழ்ந்து 1954ல் நம்மை விட்டு பிரிந்தார்.

இவராகத் திரைப்படத் துறையில் பக்கம் செல்லவில்லை. இவரது பல பாடல்களைத் திரை உலகம் அவ்வப்போது பயன்படுத்தி வந்திருக்கிறது. இப்பாடல்கள் கூட திரைப்படத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. முதன்முதலில் என் எஸ் கே பிக்சர்ஸ் தயாரித்த பைத்தியக்காரன் (1947) படத்தில் இவரது பாடல் ஒன்று பயன் படுத்தப்பட்டது. இதையடுத்து 1951ல் இதே நிறுவனத்தின் தயாரிப்பான 'மணமகள்' படத்தில் ஒரு பாடல், பின்பு 'தாயுள்ளம்' என்கிற படத்தில்

கோயில் முழுதும் கண்டேன்
உயர் கோபுரம் ஏரி கண்டேன்
தேவாதி தேவனை நான்
எங்கெங்கும் தேடினும் கண்டிலனே

என்கிற ஒரு அற்புதமான பாடலை எம் எல் வசந்தகுமாரி பாட அப்பாடல் மிகவும் பிரபலமாயிற்று. இவைகள் தவிர 1952ல் வேலைக்காரன். 1955ல் கள்வனின் காதலி, 1956ல் கண்ணின்மணிகள், நன் நம்பிக்கை ஆகிய படங்களிலும் இவரது பாடல் இடம் பெற்றன.

'கள்வனின் காதலி' படத்தில் இவரது

'வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு

பாடல் பி. பானுமதி, கண்டசாலா குரலில் மிகவும் வெற்றியடைந்தது.

1954ல் இவர் காலமானபோது, நாஞ்சில் நாட்டை உள்ளடக்கிய குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்குப் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு கவிமணி பெருமைப்படுத்தப்பட்டார்.

அஞ்சலி செய்யும் வாய்ப்பு, சிறுவனாக இருந்த இக்கட்டுரையாளருக்குக் கிடைத்தது என்று பெருமிதம் கொள்ளலாம்.

தொடரும் ...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</