வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------


கலாப்ரியா, எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கூடு வாசகர்களுக்காக கலாப்ரியா அவர்கள் எழுதும் தொடர் பற்றி அவரது வார்த்தைகள் மூலமே அறிவோம்.

ஜெயகாந்தன் அவருடைய ``சத் சங்கத்தில்’’ சொன்னதாக, பாடியதாக நண்பர்கள் சொல்லுவார்கள்.

"வாழ்தலுக்கும் சாதலுக்கும் என்ன வித்தியாசம்
வாழ்ந்துவிட்டுச் சொல்லுகிறேன் அந்த வித்தியாசம்".

வாழ்க்கை ஒருவருக்கொருவர் வித்தியாசப் படுகிறது. பொதுப் புத்தி சார்ந்து அந்த வித்தியாசம் அவ்வளவாய் உணரப் படாமல் போகலாம். ஏனெனில் நம் ஒவ்வொரு வாழ்க்கையும் ஒவ்வொரு படகாய் மிதக்காமல், ஒரு பெரிய பூமித் தெப்பமாய் சமூகம் கட்டிப் போட்டிருக்கிறது.. இதனால்த்தான் என் அனுபவங்களுக்குள் நீங்களும் உங்கள் அனுபவத்திற்குள் நானும் நிழல் தேடிக் கொள்ள முடிகிறது.

தனியாய், ஒரு குழந்தை ஆடிக் கொண்டிருக்கும் ஊஞ்சலுக்கு அருகே இன்னொன்று வந்து நானும் ஏறிக் கொள்கிறேன் என்கிறது. அப்புறம் இன்னொன்று, மீண்டும் ஒன்று என்று ஊஞ்சலில் ஆசையாய்க் குழந்தைகள், ஊஞ்சல்ப் பலகை கொள்ளும் மட்டும் ஏறிக் கொள்கின்றன. சில இறங்கியதும் புதிதாய்ச் சில ஏறுகின்றன.....என் வாழ்க்கைப் பாடுகள் உந்திய உந்துதலில் ஒரு ஊஞ்சலை ஆட்ட ஆரம்பிக்கிறேன்.....உயரத்திலே தங்கி விடாமல் உங்கள் அருகேயே அமர்ந்து கொஞ்சம் நினைவு, கொஞ்சம் புனைவு என்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்னை.....

அன்புடன்
கலாப்ரியா

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஊஞ்சல்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண..


கலாப்ரியா

எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிறந்த தினம்: 30 - 7 - 1950

கவிதைத் தொகுப்புகள்

வெள்ளம் (1973)
தீர்த்தயாத்திரை (1973)
மற்றாங்கே(1980)
எட்டயபுரம் (1982)
உலகெல்லாம் சூரியன் (1993)
கலாப்ரியா கவிதைகள்(1994)
கலாப்ரியா கவிதைகள் (2000)
அனிச்சம்(2000)
வனம் புகுதல்(2003)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கலாப்ரியா தொடர்கள் வாயில்

ஊஞ்சல் - கலாப்ரியா
 
# தலைப்பு
27 நெருநல் நினைவுகள்…
26 உருள் பெருந்தேர்…
25 அக்கினி நட்சத்திரம்
24 முகவரி
23 அதிசய ராகம்.....
22 ஸ்டாப்பில் நிற்காத பஸ்கள்…...
21 வயது வந்தவர்களுக்கு மட்டும்
20 ....”ஒரு சிக்கலில்லாத காதல்க் கதை..”
19 தீர்த்த யாத்திரை..
18 தழும்பு...
17 ”கதையின் முடிவை யாருக்கும் சொல்லாதீர்கள்...”
16 ’திரி கருகும் நேரம்.... ’.
15 நிலவின் கடைசிக்கிரணங்கள்….
14 நாநா..
13 “லங்கொட கோடா”.....
12 கொணக்கம்…
11 பட்டப்பெயர் (அ) பட்டப்பேர்
10 அழகென்பதே விஷமாகுமோ….
9 வந்தனோபசாரக் காட்சிகள்….
8 'ராஜகளவு'
7 ’பிராது’
6 கூறு
5 கையெழுத்து......
4 பகலில் பேசும் நிலவு
3 வேனல்...
2 அம்மன் அங்கேயே........
1 ஏற்கெனவே.....



 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </